விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/தமிழ் விக்கிப்பீடியர்களும் வாசகர்களும்

சென்னையில் நடக்கும் தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடலில் கலந்துகொள்ள இயலாத, தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர்களும், பயனீட்டாளர்களும், வாசகர்களும் தங்களின் வாழ்த்துகளை இங்கு தெரிவியுங்கள்; நன்றி!

பவுல் வழங்கும் வாழ்த்துப்பா

தொகு

ஆழ்கடலும் உயர்மலையும் விளைச்சல்நிறை வயல்வெளியும்
       வீழ்புனலும் மலர்முகிழ்த்த பெருங்காவும் குயிலினமும்
தாழ்தெங்கின் தீம்பழங்கள் குலைவகையும் கொழிக்கின்ற
       வாழ்வளிக்கும் தமிழகத்தின் கலைச்சேர்க்கைத் தொகுப்பெனவே
பாரெங்கும் பரவிநிற்கும் தமிழ்விக்கிப் பீடியாவின்
       பேரோங்கி சீரோங்கி பெரும்புனலாய் பரவிடவே
ஈரைந்தாம் பிறப்பாண்டு நிறைவேறும் வேளையிலே
       ஊரெல்லாம் உவகையுற உளமார வாழ்த்துதுமே!

--பவுல்-Paul (பேச்சு) 05:58, 27 செப்டம்பர் 2013 (UTC)

மணியன்

தொகு

தமிழில் விக்கிப்பீடியா இயக்கம் தமிழ் மொழியில் உலகெங்குமிருந்து கலைச்செல்வங்களைக் கொணர்ந்து தமிழணங்கிற்கு அழகு சேர்த்துள்ளது என்ற தட்டையான நிலையையும் கடந்து கடந்த பத்தாண்டுகளில் சிறுதுளி பெருவெள்ளமாக அரசு ஆதரவின்றி தமிழை முன்னெடுத்துச் செல்லும் ஓர் இயக்கமாக, தமிழ் மொழியை சீர்படுத்தியும் பல கலைச்சொற்களை வடிவெடுத்தும் பிறமொழிச் சொற்களின் பயன்பாட்டை குறைத்தும் மொழிவளத்தைப் பெருக்கி உள்ளது. முறையானத் தமிழை எழுதியிராத பலருக்கு வழிகாட்டியாக அமைந்தது. என்னுடையதே இறுதிக் கூற்று என்ற நிலையிலிருந்து மற்றவர்களின் கூற்றுக்களையும் கேட்க வேண்டும்; யார் சரி என்பதை விட எது சரி என்பதே முக்கியம் போன்ற கோட்பாடுகளை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்துள்ளது. காப்புரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் காப்புரிமை, உரிமைத் துறப்பு போன்ற பல கருத்தாக்கங்களுக்கு விழிப்புணர்வை வளர்த்துள்ளது. பல வரலாற்றிடங்களும் நிகழ்வுகளும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. நான் இங்கு பங்காற்றும் நான்கு+ ஆண்டுகளில் எனது தமிழும் சமூக விழிப்புணர்வும் மேம்பட்டுள்ளது. பத்தாம் ஆண்டு காணும் இந்நாளில் நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு இந்த இயக்கம் மேலும் பற்பல பங்களிப்பாளர்களைப் பெற்று விரைவாக இந்திய/மலேசிய மொழி விக்கிப்பீடியாக்களில் முதலிடம் காணவும் சீரும் சிறப்பும் பெறவும் உளமார வாழ்த்துகிறேன் !! --மணியன் (பேச்சு) 12:39, 28 செப்டம்பர் 2013 (UTC)

சிவகுரு

தொகு

தமிழ் விக்கியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:59, 29 செப்டம்பர் 2013 (UTC)

நந்தகுமார்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவடையும் இத்தருணத்தில், வரும் காலங்களில் மேம்பட்ட வண்ணம் பல துறைகளிலும் பெருமளவில் பங்களித்து தமிழ் விக்கியை வளர்ப்போம் என உறுதி ஏற்போம். நம் அனைவருக்கும் வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:59, 29 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா தனது பத்தாண்டை நிறைவு செய்தமையையிட்டு மகிழ்ச்சியும், மென்மேலும் பல வகைகளிலும் வளர்ச்சியடைய மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.--கலை (பேச்சு) 16:14, 29 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ்க்குரிசில்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா மென்மேலும் வளர்ச்சி கண்டு தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. வருகிற ஆண்டுகளில், பெருமளவிலான கல்வியாளர்களும், மாணவர்களும், நிரலாளர்களும், மொழிபெயர்ப்பாளர்களும், துறை வல்லுனர்களும் சிறப்பான அளவில் பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். பத்தாண்டு வாழ்த்துகள் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:26, 29 செப்டம்பர் 2013 (UTC)

செந்தி

தொகு

தமிழ் விக்கிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! பத்தாவது அகவையில் வீறு நடை போடத்தொடங்கியுள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் அனைத்துப் பங்களிப்பாளருக்கும் எனது உள்ளங்கனிந்த வாழ்த்துகள்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:09, 29 செப்டம்பர் 2013 (UTC)

கி. கார்த்திகேயன்

தொகு

யாதொரு சுயநலமுமின்றி எல்லா விக்கியர்களும் ஒருங்கிணைந்து உருவாக்கி வளர்த்து இன்று 10வது பிறந்தநாள் காணும் தமிழ்விக்கிக்கும், உருவாக்கிய விக்கியர்களுக்கும் என் உளங்கனிந்த வாழ்த்துகள். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:25, 30 செப்டம்பர் 2013 (UTC).

-பி.கண்ணன்சேகர்.

தொகு

ஆலமரம் போல் விக்கிபீடியா பங்களிப்பாளர்கள், பயனர்கள் பெருக வாழ்த்துக்கள்!

ஆ.தைனிஸ்

தொகு

நவீன உலகின் அறிவு களஞ்சியமாம்
கைக்குள் வாழும் உலக நூலகமாம்
தேடல் நாளும் விதைக்கும் வீரியமாம்
அறிவை செதுக்கி அறிவியல் புரட்சிக்கு
சிறப்பான வளர்ச்சிக்கு வித்திடும் விக்கியாம்
கன்னி தமிழ் கணிணி தமிழாய்
என்றுமே வாழ்ந்திட ஏற்றம் தரும்
விக்கி சேவை நாளும் உயர்க நன்மை தருக

வாழ்த்துக்களுடன் பயனர்:Thainis