லோகான் பூனுட் தேசியப் பூங்கா

சரவாக்கில் உள்ள தேசிய பூங்கா

லோகான் பூனுட் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Loagan Bunut; ஆங்கிலம்: Loagan Bunut National Park) என்பது மலேசியா, சரவாக், மிரி பிரிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தேசியப் பூங்கா ஆகும்.[2]

லோகான் பூனுட் தேசியப் பூங்கா
Loagan Bunut National Park
Taman Negara Loagan Bunut
Map showing the location of லோகான் பூனுட் தேசியப் பூங்கா Loagan Bunut National Park Taman Negara Loagan Bunut
Map showing the location of லோகான் பூனுட் தேசியப் பூங்கா Loagan Bunut National Park Taman Negara Loagan Bunut
அமைவிடம்மிரி பிரிவு
 சரவாக்
 மலேசியா
அருகாமை நகரம்மிரி
ஆள்கூறுகள்3°46′N 114°13′E / 3.767°N 114.217°E / 3.767; 114.217[1]
பரப்பளவு100 km2 (39 sq mi)
நிறுவப்பட்டது1990
நிருவாக அமைப்புசரவாக் வனவியல் கழகம்
Sarawak Forestry Corporation (SFC)
வலைத்தளம்http://www.sarawakforestry.com/htm/snp-np-loagan.html

லோகான் பூனுட் என்பது சரவாக் மாநிலத்தின் மிகப்பெரிய இயற்கை ஏரி ஆகும். அந்தப் பெயர் உள்ளூர் பெரவான் மொழி பேசும் பெரவான் சமூகத்தால் வழங்கப்பட்ட பெயர் என அறியப்படுகிறது.

பொது

தொகு

லோகான் பூனுட் தேசியப் பூங்கா பெரும்பாலும் கரி சதுப்பு நிலங்களால் சூழப்பட்டுள்ளது. ஆனால், லோகான் பூனுட் தேசியப் பூங்கா இருக்கும் லோகான் பூனுட் ஏரி, வறட்சி காலத்தில் மறைந்து போகும் தன்மையே அதன் தனித்துவமான தன்மை. அதற்குப் பதிலாக ஒரு பரந்த வறண்ட சேற்று சமதளமான நிலமாக அந்த ஏரி மாறும். இந்த நிகழ்வு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஏற்படும்.[3]

லோகான் பூனுட் தேசியப் பூங்கா 100 கிமீ2 (39 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. அதன் பல்லுயிர்களுக்கும்; தனித்துவமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புக்கும் நன்கு அறியப்பட்டதாகும். இந்தத் தேசிய பூங்கா சனவரி 1, 1990 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது; மற்றும் ஆகஸ்டு 29, 1991 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[2]

உயிரினங்கள்

தொகு

லோகான் பூனுட் தேசியப் பூங்கா பலவகையான உயிரினங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில முக்கியமான உயிரினங்கள்:

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Loagan Bunut National Park". protectedplanet.net.
  2. "Sarawak National Park - National Parks and Reserves - Loagan Bunut National Park". Sarawak Forestry. 8 July 2009. Archived from the original on 14 March 2014. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.
  3. "Loagan Bunut National Park - Sarawak Forestry Corporation". sarawakforestry.com. 22 November 2020. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.

வெளி இணைப்புகள்

தொகு