யாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்)

யாரடி நீ மோகினி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 24 ஏப்ரல் 2017 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, 12 ஜூலை 2021 முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான திகில், மீயியற்கை, காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, ஸ்ரீ குமார், நச்சத்திரா, பாத்திமா பாபு, சைத்ரா, யமுனா, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த தொடர் மிக பொருள் செலவில் எடுக்கப்படுள்ள தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.[4]

யாரடி நீ மோகினி
வகை
திரைக்கதைஎம். ஆர். பான் இளங்கோ (உரையாடல்)
இயக்கம்என். பிரியன்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்1251
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வி. ஷங்கர் ராமன் (2017-2018) → சபிரேஷ் குமார் (2019-2021)
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்கே. ஸ்டுடியோ (2017-2018) → மாங்க் ஸ்டுடியோஸ் (2019-2021)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்24 ஏப்ரல் 2017 (2017-04-24) –
22 ஆகத்து 2021 (2021-08-22)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிகம் பார்க்கும் தொடர்களில் சிறந்த 5 தொடர்களுக்குள் அடங்கும், அதே தருணம் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக மொழிகளில் மறுதயாரிப்பு செய்த தொடரும் இதுவாகும். இந்த தொடர் 22 ஆகத்து 2021 ஆம் ஆண்டு அன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் 1:30 மணி முதல் 3:30 மணி வரை ஒளிபரப்பாகி 1251 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்

தொகு

பணக்கார குடும்பத்தை சேர்ந்த முத்தரசன் தாயை இழந்து சித்தியின் அரவணைப்பில் வளர்கிறான். முத்தரசனின் மனைவி சித்ரா இறக்க, சித்தி நீலாம்பரி தனது அண்ணன் மகளான ஸ்வேதாவை முத்தரசனுக்கு கட்டிவைத்து சொத்தை முழுவதுமாக அடைய திட்டமிடுகிறாள். ஆனால் சிறு வயதிலிருந்தே தன் மாமன் முத்தரசனை திருமணம் செய்ய வேண்டும் என்று அவனையே சுத்தி சுத்தி வருகிறாள், வெண்ணிலா. இதே தருணத்தில் தனது இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கி வெண்ணிலாவையு ம் முத்தரசனையும் சேர்த்து வைக்க நினைக்கும் ஆவி. கேட்டவர்களுக்கு ஆவிக்கும் நடக்கும் யுத்தத்தில் யார் ஜெகிக்க போகின்றார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு

துணைக் கதாபாத்திரம்

தொகு
 • தீபா - பூங்கோத
 • பரத் - மருது
 • அரவிந்த் - அழகப்பன்
 • பவித்ரன் - கார்த்திக்
 • சாலினி ராஜன் - ஜனனி கௌதம்
 • சுர்ஜித் - கௌதம்
 • அக்சயா - அக்ஷயா

முன்னாள் நடிகர்கள்

தொகு
 • சஞ்சீவ் (பகுதி:1- 270) - முத்தரசன்
 • முரளி - அண்ணாமல
 • வினிதா - கலை
 • பேபி லிசா - ருத்திரா
 • மஹிமா தேவி - ராணி
 • ஸ்ரீநிதி சுதர்சன் - ஜனனி கௌதம்

மறுதயாரிப்பு மற்றும் மொழிமாற்று

தொகு

இந்திய தொடர்களில் அதிக மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்ட தொடர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி தலைப்பு வடிவம் அலைவரிசை ஆண்டு
தமிழ் யாரடி நீ மோகினி ஜீ தமிழ் 24 ஏப்ரல் 2017
கன்னடம் யாரே நீ மோகினி மறுதயாரிப்பு ஜீ கன்னட 18 செப்டம்பர் 2017
தெலுங்கு எவேரே நுவூ மோகினி மறுதயாரிப்பு ஜீ தெலுங்கு 11 டிசம்பர் 2017 - 4 மே 2018
ஒடியா மு பி அர்தங்கினி மறுதயாரிப்பு ஜீ சார்தக் 9 ஜூலை 2018
மலையாளம் ஆரானி சுந்தரி மொழிமாற்று ஜீ கேரளம் 26 நவம்பர் 2018
இந்தி மெயின் பீ அர்தங்கினி மறுதயாரிப்பு & தொலைக்காட்சி 21 சனவரி 2019

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகர் சஞ்சீவ் வெற்றி
சிறந்த வில்லி சைத்ரா பரிந்துரை
சிறந்த தொடர் யாரடி நீ மோகினி பரிந்துரை
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] சிறந்த தொடர் யாரடி நீ மோகினி பரிந்துரை
சிறந்த கற்பனை தொடர் யாரடி நீ மோகினி பரிந்துரை
விருப்பமான கதாநாயகி நச்சத்திரா பரிந்துரை
விருப்பமான கதாநாயகன் ஸ்ரீ குமார் பரிந்துரை
சிறந்த நடிகை நச்சத்திரா பரிந்துரை
சிறந்த நடிகர் ஸ்ரீ குமார் வெற்றி
சிறந்த ஜோடி ஸ்ரீ குமார்& நச்சத்திரா பரிந்துரை
சிறந்த நேரடி கற்பனை தொடர் யாரடி நீ மோகினி வெற்றி
சிறந்த துணை நடிகை வினிதா பரிந்துரை
யமுனா பரிந்துரை
கிராமத்து தேவதை நச்சத்திரா வெற்றி
சிறப்பு விருது பாத்திமா பாபு வெற்றி
சிறந்த வில்லி பாத்திமா பாபு பரிந்துரை
சைத்ரா பரிந்துரை
சிறந்த நகைச்சுவையாளர் அரவிந்த் பரிந்துரை
2019 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் விருப்பமான தொடர் யாரடி நீ மோகினி பரிந்துரை
சிறந்த தொடர் யாரடி நீ மோகினி பரிந்துரை
விருப்பமான கதாநாயகி நச்சத்திரா பரிந்துரை
சிறந்த நடிகை நச்சத்திரா பரிந்துரை
சிறந்த நடிகர் ஸ்ரீ குமார் பரிந்துரை
விருப்பமான ஜோடி ஸ்ரீ குமார் & நச்சத்திரா பரிந்துரை
சிறப்பு விருது யமுனா வெற்றி
சிறந்த துணை நடிகர் முரளி வெற்றி
சிறந்த துணை நடிகை யமுனா பரிந்துரை
விருப்பமான எதிர்மறை கதாபாத்திரம் சைத்ரா பரிந்துரை
சிறந்த எதிர்மறை கதாபாத்திரம் சைத்ரா வெற்றி
சிறந்த பெண் நகைச்சுவையாளர் அக்சயா வெற்றி
சிறந்த ஆண் நகைச்சுவையாளர் அரவிந்த் பரிந்துரை

மதிப்பீடுகள்

தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2017 5.2% 6.1%
2018 6.2% 7.1%
2019 7.8% 8.6%
2020 8.5% 9.8%
7.8% 9.2%
2021 5.8% 6.2%
3.2% 4.1%

நேர அட்டவணை

தொகு

இந்த தொடர் 24 ஏப்ரல் 2017 முதல் 21 மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது. 22 மார்ச் 2021 முதல் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான தேதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
22 ஆகத்து 2021
ஞாயிற்றுகிழமை
13:30 - 15:30 1251
12 ஜூலை 2021 - 21 ஆகத்து 2021
தினமும்
22:00 1214 - 1250
22 மார்ச் 2021 - 11 ஜூலை 2021
தினமும்
20:00 1118 - 1213
24 ஏப்ரல் 2017 - 21 மார்ச் 2021
தினமும்
20:30 1 - 1117

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "யாரடி நீ மோகினி - புத்தம் புதிய சீரியல்". tamil.filmibeat.com.
 2. "ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி புதிய தொடர்". cinema.dinamalar.com.
 3. "இந்த ஏப்ரல் மாதம் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி புதிய திகில் தொடர்". www.screen4screen.com. Archived from the original on 2017-06-25. பார்க்கப்பட்ட நாள் 2017-09-05.
 4. "பெரிய செட்டில் யாரடி நீ மோகினி தொடர் படப்பிடிப்பு". cinema.dinamalar.com.
 5. "ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல்" (in ta). tamil.thehindu.com. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25066022.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி யாரடி நீ மோகினி அடுத்த நிகழ்ச்சி
சத்யா நீதானே எந்தன் பொன்வசந்தம்
ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி யாரடி நீ மோகினி அடுத்த நிகழ்ச்சி
கோகுலத்தில் சீதை சத்யா
ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 8:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி யாரடி நீ மோகினி
அடுத்த நிகழ்ச்சி
சொல்வதெல்லாம் உண்மை புது புது அரத்தங்கள்