விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு113
விக்கி நூலகம் பயிற்சிப் பட்டறை TWLCon (2019 India)
தொகுவிக்கி நூலகம் பயிற்சிப் பட்டறை TWLCon (2019 India) சனவரி மாதத்தில் நடக்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விவரங்களை இங்கு காணலாம். விண்ணப்பிபதற்கு கடைசி நாள் இன்று, 23:59 hrs on 25 November 2018. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:28, 25 நவம்பர் 2018 (UTC)
- விண்ணப்பித்துள்ளேன்.--த♥உழவன் (உரை) 16:49, 25 நவம்பர் 2018 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியா சார்பாகப் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ்ப்பரிதி மாரிக்கு வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 19:38, 16 திசம்பர் 2018
- நன்றி இரவி.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:21, 18 திசம்பர் 2018 (UTC)
மேம்பட்ட விக்கிதரவு பயிற்சி 2018 (Advanced Wikidata Training 2018 or AWT2018)
தொகுமேம்பட்ட விக்கிதரவு பயிற்சி 2018 (Advanced Wikidata Training 2018 or AWT2018) 14-15 திசம்பர் 2018 அன்று நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க கடைசி நாள் 4 திசம்பர் 2018. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:00, 28 நவம்பர் 2018 (UTC)
- விண்ணப்பித்துள்ளேன். --த♥உழவன் (உரை) 00:38, 1 திசம்பர் 2018 (UTC)
- @Balajijagadesh, Info-farmer, and Thamizhpparithi Maari: [Etherpad https://etherpad.wikimedia.org/p/advwikidataindia] கண்ட போது நீங்கள் மூவரும் பங்கேற்பதை அறிந்து கொண்டேன். வாழ்த்துகள். நீங்கள் கற்றுக் கொண்டதைத் தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்ற பகிர வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:36, 16 திசம்பர் 2018 (UTC)
- விக்சனரியில் உள்ள சிக்கல்களை தவிர்த்து இன்னும் சிறப்பாக பல மொழி அகராதி செய்ய முயன்று வருகின்றனர். அதற்கு லெக்சீம் என்று கூறிவருகின்றனர். அதன் விவரங்கள் இங்கு. தமிழில் பரிசோதனை முயற்சியாக 21 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கு காணலாம். இது போல மேலும் பல சொற்களை சேர்க்க சேர்க்க தானியக்க மொழி பெயர்ப்பு சீர் பெறும். இதனைப்பற்றி பேச்சுக்களை தமிழ் விக்சனரியில் தொடரலாம். அடுத்து தமிழில் மட்டுமே உள்ள கட்டுரைகளுக்கான விக்கிதரவு விவரங்கள் மிகவும் குறைவாக உள்ளன. பல விக்கிதரவு உருப்படிகளுக்கு மிகவும் அடிப்படையாட விவரங்கள் கூட இல்லை. அப்படி விவரங்கள் இல்லாவிட்டால் பின்னர் தாம் பல விதத்தில் விக்கிதரவுகளை பயன்படுத்தும் போது தேவையான விவரங்கள் கிடைக்காது. இது போன்ற விவரங்கள் இல்லாத விக்கிதரவுகளை எளிதாக கண்டுபிடிப்பதற்காக ஒடியாவைச் சேர்ந்த Mrutyunjaya நமக்காக ஒரு பட்டியலை உருவாக்கியுள்ளார். அது 24 மணி நேரத்திற்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளும். அப்பக்கத்தினை இங்கு காணலாம். இம்மாதிரி பக்கங்களை செழுமை செய்து வந்தால் சிறப்பாக அமையும். இவ்விரண்டும் முக்கியமான செய்திகள். மேலும் விக்கிதரவில் தமிழ் தொடர்பாக நிறைய வேலைகள் இருப்பதால் அதற்காக ஒரு குழுவை/திட்டபக்கத்தை ஆரம்பம் செய்து ஒருங்கிணைக்கலாம். அடுத்த ஆண்டு விக்கிதரவு சம்பந்தமாக செர்மனியில் அக்டோபர் மாதம் 2019 கூடல் நடக்கவுள்ளது. விவரங்கள் இங்கே. தமிழ் சம்பந்தமாக சிறப்பாக விக்கிதரவில் பங்களிப்பவர்களை கண்டுபடித்து அவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கொடுத்து அந்நிகழ்ச்சியில் பங்குகொள்ளுமாறு செய்யலாம். எப்பொழுதும் போல பணிகள் நிறைய உள்ளது. பயிற்சி சிறப்பாக அமைந்தது. மேலும் பல விவரங்களை பிறகு பகிர்கிறேன்.@Ravishankar, Info-farmer, and Thamizhpparithi Maari: நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:24, 18 திசம்பர் 2018 (UTC)
- @Balajijagadesh: இங்கு முதல் பத்து சொற்களின், பொருண்மைகளை(ஒன்றிற்க்கும் மேற்பட்ட பொருள்) படங்களுடனும், ஒலிக்கோப்புகளுடனும் மேம்படுத்தி உள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டவும். செய்தவற்றையும், செய்ய இருப்பவற்றையும் மேம்படுத்துகிறேன்.த♥உழவன் (உரை)
- விக்சனரியில் உள்ள சிக்கல்களை தவிர்த்து இன்னும் சிறப்பாக பல மொழி அகராதி செய்ய முயன்று வருகின்றனர். அதற்கு லெக்சீம் என்று கூறிவருகின்றனர். அதன் விவரங்கள் இங்கு. தமிழில் பரிசோதனை முயற்சியாக 21 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கு காணலாம். இது போல மேலும் பல சொற்களை சேர்க்க சேர்க்க தானியக்க மொழி பெயர்ப்பு சீர் பெறும். இதனைப்பற்றி பேச்சுக்களை தமிழ் விக்சனரியில் தொடரலாம். அடுத்து தமிழில் மட்டுமே உள்ள கட்டுரைகளுக்கான விக்கிதரவு விவரங்கள் மிகவும் குறைவாக உள்ளன. பல விக்கிதரவு உருப்படிகளுக்கு மிகவும் அடிப்படையாட விவரங்கள் கூட இல்லை. அப்படி விவரங்கள் இல்லாவிட்டால் பின்னர் தாம் பல விதத்தில் விக்கிதரவுகளை பயன்படுத்தும் போது தேவையான விவரங்கள் கிடைக்காது. இது போன்ற விவரங்கள் இல்லாத விக்கிதரவுகளை எளிதாக கண்டுபிடிப்பதற்காக ஒடியாவைச் சேர்ந்த Mrutyunjaya நமக்காக ஒரு பட்டியலை உருவாக்கியுள்ளார். அது 24 மணி நேரத்திற்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளும். அப்பக்கத்தினை இங்கு காணலாம். இம்மாதிரி பக்கங்களை செழுமை செய்து வந்தால் சிறப்பாக அமையும். இவ்விரண்டும் முக்கியமான செய்திகள். மேலும் விக்கிதரவில் தமிழ் தொடர்பாக நிறைய வேலைகள் இருப்பதால் அதற்காக ஒரு குழுவை/திட்டபக்கத்தை ஆரம்பம் செய்து ஒருங்கிணைக்கலாம். அடுத்த ஆண்டு விக்கிதரவு சம்பந்தமாக செர்மனியில் அக்டோபர் மாதம் 2019 கூடல் நடக்கவுள்ளது. விவரங்கள் இங்கே. தமிழ் சம்பந்தமாக சிறப்பாக விக்கிதரவில் பங்களிப்பவர்களை கண்டுபடித்து அவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கொடுத்து அந்நிகழ்ச்சியில் பங்குகொள்ளுமாறு செய்யலாம். எப்பொழுதும் போல பணிகள் நிறைய உள்ளது. பயிற்சி சிறப்பாக அமைந்தது. மேலும் பல விவரங்களை பிறகு பகிர்கிறேன்.@Ravishankar, Info-farmer, and Thamizhpparithi Maari: நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:24, 18 திசம்பர் 2018 (UTC)
- @Balajijagadesh, Info-farmer, and Thamizhpparithi Maari: [Etherpad https://etherpad.wikimedia.org/p/advwikidataindia] கண்ட போது நீங்கள் மூவரும் பங்கேற்பதை அறிந்து கொண்டேன். வாழ்த்துகள். நீங்கள் கற்றுக் கொண்டதைத் தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்ற பகிர வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:36, 16 திசம்பர் 2018 (UTC)
ஊடகப் போட்டி
தொகுவிக்கி பொதுவகம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் இணைந்து நடத்தும் ஊடகப்போட்டி தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. பல பரிசுகளுடைய இப்போட்டி திசம்பர் 10, 2018 வரை நடைபெறுகிறது. இப்போட்டியின் விவரங்களை https://www.pravega.org/events/wikimediaphotography/ இங்கு காணலாம். ஒருவர் ஐந்து புகைப்படங்கள் வரை பொதுவகத்தின் பதிவேற்றி அதன் விவரங்களை முன்னே குறிப்பிட்ட இணையத்தில் பதிவு செய்யவேண்டும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:49, 4 திசம்பர் 2018 (UTC)
புதிய விக்கிமீடியா கடவுச்சொல் கொள்கை மற்றும் தேவைகள் (New Wikimedia password policy and requirements)
தொகுவிக்கிமீடியா அறக்கட்டளை பாதுகாப்பு குழு ஒரு புதிய கடவுச்சொல் கொள்கை மற்றும் தேவைகள் செயல்படுத்துகிறது. நீங்கள் மீடியாவிக்கியில் திட்டத்தைப் பற்றி மேலும் அறியலாம்.
இந்த புதிய தேவைகள் புதிய கணக்குகள் மற்றும் சிறப்புரிமை பெற்ற கணக்குகளுக்கு பொருந்தும். புதிய கணக்குகளின் கடவுச்சொல் குறைந்தபட்சம் 8 எழுத்துகள் கொண்டதாக இருக்க வேண்டும். சிறப்புரிமை பெற்ற கணக்குள் அடுத்த முறை உள்நுழையும்ப்போது கடவுச்சொல் குறைந்தபட்சம் 10 எழுத்துகள் கொண்ட ஒன்றாக மாற்றும் படி கேட்கப்படும்.
இந்த மாற்றங்கள் டிசம்பர் 13 ஆம் தேதி நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உங்கள் வேலை அல்லது கருவிகள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் என நீங்கள் நினைத்தால், தயவுசெய்து எங்களுக்கு பேச்சுப் பக்கத்தில் தெரியப்படுத்தவும்.
நன்றி! -- Kaartic ஆல் மொழி பெயர்கப்பட்டது.
English version
தொகுThe Wikimedia Foundation security team is implementing a new password policy and requirements. You can learn more about the project on MediaWiki.org.
These new requirements will apply to new accounts and privileged accounts. New accounts will be required to create a password with a minimum length of 8 characters. Privileged accounts will be prompted to update their password to one that is at least 10 characters in length.
These changes are planned to be in effect on December 13th. If you think your work or tools will be affected by this change, please let us know on the talk page.
நன்றி!
வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை
தொகுஇன்று இனிதே வேங்கைத் திட்டம் பயிற்சி நிகழ்வு அம்ரித்சர் நகரில் தொடங்குகிறது. காலையில் ஓரிருவர் இணைகின்றனர். மற்றபடி, அனைவரும் நல்லபடியாக வந்து சேர்ந்துள்ளனர். கட்டுரைப் போட்டியில் சிறப்பாகப் பங்களித்து இந்த வாய்ப்பினை நல்கிய அனைவருக்கும் எங்கள் நன்றி. பயிற்சி சிறக்க உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்க்கிறோம். நிகழ்வு முடிந்த பிறகு கூடுதல் விவரங்களைப் பகிர்கிறோம். --இரவி (பேச்சு) 20:32, 6 திசம்பர் 2018 (UTC)
- நிகழ்வு இனிதே முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பியிருக்கிறோம். பங்கு பெற்றோர் தங்கள் அனுபவங்களையும் கற்றுக் கொண்டவற்றையும் இங்கு பகிர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:39, 11 திசம்பர் 2018 (UTC)
நிர்வாகிகளின் சுய தடையழி (unblock) திறனிற்கு மாற்றம்
தொகுஇனி மேல் தங்களைத் தவிர வேறொருவர் தங்களது கணக்கை முடக்கினால், நிர்வாகிகள் தங்களைத் தடையழி (unblock) செய்ய முடியாது. இதற்கு காரணம், யாராவது ஒரு நிர்வாகியின் கணக்கை கையகப்படுத்தினால், அந்த கணக்கை மற்ற நிர்வாகிகள் முடக்க முடியாமல் போகலாம். இது உங்கள் சமூகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால், அதை பாபரிகேட்டறில் (Phabricator) புகாரளிக்கலாம். மெட்டாவவிலும் நீங்கள் கேள்விகளை கேட்கலாம். இரண்டு நிர்வாகிகள் ஒரு சிறிய விக்கி மீது ஒருவருக்கொருவர் சண்டை போடுவார்களா என்பது பற்றி பாபரிகேட்டறில் ஒரு விவாதம் நடை பெறுகிறது. -- Kaartic (பேச்சு) 07:33, 10 திசம்பர் 2018 (UTC)
விக்கிமீடியா நிரல் தொகுத்தொடர் 2019 (Wikimedia_Hackathon_2019)
தொகுவிக்கிமீடியா நிரல் தொகுத்தொடர் 2019 அடுத்த வருடம் மே மாதம் 17-19, பிராகாவில் நடக்கவுள்ளது. தொழில்நுட்ப ஆர்வம் உள்ளவர்கள் பங்கு கொள்ளுங்கள். பயன உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி 4 சனவரி 2019. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:58, 14 திசம்பர் 2018 (UTC)
- எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 17:16, 14 திசம்பர் 2018 (UTC)
- @Fahimrazick: இங்கு உள்ள படிவத்தின் இணைப்பில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சந்தேகங்கள் இருந்தால் வினவுங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:21, 15 திசம்பர் 2018 (UTC)
- @Balajijagadesh:, இது போன்ற நிகழ்வுகளைக் கவனித்து விக்கிப்பீடியர் சமூகத்துக்கு அறிவிப்பதற்கு நன்றி. :@Neechalkaran, Tshrinivasan, and Mdmahir: உங்கள் கவனத்துக்கு! --இரவி (பேச்சு) 19:31, 16 திசம்பர் 2018 (UTC)
சமூக ஊடக விளம்பரம்
தொகுகடந்த வாரம் நிகழ்ந்த வேங்கைத் திட்டப்பயிற்சியில், விக்கிப் பரப்புரையின் பொருட்டு ஒரு பரிச்சார்த்த முயற்சியாகச் சமூக ஊடகப் பரப்புரை முயற்சியை விக்கிமீடியா செயல்படுத்தவுள்ளதை அறிந்தோம். முன்னோடி சமூகமான தமிழில் இந்த முயற்சியை மேற்கொள்ள முடிவும் செய்யப்பட்டது. இதன் மூலம் நிதி நல்கை பெற்று, சமூக ஊடகத்தில் தமிழ் விக்கிப்பீடியாவை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். இதன் சாதக பாதகங்களைக் கொண்டு இம்முயற்சியைப் பிற சமூகங்களுக்கு எடுத்துச் செல்ல விக்கிமீடியா விரும்புகிறது. மிகக் குறுகிய காலத்தில்(டிசம்பர் இறுதிக்குள்) அதற்கான திட்டத்தை வடித்துக் கொடுக்க வேண்டியுள்ளது, ஆகையால் புதுப் பயனர் போட்டியை மையக்கருவாகக் கொண்டு இந்தப் பரப்புரையைச் செய்யலாம் என நினைக்கிறோம். மூன்று மாதப் போட்டியில் முதல் மாதம் சமூக ஊடகப் பரப்புரை மட்டுமே நிகழ்த்தவேண்டும். அடுத்த அடுத்த மாதங்களில் இதர பரப்புரைகள் நிகழ்த்தலாம். இதனால் குறிப்பிட்ட முதல் மாதத்தில் கிடைத்த விளைவைக் கணக்கிட முடியும். இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் பங்களிப்பையும் திட்டத்தின் பேச்சுப்பக்கத்தில் வழங்கிடக் கோருகிறேன். புதுப் பயனர்களுக்கு உதவக்கூடிய தேவைப்படும் கட்டுரைகள், உதவிக் காணொளிகள், பங்களிப்பு வழிமுறைகள், இதர ஆக்கங்களைச் சேகரிக்கவும்/உருவாக்கவும் முனையவேண்டும் -நீச்சல்காரன் (பேச்சு) 21:04, 14 திசம்பர் 2018 (UTC)
நினைவுப் பக்கம்
தொகுமறைந்த விக்கிப்பீடியர்களின் நினைவாக விக்கிப்பீடியா:மறைந்த விக்கிப்பீடியர்கள் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். யாரேனும் விடுபட்டிருந்தால் இணைத்துதவுங்கள் -நீச்சல்காரன் (பேச்சு) 07:03, 20 திசம்பர் 2018 (UTC)
- இப்பக்கத்தினை இன்றுதான் கண்டேன் நீச்சல்காரரே. செம்மல் ஐயாவின் மறைவு செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்களின் பயனர் கணக்குகளில் இச்செய்தியை இடம் பெற செய்து பக்கத்தினை காப்பு செய்துவிடலாமா? போட்டிக்காக தானியங்கி அழைப்புகளை பயனர் பக்கங்களில் இடும் போது உதவியாக இருக்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:37, 21 சனவரி 2019 (UTC)
அம்ரித்சர் வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையின் போது நடந்த உரையாடல்கள்
தொகுவணக்கம். அம்ரித்சரில் நடந்த வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையின் போது தமிழ் விக்கிப்பீடியர்கள் கூடிப் பேசியதில் நிறைய புரிந்துணர்வு ஏற்பட்டது. சில முக்கியக் குறிப்புகள்:
- தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தொடர் பங்களிப்பாளர் போட்டி, புதுப்பயனர் போட்டி ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே நல்கைத் தொகை பெற்றுள்ளோம். தொடர் பங்களிப்பாளர் போட்டி வெற்றிகரமாக முடிந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், புதுப்பயனர் போட்டியை நடத்த சிவகோசரன் விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று சனவரி 1, 2019 - மார்ச்சு 31, 2019 வரை நடத்தலாம் என்று எண்ணினோம். இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை இங்கு காணலாம். நடுவர்களாகவும் ஒருங்கிணைப்பாளர்களாகவும் அனைவரும் இணைந்து பங்களிக்க வரவேற்கிறோம்.
- விக்கிமீடியா அறக்கட்டளையில் இருந்து சமூக விளம்பரத் திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து பங்காற்ற வேண்டியிருந்தார்கள். அக்டோபர் மாதமே இது தொடர்பாக ஆலமரத்தடியில் குறிப்பிட்டிருப்பதை இங்கு காணலாம். திசம்பர் முடிவதற்குள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கெடு இருந்ததால், புதுப்பயனர் போட்டியை முகநூலில் விளம்பரப்படுத்த இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணினோம்.
- புதுப்பயனர் போட்டி நடைபெறும் வேளையில் புதுப்பயனர்களை அரவணைத்துத் தக்க வைக்கும் வகையில் நமது நீக்கல் கொள்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
- பயனர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் விக்கிப்பீடியா கொள்கைகள், நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் அடிக்கடி இது போன்ற கூடல்களுக்கு வாய்ப்பினை நல்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
- தமிழ் விக்கிப்பீடியா 16ஆம் ஆண்டு கொண்டாட்டங்களை செப்டம்பர் 2019ல் இலங்கையில் நடத்த வேண்டும் என்ற கருத்து ஒருமனதாக மீண்டும் முன்மொழியப்பட்டது. இதற்கான நல்கை விண்ணப்பத்தை பிப்ரவரி 15 (?), 2019 க்கு முன்பு மீண்டும் முன்வைக்க வேண்டும். இது தொடர்பான ஒருங்கிணைப்பினை மீண்டும் முன்னெடுக்க வேண்டும். குறைந்தது 30 தமிழ் விக்கிப்பீடியர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்வது இலங்கையில் வரலாறு, பண்பாடு, நடப்பு நிலைமைகள் குறித்த புரிதலைக் கூட்டி இரு நாட்டுப் பங்களிப்பாளர் ஒன்றுபட்ட உழைப்புக்கு உதவும் என்ற கருத்தை முன்வைத்தேன். இதற்கான பயணச் செலவுகளை ஆதரித்து உதவ வாய்ப்புண்டா என்று CIS நிறுவன இயக்குநரிடமும் உரையாடினோம். தமிழ் விக்கிப்பீடியர்கள் இது தொடர்பாக ஆலமரத்தடியில் தீர்மானம் நிறைவேற்றி வேண்டுகோள் விடுத்தால் கவனிப்பதாகச் சொன்னார்.
வேறு ஏதேனும் முக்கியக் கருத்துகள் விடுபட்டிருந்தால் சேர்க்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:07, 21 திசம்பர் 2018 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியா 16ஆம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கான நல்கை விண்ணப்பம் 2019, பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கான கருத்துக்கணிப்பு இன்னும் இரு வாரங்களுக்குள் இறுதி செய்து இங்கு இடுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:38, 21 திசம்பர் 2018 (UTC)
புதுப்பயனர் போட்டி தொடங்க இருக்கிறது
தொகுவரும் சனவரி 1 முதல் புதுப்பயனர் போட்டி தொடங்க இருக்கிறது. போட்டி ஒருங்கிணைப்பு, நடுவர் பணியில் இணைந்து பணியாற்ற உதவி தேவை. ஆர்வமுள்ளவர்கள் முன்வர வேண்டுகிறேன்.
உங்கள் நண்பர்கள், சமூக ஊடகத் தொடர்பில் உள்ளவர்களுக்கு இப்போட்டி குறித்து அறிவிக்க விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி என்ற இணைப்பைப் பயன்படுத்துங்கள். முகநூல் விளம்பர முயற்சிக்கு என்று இதே போன்ற இன்னொரு பக்கம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்த வேண்டாம். நன்றி. --இரவி (பேச்சு) 15:00, 22 திசம்பர் 2018 (UTC)
விக்கி நிர்வாகிகள் பள்ளி - கொள்கை வாக்கெடுப்பு
தொகுபுதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு குறித்த கொள்கை முன்மொழிவு மீதான வாக்கெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. அனைவரும் சனவரி ஒன்றாம் தேதிக்கு முன் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:45, 25 திசம்பர் 2018 (UTC)
Invitation from Wiki Loves Love 2019
தொகுPlease help translate to your language
Love is an important subject for humanity and it is expressed in different cultures and regions in different ways across the world through different gestures, ceremonies, festivals and to document expression of this rich and beautiful emotion, we need your help so we can share and spread the depth of cultures that each region has, the best of how people of that region, celebrate love.
Wiki Loves Love (WLL) is an international photography competition of Wikimedia Commons with the subject love testimonials happening in the month of February.
The primary goal of the competition is to document love testimonials through human cultural diversity such as monuments, ceremonies, snapshot of tender gesture, and miscellaneous objects used as symbol of love; to illustrate articles in the worldwide free encyclopedia Wikipedia, and other Wikimedia Foundation (WMF) projects.
The theme of 2019 iteration is Celebrations, Festivals, Ceremonies and rituals of love.
Sign up your affiliate or individually at Participants page.
To know more about the contest, check out our Commons Page and FAQs
There are several prizes to grab. Hope to see you spreading love this February with Wiki Loves Love!
Kind regards,
Imagine... the sum of all love!
--MediaWiki message delivery (பேச்சு) 10:13, 27 திசம்பர் 2018 (UTC)