சிறுவர் திரைப்படம்

சிறுவர் திரைப்படம் அல்லது குடும்பத் திரைப்படம் (Children's film) என்பது குடும்ப பின்னணியை கொண்ட சிறுவர்கள் தொடர்புடைய ஒரு திரைப்பட வகையாகும். இது குறிப்பாக குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படுகின்றன.[1][2] இந்த திரைப்படம் இயல்பியம், கனவுருப்புனைவு, சாகசம், போர், இசை, நகைச்சுவை மற்றும் இலக்கியத் தழுவல்கள் போன்ற பல முக்கிய வகைகளில் தயாரிக்கப்படுகின்றது.[3]

தமிழகத் திரைப்படத்துறையில் சிறுவர்கள் திரைப்படம் தயாரிப்பது மிக குறைவு, எனிலும் வெளியான சிறுவர் திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி என்ற திரைப்படம் தேசிய விருது பெற்றது. மற்றும் ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ் சிறுவர் திரைப்படங்கள் குடும்ப பின்னணியை கொண்டு சிறுவர்களை கதாநாயகனாக வைத்து நகைச்சுவை மற்றும் குடும்பம் வகைகளில் உருவாக்கப்படுகின்றது. அன்புள்ள ரஜினிகாந்த் (1984), துர்கா (1990), பசங்க (2009), காக்கா முட்டை (2014), சைவம் (2014), பசங்க 2 (2015), எழுமின் (2018) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

குழந்தைகளின் படங்களுக்கு எதிராக குடும்பப் படங்கள் தொகு

சிறுவர்கள் திரைப்படம் 1930 களில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அமேரிக்காவில் "குடும்ப படம்" என்ற சொல் அடிப்படையில் வெளியிடப்பட்டது.[4] அதே சமயம் "குழந்தைகள் படம்" ஒரு ஐரோப்பிய வெளிப்பாடாக கருதப்பட்டது. இருப்பினும் இரண்டு சொற்களுக்கும் இடையிலான வேறுபாட்டை முறையே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய திரைப்படங்கள் பின்பற்றும் முறைகளை காணலாம். அமெரிக்க குடும்பப் படங்களில் ஒரு குழந்தை கதாநாயகனை போன்று சித்தரிக்கப்படுகின்றது. இதற்கு நேர்மாறாக ஐரோப்பிய சிறுவர்கள் திரைப்படங்கள் "சாதாரணமாக" தோன்றும் சிறுவர்களை நடிக்க வைக்கின்றன. இதேபோல் அமெரிக்க குடும்பப் படங்களில் நன்கு அறியப்பட்ட நடிகர்கள் அல்லது நடிகைகளை உள்ளடக்கியதாக இருக்க முடியும், இது ஒரு பரந்த பார்வையாளர்களை ஈர்க்கும் முயற்சியாகும். இது வயது வந்தோரின் அல்லது பெற்றோரின் பார்வையில் கதைகளை முன்வைக்கிறது.

இந்த வேறுபாடுகள் காரணமாக அமெரிக்க குடும்பத் திரைப்படங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களை நோக்கி எளிதில் விற்பனை செய்யக்கூடியவை, அதே நேரத்தில் ஐரோப்பிய சிறுவர் திரைப்படங்கள் உள்நாட்டிலேயே சர்வதேச பார்வையாளர்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட முறையீட்டைப் பெறுகின்றன.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Bazalgette 1995, ப. 92.
  2. Wojcik-Andrews 2000, ப. 4–5.
  3. Wojcik-Andrews 2000, ப. 161.
  4. Bazalgette 1995, ப. 94.
  5. Bazalgette 1995, ப. 92–108.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவர்_திரைப்படம்&oldid=3059085" இலிருந்து மீள்விக்கப்பட்டது