வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல் (electoral roll) என்பது ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்பில், குறிப்பிட்ட தேர்தல்களுக்கு வாக்களிக்க உரிமை கொண்ட நபர்களைப் பட்டியலிடும் தொகுப்பாகும். இந்தப் பட்டியல் வழக்கமாக தேர்தல் மாவட்டங்களால் பிரிக்கப்பட்டு, வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவுவதனை முதன்மையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலாக நிரந்தர வாக்காளர் பட்டியல்களைப் பராமரிக்கின்றன, அவை தொடர்ச்சியாகவோ அல்லது அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன (பிரான்சு போன்ற நாடுகள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன), சில அதிகார வரம்புகளில் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வாக்காளர் பட்டியல் என்பது வாக்காளர் பதிவு செயல்முறையின் விளைவாகும். பெரும்பாலான அதிகார வரம்புகளில், வாக்காளர் பதிவு (வாக்காளர் பட்டியலில் பட்டியலிடப்படுவது) ஒரு தேர்தலில் வாக்களிக்கப்பதற்கான முன்நிபந்தனையாகும். சில அதிகார வரம்புகளுக்கு வாக்காளர் பதிவு தேவையில்லை. அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோட்டா மாநிலம் வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்துவதில்லை. இவ்வாறான சமயங்களில் ஒரு வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அடையாளம் மற்றும் வாக்களிக்கும் உரிமைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
பாரம்பரியமாக, வாக்காளர் பட்டியல்கள் காகித வடிவில் பராமரிக்கப்பட்டன. ஆனால், தற்போது மின்னணு வாக்காளர் பட்டியலுக்கு அதிக அளவில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதேபோல், உயிரியளவியல் வாக்காளர் பதிவை ஏற்றுக்கொண்ட நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவில் உள்ள பகுதியளவு நாடுகள் தங்கள் வாக்காளர் பட்டியல்களுக்கு உயிரியளவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.[1]
இந்தியா
தொகுஇந்தியாவில், வாக்காளர் பட்டியலை வெளியிடுவதும் புதுப்பிப்பதும் இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். இந்த அரசு அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்து வெளியிடுகின்றன. இது அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.
2019 சனவரி 1 இல் இந்தியாவில் மொத்த வாக்காளர்கள்[2]
- மொத்த வாக்காளர்கள்: 866,913,278
- ஆண்கள்: 451,966,704.
- பெண்கள்: 414,912,901.
- மூன்றாம் பாலினம்: 33,673.
மக்களவைத் தேர்தல் 2019-க்கான மாநில வாரியான தேர்தல் விவரங்கள்[3]
வ.எண் | மாநிலம்/பிரதேசத்தின் பெயர் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
1. | ஆந்திரப் பிரதேசம் | 17162603 | 17409676 | 3146 |
2. | அருணாச்சலப் பிரதேசம் | 383804 | 389054 | 0 |
3. | அசாம் | 10627005 | 10004509 | 377 |
4. | பீகார் | 36346421 | 32070788 | 2119 |
5. | சத்தீஸ்கர் | 9112766 | 8958481 | 721 |
6. | கோவா | 545531 | 562930 | 0 |
7. | குஜராத் | 22265012 | 20325250 | 553 |
8. | ஹரியானா | 9027549 | 7792344 | 0 |
9. | இமாச்சலப் பிரதேசம் | 2458878 | 2352868 | 6 |
10. | ஜம்மு காஷ்மீர் | 3904982 | 3548312 | 45 |
11. | ஜார்க்கண்ட் | 11256003 | 10202201 | 123 |
12. | கர்நாடகா | 24837243 | 24045264 | 4404 |
13. | கேரளா | 12202869 | 13085516 | 6 |
14. | மத்தியப் பிரதேசம் | 26195768 | 23772022 | 1135 |
15. | மஹாராஷ்டிரா | 43940543 | 39542999 | 1645 |
16. | மணிப்பூர் | 925431 | 968312 | 0 |
17. | மேகாலயா | 850667 | 868802 | 0 |
18. | மிஸோராம் | 362181 | 377795 | 0 |
19. | நாகாலாந்து | 577793 | 560422 | 0 |
20. | ஒடிசா | 15946303 | 14890584 | 2146 |
21. | பஞ்சாப் | 10502868 | 9375422 | 415 |
22. | ராஜஸ்தான் | 23117744 | 20855740 | 45 |
23. | சிக்கிம் | 200220 | 188836 | 0 |
24. | தமிழ்நாடு | 29574300 | 30155515 | 5074 |
25. | தெலுங்கானா | 14472054 | 13840715 | 2351 |
26. | திரிபுரா | 1275694 | 1230212 | 0 |
27. | உத்தரப்பிரதேசம் | 76809778 | 64436122 | 7272 |
28. | உத்தராகண்ட் | 3923492 | 3572029 | 151 |
29. | மேற்கு வங்காளம் | 34592448 | 32443796 | 1017 |
30. | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 146524 | 131464 | 0 |
31. | சண்டிகர் | 305892 | 266194 | 13 |
32. | தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி | 122184 | 105399 | 0 |
33. | டாமன் மற்றும் டையூ | 58698 | 57861 | 0 |
34. | டெல்லி | 7463731 | 6005703 | 829 |
35. | லட்சத்தீவு | 25372 | 24904 | 0 |
36. | புதுச்சேரி | 446353 | 494860 | 80 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ICTs in Elections Database | International IDEA". www.idea.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
- ↑ "Download Voter List 2019,Updated PDF Electoral Roll for loksabha election". downloadvoterlistpdf.in (in அமெரிக்க ஆங்கிலம்). 29 March 2019. Archived from the original on 24 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Election Commission of India". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.