ராட்சசி (2019 திரைப்படம்)

2019இல் வெளியான தமிழ் திரைப்படம்

ராட்சசி (Raatchasi) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான[1] இந்தியத் தமிழ் மொழி குழந்தைகள் சமூக நாடகத் திரைப்படமாகும். சையத் கெளதம்ராஜ் எழுதி இயக்கிய[2] இந்தப் படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் எஸ். ஆர். பிரகாஷ்பாபு, எஸ். ஆர். பிரபு தயாரித்திருந்தார்.[3] இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4] ஹரீஷ் பேரடி, பூர்ணிமா பாக்கியராஜ், சத்யன், நாகினீடு, அருள்தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.[5] பிலோமின் ராஜ் படத் தொகுப்பையும், கோகுல் பெனாய் ஒளிப்பதிவையும் மேற்கொண்டிருந்தனர். 5 சூலை 2019 அன்று படம் வெளியானதும், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[6]

ராட்சசி
Theatrical release poster
இயக்கம்சையத் கௌதம்ராஜ்
தயாரிப்புஎஸ். ஆர். பிரகாஷ்பாபு
எஸ். ஆர். பிரபு
கதைசையத் கௌதம்ராஜ்
இசைஷான் ரோல்டன்
நடிப்புஜோதிகா
ஹரீஷ் பேரடி
ஒளிப்பதிவுகோகுல் பெனாய்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
விநியோகம்டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 5, 2019 (2019-07-05)(இந்தியா)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்த படம் 2020இல் கோல்ட்மினாஸ் டெலிஃபிலிம்ஸால் இந்தியில் மேடம் கீதா ராணி என மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இது யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 9 மாதங்களுக்குள் 180 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.[7]

ஒலிப்பதிவு

தொகு

சீன் ரோல்டன் இசையமைத்த படத்தின் 5 பாடல்களைக் கொண்ட இசை, 20 சீன் 2019 அன்று வெளியிடப்பட்டது. பாடல்களை யுகபாரதி, தனிக்கொடி, சீன் ரோல்டன், சை. கௌதம்ராஜ் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Jyotika's 'Raatchasi' to release on July 5". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-24.
  2. "Raatchasi trailer is a woman on a mission". www.thenewsminute.com. 31 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
  3. "First look of Jyotika's 'Raatchasi' – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
  4. https://silverscreen.in/news/jyothika-to-play-school-teacher-in-her-upcoming-film-ratchasi/
  5. "Jyothika's Raatchasi movie official trailer video". Behindwoods. 2019-05-31. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
  6. "Raatchasi movie review: Here is what netizens say about Jyothika-starrer". 5 July 2019.
  7. Madam Geeta Rani (Raatchasi) 2020 New Released Hindi Dubbed Full Movie | Jyothika, Hareesh Peradi (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-10-07

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராட்சசி_(2019_திரைப்படம்)&oldid=4096945" இலிருந்து மீள்விக்கப்பட்டது