யோக-குண்டலினி உபநிடதம்
யோக-குண்டலினி உபநிடதம் (Yoga-kundalini Upanishad) ( சமசுகிருதம் : योगकुण उपनिषत ) [1] சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இது 20 யோக உபநிடதங்களில் ஒன்றாகும்.[2] மேலும் கிருஷ்ண யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்ட 32 உபநிடதங்களில் ஒன்றாகும். [2] இராமனால் அனுமனுக்குக் கூறப்பட்ட முக்திகா நியதியில், இது 108 உபநிடதங்களின் தொகுப்பில் 86 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது..[3]
யோக-குண்டலினி உபநிடதம் | |
---|---|
Yoga-Kundalini Upanishad is a yoga text | |
தேவநாகரி | योगकुण्डलिनी |
உபநிடத வகை | Yoga |
தொடர்பான வேதம் | Krishna யசுர் வேதம் |
அத்தியாயங்கள் | 3 |
பாடல்களின் எண்ணிக்கை | 171 |
இது குண்டலினி யோகத்தின் விளக்கத்துடன் தொடர்புடைய மிகவும் குறிப்பிடத்தக்க உரையாகும்.[4] இது ஹத யோகம் மற்றும் லம்பிகா யோகத்தைப் பற்றி விவரிக்கிறது. கடைசி அத்தியாயம் முதன்மையாக சுய அறிவு, ஆன்மா, பிரம்மம் மற்றும் வாழும் விடுதலை பற்றிய தேடலைப் பற்றியது.[4] இது இந்து மதத்தின் சக்தி பாரம்பரியத் தாந்திரீகத்தைப் பற்றிய ஒரு முக்கியமான உரையாகும். மேலும் குண்டலினி யோகக் கலை பற்றிய மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[5][6]
"மரத்தடிகளில் பற்றவைக்கும் நெருப்பு எரியாமல் எழுவது போல யோகப் பயிற்சி இல்லாமல், அறிவின் ஒளியை ஏற்றிவிட முடியாது" என உரை கூறுகிறது. [7] சித்தம், அல்லது மனம், சம்ஸ்காரங்கள் மற்றும் வசனங்களுக்கு (நடத்தை போக்குகள்) ஆதாரமாகவும், பிராணனின் விளைவுகளாகவும் உரையில் விளக்கப்பட்டுள்ளது.. பிராணனைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் யோகா நுட்பங்கள் உபநிடதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.[4] இந்த நுட்பங்களில் மிதகாரம் (மிதமான, சமச்சீர் ஊட்டச்சத்து), ஆசனம், உள் சக்தியை எழுப்புதல் ஆகியவை யோகினியின் குண்டலினியைத் தூண்டுவதற்கான வழிமுறையாக வலியுறுத்தப்படுகின்றன.[8][9]
சொற்பிறப்பியல்
தொகுகுண்டலினி,என்பதற்கு "ஒவ்வொரு நபரிடமும் இருக்கும் மறைந்திருக்கும் ஆன்மீக சக்தி" என ஜேம்ஸ் லோக்டெஃபெல்ட் விளக்கம் கூறுகிறார்.[10] இது தாந்தீர்கத்தில் ஒரு அடிப்படைக் கருத்தாகும். மேலும் ஒவ்வொரு நபரிடமும் பொதுவாக செயலற்ற நிலையில் இருக்கும் சக்தியின் ஒரு அம்சத்தைக் குறிக்கிறது.[10] குண்டலினி வார்த்தையின் அடிப்படை 'குண்டலம்' (சுருண்ட கயிறு). "யோக-குண்டலினி உபநிஷத்" என்ற தலைப்பு "குண்டலினி யோகத்தின் இரகசியக் கோட்பாடு" என்று பொருள்படும்.
காலவரிசை
தொகுயோக-குண்டலினி உபநிடதம் என்பது ஒரு பொதுவான சகாப்த உரை, இது யோகசூத்திரங்களுக்குப் பிறகு இயற்றப்பட்டது.[11] 11 ஆம் நூற்றாண்டின் யோகியான கோரக்நாத் போன்ற சித்த யோகிகளால் கற்பிக்கப்பட்ட யோக-குண்டலினி உரை, பல பிற்கால யோக உபநிடதங்களைப் போலவே, யோகக் கருத்துக்கள் மற்றும் முறைகளைக் கையாள்கிறது என்று பானர்ஜி கூறுகிறார். [12]
கட்டமைப்பு
தொகுமொத்தம் 171 வசனங்களைக் கொண்ட மூன்று அத்தியாயங்களாகக் கட்டமைக்கப்பட்ட வசனத்தில் உரை அமைக்கப்பட்டுள்ளது. [13] முதல் அத்தியாயத்தில் 87 வசனங்கள் உள்ளன. மேலும் யோகப் பயிற்சி பற்றி விவாதிக்கிறது. [13] 49 வசனங்களைக் கொண்ட இரண்டாவது அத்தியாயம் கேகாரி (சமஸ்கிருதம்: खेचरि) அறிவைப் பற்றி விவாதிக்கிறது.[9] கடைசி அத்தியாயம் 35 வசனங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஆன்மா, பிரம்மம், தியானம் மற்றும் வாழும் விடுதலை பற்றி விவாதிக்கிறது.[14]
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Gerald James Larson (2008), The Encyclopedia of Indian Philosophies: Yoga: India's philosophy of meditation, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3349-4, pages 615–616
- ↑ 2.0 2.1 Ayyangar 1938, ப. 251.
- ↑ Deussen, Bedekar & Palsule 1997, ப. 556–57.
- ↑ 4.0 4.1 4.2 Warnick 2015, ப. 217.
- ↑ Vana Mali (2008), Shakti: Realm of the Divine Mother, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59477-199-6, pages 311–314, Quote: "The Yoga-kundalini Upanishad is the eighty-sixth among the one hundred and eight important Upanishads. It is a most important work on kundalini yoga."
- ↑ Mary Scott (2007), The Kundalini Concept: Its Origin and Value, Jain Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89581-858-4, pages 1–14
- ↑ Ayyangar 1938, ப. 273–274.
- ↑ Warnick 2015, ப. 218.
- ↑ 9.0 9.1 Ayyangar 1938, ப. 264–271.
- ↑ 10.0 10.1 James G Lochtefeld (2001), The Illustrated Encyclopedia of Hinduism: A-M, Rosen Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8, pages 381–382
- ↑ Charles Leadbeater (1927), The Chakras, Theosophical Society, page xii
- ↑ Ak Banejea (2014), Philosophy of Gorakhnath with Goraksha-Vacana-Sangraha, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120805347, page 26
- ↑ 13.0 13.1 Ayyangar 1938.
- ↑ Ayyangar 1938, ப. 251, 274–278.
உசாத்துணை
தொகு- Deussen, Paul; Bedekar, V.M.; Palsule, G.B. (1997). Sixty Upanishads of the Veda, Volume II. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- Ayyangar, TR Srinivasa (1938). The Yoga Upanishads. The Adyar Library.
- Warnick, LaTeef Terrell (23 April 2015). Kundalini Yoga: The Shakti Path to Soul Awakening. 1 S.O.U.L. Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-939199-14-0.[தொடர்பிழந்த இணைப்பு]