மோனா ஷோரி கபூர்
மோனா ஷோரி கபூர் (Mona Shourie Kapoor) (பிறப்பு: 1964 பிப்ரவரி 3 - இறப்பு: 2012 மார்ச் 25) சாட்டி ஷோரியின் என்பவரின் மகளான இவர் பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியாவார்.[1] போனி கபூருடனான திருமண்த்தில் மூலம் இவருக்கு பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூர் என்ற ஒரு மகனும் மற்றும் அன்ஷுலா கபூர் என்ற ஒரு மகளும் உள்ளனர்.
மோனா ஷோரி கபூர் | |
---|---|
பிறப்பு | தில்லி, இந்தியா | 3 பெப்ரவரி 1964
இறப்பு | 25 மார்ச்சு 2012 ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா (தற்போதைய தெலங்காணா) | (அகவை 48)
தேசியம் | இந்தியன் |
பணி | தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–2012 |
வாழ்க்கைத் துணை | போனி கபூர்]] (m. 1983; div. 1996) |
பிள்ளைகள் | 2 (அர்ஜுன் கபூர் மற்றும் அனுஷ்லா கபூர்) |
வாழ்க்கை
தொகுமோனா ஷோரி கபூர் 1964 பிப்ரவரி 3, அன்று இந்தியாவின் தில்லியில் பிறந்தார். 1996 இல் போனி கபூரிடமிருந்து பிரிந்த பிறகு, மோனா தனது மாமியாருடன் மும்பையில் தொடர்ந்து வாழ்ந்தார். இவர் 2012 மார்ச் 25, அன்று இறக்கும் வரை தனது இரண்டு குழந்தைகளுடன் அங்கு வாழ்ந்தார்.
தொழில்
தொகுமோனா கபூர் மும்பையில் உள்ள மிகப்பெரிய படப்பிடிப்பு அரங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.[2] மோனா ஒரு பன்முகத் தொழிலைக் கொண்டிருந்தார். இவர் 'பிசினஸ் எய்ட்ஸ்' மற்றும் 'மெஷின் எக்ஸ்போர்ட்ஸ்' ஆகியவற்றிற்கான மனிதவளத்தை வெற்றிகரமாக கையாண்டார். அதில் இவர் ஒரு பங்குதாரராகவும் இருந்தார். எஃப்.சி.எல் நிறுவனத்தின் இயக்குநராக, மிதுன் சக்ரவர்த்தி, மூன் மூன் சென் மற்றும் மல்லிகா சாராபாய் ஆகியோர் நடித்திருந்த ஷீஷா என்ற திரைப்படம் மற்றும் தர்மேந்திரா, வினோத் கன்னா, ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த்) ஆகியோர் நடித்திருந்த ஃபரிஷ்டே என்ற படங்களுக்கான தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.
மோனா 2005இல் இந்திய தில்லி விருதுகளின் நடுவர் உறுப்பினராகவும் பணியாற்றினார். [ மேற்கோள் தேவை ]
தயாரிப்பாளர்
தொகுஹேரா பெரி ( சேகர் சுமன், ரீமா லகூ மற்றும் தனாஸ் குரீம் நடித்த ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது), யுக் (தூர்தர்ஷன்), விலையாட்டி பாபு (தூர்தர்ஷன்) மற்றும் கைஸ் கஹூன் (டிவி) போன்ற வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் தயாரித்தார். யூக் என்ற தொடர் பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மற்றும் ஆதரவாளர்களால் பரவலாக பாராட்டப்பட்டது. இந்த தொடர், சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் மற்றும் ஹேமா மாலினி, தாரா சிங், ஜாவேத் கான், நீனா குப்தா, முகேஷ் கன்னா, ஷாபாஸ் கான், பங்கஜ் தீர் போன்ற பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும், பல்வேறு பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டது.
இறப்பு
தொகு2012 மார்ச் 25, அன்று புற்றுநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் போராடிய பின்னர் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக மோனா கபூர் இறந்தார்.[3]
குறிப்புகள்
தொகு- ↑ "Dad's second marriage tough on us as kids: Arjun Kapoor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 Apr 2012 இம் மூலத்தில் இருந்து 26 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130626222208/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-22/news-interviews/31382232_1_ishaqzaade-boney-kapoor-arjun-kapoor. பார்த்த நாள்: 11 November 2012.
- ↑ "Archived copy". Archived from the original on 26 July 2010. பார்க்கப்பட்ட நாள் 14 June 2010.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Boney Kapoor's former wife Mona passes away". Zeenews.india.com. 31 March 2011. பார்க்கப்பட்ட நாள் 25 March 2013.