ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவை

புதுச்சேரி அமைச்சரவை

2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ந. ரங்கசாமி 2021 மே 7 அன்று புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார். [1] [2] 2021 மே 25 தேதியிட்ட புதுச்சேரி அரசாணை அறிவிப்பின்படி, அமைச்சரவையில் அமைச்சர்களாக ஏ. நமச்சிவயம், கே. லட்சுமிநாராயணன், சி. தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்கபட்டனர்.

19வது அமைச்சரவை - புதுச்சேரி
உருவான நாள்7, மே 2021
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்ந. ரங்கசாமி
நாட்டுத் தலைவர்துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
நீக்கப்பட்ட அமைச்சர்கள்
(இறப்பு/பதவி விலகல்/பதவி நீக்கம்)
0
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை6
சட்ட மன்றத்தில் நிலைபெரும்பான்மை (கூட்டணி)
எதிர் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
எதிர்க்கட்சித் தலைவர்ஆர். சிவா
வரலாறு
தேர்தல்(கள்)2021
Legislature term(s)3 ஆண்டுகள், 229 நாட்கள்
முந்தையநாராயணசாமி அமைச்சரவை

ரங்கசாமி அமைச்சரவையில் லட்சுமிநாராயணன், டி. தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் என். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரி ஒன்றியப் பிரதேச அமைச்சரவையில் பா. ஜ. கட்சி இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அமைச்சரவையில் சந்திர பிரியங்கா இடம்பெற்றிருப்பதானதன் மூலமாக 41 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் ஒரு பெண் உறுப்பினர் இடம்பெற்றிருப்பது மற்றொரு முக்கிய விசயமாகும். [3] [note 1]

முதல்வரும் அமைச்சர்களும்

தொகு
வ. எண் பெயர் தொகுதி துறை கட்சி
1. ந. ரங்கசாமி
முதல் அமைச்சர்
தட்டாஞ்சாவடி
  • கூட்டுறவு
  • வருவாய் மற்றும் கலால்.
  • பொது நிர்வாகம்.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்.
  • இந்து சமய நிறுவனங்கள்.
  • வக்ஃப் வாரியம்.
  • உள்ளாட்சி நகர மற்றும் கிராம ஒருங்கமைப்பு
  • துறைமுகம்.
  • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்.
  • தகவல் மற்றும் விளம்பரம்.
  • பிற துறைகள் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படவில்லை
என்.ஆர்.கா
அமைச்சரவை அமைச்சர்கள்
2. நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு
  • உள்துறை.
  • மின்சாரம்.
  • தொழில்கள் மற்றும் வணிகம்.
  • கல்வி (பள்ளிக் கல்வி உயர்கல்வி).
  • விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்.
  • முன்னாள் படைவீரர் நலன்
பாஜக
3. கே. இலட்சுமிநாராயணன் ராஜ் பவன்
  • பொதுப்பணி.
  • சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து.
  • மீன்வளம் மற்றும் மீனவர் நலன்.
  • சட்டம்.
  • தகவல் தொழில்நுட்பம்.
  • எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை.
என்.ஆர்.கா
4. சி. தேனீ ஜெயக்குமார் மங்கலம்
  • வேளாண்மை.
  • கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கு நலன்.
  • வனம் மற்றும் வனவிலங்கு.
  • சமூக நலம்.
  • பிற்படுத்தப்பட்டோர் நலன்.
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்.
என்.ஆர்.கா
5. சந்திர பிரியங்கா நெடுங்காடு
  • போக்குவரத்து.
  • ஆதிதிராவிடர் நலம்.
  • வீட்டுவசதி.
  • தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு.
  • கலை மற்றும் பண்பாடு.
  • பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்.
என்.ஆர்.கா
6. ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் ஊசுடு
  • குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்.
  • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
  • சமூக மேம்பாடு.
  • நகர அடிப்படை சேவைகள்.
  • தீயணைப்பு
  • சிறுபான்மை விவகாரங்கள்.
பாஜக

குறிப்புகள்

தொகு
  1. மறைந்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா அப்பாதுரை 1980-83 காலப்பகுதியில் முதல் பெண் அமைச்சராக இருந்தார், மேலும் அவர் எம் டி. ஆர். இராமச்சந்திரன் (திமுக) தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் கல்வித் துறையைக் கொண்டிருந்தார்.

மேற்கோள்கள்

தொகு

 

  1. "AINRC leader N Rangasamy sworn in as Puducherry Chief Minister". The Indian Express (in ஆங்கிலம்). 2021-05-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "N Rangasamy sworn in as Puducherry Chief Minister". India TV News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-05. பார்க்கப்பட்ட நாள் 2021-05-05.
  3. "Rangasamy-led Puducherry Govt to Get Its First Woman Minister in 40 Years, Cabinet Expansion on June 27". The Free Express Journal (in ஆங்கிலம்). 2021-06-25.[தொடர்பிழந்த இணைப்பு]