பரிந்துரைகள்- நீச்சல்காரன்

தொகு

இந்தக் கூட்டுத் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் பாதிக்காத வகையில் ஏப்ரல் 2025 முதல் தொடங்கலாம். விருப்பமுள்ள வெளிநாட்டுப் பயனர்களுக்கான நிதி ஆதாரத்தை அறக்கட்டளை மூலம் தனியாகப் பெற்றுக் கொள்ளவும் இந்தக் கால இடைவெளி உதவும். ஐயாயிரம் கட்டுரைகள், கூகிள் பரிந்துரைக்கும் தலைப்புகளுடன் நமது தலைப்பு போன்ற இலக்குகளை ஏற்கலாம். இது பொதுவான மேம்பாட்டுத் திட்டமில்லை என்பதால் இதில் வழக்கமாக நடைபெறும் பயிலரங்குகள் குறிப்பாக மாணவர்களை மையமாகக் கொண்டு அல்லாமல் பரந்துபட்ட துறை வல்லுநர்களை மையமாகக் கொண்டு நடத்தலாம் என நினைக்கிறேன். கூகிள் தொழில்நுட்பங்களைப் (google vision, Gemini API, google books) பெற்று விக்கிப்பீடியாவை வளர்க்கத் திட்டமிட விரும்புகிறேன். கட்டுரைகளை வளர்க்க உதவும் நூல்களை விக்கிமூலத்தில் மெய்ப்புப் பார்க்கவும், கலைச்சொற்களை அதிகரிக்க விக்சனரியையும் கூட்டாகக் கொண்டு திட்டமிடப் பரிந்துரைக்கிறேன். அதன் விளைவாக நல்ல மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை உருவாக்கலாம். சட்டம், அறிவியல் தொடர்பான தகவல்களில் இடைவெளியிருப்பதாக நினைக்கிறேன் இவற்றைப் போல நான்கு கருவை அடையாளங் கண்டு அதை வைத்து நான்கு காலாண்டில் நான்கு நேரடிப் பயிலரங்கு, 12 இணையவழிப் பயிலரங்கு, அவ்வப்போது தொடர்தொகுப்பு என்று வடிவமைக்கலாம். பன்னிரண்டு மாதமும் பரிசுப் போட்டியாக அல்லாமல் இயல்பான பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். போட்டிக்குப் பிறகு பரிசளிக்காமல் பயனரின் கருப் பொருளுக்கேற்ற நூல்களை முன்னதாகவே வாங்கிப் பரிசளிக்கலாம். பணமாக அல்லாமல் அடையாளப் பரிசாக கூகிள் நிறுவனப் பொருட்களைப் பரிசாக அளிக்கக் கேட்கலாம். கூகிளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள நிரலாக்கப் போட்டியினை நடத்தலாம். பொதுவாகப் பள்ளி, கல்லூரிகளைவிட பல்கலைக் கழகங்கள், பதிப்பகங்கள், ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டாண்மை செய்யலாம் என நினைக்கிறேன். இந்தியாவிற்கு வெளியே எத்தனை ஆர்வமுள்ள பயனர் இதைப் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்று தெரிந்த பின்னர் அதற்கான கோரிக்கையை முன்னெடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களின் கருத்திற்கேற்ப காலக்கோட்டைப் பின்னர் திட்டமிட விரும்புகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:49, 30 நவம்பர் 2024 (UTC)Reply

  1.   விருப்பம் * விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பிற தமிழ் வளங்களையும், தொழினுட்பங்களையும் உள்ளடக்கியது என்ற அடிப்படையில் உங்கள் முன்மொழிவுகள் ஈர்ப்பாக உள்ளது. கல்லூரி பயிலரங்குகளை ஏறத்தாழ தொடர்ந்து 5 வருடங்களாக நடத்தி வருகிறேன் என்ற முறையில் எனது அனுபவம் யாதெனில், அப்பயிலரங்குகள் விக்கிமீடியத் திட்டங்களின் அறிமுக விழா என்ற அளவிலேயே நின்றுவிடுகின்றன. தொடர்ந்து அவர்களிடம் உரையாடுதலும், அவர்களைப் புரிந்து கொள்ளுதலுக்கும் பல மணிநேரம் செலவிட வேண்டியுள்ளது. அவர்களை தொடர்ந்து பரிசுகள் மூலம் ஊக்கப்படுத்தவில்லை எனில் சமூக விரிவாக்கம் என்பது ஐயமே. தற்போது விக்கிமூலம், இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. (மஞ்சள் நிலையைச் சொடுக்கவும்)
    • விக்கிமூலத்தில், 2016 முதல் ஏறத்தாழ 4 இலட்சம் பக்கங்களை, 3000 நூல்களினால் (s:ta:பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்) பலரது துணையுடன் உருவாக்கியுள்ளேன். இந்த பட்டறிவு கொண்டு, s:ta:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள் (19, 000 பக்கங்கள்- 2025 ஆம் ஆண்டு இலக்கு) என்பதே விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும் என முன்மொழிகிறேன். இக்களஞ்சியம் பன்னாட்டு, பல்துறை அறிஞர்களால் உருவானவை என்பதையும் எண்ணுக. சிறு மாற்றங்கள் செய்தால், இங்கு சில ஆயிரம் சிறப்பான கட்டுரைளை ஏற்றவும், புதிய சொற்களை விக்சனரிக்கும், பொதுவகத்திற்கும், விக்கித்தரவிலும் படியிட முடியும். மேலும், இதனால் பல்லாயிரம் புதிய சொற்கள், தர அறிவியல் ஆய்வுகளுக்கும் (Tamil data science research) உதயமாகும். ஆனால், இத்திட்டத்தின் கீழ் அமையும் கட்டுரைகளை, அவைகளில் இருந்து வடிகட்ட வேண்டும்.--உழவன் (உரை) 02:52, 1 சனவரி 2025 (UTC)Reply

இணைப்புகள்

தொகு

சிஐஎஸ் நம்முடன் பகிர்ந்த இரு இணைப்புகள் தகவலுக்காக இங்கு இற்றை செய்யப்படுகிறது.

ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 08:50, 2 திசம்பர் 2024 (UTC)Reply

திட்டப் பக்கத்தில் இருந்ததை உரையாடல் பக்கத்திற்கு நகர்த்துகிறேன்:

  1. Outreach, Engagement, and Content Creation: The Hindi Wikimedians User Group - diff.wikimedia.org தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை
  2. Engage, Encourage and Empower = Editing Growth - diff.wikimedia.org தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை

-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:27, 31 திசம்பர் 2024 (UTC)Reply

தலைப்பு மாற்றப்பட்டது

தொகு

பக்கத்தின் தலைப்பானது இரண்டு காரணங்களுக்காக மாற்றப்பட்டது:

  1. 4 அமைப்புகளுக்கு இடையேயான இணைவாக்கத்திற்கான பரிந்துரை மீது நடத்தப்படும் உரையாடல் இதுவாகும். முன்மொழிவு என இருந்தால் யாருடைய முன்மொழிவு என்பதில் குழப்பம் ஏற்படும். தேவைப்பட்டால், தமிழ் விக்கிப்பீடியாவின் முன்மொழிவுக்கென இன்னொரு பக்கத்தை ஆரம்பித்துக் கொள்ளலாம்.
  2. தமிழ் விக்கிப்பீடியா அல்லாத மற்ற அமைப்புகளின் பயன்பாட்டிற்காக தலைப்பில் ஆங்கிலக் கலப்பு இருந்தது. ஆனால் அந்த அமைப்புகள் இந்தப் பக்கத்தை பயன்படுத்துவதில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:54, 3 திசம்பர் 2024 (UTC)Reply
இந்தப் பக்கத்தை எளிதில் தேடிக் கண்டுபிடிக்கும்படியும் தட்டச்சு செய்து அடையும்படியும் விக்கிப்பீடியா:கூகுள்25 அல்லது விக்கிப்பீடியா:புதிய கூகுள் திட்டம் என்பது போன்ற தலைப்புகளைத் தந்தால் உதவியாக இருக்கும். 25 என்பது 2025ஆம் ஆண்டு நடக்கும் திட்டத்தைக் குறிக்கும். இதில் இடையில் திட்டத்திற்கு உதவியாக CIS, WMF இருந்தாலும், கூகுள் திட்டமாகவே நாம் பேசிவருகிறோம். - இரவி (பேச்சு) 15:12, 21 திசம்பர் 2024 (UTC)Reply
@Ravidreams பரிந்துரைகளுக்கு நன்றி. 'விக்கிப்பீடியா:கூகுள்25' எனும் தலைப்பு எனது தெரிவு. சில ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு (புதிய) கூகுள் திட்டமும் வரலாம். எனவே, தலைப்பில் ஆண்டைக் குறிப்பிடுதல் நன்று என நினைக்கிறேன். உங்களுக்கு ஏற்புடையது எனில் நகர்த்தி உதவுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:25, 22 திசம்பர் 2024 (UTC)Reply
நன்றி.  Y ஆயிற்று-இரவி (பேச்சு) 08:54, 22 திசம்பர் 2024 (UTC)Reply

கூகுள் பரிந்துரைக்கும் கட்டுரைகளின் பக்கப் பார்வைகள்

தொகு

அடுத்து நாம் விக்கிமீடியா அறக்கட்டளையுடன் கூகுள்25 திட்டம் தொடர்பாக உரையாடுவதற்கு முன், அத்திட்டம் தொடர்பான நமது வரையறைகளைப் (Benchmarks) பரிந்துரைக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், நமக்கு அளிக்கப்படும் தலைப்புகள் தமிழ்ச் சூழலிற்கு எந்தளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்க சில வரையறைகளை முன்வைக்க வேண்டியுள்ளது. கூகுள் பரிந்துரைக்கும் தலைப்புகளுக்கான ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 3000 பார்வைகளாவது (அதாவது, ஒவ்வொரு நாளும் 100 பார்வைகள்) பெற்றிருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன். ஆங்கிலத்திலேயே அதற்குக் குறைவாக இருந்தால் தமிழ் விக்கிப்பீடியாவில் அத்தகைய தலைப்புகளை யாரும் அவ்வளவு முன்னுரிமை கொடுத்துப் படிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். கூகுள் இந்தி விக்கிப்பீடியாவுக்கு அளித்திருந்த தலைப்புகளை randomஆகச் சோதித்துப் பார்த்தேன். அவற்றுள் சில தலைப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, இடைநிலையளவு, குழிவுச் சார்பு போன்ற கட்டுரைகள். இவை துறை சார்பில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் தாம். ஆனால், அவற்றைத் துறை சார்ந்து அவற்றோடு இணைந்த பிற கட்டுரைகளோடு சேர்ந்து துறைசார் வல்லுநர்கள், ஆர்வலர்கள் உருவாக்குவது பொருத்தமாக இருக்கும். பயனர்:Booradleyp அவ்வாறு இக்கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். ஒருவேளை, நம்மிடம் குறிப்பிட்ட தலைப்புகளை உருவாக்க துறைசார் வல்லுநர்கள் இல்லை, நாம் துறைசார்ந்நு அல்லாமல் randomஆக சில தலைப்புகளில் எழுதுவோமெனில், அதிகம் பக்கப்பார்வை பெறும் பக்கங்களுக்கு முன்னுரிமை தரலாமென நினைக்கிறேன். @Balajijagadesh கூகுள் இந்தி விக்கிப்பீடியாவுக்கு அளித்திருந்த தலைப்புகளின் மாதாந்திர பக்கப் பார்வைகள் தரவுகளை எடுத்துத் தர முடியுமா? இவ்வாறான தரவுகளை எப்படிப் பெறுவது என்பதற்கா உதவிக் குறிப்பு இருந்தாலும் தெரிவியுங்கள். நன்றி. - இரவி (பேச்சு) 19:48, 27 திசம்பர் 2024 (UTC)Reply

உலகளாவிய மற்றும் இந்திய அளவில் அதிக பக்கப்பார்வைகள் பெறும் கட்டுரைகளைத் தெரிவுசெய்து தருமாறு கூறலாம்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 13:41, 29 திசம்பர் 2024 (UTC)Reply
கூகுள் நிறுவனம் பரிந்துரைக்கும் கட்டுரை என்பது அவர்களின் தேடுதளத்தில் அதிகம் தேடும் தலைப்புகளாக அல்லாமல் ஆங்கிலத்தில் கட்டுரை இருந்து அதை நமது மொழியில் உருவாக்கும் இலக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்.--Balu1967 (பேச்சு) 05:12, 2 சனவரி 2025 (UTC)Reply

பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:34, 31 திசம்பர் 2024 (UTC)Reply

நன்றி பாலாஜி. இவை எத்தனை நாட்களில் கிடைத்த பக்கப் பார்வைகள்? - இரவி (பேச்சு) 13:15, 31 திசம்பர் 2024 (UTC)Reply
@Ravidreams: இவையனைத்தும் கடந்த 30 நாட்களில் கிடைத்தப் பக்க பார்வைகள். இங்கு இருக்கும் பைத்தன் நிரல் மூலம் பக்க பார்வைகள் எடுக்கப்பட்டது.-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:55, 1 சனவரி 2025 (UTC)Reply
பைத்தான் நிரல் பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி. - இரவி (பேச்சு) 11:25, 1 சனவரி 2025 (UTC)Reply

கட்டுரைகளின் அளவு

தொகு

வேங்கைத் திட்டம் 1ல் கட்டுரைகளில் 9000 பைட்டுகளும் 300 சொற்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று விதி இருந்தது. அதுவே, வேங்கைத் திட்டம் 2ல் கட்டுரைகளில் 6000 பைட்டுகளும் 300 சொற்களும் சேர்க்கப்படம் என்று விதி மாறியது. தற்போதைய திட்டத்தில் இந்தி விக்கிப்பீடியர்கள் 200 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரைகள் உருவாக்கியதாகத் தெரிகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் தர நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு நாம் இந்தத் திட்டத்திற்கு, கட்டுரை அளவைப் பொருத்து எத்தகைய விதிகளை உருவாக்கலாம் என்று அனைவரின் பரிந்துரையையும் தெரிவிக்கக் கோருகிறேன். நன்றி. -இரவி (பேச்சு) 12:48, 28 திசம்பர் 2024 (UTC)Reply

பன்னாட்டுத் தமிழ் விக்கிப்பீடியர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகள் இருப்பதை விரும்புவதில்லை. ஆகவே, வேங்கைத்திட்டம் 2-இல் குறிப்பிட்டவாறு 6000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் என்ற அளவு வரையறை அனைவருக்கும் ஏற்புடையதாய் இருக்கும்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 13:43, 29 திசம்பர் 2024 (UTC)Reply
  1.   விருப்பம்உழவன் (உரை) 02:15, 1 சனவரி 2025 (UTC)Reply
  2. கூகுள் கொடுக்கும் தலைப்புகள் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இல்லாமல் இருக்கலாம். போதுமான மேற்கோள்கள் கிடைக்காத அளவுக்கு புதிய கட்டுரைகளாக அவை இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே 6000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் என்பதை குறைத்து குறைந்தது 200 சொற்கள் அல்லது 5000 பைட்டுகள் என்ற அளவு வரையறை அனைவருக்கும் ஏற்புடையதாய் இருக்கும் என்பது என்னுடைய பரிந்துரையாகும்.--கி.மூர்த்தி (பேச்சு) 03:26, 1 சனவரி 2025 (UTC)Reply
  3. 6000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:21, 1 சனவரி 2025 (UTC)Reply
  4. 5000 பைட்டுகள் மற்றும் 200 சொற்கள் என இருக்கலாம் என்பது எனது கருத்து.--Balu1967 (பேச்சு) 05:08, 2 சனவரி 2025 (UTC)Reply
  5. 6000 பைட்டுகள், 300 சொற்கள் எனும் வரையறை எனது பரிந்துரையாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:25, 2 சனவரி 2025 (UTC)Reply
  6. 6,000 பைட்டுகள் / 300 சொற்கள் --பொதுஉதவி (பேச்சு) 13:13, 2 சனவரி 2025 (UTC)Reply
  7. 6,000 பைட்டுகள் / 300 சொற்கள் எனும் பரிந்துரையை வைத்துக் கொள்வது சராசரியாக ஓரளவு கனமான ஒரு கட்டுரை ஆகும். கட்டுரைகளின் பட்டியல் குறித்து தமிழில் தேடப்படும் அல்லது தமிழ்ச் சூழலில் அவசியம் எனக் கருதும் கட்டுரைகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:10, 4 சனவரி 2025 (UTC)Reply

கூடுதல் பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை

தொகு

இந்தத் திட்டத்தில் புதிதாக 80 பயனர்கள் பங்களிக்கத் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்து இருந்தது. ஆனால், இந்த 80 பயனர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் ஒரு ஆண்டு முழுக்க இருக்க வேண்டுமா? குறைந்தது எத்தனைத் தொகுப்புகளைச் செய்திருக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கான விடைகளை நம்மையே வரையறுத்துத் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்கள். இது குறித்த பயனர் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

என் எண்ணம்: வெறுமனே 80, 100 போன்ற பயனர் எண்ணிக்கைகளுக்குப் பெரிதாகப் பொருள் கிடையாது. ஏனெனில், ஒரு குறிப்பிட்ட போட்டியோ திட்டமோ நடக்கும்போது, புதிதாக 100 முதல் 1000 பயனர்களைக் கூட தமிழ் விக்கிப்பீடியா பெற்றிருக்கிறது. ஆனால், இப்படி வரும் பயனர்களில் எத்தனைப் பயனர்களைத் தக்க வைக்கிறோம் என்பதில் தாம் நீண்ட கால நன்மை இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு தொகுப்பாவது செய்து பங்களிப்பாளர் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தோராயமாக 250 என்ற எண்ணிக்கையை ஒட்டி இருக்கிறது. ஆனால், தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, கடந்த நவம்பர் மாதம் குறைந்தது 5 தொகுப்புகளாவது பங்களித்தோர் 63 பேர் மட்டுமே. கடந்த 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை சராசரியாக 81ஆக இருந்திருக்கிறது. இந்த எண்ணிக்கையை 100ஆக உயர்த்துவதை ஒரு பொதுவான இலக்காகக் கொண்டு, கூகுள்25 திட்டம் உள்ளிட்ட அடுத்த ஆண்டுக்கான அனைத்துச் செயற்பாடுகளையும் அமைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறேன். நாம் இந்த எண்ணிக்கை எட்ட முடிந்தால், ஒவ்வொரு மாதமும் பங்களிப்போர் எண்ணிக்கையும் அதற்கு ஏற்ப 300-400 வரை அமையலாம். புதிதாக வந்த பயனர்களும் 100+ தாண்டிச் செல்லக்கூடும். - இரவி (பேச்சு) 13:17, 28 திசம்பர் 2024 (UTC)Reply

ஒரு 6 மாத காலத்தில் சராசரியாக செயலுறு பயனர்களின் எண்ணிக்கையை 25% விழுக்காடு அதிகரிக்கச் செய்வது என்பதே இமாலயச் சாதனை தான். இந்த இலக்கே தமிழ் விக்கிப்பீடியாவின் நீண்ட கால வளர்ச்சிக்கான இலக்காக அமையும். --மகாலிங்கம் இரெத்தினவேலு 13:46, 29 திசம்பர் 2024 (UTC)Reply
Active Editors எண்ணிக்கையை மாத சராசரியாக 100 எனும் எண்ணிற்கு உயர்த்தும் இலக்கு சிறப்பாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் குறைந்தது 100 பேருக்கு பயிற்சிகள் தந்து அவர்களை புதிய பயனர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்வோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:42, 2 சனவரி 2025 (UTC)Reply
  • குறுங்கட்டுரைகளைப் படைக்கும் புதுப்பயனர்களையும், அவர்களின் கட்டுரைகளின் தரத்திற்கேற்ப, அவர்களின் பேச்சுப் பக்கத்தில் அவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துங்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாது, கட்டுரைகளின் எண்ணிக்கை மற்றும் தரமும் உயரும். -- பொதுஉதவி (பேச்சு) 13:41, 2 சனவரி 2025 (UTC)Reply
  • வைக்கப்படும் இலக்கு எட்டப்படக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இலக்கு மிகச் சிறிதாக இருந்தால் நீண்டகாலப் பயன் இருக்காது. புதுப்பயனர்களுக்கு பங்களிப்பு அளவுக்கு ஏற்ப ஏதும் ஊக்குவிப்பை/ அல்லது பாராட்டை சிறப்பிப்பை செய்வதும் அவர்களை சமூக முன்னிலையில் அறிவிப்பதும் ஊக்குவிக்கலாம். சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:19, 4 சனவரி 2025 (UTC)Reply
Return to the project page "கூகுள்25".