விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 29
- 1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் பிரெனெல் புகழ்பெற்ற "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய தனது குறிப்புகளை" வெளியிட்டார்.
- 1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
- 1948 – இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின.
- 1967 – வெனிசுவேலாவின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் கரகஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர்.
- 1987 – இலங்கை-இந்திய ஒப்பந்தம் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி (படம்) துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டுக் காயம் அடைந்தார்.
- 1999 – இலங்கையின் வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீலன் திருச்செல்வம் தற்கொலைக் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
பி. சா. சுப்பிரமணிய சாத்திரி (பி. 1890) · வி. சீ. கந்தையா (பி. 1920) · கருமுத்து தியாகராசர் (இ. 1974)
அண்மைய நாட்கள்: சூலை 28 – சூலை 30 – சூலை 31