ராஜாத்தி சல்மா (கவிஞர்)

தமிழக எழுத்தாளர்

ரொக்கியா பேகம் என்ற ராஜாத்தி சல்மா (rajathi salma) என்பவர் 1968 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி என்ற ஊரில் பிறந்த தமிழ் இஸ்லாமிய பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். சல்மா எழுதிய ‘இரண்டாம் சாமங்களின் கதை’, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ஏசியன் புக்கர் ப்ரைஸ் எனப்படும் மேன் ஏசியன் லிட்டெரரி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்ததன் காரணமாக தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். தமிழ் படைப்பாளி ஒருவர் ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’க்கான லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.[1][2]

இளம்பருவம்

தொகு

ராஜாத்தி சல்மா 1968 ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி என்ற ஊரில் சம்சுதீன், சர்புன்னிசா ஆகியோரின் மகளாக பிறந்தார். அவரது 13ம் வயதில் தனது தோழிகளுடன் திரையரங்கு சென்று திரைப்படம் பார்த்த காரணத்தால் அவரது குடும்பத்தார் அவரை பள்லி செல்ல அனுமதிக்கவில்லை. திராவிட பாரம்பரியம் கொண்ட அப்துல் மாலிக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதன்பின் கவிதைகள் ,கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதத்தொடங்கினார்.

சல்மாவின் 17ம் வயதில் காலச்சுவடு பதிப்பகம் மூலமாக அவரது முதல் கவிதைத் தொகுப்பான ஒரு மாலையும் இன்னொரு மாலையும் வெளியானது.[3]

எழுதிய நூல்கள்

தொகு

கவிதைத்தொகுப்பு

தொகு
  • ஒரு மாலையும் இன்னொரு மாலையும் 2000 ம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்திலும் அன் ஈவ்னிங் அண்ட் அனதர் ஈவ்னிங் என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது.
  • 2003 ம் ஆண்டு "பச்சை தேவதை" காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. கிரீன் ஏஞ்சல் என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[4]

புதினங்கள்

தொகு
  • இரண்டாம் ஜாமத்தின் கதைகள் (2004) தெ அவர்ஸ் பாஸ்ட் மிட்நைட் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலையாள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி, ஜெர்மன், கடாலன் ஆகிய மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு வேலைகள் நடந்துவருகிறது.[சான்று தேவை][சான்று தேவை]
  • மனாமியங்கள் (2016) - இதுவும் ஆங்கிலத்தில் தெ ட்ரீம்ஸ்[5] என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விருதுகள்

தொகு
  • மகாகவி கன்னையாலால் சேதியா அறக்கட்டளை சார்பில் பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கும் கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் "மகாகவி கன்னையாலால் சேதியா விருது" வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டுக்கான விருது கவிஞர் சல்மா அவர்களுக்கு வழங்கப்பட்டது.[6]
  • தந்தை பெரியார் விருது (2018)[7] திராவிடர் கழகம் சார்பில் வீரமணி அவர்களாரல் வழங்கப்பட்டது.

அரசியல் வாழ்வு

தொகு

திருச்சி மாவட்டம், பொன்னம்பட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவராக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ராஜாத்தி பேகம் என்ற ரொக்கையா, திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் தலைவியாகவும் பணியாற்றியுள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

குடும்பம்

தொகு
  • பெற்றோர் : சம்சுதீன், சர்புன்னிசா
  • கணவர் : அப்துல் மாலிக்
  • புதல்வர்கள் : சலீம்ஜாஃபர் மற்றும் முஹம்மதுநதீம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajathi Salma on a Journey of Courage and Creativity | DESIblitz" (in en-GB). DESIblitz. 2016-08-22. https://www.desiblitz.com/content/rajathi-salma-journey-courage-creativity. 
  2. "Salma - Movies that Matter Film Festival". www.moviesthatmatter.nl (in ஆங்கிலம்). Archived from the original on 2017-10-01. பார்க்கப்பட்ட நாள் 2017-10-01.
  3. "Book Review: Salma: Filming a Poet in her Village" (in en-US). Engenderings. 2013-11-29. http://blogs.lse.ac.uk/gender/2013/11/29/book-review-salma-filming-a-poet-in-her-village/. 
  4. Poet Salma's works
  5. Rawther, Soyesh H. (2010-01-06). "Salma beyond words" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/arts/Salma-beyond-words/article16836414.ece. 
  6. "மகாகவி கன்னையாலால் விருது". https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2018/01/13193025/1140165/Periyar-Award-for-actor-Vijay-Sethupathi-Parthiban.vpf?espv=1. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "பெரியார் விருது". https://tamil.thehindu.com/india/article26094934.ece/amp/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாத்தி_சல்மா_(கவிஞர்)&oldid=4055541" இலிருந்து மீள்விக்கப்பட்டது