ம. கல்லுப்பட்டி (திருச்சி மாவட்டம்)
ம.கல்லுப்பட்டி அல்லது மருங்காபுரி கல்லுப்பட்டி , இந்திய மாநிலம் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் உள்ள ஊராகும். முன்பு மணப்பாறை வட்டத்தில் இருந்த இவ்வூர் தற்பொழுது மணப்பாறையிலிருந்து பிரிக்கப்பட்ட மருங்காபுரி வட்டத்தில், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. ம.கல்லுப்பட்டி சுருக்கமாக கல்லை எனவும் அழைக்கப்படுகிறது. இதன்
- அஞ்சல் குறியீட்டு எண் : 621305 (ம.கல்லுப்பட்டி கிளை அஞ்சலகம் ),
- தொலைபேசி முன் இணைப்பு எண்:04332 (மணப்பாறை )மற்றும்
- வாகன குறியீட்டு எண்:TN 45Z (மணப்பாறை ).
ம. கல்லுப்பட்டி கல்லை | |||||||
— கிராமம் — | |||||||
ஆள்கூறு | 10°26′09″N 78°24′40″E / 10.4358191°N 78.4112262°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருச்சி | ||||||
வட்டம் | மருங்காபுரி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] | ||||||
மக்களவைத் தொகுதி | கரூர் | ||||||
மக்களவை உறுப்பினர் |
செல்வி. செ.ஜோதிமணி | ||||||
சட்டமன்றத் தொகுதி | மணப்பாறை | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
ப. அப்துல் சமது (திமுக (மமக)) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | http://mkalluppatti.blogspot.com/ |
அமைவிடம்
தொகுதிருச்சி மாவட்டம்,மருங்காபுரி வட்டம்,மணப்பாறை சட்டமன்றத் தொகுதி,கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எண் NH-45Bல்( வேலூர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எண் 38 ) திருச்சியிலிருந்து தெற்கில் 50கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கில் 80 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ம.கல்லுப்பட்டியானது வேலூர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை NH-38ல் அமைந்திருப்பதால் இது இதன் அருகில் உள்ள முக்கிய ஊர்களான தெ .இடையபட்டி(ஊராட்சி) மற்றும் மருங்காபுரி ,துவரங்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு ம.கல்லுப்பட்டி நுழைவுவாயிலாகவும், மருங்காபுரி,வெட்டுக்காடு,மல்லிகைப்பட்டி,யாகபுரம்,குளவாய்பட்டி,டி.இடையபட்டி, நெல்லிப்பட்டி, தெ.ஆண்டிப்பட்டி,சேத்துப்பட்டி,முத்தாழ்வார்பட்டி ஆகிய ஊர்கள் சந்திக்கும் சந்திப்பு முனையமாகவும் ம.கல்லுப்பட்டி('கல்லை')திகழ்கிறது.
முத்துமாரியம்மன் கோவில்
தொகுஇங்கு பிரசித்திபெற்ற ம.கல்லுப்பட்டி முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. வருடாவருடம் இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவானது மிகவும் பிரபலமானதாகும். இக்கோவில் திருவிழாவானது எம்.கல்லுப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களான டி.இடையபட்டி, தாழம்பாடி, மருங்காபுரி மற்றும் இதனுள் அடங்கும் சிறிய கிராமங்கள் என பதினெட்டு ஊர் மக்களால் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலின் பின்புறம் அழகிய யானையின் தோற்றத்தில் பசுமையான மல்லிகைமலை அமைந்துள்ளது. இந்த மல்லிகைமலையின் அடிவாரத்தில் தமிழகத்தின் 100-வது சமத்துவபுரம் அமைந்திருப்பது சிறப்பு.
அலுவலகங்கள்
தொகுஇங்கு மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சி மன்றங்களுக்கான தலைமை அலுவலகமான
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
- தோட்டக்கலைத்துறை அலுவலகம்
- வேளாண்மைத்துறை அலுவலகம்,
- கால்நடை மருந்தகம்,
- வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம்,
- துணை மின் அலுவலகம்,
- துணை அஞ்சல் அலுவலகம்(621305)
- வட்டார புள்ளியியல் மையம்
- கிராம சேவை மையம்
- அரசு இ - சேவை மையம்
ஆகிய அலுவலகங்கள் ம.கல்லுப்பட்டியில் அமைந்துள்ளன.மேலும்
- மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகமும் ம.கல்லுப்பட்டியில் அமைக்கப்பட்டு 17.09.2013 முதல் செயல்பட்டு வருகிறது.
ஆலயங்கள்
தொகு- அருள்மிகு ம.கல்லுப்பட்டி முத்துமாரியம்மன் ஆலயம்
- அருள்மிகு ம.கல்லுப்பட்டி அய்யனார் கோவில்
- அருள்மிகு பெருமாள்கோவில்,ம.கல்லுப்பட்டி
- அருள்மிகு அரசமரத்துப் பிள்ளையார் கோவில்,ம.கல்லுப்பட்டி
- அருள்மிகு சாயி பாபா திருக்கோவில், ம.கல்லுப்பட்டி
அருகில் உள்ள ஊர்கள்
தொகு- மருங்காபுரி (ஊராட்சி ) - 03 கிமீ
- மணப்பாறை (நகராட்சி) - 27 கிமீ
- பொன்னம்பட்டி (பேரூராட்சி) - 10 கிமீ
- திருச்சி (மாநகராட்சி) - 50 கிமீ
- புதுக்கோட்டை (நகராட்சி) - 50 கிமீ
- மதுரை (மாநகராட்சி) - 80 கிமீ
தொடர்வண்டி நிலையங்கள்
தொகு- மணப்பாறை (நகராட்சி) - 27 கிமீ
- திருச்சி (மாநகராட்சி) - 50 கிமீ
- வானூர்தி நிலையங்கள்:
விமான நிலையங்கள்
தொகு- திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் - 57 கிமீ
- மதுரை விமான நிலையம்-88 கிமீ
கல்வி நிறுவனங்கள்
தொகு- ஶ்ரீஹயக்கிரீவர் இண்டர் நேசனல் பள்ளி (ம.கல்லுப்பட்டி)
- ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (ம.கல்லுப்பட்டி)
- அரசு மேல்நிலைப்பள்ளி, மருங்காபுரி
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2013-07-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2013-07-04.
- ↑ மருங்காபுரியில் வட்டாட்சியர் அலுவலகம் கேட்டு மக்கள் "உண்ணாவிரதம்' தினமலர்