லக்குண்டி சமணக் கோயில்

சமணக் கோயில், லக்குண்டி (Jain Temple, Lakkundi), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின், கடக் மாவட்டத்தில், லக்குண்டி எனும் ஊரில் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

{{{building_name}}}
லக்குண்டி சமணக் கோயில்
லக்குண்டி சமணக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்லக்குண்டி, கதக் மாவட்டம், கர்நாடகா
சமயம்சமணம்

கல்யாணி சாளுக்கியர்களின் வீழ்ச்சியின் போது போசள மன்னர் இரண்டாம் வீர வல்லாளன் லக்குண்டி நகரத்தை ஒரு படைவீடாக மாற்றி அமைத்தார். .[1]

லக்குண்டி சமணக் கோயில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

கிபி 11ம் நூற்றாண்டின் நடுவில் மேலைச் சாளுக்கியர் எனும் கல்யாணி சாளுக்கியர்கள், மணற்கல்லால் கட்டிய இக்கோயில் கோபுரங்களுடன் கூடியது.

லக்குண்டி சமணக் கோயிலில் நின்ற நிலையில் மூன்று சிற்பங்கள் உள்ளன. அவைகளில் கருங்கல்லால் ஆன மகாவீரர் சிலை நான்கு அடி உயரத்தில் உள்ளது.

கோயில் உட்சுவரில் பிரம்மா மற்றும் சரஸ்வதி சிற்பங்களும் உள்ளது. வெளிச் சுவரில் இரு யானைக்களுக்கு நடுவில் இலக்குமி சிற்பமும் உள்ளது. [3]

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Cousens (1926), p.77
  2. "Alphabetical List of Monuments - Karnataka -Dharwad, Dharwad Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
  3. Cousens (1926), pp.78-79

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்குண்டி_சமணக்_கோயில்&oldid=3723276" இலிருந்து மீள்விக்கப்பட்டது