முதன்மை பட்டியைத் திறக்கவும்

முகம்மது ஹஃபீஸ்

பாகிஸ்தானிய துடுப்பாட்ட வீரர்
(மொகமது ஹஃபீஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முகம்மது ஹஃபீஸ்: (Mohammad hafeez, பிறப்பு: அக்டோபர் 17, 1980). பாக்கிஸ்தான் சகோடா இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மத்திம நிலை மட்டையாளர்,[1] இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். இவர் துடுப்பாட்டத்தில் துவக்கவீரராக களம் இறங்குகிறார். அவ்வப்போது பந்துவீச்சிலும் ஈடுபடுவார். 2012 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த பன்னாட்டு இருபது20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.மார்ச் 18, 2012 இல் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் நசீர் ஜம்சீட்டுடன் இணைந்து 224 ஓட்டங்கள் சேர்த்து இந்திய அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய இணை எனும் சாதனை படைத்தனர். இதற்கு முன்னதாக சயீத் அன்வர் மற்றும் அமீர் சோஹல் ஆகியோர் 114 ஓட்டங்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.

முகம்மது ஹஃபீஸ்
Mohammad hafeez.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கிஸ்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகம்மது ஹஃபீஸ்
பிறப்பு 17 அக்டோபர் 1980 (1980-10-17) (அகவை 39)
சகோடா,, பாக்கிஸ்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 173) ஆகஸ்ட் 20, 2003: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு அக்டோபர் 1, 2007: எ தென்னாபிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 144) ஏப்ரல் 3, 2003: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 18, 2007:  எ தென்னாபிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 11 58 135 135
ஓட்டங்கள் 647 1244 7476 4263
துடுப்பாட்ட சராசரி 33.85 21.82 34.13 33.04
100கள்/50கள் 2/3 1/5 16/37 5/28
அதிகூடிய ஓட்டங்கள் 104 115 180 137*
பந்து வீச்சுகள் 750 1883 9657 5983
வீழ்த்தல்கள் 4 39 151 126
பந்துவீச்சு சராசரி 79.75 36.05 29.47 32.94
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 4 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 1/11 3/17 8/57 4/23
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 4/- 20/- 119/- 63/-

செப்டெம்பர் 3, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக இவர் ஒப்பந்தம் ஆனார். இதன்மூலம் இந்தத் தொடரில் ஒப்பந்தம் ஆன நான்காவது சர்வதேச வீரர் மற்றும் முதலாவது பாக்கித்தானிய வீரர் எனும் பெருமை பெற்றார். பொதுவாக இவர் பேராசிரியராக அறியப்படுகிறார்.[2] மேலும் இவர் லாகூர், லாகூர் லயன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், சர்கோதா ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடிவருகிறார்.இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்தொகு

தேர்வுப் போட்டிகள்தொகு

2003 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஆகஸ்டு 20 இல் கராச்சியில்  நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது  தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[3]

இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில்  7 ஓவர்கள் பந்துவீசி 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார். துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 13 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்து மொர்டாசாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 14 ஓவர்கள் வீசி 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 8 ஓவர்களை மெய்டனாக வீசினார்.151 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.  இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4]

ஒருநாள் போட்டிதொகு

2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற செர்ரி பிளாசம் சார்ஜா கோப்பையில் விளையாடிய பாக்கித்தான் அணியில் இடம்பெற்றார். ஏப்ரல் 3 இல் சார்ஜாவில்  நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது  ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[3] இந்தப் போட்டியில்18 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து ஸ்ட்ரீக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10ஓவர்கள் வீசி 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]

இவர் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற மூன்றாவது  வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன் இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர் சனத் ஜயசூரிய, மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் கலிஸ் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.

சான்றுகள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_ஹஃபீஸ்&oldid=2765892" இருந்து மீள்விக்கப்பட்டது