விக்கிப்பீடியா பேச்சு:சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024

முதல் கலந்துரையாடல்

தொகு

நிகழ்விற்கான ஏற்பாடுகள் குறித்து, மே மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக உரையாடல் நடைபெறும். - SelvasivagurunathanmBOT (பேச்சு) 15:45, 23 மே 2024 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்

தொகு

சி.ஐ.எஸ் அமைப்பினருக்கு இந்த நிகழ்வு குறித்து இன்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அவர்களின் பதில் அடிப்படையில் மேற்கொண்டு திட்டமிடுவோம்.

தகவல் பகிர்வு: @Neechalkaran, Balu1967, கி.மூர்த்தி, சத்திரத்தான், Sridhar G, TNSE Mahalingam VNR, Arularasan. G, and சா அருணாசலம்: -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:35, 3 சூன் 2024 (UTC)Reply

சி.ஐ.எஸ் அமைப்பினரின் பதில் அடிப்படையில், மேல்-விக்கியில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகவல் பகிர்வு: @Neechalkaran, Balu1967, கி.மூர்த்தி, சத்திரத்தான், Sridhar G, TNSE Mahalingam VNR, Arularasan. G, and சா அருணாசலம்: - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:16, 5 சூன் 2024 (UTC)Reply

நல்லது. சி.ஐ.எஸ் அமைப்பினரின் பதிலின் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 15:37, 5 சூன் 2024 (UTC)Reply

சி.ஐ.எஸ் அமைப்பின் பவன், நிதேசு ஆகியோருக்கு இணையவழிக் கூட்டம் வாயிலாக திட்டம் குறித்து விளக்கப்பட்டது. 08-சூன்-2024 அன்று பிற்பகல் 2.15 முதல் 3 மணி வரை இக்கூட்டம் நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியா குமுகாயத்தைச் சேர்ந்த பயனர்கள் @கி.மூர்த்தி, சத்திரத்தான், Sridhar G, and Selvasivagurunathan m: இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முன்மொழிவு செய்யப்பட்ட திட்டத்தை இணைந்து நடத்துவதற்கு சி.ஐ.எஸ் அமைப்பு தனது ஒப்புதலைத் தந்தது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:40, 9 சூன் 2024 (UTC)Reply

பயன்கள்

தொகு
  1. தொடர்பங்களிப்பாளர்கள் நேரில் அல்லது இணையம் வழியே இணைந்து குவியம்கொண்டு பணியாற்ற இயன்றது.
  2. செப்டம்பரில் நடைபெறவிருக்கும் 2-நாள் நிகழ்வை சிறப்பாக நடத்திட ஒரு முன்னுதாரணமாக இந்த நிகழ்வை எடுத்துக்கொள்ளலாம்.
  3. AU-KBC அமைப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இருக்கும் இணைவாக்கத்தை மேம்படுத்த இந்த நிகழ்வு உதவியது.

படிப்பினைகள்

தொகு
  1. பணி செய்தலை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள நிகழ்வுகளில், தொடர்பங்களிப்பாளர்கள் மட்டும் கலந்துகொள்வதே சரியானதாக இருக்கும். புதிய பயனர்களை கலந்துகொள்ளச் செய்தல் பயனளிக்காது. நல்லெண்ண நோக்கத்தில் கலந்துகொள்ளச் செய்தாலும், அவர்களுக்கென நேரத்தை செலவிட வேண்டியதாக அமைந்துவிடும். இதனால், இலக்கை அடைய இயலாத சூழ்நிலை ஏற்படும்.
  2. பதிவு செய்தல் அல்லது தேர்ந்தெடுக்கப்படுபவர்களை 20% கூடுதல் எண்ணிக்கை வரை அனுமதிக்கலாம். எடுத்துக்காட்டாக, 10 பேர் என திட்டமிடுகிறோம் எனில், 12 பேர் பதிவுசெய்யும் வரை காத்திருக்கலாம்; அல்லது 12 பேர் வரை தேர்ந்தெடுக்கலாம். பதிவு செய்த பிறகு / தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வர இயலாமல் போகும் வாய்ப்புகள் 20% உள்ளன. ஒருவேளை 12 பேரும் வந்துவிட்டால், சமாளிக்கக்கூடிய வகையில் செலவுத் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்.
  3. குறைவான எண்ணிக்கையில் நடக்கும் நிகழ்விற்கும் கூகுள் படிவம் வாயிலாக பதிவுசெய்தலை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலமாக, திட்டமிடலில் சிக்கல்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள இயலும்.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

Return to the project page "சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024".