வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான இந்து சமய நபர்கள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான நபர்களை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

காப்பகம் தொகு

1 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/1

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

2 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/2

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

3 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/3

ஆதி சங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர். இளமை பிராயத்தில் கௌடபாதர் சீடரான கோவிந்த பகவத்பாதர் இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார். வேதிய உபநிஷத்கள் மற்றும் பாதராயணர் இயற்றிய பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டிண்மை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். இது மற்றும் அல்லாது பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொது கருத்து. சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம், விவேக சூடாமணி, உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

4 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/4

சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி (Sivaya Subramuniyaswami, ஜனவரி 5, 1927, கலிபோர்னியா - நவம்பர் 12, 2001, ஹவாய்), ஆங்கிலேயராகப் பிறந்த இந்து சமய அமெரிக்க ஆன்மீகவாதி ஆவார். இவரது இயற்பெயர் ரொபேர்ட் ஹான்சன். இவர் "குருதேவா" என இவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர். யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் சீடர். 1970களில் ஹவாயில் கௌவாஹி (kauai) தீவில் சைவ சித்தாந்த ஆதீனம் என்ற பெயரில் ஒரு கோயிலை ஆரம்பித்து "இந்து சமயம் இன்று" (Hinduism Today) என்ற ஆங்கில மாதிகையை வெளியிட ஆரம்பித்தார். இந்து சமயம் தொடர்பாகப் பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயராகப் பிறந்து இந்துவாக வாழ்ந்தவர். இவருக்கு அடுத்த சிவ சித்தாந்த யோக மரபு குரு சத்குரு போதிநாத வேலன்சாமி ஆவார். இவரே இன்று கௌவாஹி ஆதீனத்தை ஏற்று நடத்துகிறார்.

5 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/5


[[|மேலும்...]]

6 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/6


[[|மேலும்...]]

7 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/7


[[|மேலும்...]]

8 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/8


[[|மேலும்...]]

9 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/9


[[|மேலும்...]]

10 தொகு

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/10


[[|மேலும்...]]

பரிந்துரைகள் தொகு

சற்று மேம்படுத்தினால் இப்பகுதியில் கீழ்வரும் கட்டுரைகளை இடம்பெறச் செய்யலாம். பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள் என்பதிலிருந்து கட்டுரைகளை மேம்படுத்தி பரிந்துரைத்தாலும் வலைவாசலில் இடம்பெறச் செய்யலாம்.

[[Image:{{{image}}}|115px|{{{caption}}}]]

{{{text}}}

[[{{{link}}}|மேலும்...]]