வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் நவம்பர் 2008
- நவம்பர் 29:
- கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதினம்)
- மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் 50 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 28:
- மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று இரவுகளில் சுமார் 25 பேர் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 27:
- "நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்" என புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்தார். (புதினம்)
- புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது வான்படை குண்டுத்தாக்குதல் நடத்தியது. (புதினம்)
- நவம்பர் 26: வன்னியில் தொடர் மழை மற்றும் கடும் காற்றினால் பெரும் அழிவுகளும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதில் இருவர் உயிரிழந்தனர். (புதினம்)
- நவம்பர் 24: அம்பாறை, கஞ்சிக்குடிச்சசாறு காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு நால்வர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- நவம்பர் 23: குஞ்சுப்பரந்தன் நோக்கிய இலங்கைப் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டதாகவும், படையினர் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- நவம்பர் 21: வன்னியில் இருந்து சென்ற நோயாளர் காவு வாகனங்கள் வவுனியாவுக்குள் செல்ல சிறிலங்கா படையினர் அனுமதியளிக்க மறுத்ததனால் இரண்டு நாள் பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன. (புதினம்)
- நவம்பர் 16: முகமாலை இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டதாகவும் 25 படையினர் கொல்லப்பட்டு 105 படையினர் படுகாயமடைந்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- நவம்பர் 15: பிரபல தமிழ் அறிவிப்பாளரும் வெற்றி எஃப்.எம். வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளருமான ரகுபதி பாலசிறீதரன் வாமலோசன் (லோஷன்) இலங்கை பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் நவம்பர் 22 இல் விடுவிக்கப்பட்டார்.(புதினம்),(புதினம்)
- நவம்பர் 14: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பூநகரியைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது. (பிபிசி)
- நவம்பர் 14: கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பிள்ளையான் குழுவின் பிரத்தியேக செயலாளர் ரகு என்ற குமாரசுவாமி நந்தகோபன், மற்றும் அவரது சாரதி ஆகியோர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். (புதினம்), (டெய்லிமிரர்)
- நவம்பர் 13:
- மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பன்குடாவெளிப் பகுதியில் துணை இராணுவக் குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். ஏழு பேர் காணாமல் போயினர். (புதினம்)
- பூநகரி நோக்கி முன்னேறி வரும் படையினர் பேய்முனை மற்றும் வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்)
- நவம்பர் 12:
- போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (புதினம்)
- கிளிநொச்சி மாவட்டம், அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டு 45 பேர் காயமடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- நவம்பர் 11: அம்பாறை உகந்தை காட்டுப் பகுதியில் ஊடுருவிய இலங்கை சிறப்பு அதிரடிப்படையினரின் அணி ஒன்றை விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்கியதில் அதிரடிப்படை உயர்திகாரி ஒருவர் உட்பட இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். (புதினம்)
- நவம்பர் 10:
- மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவு பிரதேசத்தில் துணை இராணுவக் குழு முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- கிளிநொச்சிக்கு மேற்கே முன்நகர்வு முயற்சியில் ஈடுபடும் படையினர் பாலாவி பகுதியையும், பேய்முனைப் பகுதியில் கிராஞ்சிப் பிரதேசத்தையும் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்), (புதினம்)
- நவம்பர் 7:
- கிளிநொச்சி மாவட்டம், பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்கிதலில் 45 படையினர் கொல்லப்பட்டு 100-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மட்டக்களப்பு மாவட்டத்தின் மகா ஒயா பிரதேசத்தில் அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 6:
- பிரிவினைவாதத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அக்கட்சியின் அவைத்தலைவர் மு.கண்ணப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். (புதினம்)
- கிளிநொச்சிக்கு தென்மேற்காக ஒன்பது கிமீ தூரத்தில் உள்ள அக்கராயன்குளம் பகுதியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக இலங்கைப் படையினர் தெரிவித்தனர். (புதினம்)
- நவம்பர் 5: மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பகுதியில் கருணா குழு மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 4: மட்டக்களப்பு மாவட்டத்தில் கோப்பாவெளி பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)
- நவம்பர் 1: யாழ். நாகர்கோயில் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. (புதினம்)