விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 6
- 1838 – ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
- 1907 – மரியா மாண்ட்டிசோரி (படம்) தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உரோமில் ஆரம்பித்தார்.
- 1912 – கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.
- 1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவை சென்றடைந்தார்.
- 1936 – ருக்மிணிதேவி அருண்டேல் சென்னை அடையாறில் கலாசேத்திரா கலைக்கூடத்தை ஆரம்பித்தார்.
- 1950 – ஐக்கிய இராச்சியம் சீனாவை அங்கீகரித்தது. சீனக் குடியரசு ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.
- 1989 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஜி. என். பாலசுப்பிரமணியம் (பி. 1910) · சி. எஸ். ஜெயராமன் (பி. 1917) · பிரமிள் (இ. 1997)
அண்மைய நாட்கள்: சனவரி 5 – சனவரி 7 – சனவரி 8