ரஜினி பசுமதரி
ரஜினி பசுமதரி (Rajni Basumatary) என்பவர் ஓர் இந்திய திரைப்படப் படைப்பாளி மற்றும் நடிகை ஆவார். 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான மேரி கோமில் மேரி கோமின் தாயாக (மங்தே அகம் கோம்) நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர்.[1][2][3] மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமான அனுராக் படத்தை பசுமதரி எழுதி தயாரித்துள்ளார். இவர் இயக்குநராக அறிமுகமான ராக் 2014 இல் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வெளியானது.[4]
ரஜினி பசுமதரி | |
---|---|
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004—தற்போதுவரை |
பசுமதரி 2019 ஆம் ஆண்டு வெளியான Jwlwi - The Seed திரைப்படத்தின் இயக்குநர் ஆவார்.[5][6]
துவக்க கால வாழ்க்கையும் கல்வியும்
தொகுபசுமதரி வடகிழக்கு இந்தியாவின் அசாமின் ரங்கபாரா நகரத்தில் ஒரு போடோ குடும்பத்தில் பிறந்தார்.[7][8] அரச கிளர்ச்சி, பிரிவினைவாதக் குழுக்களின் எழுச்சி, அரசியல் ரீதியான வன்முறைகள் போன்றவை நிறைந்த காலங்களில் இவர் வளர்ந்தார். அந்த நிகழ்வுகள் தனது குடும்பம், குழந்தைப் பருவம், பிற்கால திரைப்பட வாழ்க்கை போன்றவற்றை எவ்வாறு பாதித்தன என்பதையும் அவர் விவரித்துள்ளார்.[7] இவர் Jwlwi-The Seed படத்தை இயக்கத் தொடங்கியபோது, அந்தத் திரைப்படம் இவரது அனுபவங்களால் செழுமை பெற்றது.[8]
பாசுமதி குவகாத்தி பல்கலைக்கழகத்தின் ஏண்டிக் மகளிர் கல்லூரியில் அசாமிய இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகு1995 இல், பசுமதரி தில்லிக்குச் சென்று பெருநிறுவனப் படங்களை இயக்கத் தொடங்கினார். 2004 ஆம் ஆண்டில், அசாமிய மொழி காதல் நாடகத் திரைப்படமான அனுராக் திரைப்படத்தை தயாரித்து திரைக்கதையை எழுதினார். பித்யுத் சக்ரவர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் பசுமதரியும் துணை நடிகராக நடித்தார். அனுராக் படம் வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். இப்படம் சிறந்த இயக்குநர் போன்ற பல அசாம் அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றது.
2000களில் இருந்து, இவர் ஆக்சிஸ் வங்கி [9] உள்ளிட்ட அச்சு மற்றும் தொலைக்காட்சி பரப்புரைகளின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் பாலிவுட் படங்களான மேரி கோம் மற்றும் தி ஷாக்கீன்ஸ் மற்றும் ஷட்டில்காக் பாய்ஸ் மற்றும் III ஸ்மோக்கிங் பேரல்ஸ் போன்ற சுயாதீன திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் வாக்காளர் விழிப்புனர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பின் (SVEEP) பிராண்ட் தூதராகவும் உள்ளார்.
2014 இல், மேரி கோமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் தாயாக நடித்தபோது இவருக்கு பெரிய பிரபலம் கிடைத்தது. பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. அதே ஆண்டில், பசுமதரி அசாமிய திரைப்படமான ராக் படத்தை வெளியிட்டார். இப்பட்டத்தின் வழியாக இவர் இயக்குநராக அறிமுகமானார். அடில் ஹுசைன், சரிஃபா வாஹித், கென்னி பாசுமதி ஆகியோர் இப்படத்தில் நடித்தனர், இது பசுமதரியின் பதாகையான மன்னா பிலிம்சுடன் இணைந்து அசாம் மாநில திரைப்படக் கழகத்தால் தயாரிக்கப்பட்டது. இப்படம் அசாம் மாநிலம் முழுவதும் வெளியானது மட்டுமல்லாமல் தில்லி, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகரங்களில் வெளியிடப்பட்டது. ராக், பசுமதரிக்கு சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை, வாகித்துக்கு சிறந்த நடிகை, ஆதில் உசைனுக்கான சிறந்த நடிகர், கென்னி பசுமதரிக்கு சிறந்த துணை நடிகர் உட்பட 14 பிரிவுகளில் பிராக் சினி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்து. இதில் இறுதியில் உசைனுக்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
2019 ஆம் ஆண்டில், பசுமதரி தனது இரண்டாவது திரைப்படமான Jwlwi - The Seed ஐ இயக்கினார், இது கலைஞரும் பரோபகாரருமான ஜானி விஸ்வநாத்தால் [10] இணைந்து தயாரிக்கபட்டது. மேலும் விஷ்பெர்ரி மூலம் ஓரளவுக்கு நிதி திரட்டப்பட்டது.[11] இந்த சுயாதீனமான போடோ மொழித் திரைப்படமான Jwlwi, பெங்களூர் பன்னாட்டு திரைப்பட விழா,[12] சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, குவாஹாத்தி சர்வதேச திரைப்பட விழா, கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச திரைப்பட விழா உட்பட 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்தியாவில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.[13] குவஹாத்தியில் இயக்கத்திற்காக சிறப்பு ஜூரி விருதையும், பெங்களூரில் சிறப்பு ஜூரி விருதையும் பசுமதரி பெற்றார்.[14] 4வது சைலதர் பருவா நினைவு திரைப்பட விருதுகளில் சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான விருதையும் பெற்றார்.[15] Jwlwi இன்னும் வணிக ரீதியாக அசாமுக்கு வெளியே திரைகளில் வெளியிடப்படவில்லை.
சத்யஜித் ராய், தாவீது லீன், விசால் பரத்வாஜ் ஆகியோர் தனக்குப் பிடித்த திரைப்பட இயக்குநர்கள் என்று பசுமதரி குறிப்பிட்டுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dasgupta, Piyali (31 May 2014). "Delhi-based filmmaker debuts in Bollywood as Priyanka Chopra's mother". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Delhi-based-filmmaker-debuts-in-Bollywood-as-Priyanka-Chopras-mother/articleshow/35830887.cms.
- ↑ Chatterjee, Saibal (26 September 2014). "the hardworking Priyanka not to stick out like a misguided missile amid the likes of Robin Das, Rajni Basumatary (as Mary Kom's father and mother respectively)". NDTV. Archived from the original on 18 October 2018. பார்க்கப்பட்ட நாள் 29 December 2018.
- ↑ "Nominations for Prag Cine Award, 2013". 15 September 2010. https://assamtribune.com/nominations-for-prag-cine-award-2013.
- ↑ वर्मा, प्रशांत (30 September 2019). "असम में बोडो लोगों तक फिल्मों की पहुंच नहीं, इसलिए हम इन्हें उन तक पहुंचाते हैं: रजनी बसुमतारी". The Wire. https://thewirehindi.com/95405/interview-filmmaker-rajni-basumatary-bodo-films-jwlwi-the-seed-assam-film-industry/.
- ↑ Gani, Abdul (25 June 2019). "Happy To Tell Stories Depicting Horror Of AFSPA: Assam Filmmaker Rajni Basumatary On Her Film 'Jwlwi - The Seed'". Outlook. பார்க்கப்பட்ட நாள் 28 September 2023.
- ↑ 7.0 7.1 Das, Gourab (31 May 2019). "Actress to screen conflict tale in rural BTAD". The Telegraph. https://www.telegraphindia.com/north-east/actress-to-screen-conflict-tale-in-rural-btad/cid/1691536.
- ↑ 8.0 8.1 "A new Bodo film tells the story of Assam's bloody past". The Indian Express. 25 June 2019. https://indianexpress.com/article/north-east-india/assam/a-new-bodo-film-tells-the-story-of-assams-bloody-past/.
- ↑ "AxisBank_Dil Se Open_The Chair - Hindi". ஆக்சிஸ் வங்கி. 19 February 2020. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
- ↑ "Happy To Tell Stories Depicting Horror Of AFSPA: Assam Filmmaker Rajni Basumatary On Her Film 'Jwlwi - The Seed'". அவுட்லுக் (இதழ்). 23 June 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
- ↑ "Jwlwi The Seed". Wishberry. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
- ↑ "Jwlwi - The Seed". Bengaluru International Film Festival. Archived from the original on 7 August 2020. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
- ↑ "Jwlwi - The Seed". Pune International Film Festival. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
- ↑ "Panghrun wins Best Film, Special Jury Award for Biriyaani at BIFFES 2020". Cinestaan. 5 March 2020. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
- ↑ "Sailadhar Baruah Memorial Film Awards Announced". Pratidin Time. 26 December 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.