விக்கிப்பீடியா:கைப்பாவை
(விக்கிப்பீடியா:SOCK இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |
- விக்கிப்பீடியாவில் ஒரு பயனர் ஒரு கணக்கை மட்டுமே பயன்படுத்தி பங்களிக்க வேண்டும்.
- இவ்விதிக்கு கீழ்காணும் விதிவிலக்குகள் உண்டு:
- தானியங்கி ஓட்டத்துக்காக தனிக்கணக்கு தொடங்கலாம்
- குறிப்பிட்ட ஒரு திட்டத்தில் மட்டும் பங்கு பெற தனி கணக்கு தேவையெனில் தொடங்கிப் பயன்படுத்தலாம்
- கணினி/இணையப் பாதுகாப்பு குறைந்த வெளிச்சூழல்களிலும், பொதுக் கணினிகளில் இருந்தும் பங்களிக்க தனிக்கணக்கு தொடங்கலாம்.
- பழைய கணக்கின் கடவுச்சொல் தொலைந்து போய், மீட்டெடுக்க முடியவில்லையெனில் புதுக்கணக்கு தொடங்கலாம்.
- சர்ச்சைக்குரிய தலைப்புகளைத் தொகுப்பது வெளியில் தெரிந்தால் உயிர், உடைமை, நற்பெயர் போன்றவற்றுக்கு ஊறு விளையும் எனக் கருதினால், வேறு கணக்கு கொண்டு தொகுக்கலாம்
- ஆனால் மேற்சொன்ன விதிவிலக்குகளில் பழைய/முதன்மை கணக்கு என்ன என்பதைத் தெளிவாக பயனர் பக்கத்திலோ வெளிப்படையாகவோ, நிருவாகிகளுக்கோ குறிப்பிட/தெரியப்படுத்த வேண்டும்.
- பங்களிப்பாளர் யார் என்பதை மறைக்க புகுபதிகை செய்யாமல் ஐபி முகவரியாகத் தொகுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- ஒரு கருத்தினை பலர் ஆதரிக்கின்றனர் என்ற பிம்பத்தை உருவாக்க வேறு கணக்குகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்
- ஒரு கருத்தினை பலர் ஆதரிக்கின்றனர் என்று காட்ட விக்கிக்கு வெளியில் பரப்புரை செய்து ஆள் திரட்டி வருவதைத் தவிர்க்க வேண்டும்.
- எக்காரணத்தினாலோ கணக்கு தடை செய்யப்பட்டால், தடையை மீறுவதற்கு இன்னொரு கணக்கை உருவாக்கக் கூடாது. தடையை விலக்க விண்ணப்பித்தோ அல்லது தடை நீங்கும் வரை காத்திருந்த பின்னரோ மீண்டும் பங்களிக்கலாம்.
- மேற்குறிப்பிட்ட விதிகளை மீறி ஒருவர் உருவாக்கும் பிற கணக்குகள் “கைப்பாவைகள்” (Sockpuppets) எனப்படும். உருவாக்குபவர் “ஆட்டுவிப்பவர்” (Sockmaster) என அழைக்கப்படுவார். தனக்கு ஆதரவாக ஆட்டுவிப்பவர் திரட்டி வரும் வெளியாட்கள் “கையாட்கள்” (Meatpuppets) எனப்படுவர்.
- செயல்பாடுகள் மூலமாகவோ, பயனர் சோதனை (checkuser) மூலமாகவோ ஒருவர் பல கணக்குகளை பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்தால், கைப்பாவை மற்றும் கையாள் கணக்குகள் முடிவிலியாகத் தடைசெய்யப்படும்; ஆட்டுவிப்பவர் முதலில் ஒரு வார காலத்துக்கு தடை செய்யப்படுவார். தொடர்ந்து கைப்பாவைகளை உருவாக்கினால் அவரது தடை முடிவிலியாக்கப்படும்.
- கைப்பாவை கணக்கின் மூலம் எழுதிய பேச்சுப் பக்க உரையாடல்களை கோடிட்டு அடித்துக் காட்டலாம். வேண்டுமானால், அவ்வுரையாடல் விக்கிப்பீடியா நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருக்குமேயானால், கைப்பாவை கணக்கை இயக்கிய பயனர் தனது உண்மையான பயனர் கணக்கின் மூலம் வந்து அக்கருத்துகளை மீளப் பதியலாம்.
- கைப்பாவைகளை உருவாக்கி விசமத்தனம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட ஒருவர் விக்கி சமூகத்துக்கு விண்ணப்பித்து, அவர் மீண்டும் விசமச் செயல்களை செய்ய மாட்டார் என்று சமூகத்தினிடையே ஒருமித்த கருத்தேற்பட்டால் அவரது தடை நீக்கப்பட்டு மீண்டும் பங்களிக்க அனுமதிக்கப்படுவார்.
ஒரே IP-ஐ பகிர்தல்
தொகுகுடும்பத்தினரோ, நண்பர்களோ அல்லது விடுதியில் உடன் தங்கியிருப்போரோ ஒரே IP-ஐ பயன்படுத்தும் வேலைகளில்:
- ஒரே IP-ஐ பயன்படுத்தும் இரு பயனர் கணக்குகள் தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை தங்களின் பயனர் பக்கத்தில் வெளிப்படுத்த வேண்டும். (இதை {{User shared IP address}} கொண்டு செய்யலாம்.)
- இரு கணக்குகளும் ஒரே நோக்கோடு தொகுப்பது, விவாதங்களில் பங்கேற்பது, சச்சரவுகள் ஏற்படின் ஒருவரை ஒருவர் ஆதரிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.
- தொகுப்பு எச்சரிக்கை (edit warring) விடுவது குறித்த நடைமுறை விதிகளின் கீழ் இக்கணக்குகள் ஒரேகணக்காகக் கருதப்படும்.
- ஒரு கணக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட (edit warring) அதே செயலை மற்றக் கணக்கும் செய்வதை தவிற்க வேண்டும். இவ்விதியினை மீறினால் இக்கணக்குகள் கைப்பவையாகக் கருதப்படும்.
- தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்த விரும்பாதோர் ஒரே துறைசார் கட்டுரைகளைத் தொகுப்பதையோ அல்லது சச்சரவுகளின் விவாதங்களில் பங்கேற்பதையோ தவிர்க்கவேண்டும்.