தக்காளிகள் மற்றும் காரட்கள், தர்பூசணிகள் மற்றும் பப்பாளிகள் போன்ற பிற சிவப்பு நிற பழங்கள் & காய்கறிகள், (ஆனால் ஸ்ட்ராபெர்ரிகள் அல்லது செர்ரிகளில் இல்லை) ஆகியவற்றில் காணப்படும் அடர் சிவப்பு நிற கரோட்டீன் மற்றும் கார்ட்டினாய்டு நிறமி மற்றும் பைட்டோகெமிக்கல் பொருளே (பிக்மென்ட்) லிகோபீன் என்பதாகும். லிகோபீன் என்பது வேதியியல் பூர்வமாக கரோட்டினாக இருந்தாலும், அதில் வைட்டமின் ஏ செயல்பாடுகள் இல்லை.

லிகோபீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ψ,ψ-carotene
வேறு பெயர்கள்
(6E,​8E,​10E,​12E,​14E,​16E,​18E,​20E,​22E,​24E,​26E)-​2,​6,​10,​14,​19,​23,​27,​31-​octamethyldotriaconta-​2,​6,​8,​10,​12,​14,​16,​18,​20,​22,​24,​26,​30-​tridecaene
இனங்காட்டிகள்
502-65-8 N
EC number 207-949-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 446925
  • CC(=CCC/C(=C/C=C/C(=C/C=C/C(=C
    /C=C/C=C(\C)/C=C/C=C(\C)/C=C/C=C
    (\C)/CCC=C(C)C)/C)/C)/C)C
பண்புகள்
C40H56
வாய்ப்பாட்டு எடை 536.873 g/mol
தோற்றம் Deep red solid
உருகுநிலை 172–173 °C
Insoluble
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தாவரங்கள், ஆல்கா மற்றும் பிற ஒளிசேர்க்கை உயிரிகளில், பல கார்ட்டினாய்டுகளின் உருவாக்கத்தில் மிகமுக்கியமான இடைநிலை பொருளாக லிகோபீன் இருக்கிறது, இதில் பீட்டா கரோட்டினும் அடங்கும், இதுவே தாவரங்களில் மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்துக்கு காரணம் மற்றும் ஒளிச்சேர்க்கை, ஒளி பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமான பொருளாகும். அமைப்பு ரீதியாக, இது ஒரு டெட்ராடெர்பீன் ஆகும், இது எட்டு ஐசோபெரின் அலகுகளால் உருவானது, அவற்றில் கார்பனும் ஹைட்ரஜனும் மூலப்பொருள்களாக உள்ளன, மேலும் இது நீரில் கரையாத தன்மை கொண்டது. லிகோபீனின் பதினோரு இரட்டை பிணைப்புகளின் காரணமாக அது, அதிக சிவப்பு நிறத்திலும், ஆக்சிஜனேற்ற தடுப்பான் (ஆன்டிஆக்சிடன்ட்) பண்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. இதனுடைய அடர்த்தியான நிறம் மற்றும் நச்சுத்தன்மையற்ற பண்பு இவற்றால், லிகோபீன் ஒரு பயனுள்ள உணவு வண்ண பொருளாக இருக்கிறது.[1]

லிகோபீன் என்பது, மனிதர்களுக்கு அவசியமான சத்துப்பொருளாக இல்லாவிட்டாலும், இது பொதுவாக உணவுகளில் காணப்படுகிறது, குறிப்பாக தக்காளி சாஸைக் கொண்டு உருவாக்கப்படும் உணவுகளில் காணப்படுகிறது. லிகோபீன், வயிற்றில் செரிக்கப்பட்டவுடன், பலவிதமான லிப்போ புரதங்களினால் ரத்தத்தில் உடலின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது, பின்னர் கல்லீரல், அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் விதைகள் ஆகிய இடங்களில் படிகிறது.

ஆரம்பநிலை ஆராய்ச்சிகளில், தக்காளி உண்பது மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையே தலைகீழ் தொடர்பு இருப்பதைக் காட்டின. இதனால், லிகோபீனானது, சில வகையான புற்றுநோய்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடும் என்று கருதப்பட்டது, குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய். ஆனாலும், இந்த ஆராய்ச்சி மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு ஆகியவை போதுமான அளவில் இல்லை என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பால் நிராகரிக்கப்பட்டது (ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகள் மற்றும் சாத்தியமான உடல்நல நன்மைகள் என்பதை கீழே வருமாறு காணவும்).

அமைப்பு மற்றும் இயற்பியல் பண்புகள்

தொகு

லிகோபீன் என்பது ஒரு சமச்சீர் டெட்ராடெர்பீனாகும். 8 ஐசோபெரின் அலகுகளால் உருவாக்கப்பட்டது. இது கரோட்டினாய்டு சேர்மங்களின் குடும்பத்தைச் சேர்ந்தது, மேலும் இது முழுமையாக கார்பன் மற்றும் ஹைட்ரஜனால் மட்டுமே உருவானதால், இது ஒரு கரோட்டினுமாகும்.[2] லிகோபீனைத் தனிப்படுத்தல் நடைமுறைகள் முதன்முதலில் 1910ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டன, மேலும் அதன் மூலக்கூறு அமைப்பு 1931ஆம் ஆண்டு வாக்கில் தீர்மானிக்கப்பட்டது. அதனுடைய முழு ட்ரான்ஸ் வடிவமைப்பில், அதனுடைய மூலக்கூறானது, நீளமாக, பதினோரு இரட்டைப் பிணைப்புகளால் உருவாகியிருக்கிறது. இந்த நீட்டிக்கப்பட்ட π  எலக்ட்ரான் (எதிர் மின்னி) முறையால், உயர் ஆற்றல் நிலைகளுக்கு, எலக்ட்ரான்கள் செல்வதற்கான சக்தி குறைவாகிறது. இதனால் அதிக அலைநீளம் கொண்ட ஒளியை மூலக்கூறுகள் உட்கவர முடிகிறது. லிகோபீன் ஒளியின் மிக நீளமான அலைநீளங்களை மட்டுமே உட்கவருகின்றன, இதனால் அது சிவப்பு நிறமாக காட்சித்தருகிறது.[3]

தாவரங்களும், ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியாக்களும் முழு-ட்ரான்ஸ் லிகோபீனை உருவாக்குகின்றன, ஆனால் கொள்கை ரீதியாக மொத்தம் 72 வடிவியல் ஐசோமர்கள் (மாற்றியங்கள்) சாத்தியமாகவுள்ளன.[4] ஒளி அல்லது வெப்பத்திற்கு ஆளாகும்போது, லிகோபீன் ஐசோமரைசேஷனுக்கு (மாற்றியமாக்கல்) உட்படக்கூடும், அதனால் எந்த எண்ணிக்கையிலும் சிஸ் -ஐசோமர்கள் தோன்றக்கூடும், அவை நேராக இல்லாமல் வளைந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளன. வெவ்வேறு வகையான ஐசோமர்கள் வெவ்வேறு வகையான நிலைப்புத்தன்மைகளைக் கொண்டுள்ளன, இதன் காரணம் அவற்றின் மூலக்கூறு ஆற்றலாகும், (அதிகபட்ச நிலைப்புத்தன்மை: 5-சிஸ் ≥ ஆல்-ட்ரான்ஸ் ≥ 9-சிஸ் ≥ 13-சிஸ் > 15-சிஸ் > 7-சிஸ் > 11-சிஸ்: குறைந்தபட்சம்).[5] மனித ரத்த ஓட்டத்தில், பலவகையான சிஸ் -ஐசோமர்கள் மொத்த லிகோபீன் அடர்த்தியில் 60% அளவு உள்ளன, ஆனால், தனிப்பட்ட ஐசோமர்களின் உயிரியல் பூர்வமான விளைவுகள் இதுவரை ஆராயப்படவில்லை.[6]

லிகோபீன் நீரில் கரையாதது, கரிம கரைப்பான்கள் மற்றும் எண்ணெய்களில் மட்டுமே கரையக்கூடியது. இதனுடைய இருமுனை இன்மை தன்மையின் காரணமாக, லிகோபீன் உணவு தயாரிப்புகளில், எந்தவிதமான துளைகள் கொண்ட பொருளையும் போதுமான அளவுக்கு நிறமூட்டுகிறது. அதேபோல் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் பயன்படுகிறது. ஒரு தக்காளி கறையைத் துணியிலிருந்து எளிதாக அகற்றி விட முடியும் (கறைபட்டவுடனே அகற்றப்பட்டால்), ஆனால் லிகோபீன் பிளாஸ்டிக்கில் அதிக ஆழத்திற்கு ஊடுருவி செல்கிறது, இதனால் நீர் அல்லது டிடர்ஜென்ட் மூலம் அதை அகற்றவே முடியாது. லிகோபீன் ஆக்ஸிஜனேற்றம் பெற்றால் (எடுத்துக்காட்டாக, ப்ளீச்கள் அல்லது அமிலங்களுடன் வினையாற்றினால்), கார்பன் அணுக்களுக்கு இடையே உள்ள இரட்டை பிணைப்புகள் உடைகின்றன; ஒவ்வொரு மூலக்கூறும் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது, இரட்டை இணைப்பு முறை உடைகிறது மற்றும் க்ரோமோபோர் அகற்றப்படுகிறது.

ஒளிச்சேர்க்கையில் பங்கு

தொகு
 
பல கார்ட்டினாய்டுகளின் உயிரி-உற்பத்தியில் மிகமுக்கிய இடைநிலை பொருளாக லிகோபீன் இருக்கிறது.

லிகோபீன்கள் போன்ற கார்டினாய்டுகளே, ஒளிச்சேர்க்கை செய்யும், நிறமி-புரத சேர்மங்களை உருவாக்கும் தாவரங்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் காளான்களில் காணப்படும் மிக முக்கிய நிறமி ஆகும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் அடர்த்தியான வண்ணங்கள் தோன்றுவதற்கு அவையே காரணமாகும் மற்றும், ஒளிசேர்க்கையில் பல செயல்பாடுகளையும், அதிகப்படியான ஒளியால் ஏற்படும் சிதைவைக் காப்பதிலும் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. பீட்டா-கரோட்டின் மற்றும் சாந்தோபில்கள் போன்ற முக்கியமான கார்ட்டினாய்டுகளின் உருவாக்கத்தில் மிக முக்கிய இடைநிலை பொருளாக லிகொபீன்கள் இருக்கின்றன.

உயிரியல் கூட்டிணைப்பு

தொகு

யுகேரியாடிக் தாவரங்கள் மற்றும் புரோகேரியாட்டிக் தாவரங்கள் ஆகிய இரண்டிலும், உயிர்பொருள் உருவாக்கம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன மற்றும் அவற்றில் பயன்படும் நொதிகளும் ஒரே போன்றவையாக உள்ளன, புரோகேரியோடிக் சையானோபாக்டீரியா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.[7] இதன் உருவாக்கம், மெவாலோனிக் அமிலம், டைமெதிலாலைல் பைரோபாஸ்பேட் ஆக மாற்றப்படுவதிலிருந்து தொடங்குகிறது. இது பின்னர் மூன்று மூலக்கூறுகளைக் கொண்ட ஐசோபென்டனைல் பைரோபாஸ்பேட் (டைமெதிலாலைல் பைரோபாஸ்பேட்), ஆக சுருக்கப்படுகிறது, இதனால் இருபது கார்பன் ஜெரனைல்ஜெரனைல் பைரோபாஸ்பேட் உருவாகிறது. இவ்வாறு உருவாகும் இவற்றின் இரண்டு மூலக்கூறுகள் இணைந்து வாலில் இணைந்ததாக சுருக்கமடைகின்றன, இதனால் நாற்பது கார்பன் பைடோயன் உருவாகிறது, இதுவே கார்ட்டினாய்டு உயிரி-உருவாக்கத்தில் முதல் முக்கிய படியாகும். பல நிறைவுறாத படிகளின் மூலம், பைடோயன் லிகோபீனாக மாற்றமடைகிறது. லிகோபீனின் இரண்டு இறுதி, ஐசோபெரின் குழுக்கள் சுழற்சியாக இணைந்து, பீட்டா கரோட்டினை உருவாக்க முடியும், இவை பின்னர் பல நிலையான சாந்தோஃபில்களாக மாற்றப்படலாம்.[8]

உணவுப்பொருள்களில் இருக்கும் அளவுகள்

தொகு
உணவுப்பொருள்களில் லிகோபீன் காணப்படும் அளவு[9]
மூலப்பொருள் ஈரமான எடையில் μg/g
Gac 2,000–2,300
சமைக்காத தக்காளி 8.8–42
தக்காளி ஜூஸ் 86–100
தக்காளி சாஸ் 63–131
தக்காளி கெட்ச்அப் 124
தர்பூசணி 23–72
இளஞ்சிவப்பு கிரேப்ப்ரூட் 3.6–34
இளஞ்சிவப்பு கொய்யா 54
பப்பாளி 20–53
ரோஸிப் ப்யூரி 7.8
அப்ரிகோட் [0][1]

காக் பழம், தக்காளிகள், தர்பூசணி, இளஞ்சிவப்பு கிரேப்ப்ரூட், இளஞ்சிவப்பு கொய்யா, பப்பாளி, சிவப்புநிற பெல் பெப்பர், சீபக்த்ரோன், வொல்ஃப்பெர்ரி (கோஜி, தக்காளியுடன் தொடர்புடைய ஒரு பழம்), மற்றும் ரோஸ்ஹிப் ஆகிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் லிகோபீன் அதிகமாக காணப்படுகிறது. காக் பழம் (மொமொரிடிகா கொச்சின்சினிசிஸ் ஸ்பெரங்) என்பது வேறெதையும் விட மிக அதிக அளவில் லிகோபீனைக் கொண்ட பழமாகும். எடுத்துக்காட்டாக, தக்காளியை விட 70 மடங்குகள் அதிக அளவில் கொண்டிருக்கிறது[10], ஆனால் காக் பழம் அதன் உற்பத்தி பகுதியான தென்கிழக்கு ஆசியா பகுதிக்கு வெளியே மிக குறைவான அளவிலேயே கிடைப்பதால், லிகோபீனை உணவு மூலம் உட்கொள்பவர்களின் அளவில் 85% க்கும் மேல் தக்காளி சார்ந்த சாஸ்கள் (சுவைச்சாறு) , ஜூஸ்கள் (பழச்சாறு) மற்றும் கெட்ச் அப்கள் போன்றவற்றால் மட்டுமே நடக்கின்றன.[11] தக்காளிகளில், லிகோபீனின் உள்ளடக்கம் அவற்றின் சிற்றினங்களுக்கு உட்பட்டு வேறுபடுகிறது, மேலும் பழம் பழுக்கும் நிலையில் அதிகரிக்கிறது.[12]

பிற பழங்கள் மற்றும் காய்கறிகளை, சமைக்கும்போது அதிலுள்ள ஊட்டச்சத்து மிகுந்த வைட்டமின் சி போன்றவை குறைகின்றன, ஆனால் தக்காளியை சமைக்கும்போது அதிலுள்ள உயிரியல் பூர்வமாக கிடைக்கக்கூடிய லிகோபீனின் அளவு அதிகரிக்கிறது. தக்காளி பேஸ்டில் உள்ள லிகோபீனின் அளவு, புதிய தக்காளிகளில் இருப்பதை விடவும் நான்கு மடங்கு அதிகமாகும். இந்த காரணத்தினால், சமைக்கப்படாத தக்காளிகளை விடவும் மிகவும் விரும்பப்படுவதாக தக்காளி சாஸ் இருக்கிறது.

லிகோபீனைக் கொண்டுள்ள பெரும்பாலான பச்சை காய்கறிகளும், பிறவும் கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் குறைவாக கொண்டவையாக இருக்கின்றன, மேலும் லிகோபீன் நீரில் கரையாததாகவும், காய்கறி நார்ச்சத்துடன் இணைந்ததாகவும் இருக்கிறது. பாஸ்டுரைசேஷன் (நுண்ணுயிர் வளர்ச்சி தடை) செய்யப்பட்ட தக்காளி ஜூஸ், சூப், சாஸ் மற்றும் கெட்ச் அப் போன்ற தயார் செய்யப்பட்ட தக்காளி தயாரிப்புகளில் மிக அதிக அளவில், லிகோபீனின் இருப்பு உள்ளது.

தக்காளிகளை சமைப்பது மற்றும் நசுக்குவது (கேன்களில் அடைப்பது போன்ற செயல்முறைகள்) போன்றவற்றுடன் அதனை எண்ணெய் மிகுந்த உணவுடன் (பிட்சா அல்லது ஸ்பாகெட்டி சாஸ் போன்றவை) பரிமாறுவது போன்றவை அது எளிதாக செரிமான மண்டலத்திலிருந்து ரத்த ஓட்டத்துடன் சேர உதவுகிறது. லிகோபீன் கொழுப்பில் கரையக்கூடியதும் ஆகும். எனவே எண்ணெயானது இது எளிதாக செரிக்க உதவும். காக் பழம் இதில் ஒரு விதிவிலக்காகும், ஏனெனில் அதில் மட்டுமே அதிக அளவில், லிகோபீனும், நிறைவுற்ற, நிறைவுறாத கொழுப்பு அமிலங்களும் ஒரு சேரக் காணப்படுகின்றன.[13]

காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து லிகோபீனை எடுக்கலாம், ஆனாலும் ப்ளாகெஸ்லே ட்ரிஸ்போரா என்ற பூஞ்சையும், இதற்கான மிகமுக்கிய மூலப்பொருளாகும். பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரித்தல் போன்ற வணிகரீதியான நோக்கங்களுக்கு காக் என்பது ஒரு சிறந்த மூலப்பொருளாக விளங்குகிறது.

சில வகை தக்காளிகளிலிருந்து கிடைக்கும், சிஸ்-லிகோபீன் என்பது, அதிக அளவில் கிடைக்கும் உயிர்ப்பொருளாகும்.[14]

பார்மகோகினெடிக்ஸ் (மருந்தினால் ஏற்படும் மாற்றம்)

தொகு
ஐசோபீன்களின் பரவல்[15]
திசு ஈரமான எடையில் nmol/g
கல்லீரல் 1.28–5.72
சிறுநீரகம் 0.15–0.62
அட்ரீனல் 1.9–21.6
விதைகள் 4.34–21.4
ஓவரி 0.25–0.28
அடிபோஸ் 0.2–1.3
நுரையீரல் 0.22–0.57
குடல் 0.31
மார்பகம் 0.78
தோல் 0.42

செரிமானத்துக்கு பின்னர், லிகோபீனானது, லிப்பிடு மிஸெல்லஸ் ஆக சிறுகுடலில் சேர்க்கப்படுகிறது. இந்த மிஸெல்லஸ் உணவு கொழுப்பு மற்றும் பைல் அமிலங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. மேலும் இவை ஹைட்ரோஃபோபிக் லிகோபீனைக் கரைக்க உதவுகின்றன மற்றும் சிறுகுடல் மியுகோசல் உயிரணுக்களுக்கு உள்ளே செயலற்ற கடத்தல் செயல்முறையின் மூலம் கொண்டு செல்ல உதவுகிறது. லிகோபீனின் கல்லீரல் செயல்பாட்டைப் பற்றி ஓரளவே தெரிய வந்துள்ளது, ஆனால் பிற அனைத்து கரோட்டினாய்டுகளைப் போன்றே, லிகோபீனும் கைலோமைக்ரான்களில் உட்கவரப்பட்டு, நிணநீர் மண்டலத்தால் வெளியிடப்படுகின்றன. ரத்த பிளாஸ்மாவில், லிகோபீனானது மெல்ல மெல்ல, மிகக்குறைவான மற்றும் அடர்த்தியற்ற லிப்போபுரத பகுதிகளாக விநியோகிக்கப்படுகிறது.[16] லிகோபீன் முக்கியமாக, கொழுப்பு நிறைந்த திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு விநியோகிக்கப்படுகிறது, அதாவது அட்ரீனல் சுரப்பிகள், கல்லீரல் மற்றும் விதைகள் போன்றவை.

தீய விளைவுகள்

தொகு

லிகோபீன் நச்சுத்தன்மையற்றது, இது பொதுவான உணவுமுறைகளில் காணப்படுகிறது, ஆனால் அதிகமாக உட்கொள்வது தொடர்பான சிக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளன். நீண்டகாலம், அதிக அளவில், தக்காளி ஜூஸை உட்கொண்டு வந்த ஒரு நடுத்தர வயது பெண்ணின் தோலும், கல்லீரலும், ஆரஞ்சு மஞ்சள் நிறத்தை அடைந்தன, மேலும் அப்பெண்ணின் ரத்தத்திலும் அதிகமான அளவு லிகோபீன் இருந்தது. பின்னர் மூன்று வாரங்களுக்கு, லிகோபீன் இல்லாத உணவு பழக்கத்தைக் கடைபிடித்த பின்னர் அவருடைய தோல் மற்றும் கல்லீரலின் நிறம் இயல்புநிலைக்கு மாறியது.[16] இவ்வாறு தோல் நிறம் மாறுவதற்கு, லிகோபெனோடெர்மியா[17] என்று பெயர் மற்றும் அது நச்சுத்தன்மையற்றது.

ஆன்டிஆக்சிடென்ட் பண்புகள் மற்றும் சாத்தியமான உடல்நல நன்மைகள்

தொகு

ஒற்றை ஆக்சிஜன் நிரப்பிகளில் லிகோபீனே மிகவும் திறன்வாய்ந்த கரோட்டினாய்டு நிரப்பியாகும்[18], இது வைட்டமின் ஈ-ஐ விட 100 மடங்கு அதிக திறன் வாய்ந்ததாக ஆய்வக சோதனைகளிலிருந்து அறியப்பட்டுள்ளது. வைட்டமின் ஈ (நீரில் கரையத்தக்க) குளுடாதியோனை விட 125 முறைகள் நிரப்பி செயல்முறையைக் கொண்டதாகும்[மேற்கோள் தேவை]. புற ஊதாக்கதிர்கள் படும்போது, தோலில் உருவாகும் தனிநிலை ஆக்சிஜனே தோல் வயதாவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

இதனுடைய ஆன்டிஆக்ஸிடென் ட் பண்புகளின் காரணமாக, கணிசமான அளவு அறிவியல் ஆராய்ச்சிகளும், ஆய்வக சோதனையும் லீகோபீன் உட்கொள்ளுதல் மற்றும் பொது ஆரோக்கியம் தொடர்பாக செய்யப்பட்டன. ஆரம்பநிலை ஆய்வுகள், இதயநாள நோய்கள் சரியாவதையும், புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ், மற்றும் ஆண் மலட்டுத்தன்மையை இது சரிப்படுத்துவதையும் காண்பித்தன.[19]

லிகோபீனின், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை ஆய்வுசெய்து, பல ஆய்வுகள் இருந்தன, ஆனாலும் இதற்கான ஆய்வுகள் இதுவரை முழுமையடையாமலே இருக்கின்றன. நுரையீரல், வயிறு மற்றும் புரோஸ்டேட் சுரப்பி ஆகியவற்றில் புற்றுநோய்களுக்கு எதிராக லிகோபீனின் ஆதாரம் மிகவும் வலுவாக இருந்தது. லிகோபீன் வைட்டமின் ஏ வுக்கான மாற்று அல்ல, எனவே ஆன்டிஆக்ஸிடேஷன் போன்ற வேறு நன்மைகளுக்காக இதனை உட்கொள்ளலாம். லிகோபீனில் பீட்டா ஐயோனின் வளைய அமைப்பு இல்லாமலிருப்பது அதனுடைய ஆன்டிஆக்ஸிடென்ட் செயல்பாட்டை அதிகரிக்கிறது. லிகோபீன் மிகவும் திறன்வாய்ந்த, ஆக்சிஜன் மற்றும் கட்டற்ற அணு நிரப்பு பொருளாகும், மேலும் இதுவே பிளாஸ்மா மற்றும் பிற திசுக்களில் உள்ள தலையாய கரோட்டினாய்டு ஆகும். லிகோபீன் நுரையீரல் திசுக்களிலும் காணப்படுகிறது மற்றும் இது நுரையீரல் புற்றுநோயில் காணப்படும் NO2 சிதைவிலிருந்து இதனை காக்கவும் உதவுகிறது. பைலோரி தாக்கங்களால் உருவாகும், ஆக்ஸிடேட்டிவ் சுமையைக் குறைக்கவும் லிகோபீன் உதவக்கூடும். தக்காளியிலிருந்து வருவிக்கப்பட்ட, கரோட்டினாய்டு லிகோபீன் புற்றுநோயின் ஆபத்தைக் குறைக்கக்கூடும், மேலும் இது பேஸ் 2 நச்சு நீக்கு நொதிகளை உருவாக்குவதைத் தூண்டி விடுகிறது, இவற்றால் உயிரணுக்கள் மற்றும் உடலிலிருந்து தீங்கு விளைவிக்கும் கார்சினோஜன்கள் அகற்றப்படுகின்றன[20]. லிகோபீனை புற்றிநோய் உயிரணுக்கள் வளர்ச்சியில் ஒரு பங்கேற்பியாக கொண்ட ஒரு ஆய்வில், மனித ஃபைப்ரோபிளாஸ்ட்கள் லிகோபீனுக்கு குறைவான உணர்திறன் கொண்டவையாக உள்ளன மற்றும் மெல்ல வளர்ச்சிக்கு செல்கின்றன என்று அறியப்பட்டது. பேசல் எண்டோமெட்ரியல் புற்றுநோய் உயிரணு வளர்ச்சியுடன் கூடவே, லிகோபீன் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி-ஐ-தூண்டப்பட்ட வளர்ச்சியைக் குறைப்பதாக கண்டறியப்பட்டது. மார்பக மற்றும் எண்டோமெட்ரியல் புற்று உயிரணு வளர்ச்சியில், இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகளே மிக முக்கிய ஆட்டோக்ரைன்/பாராக்ரைன் ஒழுங்குப்படுத்திகளாக இருக்கின்றன. எனவே, இந்த முக்கிய ஆட்டோக்ரைன்/பாராக்ரைன் அமைப்பில் லைகோபீன் குறுக்கீடு புதிய ஆய்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடும், இவை எண்டோமெட்ரியல் புற்றுநோய் மற்றும் பிற கட்டிகளில் இவற்றின் பாதிப்பை அறிய உதவுகின்றன[21]. வேறு ஆய்வுகளில், காட்ராக்ட் வளர்ச்சியில் ஏற்பி விளைவைத் தருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது[22] மற்றும் பல வேறு வகையான புற்றுநோய் உயிரணுக்களில், அதாவது மார்பக மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய் உயிரணுக்களில்[23], புரோஸ்ட்ரேட் கார்சினோமா உயிரணுக்கள் [20], மற்றும் கோலன் புற்றுநோய் உயிரணுக்கள்[24].

நவம்பர் 2005 -இல் தரப்பட்ட விரிவான ஆய்வறிக்கைக்கு பின்னர், அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு நோய் ஆபத்தைக் குறைப்பதில் உள்ள சாத்தியம் தொடர்பாக ஒரு குறிப்பிட தகுந்த சந்தேகத்தை எழுப்பியது. இதில் புரோஸ்டேட் புற்றுநோய் தடுப்பு தொடர்பாக எந்தவித இணைப்பையும் லிகோபீன் தரவில்லை. ஆனாலும், முழு தக்காளிகளை உண்பது நன்மையைத் தருவதாக கூறப்படுகிறது, இறுதியில் இதுவரை அறியப்படாத சேர்மங்கள் (லிகோபீனைத் தவிர மற்றவைகள்) நன்மையளிக்கும் காரணிகளாக உள்ளன.[25] FDA ஆய்வறிக்கையின்படி, மிகவும் வரம்புடைய தகுதிகளைக் கொண்ட கோரலை மட்டுமே லிகோபீனைக் கொண்ட தக்காளிகள் மற்றும் தக்காளி சார்ந்த தயாரிப்புகள் மேற்கொள்ள வேண்டும், அது பின்வரும் வகையான வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தக்கூடாது:

மிகவும் வரம்புடைய மற்றும் ஆரம்பநிலை அறிவியல் ஆராய்ச்சியானது, ஒரு கப் தக்காளியில் பாதி அளவு அல்லது தக்காளி சாஸை வாரத்துக்கு ஒருமுறை உண்டு வருவதால், புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். இந்த கருத்தை ஆதரிக்கும், சிறிய அளவிலான அறிவியல் பூர்வ ஆதாரம் இருப்பதாக எஃப்டிஏ கூறுகிறது.

தொடர்புடைய காரொட்டினாய்டு ஆன்டிஆக்ஸிடென்ட், பீட்டா கரோட்டின் என்பது, புரோஸ்டேட் புற்றுநோய் வாய்ப்பை அதிகரிப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது,[26] ஆனாலும் இந்த ஆய்வுகள் இதுவரை முரண்பாடுகளை கொண்டவையாகவும், தொடர்ந்து நடைபெறுபவையாகவும் உள்ளன.

மேலும் பார்க்க

தொகு
  • உணவூட்டம்
  • டோகோஃபெரோல்
  • டோக்ட்ரினொல்

குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 21 CFR 73.585
  2. க்ராஸ்மேன்et al. (2004) ப. 129
  3. ராவ் et al. (2007) ப. 210
  4. 1054 ஐசோமர்கள் கொள்கைரீதியாக சாத்தியமானவை, ஆனால் ஸ்ட்ரிக் ஜ்ஹிண்டரன்ஸ் காரணமாக 72 மட்டுமே இருக்கின்றன. ஐஏஆர்சி ஹேண்ட்புக், (1998) ப. 25
  5. சேஸ் et al. மூலக்கூறு அமைப்பு தொடர்பான இதழ்: THEOCHEM, தொகுப்பு 571, எண் 1, ஆகஸ்ட் 27, 2001 , ப. 27-37(11)[1]
  6. லிகோபீன்: மனிதனின் உடல்நலம் மற்றும் நோயில் அதனுடைய பங்கு, ராவ் 'et al.', அக்ரோஃபுட் இண்டஸ்ட்ரி ஹைடெக், ஜூலை/ஆகஸ்ட் 2003 [2] பரணிடப்பட்டது 2012-02-16 at the வந்தவழி இயந்திரம்
  7. கன்னிங்ஹாம் (2007) ப. 533
  8. ஆர்ம்ஸ்ட்ராங்(1996) ப. 229
  9. ராவ் அண்ட் ராவ் (2007) ப. 209–210
  10. காக் பழத்தில் கரோட்டினாய்ட் உள்ளடக்கம் தொடர்பான USDA ஆய்வு
  11. ராவ் (2007) ப.
  12. கான் et al. (2008) ப. 495
  13. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/14733508?ordinalpos=1&itool=EntrezSystem2.PEntrez.Pubmed.Pubmed_ResultsPanel.Pubmed_DefaultReportPanel.Pubmed_RVDocSum
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  15. ஸ்டால் (1996) ப. 7
  16. 16.0 16.1 ஸ்டால் (1996) ப. 6
  17. மருந்து, உணவு மற்றும் உணவூட்டக் கழகத்தின் கல்வி அமைப்பு. பீட்டா கரோட்டின் மற்றும் பிற கரோட்டினாய்டுகள். வைட்டமின் சி, வைட்டமின் ஈ, சீலினியம் மற்றும் கரோட்டினாய்டுகள் உட்கொள்ளுதலில் உணவு கட்டுப்பாட்டு பரிந்துரைகள். வாஷிங்டன், டி.சி.: தேசிய அகாடமி பிரஸ்; 2000:325-400.
  18. டி மாஸியோ (1989) ப. 532–538
  19. க்ளோவானுக்கி(1995) ப. 1767–76
  20. 20.0 20.1 க்ளோவனுக்கி et al. (2002) ப.391-398
  21. லீவி et al. (1995) ப.257-266
  22. போல்லக் et al. (1997) ப.31-36
  23. நாஹும் et al. (2001) ப.3428-3436
  24. நரிஸவா et al. (1996) ப.137-142
  25. தகுதிவாய்ந்த உடல்நல கோரிக்கைகள்: இது தொடர்பான கடிதம் தக்காளிகள் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்(லிகோபீன் உடல்நல கோரல் கூட்டமைப்பு)(டாக்கெட் எண். 2004Q-0201) US FDA/CFSAN நவம்பர் 2005 [3] பரணிடப்பட்டது 2009-05-13 at the வந்தவழி இயந்திரம்
  26. American Association for Cancer Research (May 17, 2007). "No Magic Tomato? Study Breaks Link between Lycopene and Prostate Cancer Prevention". Science Daily. http://www.sciencedaily.com/releases/2007/05/070517063011.htm. 

குறிப்புதவிகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லிகோபீன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Carotenoids

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிகோபீன்&oldid=3931751" இலிருந்து மீள்விக்கப்பட்டது