விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 10:31 மணி புதன், நவம்பர் 27, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
- 1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
- 1874 – முதலாவது வணிகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.
- 1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
- 1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமத்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.
- 1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது.
- 2004 – காசினி-இயூஜென்சு (படம்) விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
புலவர் குழந்தை (பி. 1906) · தி. ச. வரதராசன் (பி 1924) · ஏ. எம். ராஜா (பி. 1929)
அண்மைய நாட்கள்: சூன் 30 – சூலை 2 – சூலை 3
- 1698 – தோமசு சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை 4 இலேயே வெளியிடப்பட்டது.
- 1823 – பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1881 – அமெரிக்க அரசுத்தலைவர் சேம்சு கார்ஃபீல்டு (படம்) சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19 இல் மரணமானார்.
- 1897 – பிரித்தானிய-இத்தாலியப் பொறியாளர் மார்க்கோனி வானொலிக்கான காப்புரிமத்தை இலண்டனில் பெற்றார்.
- 1976 – வியட்நாம் குடியரசின் வீழ்ச்சியை அடுத்து 1954 முதல் பிரிந்திருந்த கம்யூனிச வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாமுடன் வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் இணைந்தது.
க. கணபதிப்பிள்ளை (பி. 1903) · எம். ஏ. குலசீலநாதன் (பி. 1940) · சி. ஜெயபாரதி (பி. 1941)
அண்மைய நாட்கள்: சூலை 1 – சூலை 3 – சூலை 4
- 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொன்றனர்.
- 1844 – ஐசுலாந்தில் கடைசிச் சோடி பெரிய ஆக்கு (படம்) பறவைகள் கொல்லப்பட்டன.
- 1872 – 1823 இல் நிறுவப்பட்ட பட்டிக்கோட்டா குருமடம் யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பிடியில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் சிக்குவதைத் தடுக்க ஜிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்ட பிரித்தானியப் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டதில் பிரான்சின் மூன்று கப்பல்கள் 1200 கடற்படையினருடன் மூழ்கின.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் செஞ்சேனைப் படையினரால் நாட்சி செருமனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1988 – அமெரிக்கப் போர்க்கப்பல் வின்செனசு பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
நா. சண்முகதாசன் (பி. 1920) · எம். எல். வசந்தகுமாரி (பி. 1928) · எஸ். வி. சுப்பையா பாகவதர் (இ 1954)
அண்மைய நாட்கள்: சூலை 2 – சூலை 4 – சூலை 5
சூலை 4: ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள்
- 1803 – லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.
- 1826 – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் தாமசு ஜெஃபர்சன், 2ம் அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார். இதே நாளிலேயே அமெரிக்க விடுதலைச் சாற்றுரை 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொளப்பட்டது.
- 1837 – உலகின் முதலாவது அதி-தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
- 1902 – இந்தியாவின் சமயத் தலைவர் சுவாமி விவேகானந்தர் (படம்) இறப்பு.
- 1946 – 381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.
- 1951 – வில்லியம் ஷாக்லி திரான்சிஸ்டரைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.
சு. இராசரத்தினம் (பி. 1884) · எஸ். பி. சீனிவாசகம் (இ. 1975) · கோவை மகேசன் (இ. 1992)
அண்மைய நாட்கள்: சூலை 3 – சூலை 5 – சூலை 6
சூலை 5: வெனிசுவேலா, அல்சீரியா, கேப் வர்டி: விடுதலை நாள்
- 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர்.
- 1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை (படம்) வெளியிட்டார்.
- 1950 – சியோனிசம்: யூதர்கள் அனைவரும் இசுரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இசுரேலில் கொண்டுவரப்பட்டது.
- 1977 – பாக்கித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
- 1987 – ஈழப் போர்: விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
- 2016 – யூனோ விண்கலம் வியாழன் கோளை அடைந்து தனது 20-மாத ஆய்வை அக்கோளில் ஆரம்பித்தது.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (இ. 1898) · அ. கி. பரந்தாமனார் (பி. 1902) · கு. அழகிரிசாமி (இ. 1970)
அண்மைய நாட்கள்: சூலை 4 – சூலை 6 – சூலை 7
- 1535 – சேர் தாமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரினால் தூக்கிலிடப்பட்டார்.
- 1557 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கணவர் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னர் பிரான்சுடன் போர் புரிவதற்காக டோவர் துறையில் இருந்து புறப்பட்டார். மேரி தனது கணவரைப் பின்னர் பார்க்கவில்லை.
- 1885 – லூயி பாஸ்ச்சர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியினல் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் (படம்) என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
- 1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1956 – சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.
- 1962 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.
பரிதிமாற் கலைஞர் (பி. 1870) · மௌனி (இ. 1985) · கார்த்திகேசு சிவத்தம்பி (இ. 2011)
அண்மைய நாட்கள்: சூலை 5 – சூலை 7 – சூலை 8
சூலை 7: சொலமன் தீவுகள் - விடுதலை நாள் (1978)
- 1456 – ஜோன் ஆஃப் ஆர்க் (படம்) குற்றமற்றவர் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
- 1865 – ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1896 – இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1915 – சிங்கள-முசுலிம் கலவரம்: இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பெதிரிசு என்ற இராணுவ அலுவலர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.
- 1980 – ஈரானில் இசுலாமியச் சட்ட முறைமை நடைமுறைக்கு வந்தது.
- 2005 – லண்டனில் 4 சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
இரட்டைமலை சீனிவாசன் (பி. 1859) · அரு. ராமநாதன் (பி. 1924) · கா. மு. ஷெரீப் (இ. 1994)
அண்மைய நாட்கள்: சூலை 6 – சூலை 8 – சூலை 9
- 1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை (படம்) ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர்.
- 1497 – வாஸ்கோ ட காமா இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணத்தை ஆரம்பித்தார்.
- 1827 – இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழர் நீதிமன்றங்களில் சான்றாயர்களாக அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
- 1985 – திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
- 1988 – பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்குச் சென்று கொண்டிருந்த ஐலண்டு விரைவுவண்டி பெருமண் பாலத்தில் தடம் புரண்டு அஷ்டமுடி ஏரியில் வீழ்ந்ததில் 105 பயணிகள் உயிரிழந்தனர், 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 2011 – அட்லாண்டிசு விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
மயிலை சீனி. வேங்கடசாமி (இ. 1980) · வி. வி. வைரமுத்து (இ. 1989) · ஏ. எஸ். ராகவன் (இ. 2012)
அண்மைய நாட்கள்: சூலை 7 – சூலை 9 – சூலை 10
சூலை 9: விடுதலை நாள் (அர்கெந்தீனா)
- 1810 – ஒல்லாந்து இராச்சியத்தை நெப்போலியன் தனது முதலாம் பிரஞ்சு பேரரசுடன் இணைத்துக் கொண்டான்.
- 1868 – அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
- 1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1956 – யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், பெருமாள் கோயில் ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன.
- 1991 – 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- 1995 – யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 2011 – தெற்கு சூடான் (படம்) சூடானில் இருந்து பிரிந்து தனி நாடானது.
அலன் ஆபிரகாம் (இ. 1922) · கே. பாலச்சந்தர் (பி. 1930) · சி. ஆர். கண்ணன் (இ. 2009)
அண்மைய நாட்கள்: சூலை 8 – சூலை 10 – சூலை 11
சூலை 10: பகாமாசு - விடுதலை நாள் (1973)
- 1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் பிரெடெரிக் காசு (படம்) கண்டுபிடித்தார்.
- 1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1913 – கலிபோர்னியாவின் சாவுப் பள்ளத்தாக்கில் வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.
- 1947 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீயினால் பரிந்துரைக்கப்பட்டார்.
- 1973 – வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1991 – போரிஸ் யெல்ட்சின் உருசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- 1997 – நியண்டர்தால் மனிதனின் எலும்புக்கூட்டில் இருந்து பெறப்பட்ட டி. என். ஏ. ஆய்வுகளில் இருந்து கூர்ப்பின் "நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாட்டுக்கு" ஆதரவான முடிவுகள் இலண்டனில் பெறப்பட்டன.
பர்த்தலோமேயு சீகன்பால்க் (பி. 1682) · கே. எஸ். பாலச்சந்திரன் (பி. 1944) · சோமசுந்தரப் புலவர் (இ. 1953)
அண்மைய நாட்கள்: சூலை 9 – சூலை 11 – சூலை 12
- 1801 – பிரெஞ்சு வானியலாளர் சான் பொன்சு தனது முதலாவது வால்வெள்ளிக் கண்டுபிடிப்பை அறிவித்தார். அடுத்த 27 ஆண்டுகளில் இவர் மேலும் 36 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார்.
- 1811 – வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.
- 1895 – லூமியேர் சகோதரர்கள் (படம்) அறிவியலாளர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்.
- 1921 – செஞ்சேனைப் படையினர் மங்கோலியாவை வெள்ளை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி, மங்கோலிய மக்கள் குடியரசை அமைத்தனர்.
- 1979 – அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ஸ்கைலேப் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது.
- 2006 – மும்பை தொடருந்துக் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
இரா. நெடுஞ்செழியன் (பி. 1920) · குன்றக்குடி அடிகள் (பி. 1925) · இரா. இராகவையங்கார் (இ. 1946)
அண்மைய நாட்கள்: சூலை 10 – சூலை 12 – சூலை 13
- 70 – ஆறு மாத முற்றுகையின் பின்னர் டைட்டசின் படையினர் எருசலேமின் சுவர்களைத் தாக்கினர். மூன்று நாட்களின் பின்னர் சுவர்களைத் தகர்த்ததை அடுத்து, இரண்டாம் கோவிலை அவரகளால் அழிக்க முடிந்தது.
- 1576 – ராஜ்மகால் போரில் வங்காள சுல்தானகத்தை வென்றதை அடுத்து, முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கைப்பற்றி இணைத்தது.
- 1799 – ரஞ்சித் சிங் (படம்) லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் (சீக்கியப் பேரரசு) ஆட்சியைப் பிடித்தார்.
- 1806 – 16 செருமானிய மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
- 1961 – கடக்வாசுலா, பான்செத் அணைகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாக புனேயில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தில் மூழ்கி 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1971 – ஆத்திரேலியாவில் பழங்குடியினரின் கொடி முதன் முறையாகப் பறக்கவிடப்பட்டது.
குஞ்சிதம் குருசாமி (பி. 1909) · ஜெய்சங்கர் (பி. 1938) · நா. முத்துக்குமார் (பி. 1975)
அண்மைய நாட்கள்: சூலை 11 – சூலை 13 – சூலை 14
- 1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
- 1878 – பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா, மொண்டெனேகுரோ, உருமேனியா ஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.
- 1930 – முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் உருகுவையில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
- 1989 – இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் (படம்), வெ. யோகேசுவரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
- 2011 – மும்பை நகரில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டு, 130 பேர் காயமடைந்தனர்.
சுந்தர சண்முகனார் (பி. 1922) · எஸ். ராம்தாஸ் (இ. 2016) · வீர சந்தானம் (இ. 2017)
அண்மைய நாட்கள்: சூலை 12 – சூலை 14 – சூலை 15
- 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் (படம்) சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.
- 1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.
- 1933 – செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.
- 1965 – மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
- 1976 – கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.
- 2016 – பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.
க. பசுபதி (பி. 1925) · வா. செ. குழந்தைசாமி (பி. 1929) · எம். எஸ். விசுவநாதன் (இ. 2015)
அண்மைய நாட்கள்: சூலை 13 – சூலை 15 – சூலை 16
- 1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தை (படம்) கைப்பற்றினர்.
- 1799 – நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார்.
- 1816 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகத்தீன் பிரெனெல் ஒளியின் விளிம்பு விளைவுக்கான பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற பிரெனெல் வலயங்கள் பற்றி அறிமுகப்படுத்தினார்.
- 1823 – உரோமை நகரில் பண்டைய சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் தீயில் சேதமடைந்தது.
- 1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
- 1991 – ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
மறைமலை அடிகள் (பி. 1876) · காமராசர் (பி. 1903) · எம். கே. ஆத்மநாதன் (இ. 2013)
அண்மைய நாட்கள்: சூலை 14 – சூலை 16 – சூலை 17
- 622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும்.
- 1054 – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது.
- 1849 – காத்தலோனியாவில் அந்தோனி மரிய கிளாரட் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை நிறுவினார்.
- 1942 – பெரும் இன அழிப்பு: பிரெஞ்சு அரசு பாரிசில் உள்ள அனைத்து 13,152 யூதர்களையும் கைது செய்து அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
- 1945 – மன்காட்டன் திட்டம்: ஐக்கிய அமெரிக்கா புளுட்டோனியம்-கொண்ட அணுக்கரு ஆயுதங்களை நியூ மெக்சிகோ, அலமொகோர்தோ என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதித்தது.
- 2004 – தமிழ்நாடு கும்பகோணத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் (நினைவுச்சின்னம் படத்தில்) 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
டி. ஆர். சுந்தரம் (பி. 1907) · க. உமாமகேஸ்வரன் (இ. 1989) · டி. கே. பட்டம்மாள் (இ. 2009)
அண்மைய நாட்கள்: சூலை 15 – சூலை 17 – சூலை 18
- 1794 – பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி முடிவடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் 16 கார்மேலியப் புனிதர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.
- 1911 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.
- 1918 – போல்செவிக்குகளின் உத்தரவின் பேரில் உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் (படம்) எக்கத்தரீன்பூர்க் நகரில் கொல்லப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாரி எஸ். ட்ரூமன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க செருமனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.
- 1996 – நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.
- 2014 – மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன்-உருசிய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.
இரா. கிருஷ்ணன் (இ. 1997)
அண்மைய நாட்கள்: சூலை 16 – சூலை 18 – சூலை 19
சூலை 18: நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்
- 64 – உரோமில் பெரும் தீ பரவி நகரின் வணிக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ (படம்) மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
- 1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
- 1976 – 1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் முதற்தடவையாக சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
- 1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.
- 1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
- 1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1,200 படையினர் கொல்லப்பட்டனர்.
சௌந்தர்யா (பி. 1971) · எஸ். வி. ரங்கராவ் (இ. 1974) · வாலி (இ. 2013)
அண்மைய நாட்கள்: சூலை 17 – சூலை 19 – சூலை 20
- 64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.
- 1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.
- 1947 – பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் (படம்), மற்றும் ஆறு அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 1977 – உலகின் முதலாவது புவியிடங்காட்டி சமிக்கை அமெரிக்காவில் அயோவாவில் பெறப்பட்டது.
- 1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
- 1983 – மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.
- 1997 – வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த ஐரியக் குடியரசுப் படை போர்நிறுத்தத்தை அறிவித்தது.
சுவாமி விபுலாநந்தர் (இ. 1947) · ஆதவன் (இ. 1997)
அண்மைய நாட்கள்: சூலை 18 – சூலை 20 – சூலை 21
சூலை 20: அனைத்துலக சதுரங்க நாள்
- 1871 – பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.
- 1951 – யோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா எருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா (படம்) இலங்கையின் பிரதமராகத் தெரிவானார். இவரே உலகில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.
- 1969 – அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதல் மனிதர்களாக சந்திரனில் காலடி வைத்தனர்.
- 1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
- 1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
- 2015 – ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் கியூபாவும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.
மு. சிவசிதம்பரம் (பி. 1923) · தண்டபாணி (இ. 2014) · கர்ணன் (இ. 2020)
அண்மைய நாட்கள்: சூலை 19 – சூலை 21 – சூலை 22
சூலை 21: சிங்கப்பூர் - இன நல்லிணக்க நாள்
- 1925 – அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படிவளர்ச்சிக் கொள்கையை வகுப்பில் கற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
- 1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- 1964 – சிங்கப்பூரில் மலாய் மற்றும் சீனர்களுக்கிடையே கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.
- 1969 – நீல் ஆம்ஸ்ட்ராங் (படம்) சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார்.
- 1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் ஐரியக் குடியரசுப் படையினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர்.
- 2008 – ராம் பரன் யாதவ் நேப்பாளத்தின் முதலாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2011 – நாசாவின் விண்ணோடத் திட்டம் அட்லாண்டிசு தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.
வேதநாயகம் பிள்ளை (இ. 1889) · எஃப். எக்ஸ். சி. நடராசா (பி. 1911) · சிவாஜி கணேசன் (இ. 2001)
அண்மைய நாட்கள்: சூலை 20 – சூலை 22 – சூலை 23
சூலை 22: மர்தலேன் மரியாள் (படம்) திருவிழா, π அண்ணளவு நாள்
- 1706 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றிணைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பின்னர் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக வழிவகுத்தது.
- 1823 – யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா குருமடம் டானியேல் வாரன் புவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாட்சிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.
- 1962 – நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
- 1963 – முடிக்குரிய குடியேற்றமான சரவாக் சுயாட்சி பெற்றது. இதே ஆண்டு செப்டம்பர் 16 இல் இது மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- 1976 – இரண்டாம் உலகப் போரின் போது பிலிப்பீன்சில் சப்பான் இழைத்த போர்க் குற்றங்களுக்கான இழப்பீட்டை சப்பான் முழுமையாகச் செலுத்தியது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (பி. 1904) · ஸ்ரீதர் (பி. 1933) · டி. எஸ். பாலையா (இ. 1972)
அண்மைய நாட்கள்: சூலை 21 – சூலை 23 – சூலை 24
சூலை 23: எகிப்து – புரட்சி நாள் (1952)
- 1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
- 1927 – அனைத்திந்திய வானொலியின் முதலாவது வானொலி நிலையம் பம்பாய் நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
- 1967 – அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
- 1983 – கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது (படம்).
- 1995 – ஏல்-பாப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
- 1999 – ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
பெரி. சுந்தரம் (பி. 1890) · சுப்பிரமணிய சிவா (இ. 1925) · சி. நயினார் முகம்மது (இ. 2014)
அண்மைய நாட்கள்: சூலை 22 – சூலை 24 – சூலை 25
- 1567 – இசுக்காட்லாந்தின் அரசி முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஆறாம் ஜேம்சு மன்னனாக்கப்பட்டான்.
- 1911 – பெருவில் இன்காக்களின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்ட மச்சு பிச்சு (படம்) என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி இராம் பிங்கம் கண்டுபிடித்தார்.
- 1922 – பாலத்தீனம் தொடர்பான பிரித்தானியக் கட்டளையின் மாதிரி வரைபை உலக நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது 1923 செப்டம்பர் 26 இல் நடைமுறைக்கு வந்தது.
- 1969 – நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
- 1983 – இலங்கையில் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை கலவரங்கள் இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது. ஈழப்போரின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.
- 2001 – கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.
திருச்சி லோகநாதன் (பி. 1924) · ஐ. எக்ஸ். பெரைரா (இ. 1951) · ஸ்ரீவித்யா (பி. 1953)
அண்மைய நாட்கள்: சூலை 23 – சூலை 25 – சூலை 26
- 1583 – குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. 5 இயேசு சபை மதகுருமார், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் அரசினால் கொல்லப்பட்டனர்.
- 1603 – இசுக்கொட்லாந்தின் ஆறாம் யேம்சு இங்கிலாந்தின் மன்னராக (முதலாம் யேம்சு) முடிசூடினார். இதன் மூலம் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் ஒன்றிணைந்தன. அரசியல் ரீதியான இணைப்பு 1707 இல் நிகழ்ந்தது.
- 1837 – மின்சாரத் தந்தியின் முதலாவது வணிகரீதியான பயன்பாடு இலண்டனில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
- 1939 – இலங்கையில் இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி அமைக்கப்பட்டது.
- 1978 – வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மூலம் முதலாவது மாந்தர் (லூயிசு பிரவுன்) இங்கிலாந்தில் பிறந்தார்.
- 1983 – கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். தெற்கு, மலையகப் பகுதிகளில் கறுப்பு யூலை (படம்) படுகொலைகள் உச்சக்கட்டத்தை எட்டியது.
- 1984 – உருசியாவின் சிவெத்லானா சவீத்சுக்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
செம்மங்குடி சீனிவாச ஐயர் (பி. 1908) · ரவிச்சந்திரன் (இ. 2011) · சீலன் கதிர்காமர் (இ. 2015)
அண்மைய நாட்கள்: சூலை 24 – சூலை 26 – சூலை 27
சூலை 26: லைபீரியா (1847), மாலைதீவு (1965) - விடுதலை நாள்
- 1509 – விஜயநகரப் பேரரசராக கிருஷ்ணதேவராயன் (படம்) முடிசூடினார்.
- 1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகத்து 8 இல் தூக்கிலிடப்பட்டாMr.
- 1953 – பனிப்போர்: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கியூபப் புரட்சி ஆரம்பமானது.
- 1957 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..
- 1999 – கார்கில் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
- 2008 – இந்தியாவின் அகமதாபாத் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர், 200 பேர் வரை காயமடைந்தனர்.
மு. இராகவையங்கார் (பி. 1878) · க. சொர்ணலிங்கம் (இ. 1982) · யூ. ஆர். ஜீவரத்தினம் (இ. 2000)
அண்மைய நாட்கள்: சூலை 25 – சூலை 27 – சூலை 28
- 1890 – இடச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோ (படம்) தன்னைத்தானே சுட்டு, இரண்டு நாட்களின் பின்னர் இறந்தார்.
- 1921 – இயக்குநீர் இன்சுலின் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதாக டொராண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
- 1955 – இலண்டனில் இருந்து இசுதான்புல் சென்று கொண்டிருந்த 'எல் அல்' விமானம் பல்கேரியாவின் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அனைத்து 58 பயணிகளும் உயிரிழந்தனர்.
- 1975 – விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1983 – கறுப்பு யூலை: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலைகளில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
- 2002 – உக்ரைனில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது சுகோய் எஸ்.யு-27 போர் விமானம் மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் உயிரிழந்தனர்.
தேசிக விநாயகம்பிள்ளை (பி. 1876) · சோமசுந்தர பாரதியார் (பி. 1879) · ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (இ. 2015)
அண்மைய நாட்கள்: சூலை 26 – சூலை 28 – சூலை 29
சூலை 28: உலகக் கல்லீரல் அழற்சி நாள்
- 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி, கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார்.
- 1868 – ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
- 1914 – செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் தொடுத்ததை அடுத்து, முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
- 1945 – அமெரிக்கப் போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் (படம்) 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.
- 1972 – இந்தியா-பாக்கித்தான் அரசுகளுக்கிடையே சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1976 – சீனாவில் டங்சான் நகரில் இடம்பெற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 242,769 பேர் உயிரிழந்தனர், 164,851 பேர் காயமடைந்தனர்.
- 2005 – ஐரியக் குடியரசுப் படை வட அயர்லாந்தில் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.
ஏ. வி. மெய்யப்பன் (பி. 1907) · சா. கணேசன் (இ. 1982) · கா. ஸ்ரீ. ஸ்ரீ (இ. 1999)
அண்மைய நாட்கள்: சூலை 27 – சூலை 29 – சூலை 30
- 1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் பிரெனெல் புகழ்பெற்ற "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய தனது குறிப்புகளை" வெளியிட்டார்.
- 1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
- 1948 – இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின.
- 1967 – வெனிசுவேலாவின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் கரகஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர்.
- 1987 – இலங்கை-இந்திய ஒப்பந்தம் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி (படம்) துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டுக் காயம் அடைந்தார்.
- 1999 – இலங்கையின் வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீலன் திருச்செல்வம் தற்கொலைக் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
பி. சா. சுப்பிரமணிய சாத்திரி (பி. 1890) · வி. சீ. கந்தையா (பி. 1920) · கருமுத்து தியாகராசர் (இ. 1974)
அண்மைய நாட்கள்: சூலை 28 – சூலை 30 – சூலை 31
சூலை 30: வனுவாட்டு - விடுதலை நாள் (1980)
- 1626 – இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.
- 1756 – கட்டிடக் கலைஞர் பிரான்செசுக்கோ ராசுத்திரெல்லி சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தாம் அமைத்த கத்தரீன் அரண்மனையை (படம்) உருசிய அரசி எலிசபெத்திடம் கையளித்தார்.
- 1865 – அமெரிக்காவின் நீராவிக் கப்பல் ஒன்று கலிபோர்னியாவில் மூழ்கியதில் 225 பயணிகள் உயிரிழந்தனர்.
- 1930 – மொண்டேவீடியோ நகரில் நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் உருகுவை அணி முதலாவது உலகக்கோப்பையை வென்றது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் உயிரிழந்தனர்.
- 2012 – ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவுவண்டி தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர்.
பின்னத்தூர் அ. நாராயணசாமி (இ. 1914) · மா. நன்னன் (பி. 1924) · குஞ்சிதம் குருசாமி (இ. 1961)
அண்மைய நாட்கள்: சூலை 29 – சூலை 31 – ஆகத்து 1
- 1492 – எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- 1658 – ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.
- 1715 – கியூபா, அவானாவில் இருந்து எசுப்பானியா திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் புளோரிடா கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் மீட்கப்பட்டன.
- 1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானிய அரசால் தூக்கிலிடப்பட்டார்.
- 1865 – உலகின் முதலாவது குற்றகலத் தொடருந்து சேவை ஆத்திரேலியா, குயின்சுலாந்து மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1971 – அப்பல்லோ 15 (படம்) விண்வெளி வீரர்கள் லூனார் தரையுலவியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.
- 2006 – பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தைத் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
செய்குத்தம்பி பாவலர் (பி. 1874) · மணிவண்ணன் (பி. 1954) · அரங்க. சீனிவாசன் (இ. 1996)
அண்மைய நாட்கள்: சூலை 30 – ஆகத்து 1 – ஆகத்து 2