விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு07

முதற்பக்க இற்றைப்படுத்தல்கள்

தொகு

எப்படியாவது விடுப்பு போட்டு கொஞ்சம் விக்சனரி, விக்கிநூல்கள் பக்கம் போகலாம் என்றால் மூன்று வாரமாக முதற்பக்கம் இற்றைப்படுத்தப்படாமல் இருந்ததால் மனசு கேட்காமல் வர வேண்டியதாய் போய் விட்டது ;) ;( !!. தற்பொழுது முதற்பக்கத்தில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள் - தினமும் முதற்பக்க கட்டுரைகளும், சிறப்புப் படிமமும் தானாகவே மாறும் ;). முதற்பக்கத்தையோ வார்ப்புரு:mainpagefeatureஐயோ தொகுக்க வேண்டியதில்லை. ஆனால், இவற்றுக்கு feed பண்ணும் பக்கங்களை முன் கூட்டியே நாம் உருவாக்கி வைக்க வேண்டும். அந்த வகையில் நவம்பர் 18 வரை படிமங்கள் மற்றும் முதற்பக்க கட்டுரைகளை இற்றைப்படுத்துவதற்கு தொகுப்பு பக்கங்களை உருவாக்கி உள்ளேன். பார்க்க - Wikipedia:முதற்பக்கக் கட்டுரைகள், Wikipedia:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 2006. இனி இந்த ஆண்டு இறுதி வரை இது போல் உருவாக்கப்பட வேண்டிய பக்கங்களுக்கான சிவப்பு இணைப்புகள் wikipedia:மணல்தொட்டி/முதற்பக்க உள்ளடக்கங்கள் என்ற பக்கத்தில் உள்ளன. கோபி, kanags, நற்கீரன், சிவா, சுந்தர் ஆகியோரை இவற்றில் சில இணைப்புகளையாவது பகிர்ந்து கொண்டு உருவாக்கித் தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். முதற்பக்க இற்றைப்படுத்தல்களை என்னால் தொடர்ந்து செய்ய இயலும் என்றாலும், விக்கிபீடியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. நான் தெரிந்து எடுக்கும் கட்டுரை, படிமங்களில் ஒருதலையான சுவை, பார்வை இருக்கலாம். பலரும் இப்பணியைச் செய்வதால் இதை தவிர்க்கலாம். தவிர, முக்கியமான ஒரு பக்கத்தை பலரும் தொகுத்துப் பழகினால், எத்தனை பயனர்கள் எத்தனை நாள் விடுப்பில் போனாலும் விக்கிபீடியா இற்றைப்படுத்தல் பணி தங்கு தடையின்றி நடக்கும். இதுவே கூடிய professionalism (நிபுணத்துவம் !) மிகுந்ததாக இருக்கும்.

விடுப்பில் போகிறேன், முதற்பக்கத்தை கவனித்துக்கொள்ளுங்கள் என்று தகவல் விட்டுச்சென்ற பின்னரும் இது குறித்து கவனிக்கப்படவில்லை. வழக்கமான பயனர்களின் நேரத் தட்டுப்பாடு அறியப்பட்டதே என்றாலும் இது போன்ற முக்கியமான இற்றைப்படுத்தல்களுக்கு நிர்வாகிகள், பயனர்கள் இடையே கூடுதல் புரிந்துணர்வும், செயல் முறையும் இருக்க வேண்டும். எரிதங்களை தடுப்பதற்கு இணையாக முதற்பக்க இற்றைப்படுத்தல், செய்தி இற்றைப்படுத்தல் ஆகியவைக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். வழக்கமான தொகுப்புகளை செய்வதற்கு முன்னர் இதற்கும் நேரம் ஒதுக்கி முன்னுரிமை தரலாம்.

கிடங்கு நிறைய பொருள் இருந்தாலும் காட்சிக்குப் பொருளை வைக்காவிட்டால் கடையில் வணிகம் களை கட்டாது. அது போல் நாம் பல குறுங்கட்டுரைகள், சிறப்புக்கட்டுரைகள் உருவாக்க முயன்றாலும் அதை முறையாக காட்சிப்படுத்தாவிட்டால், பயனர் வரத்து இருக்காது. ஒரே நிகழ்ச்சியை வாரம் முழுக்க காட்டும் தொலைக்காட்சியை நாம் பார்க்க மாட்டோம் அல்லவா? அது போலவே நாட்கணக்கில் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கும் முதற்பக்கத்தை காண பயனர்கள் வர மாட்டார்கள். புள்ளிவிவரத்தகவல் படி முதற்பக்கம் அதிகம் பார்வையிடப்படுகிறது. இதற்கு அடுத்துப் பார்வையிடப்படுவது நடப்பு நிகழ்வுகள். எனவே செய்திக்கட்டுரைகளை முன்னுரிமை கொடுத்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த விதயத்தில் கனகு, நற்கீரன், உமாபதி நன்கு செயல்பட்டு வருகின்றனர்.

முதற்பக்கக் கட்டுரைகளுக்கான பரிந்துரைகளை Wikipedia பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள் பக்கத்தில் தெரிவியுங்கள். கட்டுரைத் தகுதிகள் அங்கு குறிப்பிட்டப்பட்டுள்ளன. முதற்பக்கக் காட்சிப்படுத்தலுக்கு மயூரனாதன் எழுதிய பல அருமையான கட்டுரைகள் உதவுகின்றன. செல்வா, சுந்தர், கனக்ஸ், மயூரன் ஆகியோரும் இப்படி குறிப்பிடத்தக்க கட்டுரைகளை உருவாக்கி உள்ளனர். இதே போக்கை அவர்களும் அனைவரும் தொடர வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு இரண்டு கட்டுரைகள் என ஒரு ஆண்டுக்கு 730 கட்டுரைகள் இப்படிக் காட்சிப்படுத்தத் தேவைப்படுகின்றன.

சிறப்புப் படங்களுக்கான பரிந்துரைகளை Wikipedia பேச்சு:சிறப்புப் படங்கள் பக்கத்தில் தெரிவியுங்கள். தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளுக்குத் தொடர்புடைய படிமங்களை விக்கிமீடியா காமன்சில் இருந்து எடுத்துக் கொள்வது இதற்கு குறுக்கு வழி. விலங்குகள், நகரத் தோற்றக் காட்சிகள் ஆகியவை சில எளிய படங்கள்.

நாள்தோறும் இவை மாறுமாறு மாற்றி அமைத்தது காரணத்தோடு தான். ஒன்று, அப்பொழுது தான் நானும் சோம்பல் நீங்கி இவற்றை மாற்ற மெனக்கெடுவேன். இன்னொன்று, இவற்றை மாற்றாவிட்டால் குறிப்பிட்ட நாளன்று முதற்பக்கத்தில் சிகப்பு மட்டும் தான் இருக்கும். எனவே, இந்த அபாயத்தை உணர்ந்து பிறப் பயனர்களும் இவற்றை இற்றைப்படுத்த முன்வரலாம். முதற்பக்கத்தை தொகுக்கிறோம் என்ற நினைப்பையும் தவிர்த்து. தற்பொழுது இவை குறித்த பகுதிகள் தனித்தனிப் பக்கங்களாக உள்ளது கூடுதல் வசதி. Wikipedia:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 12, 2006, Wikipedia:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 18, 2006 ஆகிய பக்கங்களை முன்மாதிரி வார்ப்புருக்களாக கொண்டு அதே போல் wikipedia:மணல்தொட்டி/முதற்பக்க உள்ளடக்கங்கள் பக்கத்தில் உள்ள இணைப்புகளை உருவாக்கலாம். படிம அளவு முதலிய எந்த formatஐயும் மாற்ற வேண்டாம். அல்லது, மாற்ற வேண்டிய அவசியம் இருப்பின் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். இது போன்ற அனைத்துப் பக்கங்களிலும் ஒரே format பின்பற்றப்படுவது இங்கு அவசியம்.

செய்திக்கட்டுரைகளை நிறைய எழுத முடியாவிட்டால், உங்களுக்குத் தெரியுமா பகுதியும் நாள் தோறும் மாறுமாறு அமைக்கலாம். ஆனால், இப்படிச் செய்வதற்கு போதுமான உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகள் இல்லை. அதற்கான பரிந்துரைகள் தேவை.

முதற்பக்கத்தில் பழைய மாதிரி அனைத்து விக்கிமீடியா திட்டங்களுக்கான இணைப்புகளும் தெளிவாய் உள்ளன. பலரும் இதை விரும்பிக் கேட்டிருந்தார்கள். --Ravidreams 14:27, 12 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, உங்கள் கருத்து புரிகிறது. என்னால் இயன்றவரை இற்றைப்படுத்தலில் பங்கு கொள்கிறேன். -- Sundar \பேச்சு 06:28, 14 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மறுமொழிக்கு நன்றி சுந்தர். சில சமயம் தனியாகத் தேவையின்றிப் பிதற்றிக் கொண்டிருக்கிறோமோ என்று நினைக்க வைத்து விடுகிறது :(--Ravidreams 06:54, 14 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியா கட்டுரைத் தரங்கள்

தொகு

முக்கிய அவசிய தலைப்புக் கட்டுரைகளுக்கு மூன்று நிலைகளைத் தற்போது கொள்ளலாம்.

ஆரம்பம் - குறைந்த பட்ச வேண்டுதல்: வரையறையுடன் 3 வரிகள், ஒரு உள் இணைப்பு, வகைப்படுத்தல், இருந்தால் ஆங்கில விக்கி இணைப்பு, முடியுமானால் வெளி இணைப்புகள்
ஓரளவு பூர்த்தி அல்லது இடைநிலை (குறைந்தது 2+x? மேற்கோள்கள், 2+x? ஆதாரங்கள், 3+x? உள் இணைப்பு !!!; புள்ளி விபரங்கள் கட்டாயமாக மேற்கோள் காட்டப்படவேண்டு; படிமங்களின் உரிமைகள் தரப்பட்டிருக்க வேண்டும்)
சிறப்புக் கட்டுரை - Wikipedia:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள்

பிற கட்டுரைகளுக்கு பின்வரும் மூன்று நிலைகளைக் கொள்ளலாம்.

ஆரம்பம் - குறைந்த பட்ச வேண்டுதல்: வரையறையுடன் 3 வரிகள், ஒரு உள் இணைப்பு, வகைப்படுத்தல், இருந்தால் ஆங்கில விக்கி இணைப்பு, முடியுமானால் இணைப்புகள்
ஓரளவு பூர்த்தி அல்லது இடைநிலை (குறைந்தது 2+x? மேற்கோள்கள், 2+x? ஆதாரங்கள், 3+x? உள் இணைப்பு !!!; புள்ளி விபரங்கள் கட்டாயமாக மேற்கோள் காட்டப்படவேண்டு; படிமங்களின் உரிமைகள் தரப்பட்டிருக்க வேண்டும்)
நல்ல கட்டுரை - Wikipedia:நல்ல கட்டுரைத் தகுதிகள்

இரண்டு தொகுதிகளாக பிரிப்பது நன்று என்று படுகின்றது. எப்படி பிரிப்பது? இது ஒரு வித அகநிலைப் பிரிப்புத்தான். இதில் தனிப்பட்ட ஆர்வலர்களின் தெரிவு நிச்சியமாக இருக்கும். எனினும், எ.கா: தமிழர்கள் பற்றிய பல கட்டுரைகள் சிறப்புக்கட்டுரையாக்குவது விரும்பத்தக்கது.

நல்ல கட்டுரைகளும் சிறப்புக் கட்டுரைகளாக ஆக்கலாம், ஆனால் எல்லா கட்டுரைகளையும் சிறப்புக்கட்டுரையாக்குவது என்று நாம் முயலுவோம் என்றால் எமது வளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த தவறிவிடக்கூடும். --Natkeeran 18:50, 12 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

I have read through your post and hope I understood what you wrote. :) I have a related suggestion. In the English Wiki, all projects have started an Assessment department. India project has one. For more information, read this page. Basically, the idea is tag article talk pages with templates that define the quality of the article. The different quality types are FA, GA, A, B, Start and Stub, similar to what you mentioned above. Since tawiki is small, we could have a single assessment department do this job. We need talk page template that allows a reviewer to assess the article on its quality and importance. In English, we have Mathbot that generates beautiful statistics. May be we would ask Oleg for the code and one of us can run it. The stats are secondary, but the template will be big-help to categorize the 5000 articles into different quality cats. Let me know your thoughts. Regards, Ganeshk 06:36, 13 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Thank you for the input and highly constructive suggestions. Yes, you are right about the intentions, and your comments are valuable in implementing those intentions. Initially I did not think much about implementation, other than perhaps listing manually as we are currently starting to do.

We might have to work out the details, I agree with most of what you have outlined. Ideally, we would like to have some sort of rate assigned to all the articles. And the sum balance to the total number of articles.

It might be possible to automate the assignment of novice articles. However, quality would have to be assessed manually. So, the Assessment System has to be both: manual and automated. Possible features: stats, classification categories, and if possible in the talk pages some missing standard items (ex: category, enWpedia connection, internal links, pics etc).

On another note, is it too much trouble to do a drop down menu assignment of licence type for picture upload as in enWpedia.

Although, I have a SW background, my skills and understanding of MediaWiki is very limited. Its very useful to have you, Sudar, and other experts around to keep us updated. It really removes a heavy load out of the main thrust of content and community development. Thanks again. --Natkeeran 20:32, 13 நவம்பர் 2006

தரங்கள்

தொகு
  1. சிறப்புநிலை/ சிறப்புக் கட்டுரை
  2. நல்லநிலை/ நல்ல கட்டுரை
  3. இடைநிலை/ இடைநிலைக் கட்டுரை
  4. ஆரம்பம்/ஆரம்ப நிலைக் கட்டுரை
  5. குறைநிலை/ குறை நிலைக் கட்டுரை

முக்கியத்துவம்

தொகு
  1. அதி உயர் முக்கியத்துவம்
  2. உயர் முக்கியத்துவம்
  3. இடைநிலை முக்கியத்துவம்
  4. குறை முக்கியத்துவம்
  5. தெரியாது / முக்கியத்துவம் தெரியாது

Re:taWpedia Assessment System: Quality and Importance Markers

தொகு

Is it possible to provide some details as how we might be able to go about implementing Assessment System at taWpedia? Thanks. --Natkeeran 21:01, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Okay. Let me list what I have in mind:

  • Creating a "talk-page template". I am not able to create one due to my limited knowledge of writing in tamil language. I could create one in English if you want and you can translate it.
  • Parameters: The template will have class and importance parameters. More parameters can aded as needed (Examples: image-needed, collaboration-candidate, past-collabortion, map-needed, needed-infobox)
  • Usage: The template usage would be like follows:
{{Assessment department|class=A|importance=Top}}

Hope that explains. Let me know if you have more questions. Regards, Ganeshk 21:30, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

புள்ளிவிவரங்கள்

தொகு

இந்த முகவரியில், பல வகையில் வரிசைப்படுத்திப் பார்க்கத் தக்க விக்கிபீடியா புள்ளி விவரங்களை தந்திருக்கிறார்கள். தமிழ் விக்கிபீடியா அனைத்து வகைகளிலும் உற்சாகமூட்டும் இடங்களைப் பெற்றுள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் 71வது இடத்தில் இருக்கும் தமிழ் பிற வகைகளில் அதற்கு மேற்பட்ட இடங்களையே பெற்றுள்ளது மகிழ்ச்சி தரும் விதயம்.

மொத்தப் பக்கங்கள் - 60 ஆம் இடம்; மொத்த தொகுப்புகள் - 56ஆம் இடம்; நிர்வாகிகள் எண்ணிக்கை - 39ஆம் இடம் (காணாமல் போன நிர்வாகிகளை கழித்தாலும் 52 ஆம் இடம் !); பயனர் எண்ணிக்கை - 50 ஆம் இடம்; படிம எண்ணிக்கை - 39 ஆம் இடம்; குறுங்கட்டுரை விகிதம் - 142ஆவது இடம். எனினும் நமக்கு மேலுள்ள விக்கிபீடியாக்கள் பல புதிதாகத்தொடங்கப்பட்ட விக்கிபீடியாக்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆங்கில விக்கியின் குறுங்கட்டுரை விகிதம் 23% (112 ஆம் இடம்). நாம் 36%. அசுர கதியில் கட்டுரை உருவாக்கும் தெலுங்கு விக்கி குறுங்கட்டுரை விகித அடிப்படையில் 247 ஆவது இடத்தில் இருக்கிறது (77%). இது கடைசிக்கு நான்கு இடம் முன். அவ்வளவுதான் !--Ravidreams 19:03, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Fair use pictures

தொகு

I have read one of the Wikizines that some language wikis are disabling the Upload feature. I want to understand image copyright policies on the other-language (other than English) wikipedias. My undestanding is that Fair use only applies for the English Wikipedia. And other language wikipedias should not use any fairuse pictures and only use pictures from Commons (that are released copyright-free). Please comment. Regards, Ganeshk 20:34, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

One thing I want to point out is that there are more than 400 unused images [1] --கோபி 20:49, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Ganesh, first thanks a lot for the magic command for new section link :) i needed that a lot in many other pages. let us know more such tips and tricks !! Right now, we don't have a clear and strict image upload policy. we try our best to use images from commons usually. its high time we come up with such a policy. gopi's pointer about the unused images is also a thing to be taken care of.--Ravidreams 21:30, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Glad I could help. You can find a list of magic words at m:Help:Magic words. -- Ganeshk 22:13, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி, சுட்டிக்காட்டியுள்ள பயன்படாத படிமங்களில் பொருத்தமானவற்றுக்கு கட்டுரை உருவாக்கலாம். இதற்கு படத்தை பதிவேற்றியவர்கள் பொறுப்பெடுத்துச் செய்யலாம். தகுந்த காப்புரிமை விலக்கு உள்ள படங்களை காமன்சுக்கு நகர்த்தலாம். எஞ்சி இருக்கும் படங்களை நீக்கி விடலாம். இதற்கு காலக்கெடு விதிக்க முடியாது என்றாலும், படிமக் கொள்கை ஒன்றை உருவாக்கி செயல்படுத்த இதை தொடக்கமாகக் கொள்ளலலாம்.--Ravidreams 19:20, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

Further to my post above, there have been changes in Fairuse policy on English Wikipedia that I got aware of today. English wiki is making the definition of fairuse much more narrower. For example, Karunandhi image on தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல் is considered a violation and that image will soon be deleted from English wiki. This change started based on Jimbo's recent comments about restricting Fairuse uploads so that people start to look for freely available images and upload to Commons. Fairuse should be allowed in very exceptional circumstances. Read Wikipedia:Fair use criteria for more information. Ta wiki should start writing up a image policy soon so that we are in-line with direction of the English wiki. -- Ganeshk 01:40, 17 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

உள்ளிணைப்புகள் தரும் முறை !!

தொகு

கட்டுரைகள் எழுதுவோர், விக்கியாக்கம் செய்வோர் உள்ளிணைப்புகள் செய்வது குறித்த ஒரு தெளிவுடன் செயல்படுவது நன்று. சிகப்பு இணைப்புக்கள் தரும்போது குறுகிய காலத்தில் கொஞ்சமாவது புதுக்கட்டுரைகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ள சொற்களுக்கு இணைப்பு தருதல் நன்று. இல்லாவிட்டால், பல காலத்துக்கும் உருவாக்கப்படாத சிகப்பு இணைப்புகள் வீணே கட்டுரைப் பக்கங்களில் கண்ணை உறுத்தி வாசிப்பு அனுபவதுத்துக்கு ஊறு செய்யும். எடுத்துக்காட்டுக்கு, ஐக்கிய இராச்சியம், இலங்கை ஆகிய கட்டுரைகளில் அளவுக்கு மிஞ்சி சிகப்பு இணைப்புகள் கொச கொசவென்று இருக்கின்றன. அடுத்து, நீல இணைப்புகள் தரும்போதும் ஒரே கட்டுரைக்கு திரும்பத் திரும்ப ஒவ்வொரு பந்தியிலும் இணைப்பு தர வேண்டாம். ஒரு கட்டுரைக்கு ஒரு முறை இணைப்பு தந்தால் போதுமானது. அல்லது, போதிய இடைவெளிகளில் இரண்டு முறை தரலாம் என்று தோன்றுகிறது. அதற்கு மேல் தருவது அவசியமற்றதும் வாசிப்பனுபவத்தை கெடுப்பதும் ஆகும். உள்ளிணைப்புகளை தரும்போது கூட, இருக்கிற எல்லா கட்டுரைகளுக்கும் இணைப்பை தராமல் context based இணைப்புகள் தருவது விரும்பத்தகுந்ததாக இருக்கும். அதாவது, குறித்த ஒரு கட்டுரையை படிப்பவருக்கு அது தொடர்பாக ஆர்வத்தை தூண்டக்கூடிய பிற கட்டுரைகளுக்கு மட்டுமே இணைப்பு தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி என்ற சொற்றொடரில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியவற்றுக்கும் இணைப்பு தரலாம். ஆனால, மனைவி என்ற தலைப்புக்கு உள்ளிணைப்பு தருவது இங்கு தேவை அற்றது. அதுவே, உறவு முறைகள் குறித்த கட்டுரையில் மனைவி என்ற தலைப்புக்கு இணைப்பு தரலாம். --Ravidreams 10:15, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா தலைப்புகள்

தொகு

I am doing a project to give tamil wikipedia suggestions (as like google suggests). I need to collect the wikipedia articles in a easy way rather than browsing each pages and copy the topics.

How do i do that....

please mail me my mail id is mahir78[at]gmail.com.

You can see this mini project at my blog http://techtamil.blogspot.com

Project name is "Say வாவ்! (இன்னும்)". To test simply type any tamil keys in the text box. eg: அண்

Thanks for your help....

Mahir

மாஹிர், உங்க கருவிய கண்டு எனக்கு அளவிலாத மகிழ்ச்சி. துள்ளிக் குதிக்காத குறை தான். உங்க கருவிய என் வலைப்பதிவுல இருந்தும் தர்றேன். அப்படியே, குறிப்பில்வழி விக்கி பக்கத்துக்கான codeம் தருவீர்களா? விக்கிபீடியா அனைத்துப் பக்கங்களின் இணைப்புகள் allpages என்ற பக்கத்தில் கிடைக்கும். இவற்றில் வழிமாற்றுப் பக்கங்களுக்கான இணைப்புகளும் இருப்பது கூடுதல் நன்மை. இதன் மூலம் பயனர்கள் எளிதாக கட்டுரைகளுக்கான மாற்று எழுத்துக்கூட்டல்களை பயன்படுத்தியும் கட்டுரைகளை வந்தடையலாம். விக்சனரி வளர்ந்த பிறகு இது போன்று விக்சனரிக்கும் ஒரு கருவி எழுதலாம். --Ravidreams 22:06, 26 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மாஹிர் நிரல் மிக்க நன்று. அவர் விரைவில் அந்த நிரலை கட்டற்ற முறையில் தருவதாக கூறியுள்ளார். (குறிப்பில்வழிப் பக்கம் என்று Random Pages மொழிப்பெயர்பின் பின்னணி என்ன?) மேலும், இந்த நிரல் குறிப்பில்வழிப் பயன்பாட்டை அதிகரித்து எமக்கு தரம் பற்றிய அக்கறையை அதிகப்படுத்தும். --Natkeeran 03:36, 1 டிசம்பர் 2006 (UTC)

You can find some interesting Tamil wiki stats here. Regards, Ganeshk 15:02, 27 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


தமிழ் விக்கிபீடியா நகர்பேசிகளில்

தொகு

இணையத்தில் தேடல் ஒன்றை மேற்கொண்டபோது http://ta.wapedia.mobi/ இற்கு வந்தேன் நன்றாகவேயுள்ளது. நகர்பேசிகளில் வேலைசெய்யுமா என்பதைப் பரீட்சிப்பற்கு இன்னமும் வசதிகள் என்னிடம் இல்லை. (WAP வசதியுள்ளது ஆனால் தமிழை எனது Nokia 3120 மொபைல் ஆதரிக்காது) வசதியுள்ளவர்கள் பரீட்சித்துப் பார்க்கவும். --Umapathy 15:49, 28 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நீங்கள் தந்துள்ள .mobi இணைப்பு வேலை செய்யவில்லை ??--Ravidreams 19:00, 29 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி என்னாலும் பரீட்சிக்க முடியவில்லை தவறான செய்தியென்றால் நீக்கிவிடுவோம். கணினி உலாவியில் இந்த இணைப்பு வேலை செய்கின்றது. --Umapathy 01:44, 30 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

எனக்கு கணினியிலும் பார்க்க முடியவில்லை. பழக்கமில்லாத file name extension உடைய கோப்பு ஒன்றாக சேமிக்கச் சொல்கிறது. திறந்து பார்க்க நினைக்கவில்லை. நகர்பேசியிலும் இன்னும் பார்க்கவில்லை--Ravidreams 09:33, 30 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

வாழ்க autowikibrowser

தொகு

கோபி, சிவா, பாலாஜி, நற்கீரன், கனகு மற்றும் விக்கியாக்கத்தில் ஆர்வமுள்ள இன்னும் பலரும் autowikibrowserஐ பயன்படுத்துமாறு பெரிதும் பரிந்துரைக்கிறேன். இன்று இதை பயன்படுத்தி பல பக்கங்களில் ஒரு வார்ப்புரு இணைக்கும் வேளையை எளிதாக செய்தேன். இது தவிர, அதுவே பல எளிமையான வழமையான விக்கியாக்கப் பணிகளை அழகாக செய்கிறது. டெரன்ஸ் ஏற்கனவே இதை பயன்படுத்தி வருகிறார். அடிக்கடி பகுப்பு மாற்றப் பணிகள், வார்ப்புரு இடும் பணி செய்யும் கோபிக்கு பெரிதும் உதவும். இந்த விக்கியாக்கப் பணிக்கு என்று ஒரு தானியங்கி கணக்கு உருவாக்கி கொள்வதும் நலம். இதை அறிமுகப்படுத்தித் தந்த கணேசுக்கு நன்றிகள் பல :)!--Ravidreams 21:36, 1 டிசம்பர் 2006 (UTC)


தொகு

Wikimedia foundation has started a fund-raiser for 4th quarter of 2006. Can someone please translate the fundraiser link and the meta page and put it on the Tawiki home page? See Fundraising sitenotice 2006 Q4 and Wikimedia:Fundraising_translations. Regards, Ganeshk 03:12, 16 டிசம்பர் 2006 (UTC)

If the above steps were followed, the banner will show up on all pages. But I have seen no response to my request. Regards, Ganeshk 04:33, 19 டிசம்பர் 2006 (UTC)

I have added the banner myself. But it should go to the top the main-page. I cannot edit the main-page myself. Can an admin please move the code to the main-page from main-page feature? Please move the block of code to ta:MediaWiki:Sitenotice and ta:MediaWiki:Anonnotice so that it shows up on all pages. Also, please translate the two lines to tamil. Every dollar that comes in counts. Thanks, Ganeshk 04:31, 19 டிசம்பர் 2006 (UTC)

I am running late, I will do it tomorrow. Unless someone else beats me to it. --Natkeeran 05:01, 19 டிசம்பர் 2006 (UTC)
Okay. No problem. -- Ganeshk 05:05, 19 டிசம்பர் 2006 (UTC)
Done :)--Ravidreams 07:38, 19 டிசம்பர் 2006 (UTC)
Thanks! :) -- Ganeshk 08:38, 19 டிசம்பர் 2006 (UTC)

புதிய புள்ளிவிபரங்கள்

தொகு

30.11.2006 இல் உள்ளவாறான புள்ளிவிபரங்களின்படி 32B அளவினைவிடச் சிறிய கட்டுரைகள் பூச்சியமாகவுள்ளன. <64B, <128B அளவுக் கட்டுரைகளும் எண்ணிக்கையில் குறைந்துள்ளன. ஆனால் <216B, <512B, <1kB, <2kB அளவுக் கட்டுரைகள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன. கட்டுரைகளை விரிவாக எழுதுவது தொடர்பிலும் ஏற்கனவே உள்ளவற்றை விரிவாக்குவது தொடர்பிலும் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும். கோபி 17:47, 18 டிசம்பர் 2006 (UTC)

அண்மைய மாற்றம்

தொகு

அண்மைய மாற்றப் பக்கத்தில் மாற்றங்களுக்கு அருகில் +/- # தெரிய ஆரம்பித்துள்ளது. இது செய்யப்பட்ட மாற்றத்தின் விளைவாக அதிகரித்த அல்லது குறைந்த பைட் அளவினைக் குறிக்கின்றது என்றே தெரிகிறது. --கோபி 21:02, 19 டிசம்பர் 2006 (UTC)

Inspiring vision of free (online) education for all (Richard Baraniuk, TEDTalks)

தொகு

http://video.google.ca/videoplay?docid=-6257358325262647360&q=ted+conferences

--Natkeeran 03:42, 20 டிசம்பர் 2006 (UTC)

Thanks for the link. It's going to be useful for myself and many others. How is this different from Wikibooks or Wikiversity? They have similar goals to putting free-content out. I feel they should put us up on Related websites. I was surprised not to find Wikibooks or Wikiversity over there. Regards, Ganeshk 03:58, 20 டிசம்பர் 2006 (UTC)
திறந்த பாடத்திட்டங்கள் Ganeshk, the importance of open knowledge is gaining on me. As I talk to some people from Sri Lanka, I also sense that language barrier is significant. Most of the ted conference videos are worth watching. Below are two more links that I think you will enjoy.

http://video.google.ca/videoplay?docid=4237353244338529080&q=ted+conferences http://video.google.ca/videoplay?docid=-4964296663335083307&q=ted+conferences

--Natkeeran 02:58, 21 டிசம்பர் 2006 (UTC)

பூங்கா இதழில் விக்சனரி

தொகு

இந்த வார பூங்கா இதழில் விக்சனரி குறித்த நம் இடுகை வெளிவந்துள்ளது. பார்க்க - http://poongaa.com/component/option,com_magazine/func,show_edition/id,33/Itemid,1/ . பூங்கா அட்டைப்படத்திலும் விக்சனரி தள முகப்பு பின்னணியாக வந்துள்ளது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே செப்டம்பர் 18 பூங்கா இதழிலும் இந்த இடுகை ஏற்கனவே வெளி வந்திருந்தது. --Ravidreams 10:09, 21 டிசம்பர் 2006 (UTC)

ஆலோசனை தேவை

தொகு

பார்க்க பேச்சு:தமிழ்#ஒலிப்பதிவுச் சோதனை--Ravidreams 23:29, 22 டிசம்பர் 2006 (UTC)

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

தொகு

கிறிஸ்துமஸ் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதிய பயனர்:Trengarasu நன்றி. அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக்கள். --Natkeeran 02:00, 25 டிசம்பர் 2006 (UTC)

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்துப் பயனர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இப்பண்டிகை காலத்தில் அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் விடுமுறையைக் கொண்டாடி மகிழ எனது பிரார்த்தனைகள்.--Kanags 02:17, 25 டிசம்பர் 2006 (UTC)


அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை வாழ்த்துக்கள். --டெரன்ஸ் \பேச்சு 02:20, 25 டிசம்பர் 2006 (UTC)
அனைவருக்கும் குறிப்பாகக் டெரன்ஸ், கிறிஸ்தவர்களுக்கு நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். --கோபி 07:20, 25 டிசம்பர் 2006 (UTC)
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், என்னைத் தவிர எல்லாரும் எல்லாரும் விடுமுறையில் இருப்பீர்கள் என நம்புகின்றேன். --Umapathy 07:48, 25 டிசம்பர் 2006 (UTC)

அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் :) இன்று முதற்பக்கம் கிறிஸ்துமசுக்கு ஏற்ப இற்றைப்படுத்தப்பட்டு காட்சியளித்தது கண்டு மகிழ்ந்தேன். செய்திகள், சிறப்புப் படிமங்கள், நாட்குறிப்புகள் அனைத்தையும் இற்றைப்படுத்துவதிலும் அனைவரும் காட்டும் முனைப்பு கண்டு மகிழ்ச்சி. இதை தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன். நாளை முதல் ஒரு மாதம் இந்தியப் பயணத்தில் இருக்கிறேன். திரும்ப வரும்போது நிறைய கட்டற்ற படிமங்களை கொண்டு வர முயல்வேன். --Ravidreams 09:03, 25 டிசம்பர் 2006 (UTC)

ie7, ஃபயர் பாக்ஸ்

தொகு

நான் நேற்றுமுதல் ie7 பயன்படுத்த தொடங்கினேன் விக்கிபீடியா தமிழில் தெரிந்தாலும் தொகு பொத்தானை சொடுக்கியவுடன் தொகுப்பு பெட்டியுள் தமிழ் எழுத்துகளுகு பதில் அதன் ஒருங்குக் குறிகள் தான் தென்படுகின்றன. அதில் மீடியாவிக்கி எனது உலாவி ஒருங்கு குறியை ஏற்காதபடியால் தொகுக்க வேண்டாமமென்கிறது. மேலும் ஃபயர் பாக்சை நிறுவியப்பிறகு இப்பிரச்சினை இல்லை, தமிழழெழுத்துகளளழகாக தெரிகின்றன, ஆனால் நான்  புகுபதிகை செய்தவுடன் எழுத்துக்கள் படிமம் மேல் எல்லாம் ஓடுகிறது.--டெரன்ஸ் \பேச்சு 02:20, 25 டிசம்பர் 2006 (UTC)

ie7 இருக்கும் எதாவது வழுவாக இருக்கலாம். அல்லது அதன் tools - options - languages/fonts சென்று மாற்றங்கள் சென்று பார்க்கலாம். Firefox குறை எனக்கும் உண்டு. அதில் த.வி. கட்டங்களும் அவ்வளவு பொருத்தமாக தெரிவதில்லை. இதற்கு WikiMedia html render செய்வதில் சில இளகல் தன்மையைக் காட்டுவதாகவோ அல்லது firefox இறுகிய தன்மையை கொண்டுள்தாகவோ இருக்கலாம். --Natkeeran 02:41, 25 டிசம்பர் 2006 (UTC)
நான் ie7 கடந்த ஐந்து மாதங்களாகவும், firefox 2.0 கடந்த இரண்டு மாதங்களாகவும் பயன்படுத்துகிறேன். ie7ல் ஒரு பிரச்சினையுமில்லை. firefoxல் எப்பொழுதாவது தகவல் பெட்டிகள், வார்ப்புருக்கள் தகராறு செய்வதுண்டு. மற்றபடி அனைத்தும் நன்று. உங்கள் firefoxல் எழுத்துரு அமைப்புகளை மாற்றி முயன்று பார்க்கவும். என் அமைப்புகளை உங்களுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கிறேன்--Ravidreams 09:03, 25 டிசம்பர் 2006 (UTC)
நன்றி ரவி நற்கீரன்--டெரன்ஸ் \பேச்சு 10:09, 25 டிசம்பர் 2006 (UTC)
ரவி முடியுமென்றால உங்களின் கருத்துக்களை இங்கேயே தெரியப்படுத்தவும் இது வேறுசிலரிற்கும் பிரச்சினை வந்தால் உதவியாக இருக்கும். Internet Explorer ஐக் பெரிதாகப் பாவிப்பதில்லை பயர்பாக்ஸ் ஐயே கடந்த இரண்டுவருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பாவித்து வருகின்றேன். --Umapathy 14:18, 25 டிசம்பர் 2006 (UTC)
பயர்பாக்ஸ் உலாவியில் பிரச்சினக்கு தீர்வு ஒன்றை கண்டுவிட்டேன் போல இருக்கு. என்விருப்பதேர்வுகளில்---பந்திகளை ஓரச் சீர்மைப் (Justify) படுத்து என்பதை தெரிவு செய்தால் எழுத்துகள் பிரிந்து எல்லா இடத்துக்கும் ஓட்கின்றன. அதை தெரிவு செய்யாவிட்டால் எல்லா நன்றாக இருக்கிறது.--டெரன்ஸ் \பேச்சு 02:22, 31 டிசம்பர் 2006 (UTC)

SVG File Format

தொகு

http://commons.wikimedia.org/wiki/User_talk:Umapathy#Ski_Lanka one wikipedian left the message that he would like use the SVG format. I checked with Firefox works fine but on IE 6 doesn't display at all. I can make SVG format if you guys are interested. Please let me know. Thanks in advance.--Umapathy 02:22, 25 டிசம்பர் 2006 (UTC)

விளக்கம் தேவை. svg format, அதன் தேவை என்ன? --Natkeeran 02:45, 25 டிசம்பர் 2006 (UTC)
SVG- Scalable Vector Graphics ஆங்கில விக்கியிணைப்பு http://en.wikipedia.org/wiki/Svg, பிரச்சினை என்னவென்றால் இதை IE 6 படத்தைக் காட்டுவதைவிட்டு திறந்தால் மூலநிரலைக் காட்டுகின்றது. பயர்பாக்ஸில் நேர்தியாகக் காட்சியளிக்கின்றது. --Umapathy 07:46, 25 டிசம்பர் 2006 (UTC)
பழைய கேள்விக்கு பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். இதன் முக்கிய பயன் என்னவென்றால் இதை எத்தனை மடங்கு பெரிதாக்கினாலும் அதன் நுண்மை குன்றாது (வெக்டார்களாக உள்ளவற்றிற்கு மட்டும், படத்தில் பயன்படுத்தப்படும் மற்றவைகளுக்குப் பொருந்தாது). மேலும், இதனுள் நிரல் துண்டுகளையும் இணைக்க முடியும். இன்க்ஸ்கேப் என்பது திறந்த மூலம் கொண்ட ஒரு எஸ்விஜி உருவாகும் கருவி. ஆங்கில விக்கியில் பலர் பயன்படுத்துகின்றனர். -- Sundar \பேச்சு 15:45, 11 ஜனவரி 2007 (UTC)

தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க தமிழ் எழுத்தாளர்கள் முன்வருகின்றார்கள்

தொகு

அ. முத்துலிங்கம் அவர்கள் முன்னணி தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் உட்பட பல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பெற்று த.வி. சேர்ப்பது தொடர்பாக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றார். நேரம் இன்மை காரணமாகவோ அல்லது நுட்ப சிக்கல்கள் காரணமாகவோ பல எழுத்தாளர்கள் நேரடியாக த.வி. பங்களிக்க முடியாமல் இருக்கின்றதாக தெரிவித்தார். பல தரப்பட்ட எழுத்துருக்களில் வரும் கோப்புக்களை யுனிக்கோடுக்கு மாற்றி த.வி. ஏற்ற மாதிரி தொகுக்க வேண்டும். இந்த செயற்பாட்டுக்கு அனைத்து த.வி. பயனர்களும் ஒத்துழைப்பு வேண்டும். இந்த செயற்பாடு த.வி. பல புதிய களங்களுக்கு அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம். --Natkeeran 01:27, 4 ஜனவரி 2007 (UTC)

விக்கிபீடியா தொடர்பான சில செயற்பாடுகளை மின்னஞ்சல் ஊடாகவும் நடைபெறுவதுண்டு, எ.கா. Tamil Wikipedia 1000 Articles CD Project Proposal – Version 1.0. அவற்றைப் பற்றிய தகவல்களை விக்கிபீடியர் மின்னஞ்சல் பட்டியல் (Tamil Wikipedia Mailing List) தற்போது பரிமாறப்படுகின்றது.

இயன்றவரை குறைந்தளவு மின்னஞ்சல்களையே அனுப்ப முயலவேண்டும். விக்கிபீடியா தொடர்பற்ற விடயங்களுக்கு இந்த மின்னஞ்சல் பட்டியல் பயன்படுத்தப்படாமல் இருப்பது விரும்பத்தக்கது. விரும்பிய பயனர்கள் தங்கள் பெயர்களையும் இணைக்கலாம். --Natkeeran 03:31, 5 ஜனவரி 2007 (UTC)

இன்னமும் தாமதம் ஏன்?

தொகு

ஆகிய இரண்டும் பெருமளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழகப் பயனர்கள் சிலர் உடனடியாக அவற்றைச் சரிபார்த்தபின் கணேசைத் தானியங்கியை இயக்கக் கேட்கக் கோருகிறேன். தான்யங்கியால் உடனடியாக, இலகுவாக உருவாக்கக்கூடிய கட்டுரைகளைவிடச் சிறிய கட்டுரைகளுக்காக பயனர்களது நேரம் வீணாவது த.வி.யின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. கோபி 20:54, 9 ஜனவரி 2007 (UTC)

சரிபார்க்க வேண்டும். Ghanesk இப்பொழுது விக்கி விடுமுறை போல தெரிகின்றது. --Natkeeran 21:33, 9 ஜனவரி 2007 (UTC)

அனைவரும் சற்று முயன்று இந்த கட்டுரையை மேம்படுத்தலாம். ஒவ்வொருத்தரும் குறைந்த பட்சம் ஒரு பந்தி பங்களித்தால் நன்று.

முக்கிய சில த.வி. வரைபுகள் 1.0

தொகு

ஆலோசனைகள், ஆட்சோபனைகள் வரைவேற்கப்படுகின்றன. --Natkeeran 01:14, 10 ஜனவரி 2007 (UTC)

வரைவுகள் நன்று, பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 15:50, 11 ஜனவரி 2007 (UTC)

மீளாய்வு, மீளாக்கம், அல்லது நீக்கப்படவேண்டிய உதவி பக்கங்கள் பட்டியல்

தொகு

--Natkeeran 02:44, 11 ஜனவரி 2007 (UTC)

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

தொகு

பொங்கி, உண்டு, பகிர்ந்து, கூடி மகிழ்ந்திருக்க இனிய வாழத்துக்கள். --Natkeeran 14:56, 14 ஜனவரி 2007 (UTC)

தாய் மொழியை மறத்தல் எப்படி?

தொகு

How to Forget Your Mother Tongue and Remember Your National Language by Victor H. Mair http://www.pinyin.info/readings/mair/taiwanese.html

பயன்படாப் படிமங்களை நீக்குதல்

தொகு

பயன்படாப் படிமங்களை [2] நீக்குவது தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 13:17, 26 ஜனவரி 2007 (UTC)

ஒரு விக்கிபீடியாவிலுள படிமங்கள் எண்ணிக்கை மற்றும் மொத்தப் பக்க எண்ணிக்கை போன்றவை அந்த விக்கிபீடியாவின் தரம் தொடர்பிலான கணிப்புக்களில் செல்வாக்குச் செலுத்துபவையாகையால் பயன்படாதுள்ள படிமங்களை நீக்கிவது பொருத்தமாகப் படுகிறது. --கோபி 15:44, 26 ஜனவரி 2007 (UTC)
உடனடியாக நீக்காதீர்கள். இதைப்பற்றி சற்று அலசவேண்டும். இதைப்பற்றி ஒரு கொள்கையை ஏற்படுத்தி, பின்னர் நீக்கலாம். --Natkeeran 20:32, 26 ஜனவரி 2007 (UTC)
மேற்படி பட்டியலிலுள்ள பல படிமங்கள், எடுத்துக்காட்டாக நாடுகளின் தேசியக் கொடிகள், வேறு படிமங்களால் பதிலிடப்பட்டுவிட்டன என்று தோன்றுகிறது. தொடக்க காலங்களில் படிமங்களைச் சொடுக்கிப் பெரிதாக்குவதற்காக ஒவ்வொரு படிமமும் இரண்டு அளவுகளில் தேவைப்பட்டதாகத் தெரிகிறது. இப்பொழுது அப்படியல்ல. அதனால் முன்பு பதிவேற்றிய படிமங்கள் இப்பொழுது தேவையற்றவை ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். உண்மையில் அவை தேவையற்றவைதானா, அவற்றுக்கு மாறுப் படிமங்கள் உள்ளனவா என்பதை உறுதிசெய்து கொண்டு அவற்றை நீக்கிவிடலாம் என்பது எனது கருத்து. எனினும் நற்கீரனுடைய குறிப்பிட்டது போல் இது பற்றிய கொள்கையொன்றை ஏற்படுத்துவது நல்லது. Mayooranathan 04:29, 27 ஜனவரி 2007 (UTC)
கோபி நிச்சயமாக கவனித்துத்தான் தேவையில்லாத படிமங்களைத் தான் நீக்குவார் நிர்வாக அணுக்கம் உள்ளவர் இதைத் தேவையென்றால் மீள்விக்கலாம் எனவே படிமங்களை நீக்குவது கணினியின் recycle bin இற்குப் படிமங்களப் போடுவதைப் போன்றே எனக்குக் காட்சியளிக்கின்றது. இது சரியென்றால் தமிழ் விக்கிபீடியாவின் மொத்த அளவு படிமங்களை நீக்குவதால் குறைவடையுமா?. இதற்காகச் செலவிடும் நேரத்தை விட கட்டுரைகள் ஆக்குவதில் செல்விடுவதே நல்லது நாம் இன்னமும் 10, 000 கட்டுரைகளை எட்டவில்லை.
தவிர காமன்ஸில் படிமங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக நீக்கபட்டால் அந்தப் படிமத்தை மீள்விப்பதற்கு இலகுமாதிரித் தெரியவில்லை. தமிழ் விக்கிபீடியாவில் ஆகக் குறைந்தது ஒருவருக்காவது காமன்ஸில் நிர்வாக அணுக்கம் ஏற்படும் வரை இம்முடிவுகளை பின்போடுவது நல்லதாக இருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்தே. தரக் கண்காணிப்பு பற்றிய கோபியின் கருத்துக்களை வரவேற்கின்றேன் அநேகமான கணிப்புக்கள் ஏனைய இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டே கணிக்கப்பட்டுள்ளது ஆனால் ஆங்கில விக்கிபீடியாவுடன் ஒப்பிட்டால் கட்டுரைகளின் எண்ணிக்கை வியக்க வைக்கின்றது. ஒருநாளில் ஆயிரக்கணக்கான புதிய கட்டுரைகள் வருகின்றது. இன்னமும் தமிழ் விக்கிபீடியா பல்கலைக் கழகங்களில் சரியான முறையில் புகவில்லை. தமிழ் விக்கிபீடியா பற்றிய அறிமுகம் பற்றியும் மேலும் ஆர்வலர்களைச் சேர்பதுமே சாலச் சிறந்ததாக அமையும். "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்னும் தமிழ் பழமொழிக்கமைய பயனர்களின் பங்களிபுக் கூடும் போது தமிழ் விக்கிபீடியா தலைநிமிர்ந்து நிற்கும். --Umapathy 12:53, 27 ஜனவரி 2007 (UTC)

நான் இதுவரை நீக்கியவை கொமன்ஸில் உள்ள அற்கு நீக்கப்பட வாய்ப்பற்ற மற்றும் த.வி.யில் பயன்படாத படிமங்களே. பயன்படாப் படிமங்களானாலும் த.வி.க்கு பிரத்தியேகமான படிமங்களை நீக்க வேண்டியதில்லைத்தான். இது தொடர்பில் கொள்கைகளை ஏற்படுத்தி நீக்குவது நல்லது. நீக்கப்பட்ட படிமங்களை மீள்விக்க முடியும். ஆயினும் நீக்குவதால் அளவு குறையும் என்றே தோன்றுகின்றது. நன்றி. கோபி 15:48, 27 ஜனவரி 2007 (UTC)

கட்டற்ற படிமங்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்பட வேண்டும். அத்தகைய படிமங்களை கொமன்ஸில் பதிவேற்றிப் பயன்படுத்துவது சிறப்பானது. த.வி.யில் பதிவேற்றப்படும் படிமங்கள் த.வி.க்குப் பிரத்தியேகமான fair use படிமங்களாக மட்டும் இருப்பது நல்லது. (உ-ம்:எழுத்தாளர்களின் படங்கள், நூல் அட்டைப் படங்கள், தமிழ் தொடர்பான சின்னங்கள்) கோபி 15:51, 27 ஜனவரி 2007 (UTC)

பயன்படாததும் தமிழ் விக்கிபீடியாவுக்குத் தேவைப்படாததுமான படிமங்களை நீக்குவதில் தவறில்லை ஆனால் காமென்சில் இருக்கிறது என்பதற்காக இங்குள்ள படிமங்களை நீக்கவேண்டாம். காமென்சில் உள்ள படிமங்களில் எங்களுக்குக் கட்டுப்பாடு கிடையாது. அங்கேயுள்ள படிமங்களை விரும்பியவர்கள் மாற்றிவிடக்கூடும். அவற்றையெல்லாம் நாங்கள் கவனித்துக்கொண்டிருக்க முடியாது. எனக்கு விக்கிபீடியாவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அநுபவம் உண்டு. அக்காலத்தில் ஆங்கில விக்கியிலிருந்து தொடர்பு கொடுக்கப்பட்ட படிமங்கள் தமிழ் விக்கியில் இருந்தன. அவற்றுட் சில தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சில சமயம் காணாமலே போய்விடுவதும் உண்டு. நான் உட்படத் தமிழ் விக்கிபீடியாவைச் சேர்ந்தவர்கள் பதிவேற்றிய பல இங்கும் காமென்ஸிலும் இருக்கின்றன. இவற்றில் பலவற்றைப் படம் எடுப்பதிலும், பதிவேற்றுவதற்கு ஏற்றமுறையில் ஒழுங்கு படுத்துவதிலும், பதிவேற்றுவதிலும் காலம், பணம் என்பன செலவாகியிருக்கின்றன. இத்தகைய படிமங்களில் எங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பது நல்லது. நான் விக்கிபீடியாவுக்கென்று எடுத்த பல படங்கள் குறிப்பிட்ட தேவையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை. அவற்றின் கோணம், அவற்றில் தெரியும் அம்சங்கள் போன்றன முக்கியமாக இருக்கக்கூடும். ஆனால், காமன்சில் ஒரு நிர்வாகி அது போதிய தெளிவு இல்லையென்றோ அல்லது வேறு காரணத்துக்காக்கவோ வேறு படிமத்தால் மாற்றீடு செய்துவிடக்கூடும். அழிப்பது இலகு. மீண்டும் அவற்றைத் தேடிக்கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கக்கூடும். காமென்சில் இருப்பது இருக்கட்டும். இங்கு பயன்பாட்டில் இருப்பதை அப்படியே விட்டுவிடுங்கள். Mayooranathan 17:31, 27 ஜனவரி 2007 (UTC)
பயன்படாத படிமங்கள் யாவை என்று வரையறை செய்ய வேண்டும். மயூரநாதனின் கருத்துக்களும் முக்கியம். நுட்ப மேம்படுத்தலும், வகைப்படுத்தலும் தேவை. --Natkeeran 17:57, 27 ஜனவரி 2007 (UTC)

பயன்படாத படிமங்களில்ற் கூட த.வி.க்குப் பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட (உ-ம்:மயூரநாதன்) படிமங்கள் உள்ளன. அவற்றை நீக்க வேண்டியதில்லை. மேலும் எமக்கு முக்கியமாகத் தெரியும் படிமங்கள் கொமன்ஸில் முக்கியத்துவமற்றது போற் தெரிந்து நீக்கப்படும் ஆபத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் மிகவும் பொதுவானவற்றை (உ-ம்: நான் நீக்கிய கரடிப் படிமம்், albaa.jpg போன்றவை) இங்கும் வைத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாக அத்தகையவற்றையெல்லாம் தேடி அழிக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் புதிதாக பதிவேற்றப்படும் படிமங்கள் கொமன்ஸில் இருந்தால் பதிவேற்றுவதைத் தவிர்த்தல் மற்றும் புதிய படிமங்களுக்கு உரிய பகுப்பு இடல் போன்ற செய்றபாடுகளைப் பயனர்கள் பின்பற்றுவதை உறுதி செய்வது நீண்டகால நோக்கில் முக்கியமானௌ என்றே கருதுகிறேன். --கோபி 18:16, 27 ஜனவரி 2007 (UTC)

தமிழின் சிறப்பு

தொகு

Comparing Chinese Characters and a Chinese Spelling Script -- an evening conversation on the reform of Chinese characters by Lyu Shuxiang [1904-1998] translated by Zhang Liqing http://www.pinyin.info/readings/lyu_shuxiang/ --Natkeeran 00:34, 27 ஜனவரி 2007 (UTC)

தமிழ் விக்கிமீடியா மடற் குழுமங்கள்

தொகு

தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் குறித்து நாம் அடிக்கடி மடல்களில் உரையாடுவது வழக்கம். இவற்றை எளிமைப்படுத்த சில மடலாடற் குழுமங்களை உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டது. ஏற்கனவே, சொற்கள் குறித்து உரையாட தமிழ் விக்சனரி குழுமம் இயங்கி வருகிறது. பார்க்க - http://groups.google.com/group/tamil_wiktionary?hl=en . இது போக, தமிழ் விக்கிபீடியாவுக்கும் தொடங்கப்பட இருக்கிற தமிழ் விக்கி மூலம் திட்டத்துக்கும் குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றின் முகவரிகள்:

1. http://groups.google.com/group/tamil_wikisource 2. http://groups.google.com/group/tamil_wikipedia

சிலருக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கிறேன். அழைப்பு கிடைக்கப் பெறாதவர்கள் எனக்குத் தெரியப்படுத்தினால் அனுப்பி வைக்கிறேன். --Ravidreams 13:35, 28 ஜனவரி 2007 (UTC)

விக்கிபீடியா உதவி பக்கங்கள்

தொகு

பட்டியலிடல், அட்டவணையிடல் போன்று தலைப்பிடுவது பொருத்தமா? அல்லது பட்டியல்கள், அட்டவணைகள் என்பது பொருத்தமா? அப்படியானால் காலக்கோடு ஆக்குதல், என்ற தலைப்பு நன்றா? வரைபடங்கள் ?? --Natkeeran 18:21, 29 ஜனவரி 2007 (UTC)

பட்டியல்கள், அட்டவணைகள், காலக்கோடுகள், வரைபடங்கள் என்று சொல்வதே நன்றாக இருக்கும்.--Ravidreams 06:55, 3 பெப்ரவரி 2007 (UTC)


கட்டற்ற

தொகு

Free software, Free encyclopedia போன்ற கருத்துக்களுடன் தொடர்புடைய Free என்பதற்கு சுதந்திரம், தளையறு, விடுதலை போன்ற சொற்களைத் தவிர்த்து கட்டற்ற என்ற சொல்லை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றேன். இச்சொல் இங்கும் https://wiki.ubuntu.com/TamilTeam/Organisers பயன்படுத்தப்படுகின்றது. இப்பொழுது பரவலான வழக்கத்துக்கு வருகின்றது. நன்றி. --Natkeeran 22:51, 29 ஜனவரி 2007 (UTC)

ஆமாம், கட்டற்ற - என்பது சொல்வதற்கும் எளிமையாக இருக்கிறது. --Ravidreams 06:55, 3 பெப்ரவரி 2007 (UTC)

How will taWpedia Respond? RFC!

தொகு

http://groups.msn.com/Tamil-Unicode/general.msnw?action=get_message&mview=1&ID_Message=50

The Government of Tamilnadu has formally accepted TANE for Tamil in place of Tamil Unicode vide G.O.(Ms) No.13 dated 10.11.2006 (please read paragraph marked as 10 in the G.O).

Earlier, TVU has held a technical conference on TANE encoding for Tamil on 2.9.2006 and the recommendation of the conference include the following (as mentioned in the G.O in reference):

--Natkeeran 23:22, 30 ஜனவரி 2007 (UTC)

TANE எந்த அளவில் இணையத்தில் அரசு சாரா தளங்களில் புழக்கத்துக்கு வருகிறது என்று பார்க்க வேண்டும். தவிர, நுட்ப அளவில் இதை செயல்படுத்துவதில் மீடியாவிக்கிக்கு ஏதும் சிரமம் இருக்குமா என்றும் பார்க்க வேண்டும்--Ravidreams 06:55, 3 பெப்ரவரி 2007 (UTC)

Devnagari நேரடியாக தட்டச்சு செய்ய விக்கியில் ஏதுவாக்கியிருக்கின்றார்கள்.

தொகு

அதேபோல் தமிழுக்கும் செய்ய வேண்டும். --Natkeeran 01:27, 3 பெப்ரவரி 2007 (UTC)

தமிழுக்கும் இது போல் செய்வது, தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர்களையும் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதை ஊக்குவிக்கும். வழக்கமான பங்களிப்பாளர்களுக்கும் தமிழ்த் தட்டச்சு வசதி இல்லாதபோது சிறு சிறு உடனடித் தொகுப்புகள் செய்ய உதவும். எனக்குத் தெரிந்த நண்பர்களை இந்த மாற்றத்தை தமிழுக்கும் செய்து தர கேட்டுப் பார்க்கிறேன். இந்த வசதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வேண்டப்பட்டு நிலுவைப் பட்டியலில் இருந்து வருகிறது. ஆனால் ஒன்று, வெறும் தமிங்கில ஒலிப்பெயர்ப்பு விசைப்பலகை மட்டும் தராமல் வேறு தட்டச்சு முறைகளும் தர வேண்டும். தமிங்கில தட்டச்சு முறையை விக்கிபீடியா முன்னிறுத்துவதில் எனக்கு கொள்கை அளவில் உடன்பாடு இல்லை ;)--Ravidreams 06:55, 3 பெப்ரவரி 2007 (UTC)

எது கட்டுரை?

தொகு

ஒற்றை வரியில் அமையும் கட்டுரைகளைக் கட்டுரைகளாகக் கருதலாமா அல்லது நீக்கலாமா? --கோபி 08:12, 7 பெப்ரவரி 2007 (UTC)

கோபி நீங்களே சிலவற்றை எழுதியுள்ளீர்கள்!!! இருப்பினும் 3 வரிகள் குறைந்தது என்று வரையறுக்கலாமா. பட்டியல்கள், சில நல்ல வரையறைகளை விதி விலக்குகளாக ஏற்கலாம். ஆனால், பட்டியலில் இடப்படக்கூடிய தகவல்களுக்கெல்லாம் ஒரு பக்கம் ஏற்படுத்துவதுவை இயன்றவரையில் தவிர்க்க வேண்டும். தலைப்பு மட்டும் ஒரு stub என்று சில பிற விக்கிகளில் செய்கின்றார்கள். அந்தப் போக்குக்கு இங்கு இடம் அளிக்க கூடாது. குறைந்த பட்சம் 3 வரிகள் (வரையறை உட்பட), வகை, ஒரு இணைப்பு, இருந்தால் ஆங்கில விக்கி இணைப்பு, வெளி இணைப்புகள். ஆதாரங்கள் அல்லது மேற்கோள்கள் விரும்பத்தக்கது. இங்கு சுந்தரின் மென்பொருள் ஒப்பீட்டை குறிப்பிட விரும்புகின்றேன். எந்த நிரலையும் ஒரு திட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், அடிப்படையான சில கட்டுப்பாடுகளுக்கு இணங்கி பங்களித்தாலே பயன் பெருகும்.

--Natkeeran 12:59, 7 பெப்ரவரி 2007 (UTC)

கோபி சொற்றொடரைக் குறிக்கவில்லை என்று நினைக்கிறேன். விக்கிபீடியா பக்கப் பார்வைக்கு ஒரு வரி (line not sentence) அளவு உள்ள கட்டுரைகளை நீக்கலாமா என்பது தான் கேள்வியாக இருக்கும். ஏனென்றால், நற்கீரன் எடுத்துக்கூறிய மூன்று வரி அளவும் பிறவும் ஏற்கனவே புரிந்துணர்வின் பேரில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை தான். ஒரு வரி கட்டுரைக்கு delete வார்ப்புரு இடுவது, காத்திருப்பது, அழிப்பது எல்லாம் இரட்டிப்பு வேலை. இதை தவிர்க்க ஒரு line கட்டுரைகளை அவகாசம் இன்றி நீக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். --Ravidreams 14:36, 7 பெப்ரவரி 2007 (UTC)

எனது கருத்துப்படி விக்கிபீடியா என்பது தகவல் சேகரிப்பு அதாவது பண்டைக்காலக் கல்வெட்டு மாதிரி ஆனாலும் பங்களிக்கும் அனைவரும் தாம் விரும்புவது போல் எழுதமுடியாதுதான் ஆனாலும் ஒருவர் தன்னிடம் உள்ள தகவலை ஒரு வரியிலோ அல்லது மூன்று நான்கு வ்ரியிலோ இட்டுச்செல்கின்றார் என்று வைப்போம் அவர் பின்னாட்களின் விக்கி பக்கம் வரவேயில்லை என்றும் வைப்போம் அதற்குள் நாம் அத்தகவலின் மீது அழிப்பதற்கான கால அவகாசத்தினை இட்டு அழிப்பதனால் அத்தகவல் நமக்கு கிடைக்காமல் போகும் வெற்றுப் பக்கத்திஉ பார்க்க அவ்வொரு வரித்தகவல் மிகவும் பயனளிக்கு பிற்காலங்களின் அதனால் நான் கூற வருவது என்னவென்றால் கால அவகாசம் கொடுத்து அழிப்பதற்கும் பார்க்க இக்கட்டுரைகளிற்கென்று ஒரு பக்கத்தினை அமைத்து அங்கு சேர்த்து வைக்கலாம்.இதனால் தமிழ் விக்கியின் தரம் நூறு சதவீதமும் கெடுவதாக எனக்குத் தெரியவில்லை.விக்கிபீடியா கொள்கைகளானது அனைவருக்கும் பயன்படும் வித்தத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவே அனைவரது கருத்துக்களிற்கும் முக்கியம் அளிக்கவேண்டும் அதனால் ஒரு பயனர் ஆங்கில வார்த்தைகளினாலோ,தகாத வார்த்தைகளினாலோ ஒரு வரிக் கட்டுரைகளினை இட்டுச்சென்றால் அதனை நீக்கலாம்.இதன்படி நான் கூற முனைவது யாதெனில் தமிழ் விக்கிபீடியா தமிழர்களின் கல்வெட்டாக இருக்கவும் வேண்டும் அதற்காக தமிழில் அனைத்துத் தகவல்களினையும் அல்ல.ஆய்வுகளிற்குட்பட்ட கட்டுரையோ ஒரு வரியோ இருத்தல் நன்று இது எனது தனிப்பட்ட கருத்து.--நிரோஜன் சக்திவேல் 15:17, 7 பெப்ரவரி 2007 (UTC)

நல்ல யோசனை. தகவல் குறிப்புகள் சேகரம் என்று ஆரம்பித்து தகவலையும் இட்டவர் பெயரையும் குறிக்கலாம். --Natkeeran 15:46, 7 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், தகவல் குறிப்பு சேகரம் என்பதை விட நிரோ இப்போது உருவாக்கியிருக்கும் பட்டியல்கள் போன்றவையே பயனுடையவை. --கோபி 16:34, 7 பெப்ரவரி 2007 (UTC)

இல்லை கோபி தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் நான் பட்டியலிட்டது நூல்கள் ஆகையினால் ஆனாலும் பிற பயனர்கள் வேறேனும் தகவல்களினை ஒரு வரியில் எழுதினால் என்ன செய்வது என்பது நன்கு யோசிக்க வேண்டிய விடயம் காரணம்.எத்தகவலும் அழிக்கப்படக்கூடாது.சிறு துரும்பும் பல் குத்த உதவும்.--நிரோஜன் சக்திவேல் 16:44, 7 பெப்ரவரி 2007 (UTC)

நிரோ இது ஒரு கலைக்களஞ்சியம். பயனர்களாகிய எம்மை விடுங்கள். விக்கிபீடியா தெரியாத ஒருவர் கூகிளில் தேடி இங்கு ஒரு கட்டுரைக்கு வரும்போது அது ஒற்றை வரியாக இருந்தால் தமிழ் விக்கிபீடியா பற்றி என்ன நினைப்பார்? பங்களிக்கக் வேண்டும் என்று கூட நினைக்க மாட்டார். நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்கி விக்கிபீடியாவிற்குப் பங்களிக்கிறீர்கள். அத்தகைய ஒரு உழைப்பு வீண் போகலாமா? அதனால்தான் ஒற்றைவரித் தகவல்களை நீக்கப் பரிந்துரைத்தேன். --கோபி 17:02, 7 பெப்ரவரி 2007 (UTC)

அப்பயனர் தேடி வந்த தகவல் ஒற்றை வரியில் இருந்தால் சரி இல்லாமலே இருப்பதனால் அவர் விக்கியில் திரும்ப வருவாரோ.இதில் எதில் சிறந்தது தாங்களே யூகித்துக்கொள்ளுங்களேன்.--நிரோஜன் சக்திவேல் 17:05, 7 பெப்ரவரி 2007 (UTC)

நிரோஜன், விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம். :-)
ஒற்றை வரியே என்றாலும் பயனுள்ள தகவல் இருந்தால் அது இருப்பதில் பிழை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒற்றை வரியில் கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லதல்ல. Mayooranathan 17:16, 7 பெப்ரவரி 2007 (UTC)

நிரோ, விக்கிபீடியா ஒரு தகவல் சேகரிப்பு, பயனுள்ள தகவல்கள் சிறிதாக இருந்தாலும் தொகுத்து வைக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை எப்படி சேகரிக்கிறோம் என்பதில் ஒரு புரிந்துணர்வுக்கு வரலாம் அல்லவா? எடுத்துக்காட்டுக்கு, விஜயபாகு மன்னர்கள் குறித்த தனித்தனிக் கட்டுரைகளை எழுதி இருக்கிறீர்கள். பயனுள்ளவை தான். ஆனால், ஒவ்வொரு மன்னனுக்கும் இரு வரியில் ஒரு கட்டுரை என்பதற்கு பதில் விஜயபாகு மன்னர்கள் என்ற ஒரே கட்டுரையில் ஒரு கட்டுரையில் குவித்திருந்தால் அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்று இருக்கலாம். பக்கம் பக்கமாக சென்று பார்க்கத் தேவை இல்லை. தனித்தனியாக பகுப்புகள் இட, உசாத்துணை தரத் தேவை இல்லை. ஒரு வேளை தனியொரு மன்னனை பற்றிய மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்போது தனிக் கட்டுரையாகத் தரலாமே. இம்மன்னர்களின் தகவல்களை அட்டவணை வடிவில் தந்திருந்தால் மிகுந்த பயனுடன் ஒப்பு நோக்கத் தக்கதாக இருந்திருக்கும். எடுத்துக்காட்டுக்கு மன்னன் பெயர், ஆண்ட காலம், தலை நகரம், சிறப்புப் பெயர்கள் என்ற வகையில் ஒரு அட்டவணையாகத் தந்திருந்தால் நன்றாக இருக்கும். தனிக்கட்டுரையையும் தவிர்த்திருக்கலாம். எனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்று தயவுசெய்து கருத வேண்டாம். உங்கள் கட்டுரைகள் ஒரு எடுத்துக்காட்டுக்காக குறிப்பிடப்பட்டனவே. உண்மையில் வேறு பலர் எழுதிய கட்டுரைகளையும் இப்படி கருத்து கூறலாம். எடுத்துக்காட்டுக்கு, கோபி உருவாக்கிய பாடல் பெற்ற தளங்கள் கட்டுரைகளையும் தொடக்கத்தில் இப்படி பட்டியல் வடிவில் தந்திருக்கலாம். அதாவது கோயில் பெயர் - வேறு பெயர் - இடம்பெற்ற ஊர் - பாடல் பாடியவர்கள் - என்ற வகையில் அட்டவணைப்படுத்தி இருக்கலாம். இந்த அட்டவணைப்படுத்தல்களை மாநிலம், நாடு, மாவட்டம் வாரியாக தந்திருந்தால் ஒப்பு நோக்கத் தக்கதாக இருந்திருக்கும். பல குறுங்கட்டுரைகளையும் அவற்றை எழுதுவதற்கான நேரம், ஒழுங்குபடுத்துவதற்கான நேரம் ஆகியவற்றையும் தவிர்த்திருக்கலாம்.

போதுமான தகவல்கள் இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் தனிக்கட்டுரை தொடங்கலாம். ஆனால், குறைந்த அளவு தகவல்களே தர முடியும் என்ற நிலையில் அவற்றை சிறப்பாக எப்படித் தொகுக்க முடியும், எப்படி குறுங்கட்டுரைகளை தவிர்ப்பது என்ற நோக்கு வர வேண்டும்.

மேலதிகமாக எளிதில் தகவல் திரட்ட முடியாத, பயனுள்ள ஒரு வரிக் கட்டுரைகளை எப்படி ஒரு பக்கத்தில் தருவது என்று சிந்திக்க வேண்டும். இது போக, எளிதில் விரிவாக்கக் கூடிய கட்டுரைகளையும் ஒரு வரிக் கட்டுரைகளாக தரும் போக்கை அனுமதிக்க முடியாது. எடுத்துக்காட்டுக்கு, மாடு ஒரு விலங்கு, பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர் போன்ற ஒரு வரிக் கட்டுரைகளும் விக்கிபீடியாவில் எழுதப்பட்டன. ஒரு வரிக் கட்டுரையை அழிக்கக்கூடாது என்று இறுக்க நிலைப்பாடு வைத்து, இவற்றை நீண்ட நாட்களுக்கு அப்படியே விட்டு வைப்பதில் என்ன நலம் சொல்லுங்கள்? இப்படி ஒரு வரிக்கட்டுரை இருப்பதால் விக்கிபீடியாவுக்கு வருபவர்களுக்கு நகைப்பு தான் வரும். அதே வேளை இவை காலத்தால் அழிக்கப்பட்டு விடக்கூடாத மதிப்பு வாய்ந்த தகவல்களும் இல்லை. சிறு பிள்ளைக்கும் தெரிந்த தலைப்பு விளக்க ஒரு வரிக்கட்டுரைகள் தான். இவற்றை அழிப்பதில் தயக்கம் இருக்கக் கூடாது.

ஆங்கில விக்கியின் அனைத்து செயற்பாடுகள், கொள்களைகள், நிலைப்பாடுகளும் தமிழுக்கு முழுக்கப் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நம்முடைய தேவை, நோக்கம், அனுபவம், limitationsக்கு ஏற்ப கொள்கைகளை வகுத்தல் வேண்டும். --Ravidreams 23:25, 7 பெப்ரவரி 2007 (UTC)

ரவி இப்பொழுது புரிந்து கொண்டேன் பட்டியல் வரிசையில் இனிமேல் ஒரு வரிக்கட்டுரைகளினை உருவாக்குகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 23:39, 7 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் விக்கிமீடியா தேடல் பொறி !

தொகு

விக்கிபீடியாவுடன் இணைந்த தேடல்பொறி சில சமயம் திறம், துல்லியம் குறைந்ததாகவும் வேகமற்றதாகவும் இருக்கிறது. இந்த குறைகளை போக்க, தமிழ் விக்கிமீடியா திட்டங்களை மட்டும் தேடுமாறு கூகுள் தேடல் பொறி ஒன்றை உருவாக்கி உள்ளேன். அது இங்கு உள்ளது. அந்த பக்கத்தின் அடியில் உள்ள add to google பொத்தானை கொண்டு இந்த பொறியை உங்கள் கூகுள் தன்விருப்ப பக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். தற்போது இதில் தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி இரண்டை மட்டும் தேடுகிறது.--Ravidreams 10:08, 7 பெப்ரவரி 2007 (UTC)

தடைதாண்டி ஓட்டம் (Parkour - பார்க்கூர்)

தொகு

வழியில் எதிர்படும் தடைகளைத் வேகமாக நேரடியாக தாண்டி ஓடுதலை தடைதாண்டி ஓட்டம் எனலாம். எந்த உதவி உபகரணங்களும் பயன்படுதக்கூடாது. இது பாரிஸ்சில் ஒரு நகரப்புறக் விளையாட்டக அறிமுகமாகி பல்வேறு நகரங்களில் பரவி வருகின்றது. இது இளையவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது.

மேலே தரப்பட்ட சொல்லை தமிழில் மேலே சுட்டியவாறு மொழிபெயர்க்கலாமா? ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. அது ஒரு பிரேஞ்சு சொல், பின்னர் உச்சரிப்பு, எழுத்துக்கூட்டலை உறுதிசெய்கின்றேன்.

--Natkeeran 16:07, 9 பெப்ரவரி 2007 (UTC)

hurdles இனைத் தடைதாண்டி ஒட்டம் என்றழைக்கும் வழக்கமிருக்கிறது. தடை தாண்டும் ஓட்டம் என்ற கட்டுரை ஏற்கனவே hurdles பற்றி அமைந்துள்ளது. --கோபி 16:15, 9 பெப்ரவரி 2007 (UTC)

தாண்டோட்டம் என சுருக்கமாக அழைக்கலாம் என நினைக்கிறேன். --செல்வா 16:23, 9 பெப்ரவரி 2007 (UTC)