விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 17
- 1498 – வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
- 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
- 1902 – கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு ஸ்தாயிசு பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.
- 1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள் சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
- 1983 – லெபனானில் இருந்து இசுரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இசுரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
- 1990 – உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.
- 2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது (படம்).
ஞானியாரடிகள் (பி. 1873) · நகுலன் (இ. 2007) · சி. கோவிந்தன் (இ. 2014)
அண்மைய நாட்கள்: மே 16 – மே 18 – மே 19