விக்கிப்பீடியா:மின்னல்

(விக்கிப்பீடியா:TWINKLE இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறுக்கு வழிகள்:
WP:TWINKLE
WP:TWINK
WP:TW
திரு. மின்னலார்
திரு. மின்னலார்

மின்னல் அல்லது துவிங்கிள் (Twinkle) என்பது விக்கிப்பீடியாவில் பொதுவான துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கும் நாசவேலைத் தொகுப்புகளை எதிர்கொள்வதற்கும் தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களுக்கு மேலதிகத் தெரிவுகளை வழங்கும் ஒரு கருவியாகும். இது பயனர்களுக்கு மூன்று வகையான முன்னிலையாக்க முறைகளை வழங்குகின்றது. அத்துடன், விரைந்து நீக்கல், பயனர் எச்சரிக்கை, பயனர் வரவேற்பு, துப்புரவு போன்றவற்றுக்கான வார்ப்புருக்களை இணைக்கும் வசதியையும் நாசவேலைத் தொகுப்புகளை மேற்கொள்பவர்களை அரைத்தானியக்கமாக முறையிடும் வசதியையும் இன்னும் பல வசதிகளையும் கொண்டுள்ளது. மேலதிகமாக, நிருவாகிகளின் பணிகளுக்கு உதவியாக இருக்கக்கூடிய கருவிகளையும் வழங்குகின்றது.

மின்னலின் பக்கக் காப்பு வேண்டுகோள் விடுக்கும் வசதியின் திரைக்காட்சி

விரைவு உதவி

தொகு
தொடக்கம்
உங்கள் கணக்கில் மின்னலைச் செயற்படுத்துவதற்கும் இற்றைப்படுத்தல்களைத் தானியக்கமாகப் பெற்றுக்கொள்வதற்கும், உங்கள் விருப்பத்தேர்வுகளின் கருவிகள் பகுதியில் "மின்னல்" கருவியைத் தெரிவுசெய்து, சேமிக்கவேண்டும்.
மின்னலைத் தனிப்பயனாக்குதல்
மின்னல் விருப்பத்தேர்வுகளை மாற்றியமைத்து, மின்னலைத் தனிப்பயனாக்கமுடியும். மாற்றங்களை மேற்கொண்டபின், பக்கத்தின் அடியிலுள்ள "மாற்றங்களைச் சேமி" என்பதைச் சொடுக்குங்கள். இதன் பின்னர் உங்கள் உலாவியின் இடைமாற்றை முற்றாக நீக்கவேண்டும்.
உதவிக்கு
மின்னலைப் பற்றிய விவரங்களை ஆவணப்படுத்தற் பக்கத்தில் சுருக்கமாகக் காணலாம். அப்பக்கத்தில் உங்கள் மனத்தில் எழுந்த கேள்விக்கான பதில் கிடைக்காவிட்டால், பேச்சுப் பக்கத்தில் உங்கள் கேள்வியைக் கேளுங்கள். இணையத் தொடர் அரட்டைப் பயனர்கள் #wikipedia-userscripts என்ற அலைவரிசையில் உங்கள் கேள்வியைக் கேட்கலாம்.
வழுக்களை முறையிடலும் புதுவசதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தலும்
மின்னல் இயங்குநிலை வளராக்கத்தின்கீழ் உள்ளதால், பொதுவாக வழுக்கள் உடனடியாகச் சரிசெய்யப்படும். நீங்கள் ஒரு வழுவைக் கண்டறிந்தால், பேச்சுப் பக்கத்தில் அதனைக் குறிப்பிடவும். பின், கிற்றபில் அதனை முறையிட வேண்டும். புதுவசதிகளுக்கான வேண்டுகோள்களைப் பேச்சுப் பக்கத்தில் முன்வையுங்கள்.
குறிப்புகள்
  • மிகப்புதிய பயனர்கள் மின்னலைப் பயன்படுத்த முடியாது. தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே இக்கருவியைச் செயற்படுத்தமுடியும்.
  • இண்டர்நெட்டு எட்சுப்புளோரர் 8 அல்லது அதற்கு முந்திய பதிப்புகளில் மின்னல் வேலைசெய்யாது. விண்டோசு விசுட்டா அல்லது அதற்குப் பிந்திய விண்டோசு இயங்குதளங்களைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் இண்டர்நெட்டு எட்சுப்புளோரர் உலாவியை இற்றைப்படுத்துவதன் மூலம் மின்னலைப் பயன்படுத்தலாம். விண்டோசு எட்சு. பீ. அல்லது அதற்கு முந்திய விண்டோசு இயங்குதளங்களையோ பிற இயங்குதளங்களையோ பயன்படுத்துபவர்கள் பயர் பாட்சு, கூகுள் குரோம் போன்ற உலாவிகளின் புதிய பதிப்பைப் பயன்படுத்தவும்.
  • சில உலாவி நீட்சிகள் மின்னலின் செயற்பாட்டுக்குத் தடையாய் அமையலாம். மேற்கூறிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் மின்னல் வேலைசெய்யவில்லையானால், நீட்சிகளை முடக்கிய பின், உங்கள் உலாவியை மூடி, பின் மீண்டும் திறந்து முயன்று பாருங்கள்.
  • நீங்கள் ஒரு தொடுதிரைக் கணினியைப் பயன்படுத்தினால், மின்னல் பட்டியைக் காண்பிப்பதற்கு, மின் என்பதைச் சிறிது நேரம் அழுத்தவும்.

ஆவணப்படுத்தல்

தொகு

மின்னலைப் பயன்படுத்தமுன், ஆவணப்படுத்தற் பக்கத்தை வாசித்துப் பார்க்கவும். இவ்வாவணப்படுத்தற் பக்கத்தை விரிவுபடுத்தியும் மேம்படுத்தியும் உதவும்படி, மின்னல் பயனர்களைக் கேட்டுக்கொள்கின்றேனாம்.

முறைகேடு

தொகு
குறுக்கு வழிகள்:
WP:TWINKLEABUSE
WP:TWABUSE

மின்னலைப் பயன்படுத்தி நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் நீங்களே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்பதை ஒருபோதும் மறக்கவேண்டாம். நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கமைவாக இக்கருவியைப் பயன்படுத்தவேண்டும். இல்லாவிடின், நீங்கள் தடைசெய்யப்படலாம். மின்னல் போன்ற நாசவேலையெதிர்கருவிகளையோ முன்னிலையாக்கர் அணுக்கத்தையோ, நல்லெண்ண நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை மீளமைப்பதற்கு, தகுந்த தொகுப்புச் சுருக்கமின்றி ஒருபோதும் பயன்படுத்தலாகாது.

வரலாறு

தொகு

AzaTothஆல் 2007இல் வெளியிடப்பட்ட இக்கருவி 2015 திசம்பர் இறுதியில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இது பயனர்களின் வேண்டுகோள்களுக்கேற்ப இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஏனைய விக்கிகளில் பயன்படுத்த

தொகு

பயனர்பெட்டிகள்

தொகு

மின்னல் பயனர்கள் பின்வரும் பயனர்பெட்டிகளைத் தம் பயனர்பக்கத்தில் இணைக்கலாம். அத்துடன், மின்னல் மேற்படவுருவையும் தம் பயனர்பக்கத்தில் இணைக்கலாம். {{மின்னல் மேற்படவுரு}}

 இவர் ஒரு மின்னல் பயனர்!
 

இவர் புதுப்பயனர்களை மின்னலின் மூலம் வரவேற்கின்றார்!

 இவர் மின்னலின் உதவியுடன் விக்கிப்பீடியாவில் பேணுகைப் பணிகளை மேற்கொள்கின்றார்!
 இவர் மின்னலின் மூலம் புதுப்பயனர்களை வரவேற்கவும் கட்டுரைகளில் தொடுப்பிணைக்கவும் செய்கின்றார்.{{தொடு}}
 இவர் மின்னலின் உதவியுடன் கட்டுரைகளைக் காக்க வேண்டுகின்றார்!
{{COI}}

இவர் மின்னலின் மூலம் கட்டுரைகளில் தொடுப்பிணைக்கின்றார்!

 இவர் மின்னலைப் பயன்படுத்தும் அண்மைய மாற்றங்கள் சுற்றுக்காவலர் ஆவார்!
 இவர் மின்னலின் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் நாசவேலைத் தொகுப்புகளை மீளமைக்கின்றார்!
 இவர் மின்னலின் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் நாசவேலைத் தொகுப்புகளை முறையிடுகின்றார்!
 இவர் மின்னலின் உதவியுடன் விக்கிப்பீடியாவைக் கவனித்துவருகின்றார்!
 இவர் மின்னலின் உதவியுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் நிருவாகப் பணிகளை மேற்கொள்கின்றார்!
  இவர் புதுப்பயனர்களை மின்னலின் மூலம் வரவேற்கின்றார்!
 இவர் புதுப்பயனர்களை மின்னலின் மூலம் வரவேற்கின்றார்!
{{underlinked}}

இவர் கட்டுரைகளில் மின்னலின் மூலம் பேணுகை வார்ப்புருக்களை இணைக்கின்றார்!

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:மின்னல்&oldid=2006716" இலிருந்து மீள்விக்கப்பட்டது