உருசியாவின் நடுவண் மாவட்டங்கள்

(ரஷ்யாவின் கூட்டாட்சி மாவட்டங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நடுவண் மாவட்டங்கள் (federal districts, உருசியம்: федера́льные округа́, பெதரால்னியே ஓக்ருகா) என்பவை உருசியாவின் are groupings of the நடுவண் அலகுகளின் குழுக்களைக் குறிக்கும்.

நடுவண் மாவட்டங்கள் நாட்டின் நிருவாக அலகுகள் அல்ல, ஆனால் நடுவண் அரசின் அமைப்புகளினால் இலகுவாக நிருவகிப்பதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு நடுவண் மாவட்டமும் பல நடுவண் நிருவாக அலகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உருசிய அரசுத்தலைவரின் சிறப்புத் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நடுவண் மாவட்டங்கள் உருசிய அரசுத்தலைவரால் "அவரது அரசியலமைப்பு அதிகாரத்தை செயல்படுத்துவதற்கென" 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன.[1] சிறப்புத் தூதுவர் அரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அரசுத்தலைவரின் நிருவாக ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள்.

நடுவண் மாவட்டங்களின் பட்டியல்

தொகு
 
நடுவண் மாவட்டம்[2] நிறுவப்பட்ட
நாள்
பரப்பு
(கிமீ²)
மக்கள்தொகை
(2010)
நடுவண்
அலகுகள்
நிருவாக
மையம்
கண்டம்
மத்திய மே 18, 2000 652,200 38,438,600 18 மாஸ்கோ ஐரோப்பா
தெற்கு மே 18, 2000 427,800 16,141,100 8 தொன்-மீது-ரஸ்தோவ் ஐரோப்பா
வடமேற்கு மே 18, 2000 1,687,000 13,583,800 11 சென் பீட்டர்ஸ்பேர்க் ஐரோப்பா
தூரகிழக்கு மே 18, 2000 6,952,600 8,371,257 11 காபரோவ்ஸ்க் ஆசியா
சைபீரியா மே 18, 2000 4,361,800 17,178,298 10 நொவசிபீர்ஸ்க் ஆசியா
யூரால் மே 18, 2000 1,818,500 12,082,700 6 யெக்கத்தரின்பூர்க் ஐரோப்பாவும் ஆசியாவும்
வோல்கா மே 18, 2000 1,037,000 29,900,400 14 நீசினி நோவகோரத் ஐரோப்பா
வடக்கு காக்கசியம் சனவரி 19, 2010 170,400 9,496,800 7 பியாத்திகோர்ஸ்க் ஐரோப்பா

மூலம்:[3]

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. УКАЗ Президента РФ от 13.05.2000 N 849 "О ПОЛНОМОЧНОМ ПРЕДСТАВИТЕЛЕ ПРЕЗИДЕНТА РОССИЙСКОЙ ФЕДЕРАЦИИ В ФЕДЕРАЛЬНОМ ОКРУГЕ" பரணிடப்பட்டது 2013-08-01 at the வந்தவழி இயந்திரம். Graph.document.kremlin.ru (2000-05-13). Retrieved on 2013-08-20.
  2. "Russia: Federal Districts and Major Cities". City Population. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).