விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு26

மூலிகைகள் பற்றிய கட்டுரைகள்

தொகு

மூலிகைகள் பற்றிய கட்டுரைகளில் வரும் கருத்துகளுக்கு தக்க சான்ன்றுகோள்கள் தருதல் வேண்டும். அவற்றில் இருமல் நீங்கும், கபம் குறையும் என்றெல்லாம் எழுதும்பொழுது தக்க சான்றுகோள்கள் தருதல் வேண்டும். அவை துய்ப்பறிவில் உண்மையானதாக நம்மில் பலர் உணர்ந்தாலும், தக்க சான்றுகள் தருதல் கட்டாயம் வேண்டும். இல்லாவிடில் தக்க சொற்றொடர்களால் (அறிவியலாளர் ஏற்பு அல்லது கற்றோர் ஏற்பு பெறாத நூல்களின் மேற்கோள்கள் தந்தேனும்) எழுதுதல் வேண்டும். --செல்வா 19:48, 13 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

ஆகத்து மாதம் 2009 விக்கித் தர அளவீடுகள்

தொகு

முதன் முறையாக தமிழ் விக்கிப்பீடியாவின் பை'ட் பரும அளவு 100 மெகா பை'ட்டை அடைந்தது. இந்திய மொழி விக்கிகளில் இன்னமும் தமிழ் விக்கி முன்னணியில் உள்ளது. சராசரி கட்டுரையின் அளவு 1840 பை'ட்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது (இந்தி (சூலை) 1229, தெலுகு (ஆகத்து) 714, வங்காளி (சூலை)1214, மலையாளம் (சூலை) 2549, மராத்தி (சூலை) 696), பை'ட் அளவும் தமிழின் 100 மெகா பை'ட் இந்தியைத் தவிர மற்ற மொழிகளைக்காட்டிலும் கூடுதலானது (இந்தி (சூலை) 118, தெலுகு 82, வங்காளி (சூலை) 72, மலையாளம் (சூலை) 77, மராத்தி (சூலை) 54). --செல்வா 21:14, 14 செப்டெம்பர் 2009 (UTC) முதன் முறையாக 4 மில்லியன் சொற்களைத் தாண்டியுள்ளது தமிழ் விக்கிப்பீடியா. --செல்வா 21:16, 14 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

பங்களிப்பாளர்களுக்கு பாராட்டுகள் ! பெருமிதத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ! --மணியன் 06:10, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியா பல அம்சங்களில் தொடர்ந்தும் உறுதியாக முன்னேறி வருவதைத்தான் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. வேகம் சற்றுக் குறைவாக இருந்தாலும் கூட, கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொய்வின்றி வளர்ந்து வரும் விக்கிப்பீடியாக்களுள் தமிழும் ஒன்று. இது குறித்து நாம் அனைவரும் நிச்சயமாகப் பெருமிதம் அடையலாம். அண்மைக் காலங்களில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பரவலாக அறிமுகப் படுத்துவதற்குச் சில பயனர்கள் எடுத்துவரும் முயற்சி நல்ல பயன் தந்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. சில அம்சங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலான முன்னேற்றம் தேவைப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. முக்கியமாக கட்டுரைகளின் நீளம். எடுத்துக்காட்டாக 2.0 கிபை இலும் கூடிய அளவுள்ள கட்டுரைகள் 23% தான். இதன்படி கணக்கிட்டால், நாம் 20,000 கட்டுரைகளை எட்டும்போது 15,400 கட்டுரைகள் 2.0 கிபை இலும் குறைந்தவையாக இருக்கும். 20,000 கஃட்டுரைகளில் 4,600 கட்டுரைகள் மட்டுமே 2.0 கிபை இலும் கூடியவையாக இருக்கும். இது போதுமானது அல்ல. 2.0 கிபை என்பது பெரிய அளவு அல்ல.
இதற்கு மேல் இப்போது நான் எழுதியிருப்பது 2.35 கிபை இலும் கூடியது. இதிலிருந்து 2.0 கிபை கட்டுரை என்பது பெரிய கட்டுரை அல்ல என்று கண்டு கொள்ளலாம். எனவே இதிலும் சிறயனவாகவுள்ள 77% கட்டுரைகளில் ஒரு பகுதியையாவது 2.0 கிபைக்கு மேல் கொண்டுவர முயற்சிக்கவேண்டும். நாம் 25,000 கட்டுரைகளை எட்டுவதற்கு முன் குறைந்தது 50% கட்டுரைகளை இந்த அளவுக்குமேல் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். மயூரநாதன் 17:04, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
நல்ல செய்தி. மேலும் விக்கிசிட்டிக்சில் தளத்துக்கு வருபவர்களைப் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. காட்டாக, பெரும்பாலான தேடல்கள் ஆங்கிலத்திலுள்ளதைப் பார்க்கலாம். இது போன்ற தகவல்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்களுக்கு எளிதாகத் தமிழில் தேடும் வசதியை எப்படித் தருவது என்பது போல. -- சுந்தர் \பேச்சு 11:20, 16 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

கோப்புகளை தரவேற்றல்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் பொதுபரப்பில் இல்லாத உரை/படிமங்களை தரவேற்றுதல் குறித்த உதவிப்பக்கம் மற்றும் கொள்கை விளக்கப் பக்கம் இல்லை. விக்கி காமன்சில் இத்தகைய கோப்புகளை குறித்த உரிம விடுப்புகளை எவ்வாறு படைப்பாளரிடம் வேண்ட வேண்டும், எத்தகைய அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என விளக்கப் பக்கங்கள் உள்ளன. அவ்வாறு சான்றிதழ் பெற்றபிறகு கோப்பினை பதிவேற்றுகையில் {{OTRS pending}} என்ற வார்ப்புருவினை இட்டு பின் permissions-commons@wikimedia.org விற்கு அனுப்ப வேண்டும் எனவும் இதன் பேரில் OTRS தன்னார்வலர்கள் இதனை சரிபார்த்து தகுந்த காப்புரிமை வார்ப்புரிமையை இடுவார்கள் எனவும் புரிந்து கொண்டேன். ஆனால் தமிழ் விக்கியில் இவ்வாறு தரவேற்றிய படிமங்களுக்கு, OTRS சிஸ்டம் காமன்சில் மட்டுமே இருப்பதால் நாம் OTRS pending என்ற வார்ப்புருவை இட்டால் அந்த பகுப்புகளை த.வி அட்மின்கள் OTRS மட்டுறுத்துனர்களுக்கு அனுப்புவார்கள் என எண்ணியிருந்தேன். அதன்படி பயனர் கலையரசிக்கும் பரிந்துரைத்தேன். இந்த செயல்முறை நடைமுறையில் உள்ளதா, எனது புரிதல்களில் தவறு ஏதேனும் உள்ளதா என அறிய விரும்புகிறேன்.

சரியான செயல்முறை குறித்த ஓர் உதவிப்பக்கம் உருவாக்குவதும் மிகத் தேவையாகும். --மணியன் 06:10, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

OTRS அணுக்கம் நம்மில் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. அணுக்கத்தைப் பெற முடிந்தாலும் படைப்பாளர்களிடமிருந்து வரும் அஞ்சல்களைப் படித்து முடிவெடுக்கும் அளவுக்கு நேரம் வாய்க்க வேண்டும். சில நாட்கள் இத்தகைய படங்களைப் பொதுக்கோப்பகத்தில் மட்டும் ஏற்றினால் நல்லது. அதே வேளை, தமிழ் பங்களிப்பாளர்கள் தமிழில் அனுப்பும் மடல்களைப் படித்து முடிவெடுக்க நம்மால் மட்டுமே முடியும். அத்தகைய கோப்புகள் இருந்தால் நம்மில் சிலர் OTRS அணுக்கம் பெற்றால்தான் முடியும். (கணேசுக்கு அணுக்கம் உள்ளது என நினைக்கிறேன்.) -- சுந்தர் \பேச்சு 16:47, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

மீண்டும் களை கட்டும் தமிழ் விக்கிப்பீடியா

தொகு

சற்றுக் காலம் அமைதியாக இருந்த விக்கிப்பீடியா மீண்டும் களை கட்டியிருப்பாதாக தெரிகிறது. சுந்தரின் நிகழ்த்தலுக்கு அடுத்தாக, மயூரனின் ஆய்வுச் சுருக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவரும் சென்று வழங்குவாரா என்பதும் இன்னும் உறுதிப் படுத்தப்பட வில்லை. --Natkeeran 23:13, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா தேர்ந்தெடுத்த கட்டுரைகள் இறுவட்டு (CD / DVD)

தொகு
தேவைப்படும் தொகை: ரூ.40,000. 


நோக்கம்:


தமிழ் விக்கியில் இருந்து தேர்ந்தெடுத்த 500 கட்டுரைகளாவது இறுவட்டில் வெளியிடல்.


ரூ.20,000 இக்கட்டுரைகளை வெளியிடத் தோதாக சீர் செய்யும் பணிக்கு.


ரூ.20,000 - இறுவட்டுகள் உருவாக்கச் செலவுக்கு.


கட்டுரைகள் சீர் செய்ய, தேர்ந்தெடுக்க, வளர்த்தெடுக்க 6 மாதமாவது வேண்டும். அச்சிடல் , வெளியிடலுக்கு ஆள், நேரம் தேவை. சித்திரை 2010 இலக்கு.

இந்தப் பணிக்கு 30 000 வரை பண உதவி செய்ய ஒரு நபர் முன் வந்து உள்ளார். ஆவன செய்ய வேண்டும். --Natkeeran 23:14, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

மிக நல்ல செய்தி, நற்கீரன். வேளை கூடி வருவது போலத் தெரிகிறது. (விக்கிமீடியா இந்தியப்பிரிவு அமைப்பதில் இன்னும் நாள் பிடிக்கும்போலத் தெரிகிறது. இப்போதைக்கு நேரடியாகக் களத்தில் இறங்குவோம்.) en:WP:1 என்ற திட்டப்பக்கத்தைப் பார்த்து சில முறைமைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதன் நெறியாளரின் தொடர்பும் உள்ளது. போலந்து, செருமனி, இங்கிலாந்து போன்ற இடங்களில் இவ்வாறு வெளியிட்டுள்ளனர் என்பதும் அவர்களது முயற்சி தொடர்பில் சில தகவல்களையும் கட்டுரையாக எழுதியுள்ளார். அதையும் பார்ப்போம். ஒரு திட்டப் பக்கத்தைத் துவக்குங்கள். செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலை இட்டு பொறுப்பாளர்களை முடிவு செய்வோம். -- சுந்தர் \பேச்சு 11:13, 16 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
உதவிப் பணம் தருவதற்கும், கட்டுரைகள் தேர்வுக்கும், ஒழுங்கமைப்புக்கும் உதவ அணியமாக இருக்கின்றேன். தரம் நிறுவும் வகையாகவும், பயன் நிறைந்ததாயும், கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாகவும் கட்டுரைத் தொகுப்பு இருக்க வேண்டும். --செல்வா 13:26, 16 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
நல்ல விடயம், தொடங்குங்கள். கட்டுரைகளைச் சீர்படுத்துவதற்கு நேரம் தேவைதான். சிறப்பாக வெளியிடவேண்டும். விரைவில் கட்டுரைகளைத் தெரிவு செய்தால் நல்லது. மேலே தரப்பட்டிருக்கும் மதிப்பீடு இந்திய ரூபாயா? மயூரநாதன் 14:17, 16 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

ஆம், இந்திய ரூபாய் தான். அனைவருக்கும் உடன்பாடென்றால் தொடரும் தமிழ் விக்கிப்பீடியா திட்டமிடல்களில் இந்திய நாணயத்தை அடிப்படையாக கொண்டு செயல்படலாம். --ரவி 18:34, 18 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

ரொறன்ரோவில் தமிழ்க் கணிமை பட்டறையில் தமிழ் விக்கிப்பீடியா

தொகு

அடுத்த மாதம் 4 திகதி அளவு ரொறன்ரோவில் நடைபெற இருக்கும் தமிழ்க் கணிமை பட்டறையில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு 45 நிமிடம் தந்துள்ளார்கள். அறிமுகம், செயல் விளக்கம், கேள்வி பதில் என்று பிரிக்க எண்ணி உள்ளேன். செல்வா, நிரோஜன், மதி போன்றோன் வரமுடிந்தால் சேர்தே செய்யலாம். இந்தப் பட்டறையை தமிழ்க் கணிமை வல்லுனர் அனுராச் ஒருங்கிணைக்கிறார். --Natkeeran 23:17, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

அக்டோபர் 4 (ஞாயிறு) என்றால் நான் கலந்து கொள்ள இயலும். --செல்வா 13:28, 16 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியா அடுத்தடுத்துப் பல மட்டங்களிலும் உலக அளவில் அறிமுகப்படுத்தப்படுவது நல்ல செய்தி. விரைவிலேயே இணையவழி அறிவுப் பரவலில் தமிழ் விக்கிப்பீடியா சிறப்பான முன்னணி இடம் பெறும் என்பதில் ஐயமில்லை மயூரநாதன் 14:24, 16 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

உத்தம மாநாட்டு மயூரனின் கட்டுரைச் சுருக்கம் ஏற்பு

தொகு

உத்தம மாநாட்டில் மயூரம் தமிழ் விக்கிப்பீடியா பற்றி வழங்க இருக்கும் கட்டுரையின் சுருக்கம் ஏற்பு பெற்று உள்ளது. அவர் அங்கு செல்வதற்கான வழிமுறைதான் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவருக்கு கட்டுரையை உருவாக்க நாம் எல்லோரும் உதவ வேண்டும். --Natkeeran 23:19, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

ஆம், கட்டாயம் துணை நிற்போம். வழிமுறையில் சிக்கல் என்றால் பொருளளவிலா அல்லது அனுமதி தொடர்பிலா என அறிந்து தீர்க்க முயல வேண்டும். நானும் ஈசுவரும் (பயனர்:Mojosaurus) அம்மாநாட்டுக்குக் கட்டுரை படிக்கச் செல்லவுள்ளோம். மயூரனை அங்கு கண்டு பேச முடிந்தால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 11:16, 16 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா திட்டமிடல் உள்ளீடு

தொகு

http://strategy.wikimedia.org/wiki/Reach/Regional_Analysis - நாம் கட்டாயம் கவனித்து, நம் கருத்துக்களை முன்வைக்கவும் வேண்டும். -- சுந்தர் \பேச்சு 17:55, 18 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

http://strategy.wikimedia.org/wiki/Talk:Reach/Regional_Analysis - இங்குள்ள உரையாடல்களையும் கவனித்து வளர்முகமான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 18:16, 18 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

விசமத் தொகுப்பு

தொகு

117.241.123.14 ஐபி முகவரியில் இருந்து ஒரு பயனர் பல கட்டுரைகளில் ஒரே விடயத்தை எங்கிருந்தோ வெட்டி ஒட்டியதையும் அதை பயனர் கனகு முன்னிலைப் படுத்தியதையும் கவனித்தேன். கிருஷ்ணர் கட்டுரையில் அவர் முன்னிலைப் படுத்திய பின்னரும் மீண்டும் அப்பயனர் புதிதாக கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமில்லாத விடயங்களைச் சேர்த்துள்ளார். அவற்றை நான் நீக்கியுள்ளேன். இது விசமத் தொகுப்பு என்றே தோன்றுகிறது. இந்தப் பயனர் மீண்டும் அவ்வாறு செய்தால் குறித்த ஐபி முகவரியைத் தடை செய்யவேண்டும் என்பது எனது கருத்து. மயூரநாதன் 08:54, 21 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

கிருஷ்ணர் கட்டுரை இப்போது புகுபதிகை செய்த பயனர்கள் மட்டும் தொகுக்கக்கூடியதாக காக்கப்பட்டுள்ளது. இவர் புகுபதிகை செய்து மீண்டும் பொருத்தமில்லாதவற்றை சேர்த்தால் ஐபி ஐத் தடை செய்யலாம்.--Kanags \பேச்சு 09:29, 21 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
இவர் விக்கிப்பீடியாவில் எப்படி எழுத வேண்டும் என்பதை அறியாமல் செய்கிறார் என நினைக்கிறேன். அவர் எழுதியுள்ளவை பக்க சார்பு உள்ளதாகவும், போதிய சான்றுகோள்கள் இல்லாததாகவும் உள்ளன. ஒரு (அல்லது ஒருசில) குறிப்பிட்ட மரபு சார்ந்த கூற்றுகளை பொதுப்பட கூறாமல் உள்மத "சம்பிரதாயமாக"க் கூறுவதாகக் கூறியுள்ளார். அவரை அவர் எழுத்துகளைத் தேர்வு செய்து, ஒரு கலைக்களஞ்சியத்தில், அதுவும் விக்கியில் இடும் தகுதியுடையதாக மாற்றி எழுதப் பரிந்துரைக்கலாம். அவர் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி உள்ளீடுகள் செய்தால், வளர்முகமாக உரையாட இயலும்.--செல்வா 13:49, 21 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

இப் பயனர் கிருஷ்ணர் கட்டுரையில் மட்டும் இதைச் செய்திருந்தால் எவ்வாறு எழுதுவது என்று தெரியாமல் எழுதுகிறார் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் அவர் அக் கட்டுரையில் எழுதிய அதே விடயத்தை, சைவ சமயம், சிவபுராணம், கந்தபுராணம் போன்ற தொடர்பில்லாத கட்டுரைகளுக்குள்ளும் வெட்டி ஒட்டியிருக்கிறார். இவற்றைப்பார்க்கும்போது இவருடைய நடவடிக்கைகள் வேண்டு மென்று செய்யப்பட்டவையாகவே தோன்றுகின்றன. மயூரநாதன் 17:12, 21 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

ஆம் நீங்கள் சொல்வது சரிதான். பல கட்டுரைகளில் அவர் அப்படி செய்திருப்பது வேறுநோக்கத்துடன் செய்திருப்பது போலத்தான் தெரிகின்றது. அவர் மேலும் வலிந்து ஏதும் செய்தால் சிறிது காலம் தடை செய்யலாம். --செல்வா 01:30, 22 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
மேற்படி பயனர் இன்றும் தனது நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளார். இவர் உள்நோக்கத்துடனேயே இதனைச் செய்கிறார் என்பதில் ஐயமில்லை. இவருடைய ஐபி யைத் தடை செய்யாவிட்டால் இவர் சேர்ப்பவைகளை அகற்றுவதற்குப் பிற பயனர்கள் தமது பெறுமதி வாய்ந்த நேரத்தை தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டியிருக்கும். மயூரநாதன் 15:42, 22 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
மேற்படி பயனர் இன்றும் பல கட்டுரைகளில் வெறும் பிரச்சாரப் போக்கிலான உள்ளடக்கங்களை இணைத்ததனால் அவரது இரண்டு ஐபி முகவரிகளை 3 மாதங்களுக்கு தடுத்து வைக்க வேண்டியதாகப் போய்விட்டது.--Kanags \பேச்சு 13:41, 23 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
மேற்படி பயனர் பல ஐபி முகவரிகளில் இருந்து மீண்டும் மீண்டும் வந்து தொல்லை தருகிறார்.--12:29, 24 செப்டெம்பர் 2009 (UTC)

மேற்படி பயனர் தொடர்ந்து, வலிந்து பொறுப்பில்லாமல்நடந்து கொள்வதால் மற்ற இணைய முகவரி எண்களையும் 3 மாத காலத்துக்குத் தடை செய்துள்ளேன். --செல்வா 13:03, 25 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

Small request

தொகு

Hello! I am a Polish wikipedian and I would like to ask you for writing a new article about former Polish President who won the Nobel Peace Prize in 1983 – Lech Wałęsa. I have looked for his article in your Wikipedia but without success. Polish Wikipedians will be grateful for your help. Thank you so much in advance! PS article in English you can find here. Best wishes from Poland, Patrol110 20:57, 21 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

இப்பக்கம் லேக் வாலேசா துவங்கப்பட்டுள்ளது --மணியன் 05:11, 23 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

வேக உதவி தேவை

தொகு

விக்கிப்பீடியா:2009 தமிழ் இணைய மாநாட்டுக்கான கட்டுரை

கட்டுரை இறுதித் திகதிக்கு 30 மணித்தியாலங்கள் உள்ளதாகல், இந்தப் பகுதியை விருவுபடுத்தித் தரவும். நன்றி. --Natkeeran 01:37, 22 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

அடிக்குறிப்புகள் இடுவது எப்படி?

தொகு

ஒரு கட்டுரையில் அடிக்குறிப்புகள் என்பதில் உள்ள ஏராளமான மேற்கோள்களை எப்படி இணைப்பது அல்லது தொகுப்பது?காட்டாக காச நோய் கட்டுரையில் இருப்பது போன்று. உள்ளே சென்று பார்த்தால் refer list என்பது மட்டுமே உள்ளது. இதற்கான நிரல் பற்றி கூறுங்கள் நண்பர்களே.--Ragunathan 12:37, 22 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

பேச்சு:காச நோய் பக்கத்தில் இது பற்றி எழுதியுள்ளேன்.--Kanags \பேச்சு 12:56, 22 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
இச்சுட்டி பயனளிக்கும் என்று நினைக்கிறேன். இதனையும் காண்க. உங்கள் உசாத்துணைகள் (references) கட்டுரையின் கூற்றுக்கு சான்றாக அந்த வரியின் முடிவில் இடப்பட வேண்டும். அதன் format முதல் சுட்டியில் உள்ளது. அவ்வாறு refer செய்யப்பட்ட இணைப்புகள்/புத்தகங்கள் பட்டியல் விக்கியில் ஏற்கெனவே வடிவமைத்துள்ள வார்ப்புரு மூலம் மேற்கோள்கள் பத்தியில் காட்டப்படுகின்றன. <references/> என்று இட்டால் ஒன்றன்பின் ஒன்றாக காட்டப்படும். பெரிய பட்டியல் இருந்தால் பக்கத்தின் நீளம் கருதி இரண்டு அல்லது மூன்று நெடுவரிசை (column) களில் காட்ட {{Reflist|2}} அல்லது {{Reflist|3}} என இடலாம்.இதன் நிரலியில் தான் உங்கள் விருப்பம் என்றால் வார்ப்புரு:Reflist சென்று தொகு பொத்தானை அழுத்தி பார்க்கலாம். --மணியன் 05:48, 23 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம்

தொகு

சிறப்பாக பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களை (அவர்கள் விரும்பினால்) ஒவ்வொருவராக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தி ஒரு சிறு அறிமுகம் தரலாமா? புதிதாக பங்களிக்க வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். சமூக இணையத்தளங்கள் பலவற்றிலும் featured users என்பது போல் பயனர்களை முன்னிறுத்துவதைக் காண முடிகிறது. இது போன்று மற்ற விக்கிப்பீடியாக்களில் உண்டா?("என்னை ஏன் காட்சிப்படுத்தவில்லை" என்ற குழப்பங்கள் வரலாம் :) காட்சிப்படுத்தலுக்கு தெளிவான சில வரையறைகளை உருவாக்கலாம். ) --ரவி 13:05, 22 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

செய்யலாம் என்றுதான் நானும் எண்ணுகிறேன். பயனர்களுக்கு இது ஊக்கத்தைக் கொடுக்கக்கூடும். பயனர்கள் செய்த தொகுப்புக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 25 அல்லது 30 பேரைத் தெரிவு செய்து வரிசை ஒழுங்கில் இல்லாமல் குறிப்பில்வழியாகத் தெரிவு செய்து போடலாம். ஒவ்வொரு மாதமும் குறித்த குறைந்த அளவு தொகுப்பு எண்ணிக்கையைத் தாண்டுபவர்களைத் தெரிவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆறுமாத காலமாவது தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்திருந்தால் நல்லது. மற்றவர்கள் கருத்தையும் கேட்கலாம். மயூரநாதன் 15:38, 23 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]
என் கருத்தும் மயூரநாதனுடையதே. --செல்வா 15:05, 24 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா, மயூரநாதன். விக்கிப்பீடியா பேச்சு:சிறந்த பங்களிப்பாளர்கள் பார்த்து தேவையான மாற்றங்களைப் பரிந்துரையுங்கள். நன்றி.--ரவி 13:08, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியா நூல்

தொகு

தமிழ் விக்கிபீடியா எனும் பெயரில் இணைய வழியிலான தமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்று தொகுக்கப்பட்டு வருகிறது என்பது பலருக்கும் தெரியாத நிலையே உள்ளது. இந்நிலையில் தமிழ் விக்கிபீடியா குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய "தமிழ் விக்கிபீடியா" எனும் பெயரில் நூல் ஒன்றை எழுதி வெளியிடலாமென்று இருக்கிறேன். அதற்கான முயற்சியில் பல தகவல்களைத் தொகுத்து வருகின்றேன். இந்த நூலில் அவசியம் இடம் பெற வேண்டுமெனக் கருதும் பல தகவல்களை விக்கிபீடியாவின் பயனர் மற்றும் பயனர் நிர்வாகிகளிடமிருந்து வரவேற்கிறேன். - பயனர் தேனி சுப்பிரமணியன்.

http://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு

தொகு

புதிய தலைமுறை வார இதழ் (அக்டோபர் 1, 2009) பக்கம் 11,12: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளி. "தலைமையாசிரியர் ஜோதிமணியிடம் டேட்டா கார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிப்பீடியா. பாடம் சம்பந்தமான சந்தேகங்களை இதைப் பார்த்தும் தீர்த்துக் கொள்கிறார்கள். எல்லா மாணவர்களுக்கும் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் அடிக்கத் தெரிகிறது... "--ரவி 20:34, 28 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி. மகிழ்வும் தெம்பும் ஊட்டும் செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.--சிவக்குமார் \பேச்சு 19:29, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
ஆம். இது போன்ற நிகழ்வுகள் தாம் நமது தளத்தின் நோக்கத்தை நிறைவு செய்வதாக உள்ளன. நன்றி, இரவி. -- சுந்தர் \பேச்சு 04:20, 2 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

ஆமாம், சுந்தர், சிவா. தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலம் முதல் இந்தச் செய்தியைக் கண்டு தான் மிகவும் மகிழ்ந்தேன். பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காவது பயன்படும் வகையில் அவர்கள் பாடம் தொடர்பான எளிய அறிமுக கட்டுரைகளை உருவாக்குவதை ஒரு முக்கிய செயல் திட்டமாக உருவாக்க வேண்டும். அடுத்த ஆண்டின் தமிழ் விக்கி செயல் திட்டத்தில் இதற்கு முன்னுரிமை தரலாம். முதற்பக்கத்தில் "மாணவர் பக்கம்" என்ற தலைப்பில் இத்தகைய கட்டுரைகளைக் காட்சிப்படுத்தலாம்--ரவி 09:13, 2 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இது மிகவும் நல்ல, மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாக இருக்கும். இந்த திட்டத்திற்கு என்னாலான பங்களிப்பை செய்ய விரும்புகிறேன். குறிப்பிட்ட தலைப்புக்களை தந்தால், அவைபற்றி செய்தி திரட்டி எழுத முடியும் என நினைக்கிறேன். --கலை 23:23, 9 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இந்தப் பள்ளி பற்றி அச்சிடப்பட்ட கட்டுரையின் திருத்தப்படாத இணையப் பதிப்பு--ரவி 13:07, 5 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இச்செய்திகளைக் கேட்டு மிக மகிழ்ந்தேன். நமக்குண்டான பொறுப்பும் இதனால் நன்குணரலாம். இப்படி அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை எல்லா நிலைகளுக்கும் பயன்படுமாறு விக்கித்திட்டங்களையும் அதன் உறவுத்திட்டங்களையும் வளர்த்தெடுக்க வேண்டும். தலைசிறந்த நல்லாக்கப் பணிகளுள் விக்கிப்பணிகள் ஒன்று என்பதை நினைவில் கொள்வோம். --செல்வா 13:28, 5 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இப்பள்ளியின் தலைமையாசிரியரிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அறிந்து கொண்டவை:

  • தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ் வழிய மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
  • ஒரு நாளைக்கு ஒரு பாட வேளை நேரம் இதற்காக ஒதுக்கப்படுகிறது. வீட்டுப் பாடம், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்ற தேவைகள் இருந்தால் பகல் உணவு வேளை, மாலை பள்ளி விட்ட பிறகும் கூடுதல் நேரம் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.
  • கட்டுரைகள் 99% வீதம் புரிந்து கொள்ளத்தக்கதாகவே உள்ளன.
  • மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பயன்படுத்திப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தக்கதாக இருக்கிறது.
  • புதுக்கோட்டை மாவட்டம் (அதாவது உள்ளூர் தகவல்கள்), தமிழ்நாடு, இந்தியா குறித்த செய்திகள் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.
  • எடுத்துக்காட்டுப் பயன்பாடுகள்: "நாட்டுக்குழைத்த தலைவர்கள்" என்று போட்டி வைத்தால் மாணவர்களே காமராசர், நேரு என்று தேடி அக்கட்டுரைகளை அச்சிட்டு எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். "காவிரி தன் வரலாறு கூறுதல்" என்று தலைப்பு வைத்தால் காவிரி ஆற்றுக் கட்டுரைக்குள் புகுந்து குடகு, பூம்புகார் என்று ஒன்றுக்குள் ஒன்றாக தொடர் கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விக்கி வரவுக்கு முன் பாடநூல் அல்லது நூலக நூலில் உள்ள ஒரே மாதிரியான கட்டுரைகளையே எல்லாரும் படித்ததாகவும் தற்போது பாட நூலுக்கு வெளியேயும் பல்வேறு தலைப்புகளிலும் படித்துப் படைப்பூக்கத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, இது வரை 20 வரிகள் எழுதிக் கொண்டிருந்தவர்கள் 60 வரிகள் உள்ள அளவுக்கு தகவல் சேர்த்து எழுதுகிறார்கள் (இது விரிவான கட்டுரைகள் எழுத வேண்டிய தேவையை உணர்த்துகிறது)
  • தமிழ் விக்சனரியையும் பயன்படுத்துகிறார்கள்.

ஆக மொத்தம் விக்கி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் இன்னும் மென்மேலும் விக்கியை வளர்த்து எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அடுத்த முறை ஊருக்குச் செல்கையில் பள்ளிக்கு நேரடியாகவே சென்று மாணவர்களைச் சந்தித்து உரையாட எண்ணி இருக்கிறேன். --ரவி 12:05, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

ரவி இந்த விளக்கமான பகிர்வுக்கும் உங்கள் ஊக்க உழைப்புக்கும் நன்றி. அவர் கூறியவாறு, பாட நூலுக்கு வெளியேயும் பல்வேறு தலைப்புகளிலும் மாணவர்களுக்கு தரமான கருத்துகள் தரமான நல்ல தமிழில் கிடைக்க வேண்டும் என்பதே பெரும் குறிக்கோள்களுள் ஒன்று. ஆம்ப்பியர் என்று பாட நூலில் இருந்தால், அவர் யார், அவர் வாழ்க்கை வரலாறு என்ன என்றெல்லாம் இன்னும் சற்று விரிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் தமிழில் மிகக்குறைவாகவே இருந்துள்ளன. தமிழ் விக்கிப்பீடியா இப்படி எந்த ஒரு தலைப்பிலும் அது தொடர்பான பல கருத்துகளை தரமுடன் விளங்கும் ஒரு அறிவுக் கருவூலமாக விளங்க வேண்டும். மீண்டும் உங்கள் செய்திப் பகிர்வுக்குநன்றி.--செல்வா 12:42, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி ரவி. மேலும், தமிழ் விக்கி கட்டுரைகளை pdf கோப்பாக மாற்றும் வசதி செய்து தரப்படல் வேண்டும். இது மாணவர், ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனைய மொழி விக்கிகளில் இந்த வசதி உள்ளது. ஏன், தமிழ் விக்கிமூலம், விக்கிநூல் திட்டங்களில் இந்த வசதி உண்டு. இது குறித்து வழு பதியப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 12:53, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா, சிறீதரன். pdf நூலாக்கம் குறித்து விக்கிமேனியா மாநாட்டில் உரையாடியதாக சுந்தர் சொன்னார். மேல் விவரங்கள் தருவார் என்று எதிர்பார்க்கிறேன்--ரவி 15:31, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இது மிகவும் நல்ல, மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாக இருக்கும். இந்த திட்டத்திற்கு என்னாலான பங்களிப்பை செய்ய விரும்புகிறேன். குறிப்பிட்ட தலைப்புக்களை தந்தால், அவைபற்றி செய்தி திரட்டி எழுத முடியும் என நினைக்கிறேன். --கலை 23:23, 9 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி ரவி. வரும் தலை முறைக்கு நாம் செய்யும் பணியின் காரணமாக நன்மை கிடைப்பதை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...இதுவே நம்மை மேலும் ஆக்கத்துடனும் ஊக்கத்துடனும் பணியாற்ற வைக்கும். --Ragunathan 23:49, 9 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

ரொறன்ரோ தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு

தொகு

தமிழர்கள் மத்தியில் கணினிப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கிலும் கணினியில் தமிழ் பாவனையை இலகுபடுத்தும் நோக்கிலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி (04/10/2009)பிற்பகல் 4மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் கருத்தரங்கும் அறிமுக நிகழ்வும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில்,

  • தமிழ் விக்கிபீடியா
  • உத்தமம் - தமிழ் இணைய மாநாடு 2009
  • வலைப்பூ Blogs
  • தமிழ் மென்பொருள்கள்

ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கும்,

  • ’புத்தகம்’ இணையத்தளம் – ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச புத்தகக்கடை
  • தமிழ் தட்டச்சு சேவை

போன்றவற்றின் அறிமுக நிகழ்வும்,

  • பரிசு அட்டை – புத்தகம் இணையம்
  • தமிழ் மென்பொருள்கள்

ஆகியவற்றின் விற்பனையும் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 416 273 5811 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன் புலம்பெயர் தமிழர் உலகம்.

மேலும் விபரங்கள் --Natkeeran 00:20, 30 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவை முதன்மைப்படுத்தி நடக்கும் இந்நிகழ்வைக் கண்டு மகிழ்கிறேன். நிகழ்வு பயனுள்ள முறையில் நடைபெற வாழ்த்துகிறேன்--ரவி 12:52, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

நிகழ்வில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்தால் உதவும். --ரவி 12:08, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா? அல்லது விக்கிப்பீடியா?

தொகு

ஒரு ஐயம்...விக்கிப்பீடியா என்று எழுதவா இல்லை விக்கிபீடியா என்று எழுதலாமா? ஏனெனில் ஆங்கில எழுத்துகளான wikipedia என்று தட்டச்சினால் விக்கிபீடியா என்று வருகிறது. ஆனால் பகர ஒற்று வர வேண்டுமெனில் மற்றொரு p சேர்க்க வேண்டியுள்ளது. கூகுளில் தேட விக்கிபீடியா என்றே வருகிறது. ஆனால் விக்கி தளத்தில் பகர ஒற்று வருகிறது. சில பயனர்கள் சேர்த்து எழுதுகிறார்கள். சிலர் ஒற்று சேர்ப்பதில்லை. எது சரி?--Ragunathan 09:25, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

tamil wikipedia என்பதை முன்பு தமிழ் விக்கிபீடியா என்று எழுதி வந்தோம். ஆனால், தமிழ் ஒலிப்பு முறைகள் படி விக்கிபீடியா என்பதை wikibedia என்றே ஒலிக்க வேண்டி வரும் என்பதால், பொதுவான உரையாடலுக்குப் பிறகு விக்கிப்பீடியா என்று முறையாக பெயர் மாற்றம் செய்தோம். விக்கிப்பீடியா என்று தேடினாலும் கூகுளில் வரும். முன்பு பல காலம் விக்கிபீடியா என்று இருந்ததால் அந்த பெயரும் கூகுளில் தட்டுப்படும். கூடுதல் p சேர்க்காமல் விரைவாகத் தமிழ் எழுத தமிழ்99 பயன்படுத்துங்கள் :) --ரவி 12:50, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
நன்றி ரவி :)--Ragunathan 18:07, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

தொகு

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி--ரவி 16:10, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

ரவி! நன்றி. நன்றி. நன்றி. -- பரிதிமதி 16:45, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
பயனுள்ள செய்தி. மிக்க நன்றி ரவி. --சிவக்குமார் \பேச்சு 19:28, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

பல பிழையான தகவல்களைக் கொண்டிருக்கும் அகராதி என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கின்றது. எடுத்துக் காட்டு:

முயற்சி1 வி. (முயற்சிக்க, முயற்சித்து) முயலுதல்; முயற்சி செய்தல்; try hard. எவ்வளவோ முயற்சித்தும் அவனுக்கு வேலை வாங்கிக்கொடுக்க முடியவில்லை.

முயல் என்பது ஏவல் வினை. முயற்சி என்பது பெயர்ச்சொல் (வினைச்சொல் அல்ல!). வினை-பெயர் வடிவங்களைப் பாருங்கள்: தளர்-தளர்ச்சி, வளர்-வளர்ச்சி, பயில்-பயிற்சி, மலர்-மலர்ச்சி, உயர்-உயர்ச்சி. தளர்ச்சித்தல், வளர்ச்சித்தல், மலர்ச்சித்தல், பயிற்சித்தல் உயர்ச்சித்தல் என்னும் சொல்லாட்சிகள் தவறானவை. இவ்வகராதி தந்திருக்கும் எடுத்துக்காட்டும் பிழையான எடுத்துக்காட்டு. --[[பயனர்:செல்வா