தியாகராசா பரதராசன்

(மொறிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கப்டன் மொறிஸ் (M.O)(செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989, மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை) என்ற இயக்கப் பெயர் கொண்ட பரதரராஜன் தியாகராஜா ஒரு விடுதலைப் புலி போராளியாவார். இவர் தனது பதினைந்தாவது வயதில், 1984இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, ஐந்து ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். குறுகிய காலப் பகுதியில் அளப்பரிய இயக்கப் பணிகளாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர்[1]ஆனார். பருத்தித்துறையின் பிரதேசப் பொறுப்பாளராக மொறிஸ் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் அங்கு இராணுவத்திடமிருந்து நிலத்தையும் மக்களையும் பாதுகாத்தல், மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருந்த நீதிமன்றங்களை நேர்மையுடன் சிறப்பாக வழிநடத்தல், மக்களிடையே கூட்டுறவு உணர்வை மேம்படுத்தல், ஒற்றுமையைப் பலப்படுத்தல் என பல முக்கிய விடயங்களில் தன் ஆற்றல் வாய்ந்த பணிமுறையால் முத்திரை பதித்துக் கொண்டவர். மண்ணையும் மக்களையும் பாதுகாத்து விடுதலைப்புலிகளின் இலக்கை அடைவதில்  இவர் கொண்டிருந்த தீவிரம், இவர் மீது மக்கள் பேரன்பு கொள்வதற்கான முக்கிய காரணமாயிற்று. இவர் மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார். [2]

கப்டன் மொறிஸ்
படிமம்:Captain Morris - LTTE's commander for Point Pedro - Tamil Eelam.jpg
கப்டன் மொறிஸ்
பிறப்புசெப்டெம்பர் 12, 1969
ஆத்தியடி, புலோலி மேற்கு, பருத்தித்துறை,தமிழீழம்
இறப்புமே 1, 1989
ஆத்தியடி, பருத்தித்துறை
தேசியம்ஈழத்தமிழர்
மற்ற பெயர்கள்M.O (Mines Operator)
பணிபுலிகளின் போராளி, பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர்

குடும்பப் பின்னணி தொகு

இவர் தியாகராஜா மற்றும் சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஆறாவது புதல்வன். இவரது தந்தை சபாபதிப்பிள்ளை தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். இவரது அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் புலனாய்வுத்துறையின் மொழிபெயர்ப்புப் பகுதியில் முக்கிய பணியாற்றிக் கொண்டிருந்தவர். புலிகளின்குரல் வானொலியில் கவிதா நிகழ்வுகளில் பங்கேற்றுக்கொண்டிருந்தவர்-புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். இவரது தம்பி மயூரன் (தலைவரின் மெய்ப்பாதுகாவலர்) விடுதலைப்புலிகளின் உறுப்பினராக - தலைவரின் மெய்ப்பாதுகாவலனாக- இருந்து, பூநகரி தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் நவம்பர் 11, 1993 இல் வீரமரணமடைந்தவர்..

கல்வி தொகு

மொறிஸ் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையிலும் கற்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைதல் தொகு

[சான்று தேவை]1984 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.[3] 1983 இல் தென்னிலங்கையில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து போராளிகளின் படகோட்டியாக இருந்த மறைந்த பொலிகண்டி கணேஸ்மாமா உடனான சந்திப்பும் இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையக் காரணமாகக் கருதப்படுகிறது.

இயக்கப் பணிகள் தொகு

ஆரம்ப காலங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் போராளிகளின் தாக்குதல்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார்.[4][சான்று தேவை] பருத்தித்துறை, தம்பசெட்டி வீதியால் சென்று கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் வாகனத்திற்கு ´கிரனைட்´ எறிந்து அவர்களின் ரோந்து நடவடிக்கையைத் தடை செய்ததால்,[2][சான்று தேவை] மேலிடத்தின் உடனடிக் கவனத்துக்கு உள்ளாகி சில முக்கிய பதவிகளைப் பெற்றார்.[சான்று தேவை]

  • 1985 இல் தொண்டைமானாற்றில் போராளிகளின் காவல் தரிப்பில் ஈடுபட்டு இராணுவம் கடல் வழியாக உள்ளே நுழையாமல் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.
  • அந்தக் காலகட்டத்திலேயே போராளிகளுக்கான விசேட இராணுவப் பயிற்சியைப் பெற்று முதல் தடவையாக பூநகரித் தாக்குதலில் பங்கேற்று நெருப்புக் காயங்களுக்கு ஆளாகி யாழ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.
  • 1986 இல் பருத்தித்துறை, கலட்டிப் பகுதியில் நியாய விலைக் கடை ஆரம்பித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் ஊர்மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை வழங்கியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்குத் தேவையான பணத்தைத் திரட்ட உதவிகள் புரிந்தார்.
  • 1987 இல் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. போர்ச்சூழலினால் நீதி மன்றங்கள் இயங்காமல் இருந்த காரணத்தினால் அமைப்பு சார்பான கிராம நீதிமன்றங்களை நிறுவி, மக்களின் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்து வைக்கும் பணியிலும் அவர் பெரு வெற்றி கண்டிருந்தார்.
  • 1988 இல் மொறிஸ் இந்திய இராணுவத்தினரின் பெரும் தேடுதலுக்கும் ஆளானார். இதனால் 1987 - 1988 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல தாக்குதல்களை ஈடுபட்டுள்ளார்.

மறைவு தொகு

1989, மே முதலாம் நாள், இந்திய அமைதிப் படையுடனான மோதலில் உயிரிழந்தார்.[5] இவருடன் லெப்.றம்போ மற்றும் வீரவேங்கை சிறீ ஆகியோரும் உயிரிழந்தனர்.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24205
  2. 2.0 2.1 எங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் (16-22 Nov 2000 ஈழமுரசு, பாரிஸ்)
  3. எரிமலை (சஞ்சிகை) 1993 ஆனி, பக்கம் - 33 கப்டன் மொறிஸ்
  4. நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ் - சதாவின் நாட்குறிப்பு
  5. http://eelavenkai.blogspot.de/2013/03/blog-post_23.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகராசா_பரதராசன்&oldid=3804258" இலிருந்து மீள்விக்கப்பட்டது