விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கித் தமிழாக்கம்
தானியங்கித் தமிழாக்கங்களை உடனுக்குடன் நீக்குவதற்கான கொள்கைப் பரிந்துரையாக இப்பக்கத்தை முன்வைக்கிறேன். மாற்றுக் கருத்துகள், நடைமுறைகளைப் பரிந்துரைக்கலாம். ஒரு வார காலத்துக்குப் பின், தமிழ் விக்கிப்பீடியாவின் முறையான கொள்கையாகக் கருதப்படும்--இரவி 12:03, 17 சூலை 2011 (UTC)Reply
முந்தைய பகுதியில் குறிப்பிட்டது போல கூகுள் மொழி பெயர்ப்புக் கருவியின் ஆல்ஃபா மொழிபெயர்ப்பு சேவையின் ஆல்ஃபா பதிப்பு வெளியாகியுள்ளதால், அதைப்பயன்படுத்தி, தரக்குறைவான (குப்பை என்றே சொல்லலாம்) கட்டுரைகள் வரத்தொடங்கியிருக்கின்றன. அவற்றைக் கண்டவுடன் நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:35, 22 சூன் 2011 (UTC)Reply
- My name is Natkeeran. - என் பெயர் Natkeeran உள்ளது.
- I am from Toronto. நான் டொராண்டோ இருக்கிறேன்.
- The weather is great today. காலநிலை இன்று நன்றாக உள்ளது.
- My mother tounge is Tamil. என் தாய்மொழி தமிழ் உள்ளது.
--Natkeeran 13:06, 22 சூன் 2011 (UTC)Reply
- நிர்வாகிகள் கண்டவுடன் நீக்கலாம். மேலும், இந்தக் கட்டுரைகளைக் கண்டறிய வார்ப்புரு:கூகுள் ஆல்ஃபா எனும் வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடுப்பிணைப்பியிலும் இணைத்துள்ளேன். பயனர்கள், இதனைப் பயன்படுத்தி கட்டுரையை நீக்கக் கோரலாம். மிகச்சிறிய கட்டுரைகளை நிர்வாகிகளும் பயனர்களும் உரைதிருத்தி வடிவாக்க முயன்றாலும் சரி, அது அவரவர் விருப்பம். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:08, 22 சூன் 2011 (UTC)Reply
- கொஞ்சம் சிரிக்க -- என்ன_கொடுமை_சரவணன்_இது? கட்டுரையின் மொழிபெயர்ப்பு இதோ #EKSI #meta ஸ்ரீகாந்த் 18:58, 22 சூன் 2011 (UTC)Reply
பல வேடிக்கையாக இருந்தாலும், பிழையான சொற்களைச் சொடுக்கினால், எளிதாகத் திருத்த வசதி உள்ளது எடுத்துக்காட்டாக நற்கீரன் தந்த "I am from Toronto" என்பதற்கு "நான் டோரன்டோவிலிருந்து வருகிறேன்" என்றும் தரச்செய்யலாம். நான் "I went to Kovai" என்று இட்டேன் அது "நான் கோவை செய்ய சென்றேன்" என்கிறது!! ஆனால் "செய்ய" என்னும் சொல்லைச் சொடுக்கினால், தொங்குபட்டியலில் "க்கு" என்பதும் வருகின்றது, அதனைத் தேர்ந்தால் "நான் கோவை க்கு சென்றேன்" என்று மாற்றிக்கொள்கின்றது ஆனால் அதற்குத் தேவைப்படும் உழைப்பு பயனுடையதா என்பது முகனையான வேறு ஒரு கேள்வி. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து ஒருசிலவற்றை ஒற்றி ஒட்டி மொழிபெயர்த்துப் பார்த்தேன். சரியாக இல்லைதான், எனினும் ஒரு கட்டுரையை நேரடியாக மொழிபெயர்க்க எவ்வளவு நேரம் ஆகும், இந்த மொழிப்பெயர்ப்பியைப் பயன்படுத்தி அதைத் திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கணித்தால் பயனுடையதாக இருக்கும். இது வெப் 2.0 போன்று தரவுகள் உள்ளீடு செய்ய வசதி உள்ள ஒன்று. எனவே போகப்போக முன்னேறுமா என்றும் பார்க்க வேண்டும். த.வி-யைப் பொருத்த அளவிலே, இப்படியான மொழிபெயர்ப்புகளை, மிகவும் கவனமாகக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். உடனுக்குடன் நீக்கவும் தேவைப்படலாம். --செல்வா 22:14, 23 சூன் 2011 (UTC)Reply
- ஆங்கில விக்கிப்பீடியாவில் bluebird என்னும் கட்டுரையின் ஒரு பகுதி இதில் குற்றம் குறைகள் பல இருந்தாலும், நொடிப்பொழுதில் இதனை ஆக்கித் தருகின்றது. இது தரமுடைய ஒரு கலைக்களஞ்சிய கட்டுரையாக கட்டாயம் இருக்காது என்பது வியப்பில்லை, ஓரளவுக்கு என்ன ஏது என்று அறிவிக்கும் ஒரு "மொழிபெயர்ப்பாய்" உள்ளது. எடுத்துக்காட்டாக நீலப்பறவை பற்றிய உருசிய மொழிக் கட்டுரையின் ஒரு பத்தி என்ன சொல்லுகின்றது என்று பார்கக்லாம். இது தெளிவாக இல்லாமல் இருந்தாலும், ஓரளவுக்கு எதைப்பற்றி என்று சிறிது அறிய உதவுகின்றது. மேலும், "தலைவலி", "குப்பை" போன்ற மதிப்பீடுகள் செய்வதும் சரியான முறையாகாது (என் கணிப்பில்). "நிறைவுதரவில்லை", இன்னும் "மிகவும் வளர்ச்சியடைய வேண்டிய நிலை" என்பது போன்று கூறுவது நல்லதாக இருக்கும் என நினைக்கின்றேன். பலர் உழைப்பில் உருவான ஒரு மொழிபெயர்ப்பி இது. அதற்காக உழைத்தவர்களைப் பழிப்பது போன்ற மதிப்பீடுகள் செய்வது சரியல்ல என்பது என் தனிக்கருத்து (நம்முடைய வலைப்பதிவில் என்னவேண்டுமானாலும் சொலல்லாம்). (தன்னிலை விளக்கம்: நான் கூகுள் பங்குதாரன் அல்லன் :) )--செல்வா 22:35, 23 சூன் 2011 (UTC)Reply
- ”மேலும், "தலைவலி", "குப்பை" போன்ற மதிப்பீடுகள் செய்வதும் சரியான முறையாகாது”. என்னைப் பொறுத்தவரை இம்மதிப்பீடுகள் மிகப் பொறுத்தமானவையே. ஆல்ஃபா பதிப்பு மென்பொருள் கொண்டு செய்யப்படும் ஆக்கங்கள் எந்தவொரு திட்டத்திலும் பயன்படுத்த தகுதியற்றவை. சோதனைக் களத்தில் வேண்டுமென்றால் குப்பையென்று சொல்ல முடியாது. ஆனால் விக்கிப்பீடியாவின் பொதுவெளி தளத்தில் அவற்றை குப்பையென்றே கருத வேண்டும், குப்பைகளைப் போலவே நடத்த வேண்டும். “தலைவலி” என்பதற்கு கடந்த சில நாட்களின் நீக்கல் பதிவினைப் பாருங்கள் சுமார் 50 கட்டுரைகள் இரு நாட்களில் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன (அவற்றுள் சில முடிந்தவர்களால் மீட்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன). உழைப்பவர்களைப் பழிப்பதன்று நோக்கம். அவர்கள் தான் ஆல்ஃபா பதிப்பென்று தெளிவாகச் சொல்லிவிட்டார்களே. இம்மதிப்பீடுகள் முழுக்க முழுக்க தமிழ் விக்கியின் சூழலில் இருந்தே வைக்கப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியா இயங்கு சூழலில் - இக்கட்டுரைகளின் தரம் குப்பையே, இவற்றால் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தலைவலியே. இதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. நான் இங்கு வைக்கும் விமர்சனங்கள் தனிப்பட்டவை அல்ல, விக்கிப்பீடியாவுக்கு பொருத்தமானவற்றையே வைக்கிறேன். (தன்னிலை விளக்கம்: நான் கூகுள் எதிர்ப்பாளனோ வெறுப்பாளனோ அல்ல)
- கூகுள் வழி மொழிபெயர்ப்பு முழுமையாக இல்லாமல் பல பிழைகளுடன் இருந்தாலும் செல்வா கூறுவது போல் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பின் வழியாக பிற மொழி ஆக்கங்கள் குறித்து ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் இது போன்று மொழிபெயர்ப்பி உதவியுடன் இடம் பெறும் கட்டுரைகளை உடனுக்குடன் நீக்கம் செய்யாமல் “இது மொழிபெயர்ப்பி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரை. இதில் கருத்து, நடை, எழுத்துப் பிழைகள் போன்றவை இருக்கலாம். இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவிற்கேற்ப மாற்றம் செய்வதற்காக குறைந்தது 10 நாட்கள் இடம் பெற்றிருக்கும். இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தால் அதன் பின்னர் இக்கட்டுரை நீக்கப்படும்” என்கிற அறிவிப்பைக் கொண்ட வார்ப்புருவை வெளியிடலாம். இது நல்ல பயனுடைய சில கட்டுரை இடம் பெறுவதற்கு உதவியாக இருக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:27, 24 சூன் 2011 (UTC)Reply
- பொறுத்து நீக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மொழிபெயர்ப்பியோ கையினால் உருவானதோ, ஒரு தரமற்ற குப்பைக் கட்டுரையை எவ்வாறு கையாளுவாமோ அதே போலத் தான் கையாள வேண்டும். பத்து நாட்கள் பொறுப்போமென்பது மேலும் மேலும் இது போன்ற கட்டுரைகள் குவிவதையே ஊக்குவிக்கின்றன. கடந்த சில நாட்கள் கிடைத்த அனுபவங்களை கொண்டு பார்க்கும் போது, இக்கருவியினால் உருவாக்கி அப்படியெடியே படியெடுத்துப் போட்டுப் பழகியவர்கள் மீண்டும் கட்டுரையை உள் சென்று திருத்தும் வேலைகளில் ஈடுபதுவதில்லை. மீண்டும் மீண்டும் புதிய கட்டுரைகளை உருவாக்கும் வேலைகளில் தான் ஈடுபடுகின்றனர். முற்காலச் சோழர்கள் கட்டுரையில் நீக்கல் பதிவைப் பாருங்கள். கட்டுரையாளரின் பேச்சு பக்கத்தையும் பாருங்கள். இப்பழக்கத்தை ஊக்குவித்தால் மேலும் நூற்றுக்கணக்கில் தரமற்ற கட்டுரைகள் குவிவதைத் தவிர வேறு எதுவும் விளையாது. நிருவாகிகள் மற்றும் உரை திருத்துனர்களின் பணிச்சுமை அதிகரிப்பதுடன் புதிய கட்டுரைகளின் தரமும் குறைகிறது. கருவி ஆல்ஃபா பதிப்பு (பீட்டாவுக்கும் கீழ், சோதனைக் கூடத் தரம்). ஒரு வேளை கருவி முன்னேறி பொது வெளியீடு அளவுக்கு தரமாகி கூகுள் அதனை வெளியிட்டு அதிலிருந்து கட்டுரைகள் உருவானால், திருத்தலுக்கு நேரமளிப்பது பற்றி யோசிக்கலாம். நீக்கபட்ட கட்டுரைக்கு ஒரு எ.கா கீழே தரப்பட்டுள்ளது. இது போன்றவைக்கு பத்து நாட்கள் இடமளிப்பதென்பது தேவையற்றது.
“ | கூட்டாட்சி, மாநில, மற்றும் உள்ளூர்: இந்தியாவில் கல்வி மூன்று நிலைகளில் இருந்து வரும் கட்டுப்பாடு மற்றும் நிதி பொது துறை மற்றும் தனியார் துறை, வழங்கப்படுகிறது. .... நாளந்தா பல்கலைக்கழகம் உலக கல்வி பழமையான பல்கலைக்கழக கணினி இருந்தது. மேற்கத்திய கல்வி பிரிட்டிஷ் ராஜ் நிறுவப்பட்ட இந்திய சமூகத்தில் ingrained அமைந்தது....மச் குறிப்பாக உயர் கல்வியில் முன்னேற்றம், அறிவியல் ஆராய்ச்சி பல்வேறு பொது நிறுவனங்கள் புகழப்பட்டார்....கல்வி வளர்ந்து முதலீட்டு போதிலும், அதன் மக்கள் தொகையில் 25% இன்னும் படிப்பறிவில்லாத உள்ளது.... இந்தியாவின் கல்லூரி வயதில் மக்கள் தொகையில்%, தேசிய ஆசிரியர் பதவிகளுக்கு 25% காலியாக உள்ளது, மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் 57% அல்லது ஒரு எஜமான் அல்லது PhD பட்டம் இல்லாதது. | ” |
- கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பி, பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பதற்கான தொழில் நுட்ப முயற்சிகளில் ஏற்பட்ட ஒருபடி முன்னேற்றம் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், தற்போதைய நிலையில், கூகிள் கருவியின் மொழிபெயர்ப்பு, முறையான மொழி பெயர்ப்பொன்றைத் தானாகச் செய்வதற்கு ஏற்றதாக இல்லை. இதனால், இக் கருவி மூலம் மொழிபெயர்ப்புச் செய்து தமிழ் விக்கியில் கட்டுரைகளை இட விரும்புபவர்கள் உடனடியாகவே திருத்தங்களைச் செய்து விடவேண்டும். பின்னர் செய்யலாம் என்று விட்டுவிட்டால் அது நடக்காது என்றே கூறிவிடலாம். இக் கருவியில் சொற்களைச் சொடுக்கி மாற்றம் செய்ய வழியிருப்பது உண்மையானாலும், பல சமயங்களில் திருத்தம் செய்வது நேரடியாக மொழிபெயர்ப்பதிலும் கடினமானதாகக் காணப்படுகிறது. அத்துடன் தவியில் இட்ட பின்னர் மாற்றம் செய்வதற்குக் கருவியின் உதவி கிடைக்காது. கருவியால் மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரைகளில் பல இடங்களில் பொருள் விளக்கம் அறவே இல்லாமல் இருக்கிறது. எனவே திருத்தம் செய்ய விரும்புபவர்கள் பிற மொழியில் உள்ள மூலக் கட்டுரையையும் பார்த்துப் புரிந்துகொண்டு ஒவ்வொரு வசனமாகச் சரி செய்ய வேண்டும். இது வேலையைப் பல மடங்கு கூட்டுகிறது. இதனால் இத் திருத்த வேலைகளைப் பிற பயனர்கள் செய்ய விரும்ப மாட்டார்கள். 10 நாட்கள் நேரம் கொடுத்தாலும், அவ்வாறான கட்டுரைகளைத் திருத்துகிறார்களா என்று கவனிப்பது எல்லாம் பிற பயனர்களுடைய நேரத்தைத் தேவையில்லாமல் செலவு செய்வதற்கே வழி வகுக்கும். எனவே அத்தகைய கட்டுரைகளை உடனடியாக நீக்குவதே நல்லது. --மயூரநாதன் 06:41, 24 சூன் 2011 (UTC)Reply
திருத்தம் செய்யப்படாமல், கூகுள் தமிழாக்கத்தை அப்படியே இட்டுள்ள கட்டுரைகளை உடனுக்குடன் நீக்க வேண்டும். ஒரு பயனர் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவாரெனில் இரண்டு கட்ட பேச்சுப்பக்க எச்சரிக்கைக்குப் பின் பயனர் கணக்கைத் தற்காலிகமாக முடக்கலாம்--இரவி 07:31, 24 சூன் 2011 (UTC)Reply
- தனிநபர் எழுதியதோ, மொழிபெயர்ப்பி வழியாக வந்ததோ, எப்படியாகினும் நமது குறைந்த அளவு தரத்தையும் நடையையும் கொண்டிராவிட்டால் நீக்கிவிடலாம் என்ற மயூரநாதனின் கருத்துடன் ஒப்புகிறேன். நாளடைவில் தானியங்கி மொழிபெயர்ப்பியின் தரம் மேம்பட்டால் ஏற்கலாம். இப்போதைய நிலையில் தானியங்கி மொழிபெயர்ப்பில் உள்ள வழுக்களைத் திருத்துவது பல மடங்கு வேலையைக் கூட்டுகிறது. அத்துடன் தவறான முற்காட்டாகவும் அமைந்து விடும். -- சுந்தர் \பேச்சு 09:17, 24 சூன் 2011 (UTC)Reply
- தலைவலி, குப்பை போன்ற சொற்பயன்பாடுகளை நாம் இயன்றவரை தவிர்க்க வேண்டுமென்றே கருதுகிறேன், சோடாபாட்டில். அதே தகவலை நீங்களே இரண்டாவது பத்தியில் வேறு சொற்களால் விளக்க முடிந்துள்ளதே. இது கூகுள் என்ற நிறுவனமானாலும் தனிநபர் பங்களிப்பானாலும் பொருந்தும். விரைவு நீக்கல் காரணங்களில் கூட அந்தக் காரணத்தை இயன்றவரை தவிர்க்க வேண்டும். அதைக் காட்டிலும் தரமற்ற நடை, இலக்கணப்பிழை மலிவு, போன்று சொன்னால் உணர்வடிப்படையில் இல்லாமல் கருத்தடிப்படையிலும் (objective) குறிப்பாகவும் (specific) இருக்கும். நல்லிணக்கமும் மேம்படும். (உங்கள் கருத்து எந்தக் காழ்ப்புணர்வும் இல்லாமல் ஏற்பட்டது என்பதை அறிவேன்.) -- சுந்தர் \பேச்சு 09:25, 24 சூன் 2011 (UTC)Reply
- மன்னிக்கவும் சுந்தர். குப்பை + தலைவலி என்பன கூகுளின் முந்தையத் திட்டத்தை விவரிக்கையின் தொடர்ச்சியாக இதில் புகுந்து விட்டன. கூகுளை பொறுத்தவரை ஆங்கில விக்கியில் சொல்லப்படும் ”நல்லெண்ண நம்பிக்கை ஒரு தற்கொலை உடன்பாடு அல்ல” (AGF is not a suicide pact) என்பதையே என் நிலைப்பாடாக ஆகியுள்ளது. நீங்களும் செல்வாவும் சொல்வதை கருத்தில் கொண்டு (கொள்கையளவில் உடன்பாடு இல்லையெனினும்) இத்துடன் இப்பேச்சினை முடித்துக் கொள்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 15:53, 24 சூன் 2011 (UTC)Reply
- உங்கள் எரிச்சலுக்கான காரணம் புரிகிறது. இங்கு AGF அடிப்படையில் அல்ல objectivity பொருட்டே அவ்வாறு வலியுறுத்தினேன். உங்களுக்கு முழு உடன்பாடு இல்லாத போதிலும் ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றி. -- சுந்தர் \பேச்சு 18:01, 24 சூன் 2011 (UTC)Reply
- கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகளைத் திருத்துவது என்பது திருத்துபவருக்கு மனதளவில் களைப்பையும் சலிப்பையும் உருவாக்கக் கூடியதே. இத்தகைய கட்டுரைகள் தக்க வைக்கப்படுமாயின் அது நமது தரத்தைக் குறைத்து விடும். ஆகவே இக்கருவியை உருவாக்கி கட்டுரைகளை உருவாக்குவோர் இவற்றை நேரடியாகப் பொதுவெளியில் இடாமல் பயனர் வெளியில் வைத்துக் கொண்டால் நல்லது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 14:01, 24 சூன் 2011 (UTC)Reply
தற்போதைய முன்மொழிவை முழுமையாக வரவேற்கிறேன் + ஆதரிக்கிறேன். இதற்கான என் காரணங்கள் பின்வருமாறு:
கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி ஆல்ஃபா பதிப்பு வெளியாகி இந்த ஒரு மாத காலத்தில் சுமார் 100 கட்டுரைகள் இவ்வாறு உருவாக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. தானியங்கி மொழிமாற்றம், தமிழ் தெரியாத பிற மொழியினர், தமிழ் சரியாக எழுதத் தெரியாதவர்களால் கட்டுரைகளை உருவாக்கப் பயன்படுத்தப் படுகிறது. இத்தகு கட்டுரைகளை உருவாக்கியோர் மேம்படுத்துவதில்லை. அடுத்தடுத்து இதே போன்ற கட்டுரைகளை உருவாக்குவதில் தான் முனைப்பு காட்டுகிறார்கள். இதனை உடனனுக்குடன் நீக்காவிடில் அது அவர்களை உற்சாகப்படுத்தும். பின் இத்தகு கட்டுரைகள் அதிகமாகி நம்மால் சமாளிக்க முடியாத நிலைக்குப் போகும்.
- தானியங்கியால் உருவாக்கப்படும் கட்டுரைகள் உடனடியாக (ஒரிரு மணி நேரங்களில்) சரி செய்யப்படா விட்டால் நீக்கப்பட வேண்டும். நிருவாகிகள் அல்லாத பிற பயனர்கள், விரைவு நீக்கல் வேண்டுகோளைச் சேர்க்கலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் இவ்வாறு சேர்க்கப்படும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படலாம்.
- தானியங்கியால் தொடர்ச்சியாக கட்டுரைகளை உருவாக்கும் பயனர்கள் மூன்று முறை எச்சரிக்கை செய்யப்பட்டு அதற்கு மேலும் தொடர்ந்து அவ்வாறு கட்டுரைகளை உருவாக்கினால் தற்காலிகமாகத் தடை செய்யப்படலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:14, 17 சூலை 2011 (UTC)Reply