ரிச்சர்ட் ஹட்லி

சர் ரிச்சர்ட் ஜான் ஹட்லி MBE (Sir Richard John Hadlee பிறப்பு ஜூலை 1951 3) நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். துடுப்பாட்ட வரலாற்றின் மிகச் சிறந்த பன்முக வீரர்களில் ஒருவராக இவர் அரியப்படுகிறார்.

1980 இல் ஹாட்லீ பிரித்தானியப் பேரரசின் கௌரவ உரறுப்பினராகவும் 1990 ஆம் ஆண்டில் இவர் துடுப்பாட்டத்தில் இவரது சேவையினைப் பாராட்டி வீரத்திருத்தகை பட்டம் பெற்றார். அவர் நியூசிலாந்து துடுப்பாட்டத் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆவார். டிசம்பர் 2002 இல், விஸ்டனால் அனைத்துக் காலத்திற்குமான இரண்டாவது சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். [1] மார்ச் 2009 இல், ஹாட்லீ பன்னிரண்டு உள்ளூரில் அதிகம் பிரபலமான வீரர்களில் ஒருவராக நினைவுகூரப்பட்டார், மேலும் அவரின் மார்பளவு வெண்கலச் சிலை கிறிஸ்ட்சர்ச் கலை மையத்திற்கு வெளியே நிறுவப்பட்டது.

ஏப்ரல் 3, 2009 அன்று, சர் ரிச்சர்ட் ஹாட்லீ ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . [2]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

ரிச்சர்ட், வால்டர் ஹாட்லியின் மகன் மற்றும் டேல் மற்றும் பாரி ஹாட்லியின் சகோதரர் ஆவார். அவரது முன்னாள் மனைவி கரேன் நியூசிலாந்துக்காக சர்வதேச துடுப்பாட்டப் போட்டியிலும் விளையாடினார். [3] அவர் ஜூலை 3, 1951 அன்று கிறிஸ்ட்சர்ச்சின் செயின்ட் ஆல்பன்ஸில் பிறந்தார்.

ஜூன் 2018 இல், ஹாட்லிக்கு பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. [4]

தேர்வுத் துடுப்பாட்டம்தொகு

ஒரு பந்துவீச்சாளராகவும், பன்முக வீரராகவும் 86- டெஸ்ட் போட்டியில் அவர் 431 இழப்புகளை எடுத்தார். மேலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 27.24 எனும் பந்துவீச்சு சராசரியில் இவர் 3124 டெஸ்ட் ஓடங்கள் எடுத்தார் இதில் 2 நூறுகளும் 15 அரை நூறுகளும் அடங்கும்.[3]

புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசுபவர் எனப் பரவலாக அறியப்படுகிறார். டென்னிஸ் லில்லி, இம்ரான் கான், ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், கபில் தேவ், வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் மற்றும் மால்கம் மார்ஷல் ஆகியோர் சமகாலத்தில் இருந்தபோதிலும், ஹாட்லி அவரது காலத்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் காணப்பட்டார்.

அவரது காலத்தின் நான்கு சிறந்த பன்முக வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார். இந்தப் பட்டியலில் உள்ள மற்றவர்கள் இம்ரான் கான், கபில் தேவ் மற்றும் இயன் போத்தம், ஹாட்லீ ஆகிய நான்கு வீரர்களில் சிறந்த பந்துவீச்சு சராசரியைக் கொண்டிருந்தார், ஆனால் மிகக் குறைந்த மட்டையாட்ட சராசரியினைக் கொண்டிருந்தார்.

கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்த ஹாட்லி 1971/72 ஆம் ஆண்டில் கேன்டர்பரிக்காக தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 1973 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் - இரண்டு அறிமுகப் போட்டிகளின் முதல் பந்துகளுமே நான்கு ஓட்டங்களை எடுத்தனர். 1976 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் ஒரு போட்டியில் இவர் 11 இழப்புகளை எடுத்தார்.

விருது , கவுரவம்தொகு

1980 இல் ஹாட்லீ பிரித்தானியப் பேரரசின் கௌரவ உரறுப்பினராகவும் 1990 ஆம் ஆண்டில் இவர் துடுப்பாட்டத்தில் இவரது சேவையினைப் பாராட்டி வீரத்திருத்தகை பட்டம் பெற்றார்.

சான்றுகள்தொகு

  1. "Murali 'best bowler ever'". BBC News. December 2002. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/2572069.stm. பார்த்த நாள்: 21 August 2012. 
  2. "Richard Hadlee inducted into Hall of fame". 5 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "Richard Hadlee". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 21 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Sir Richard Hadlee: New Zealand Legend Diagnosed with Bowel Cancer". BBC. 15 June 2018. 15 June 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_ஹட்லி&oldid=3569797" இருந்து மீள்விக்கப்பட்டது