விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்
தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பின்னணியில் உள்ளோரின் பல்வகைப் பின்னணியை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையாகவும் இப்பக்கம் தொகுக்கப்படுகிறது. இந்த பங்களிப்பாளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான குறைந்தபட்ச தேவைகளாக பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறேன்:
- குறைந்தது மூன்று மாதம் முனைப்புடன் தொடர்ச்சியாகப் பங்களித்தல்.
- 2 முதற்பக்கக் கட்டுரைகளுக்காவது மிகப் பெரும் பங்களிப்பை அளித்தல் (அல்லது) தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி, பராமரிப்புக்கு மிகப் பெரும் பங்களித்தல்.
- முதற்கட்டமாக நிருவாகிகள் அல்லாத பங்களிப்பாளர்களுக்கு முன்னுரிமை தரலாம். (தன் விளம்பர விமர்சனங்களைத் தவிர்க்கும் பொருட்டு)
பங்களிப்பாளர்கள் குறைவாக இருக்கும் நிலையில் மேலும் கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டாம் என நினைக்கிறேன் :) இவ்விதிகளுக்குப் பொருந்தும் எவரையும் சேர்க்கலாம். பங்களிப்பாளர் அறிமுகம் ஒரு பத்தி அளவு இருக்கலாம். இதில் பங்களிப்பாளர் வாழும் இடம், தொழில், கல்விப் பின்னணி, ஆர்வப் புலம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். படத்தை இணைப்பதற்கும், விக்கிப்பீடியா பயனர் பக்கத்தில் தெரிவிக்கப்படாத பிற தனிப்பட்ட தகவல்களைச் சேர்ப்பதற்கும் பங்களிப்பாளர் ஒப்புதல் கட்டாயம். இந்தப் பட்டியலில் இருந்து ஒவ்வொருவராக முதற்பக்க அறிமுகத்தில் இடம்பெறச் செய்யலாம்.--ரவி 14:17, 1 அக்டோபர் 2009 (UTC)
ரவியின் கருத்தில் (//முதற்கட்டமாக நிருவாகிகள் அல்லாத பங்களிப்பாளர்களுக்கு முன்னுரிமை தரலாம்.//) எனக்கும் உடன்பாடே.--சிவக்குமார் \பேச்சு 19:27, 1 அக்டோபர் 2009 (UTC)
- ஆம், எனக்கும் இதில் உடன்பாடு உண்டு. -- சுந்தர் \பேச்சு 04:05, 2 அக்டோபர் 2009 (UTC)
- அப்படியே செய்யுங்கள். எனக்கும் இதில் உடன்பாடே. எந்த ஒழுங்கில் இடம்பெறச் செய்வது என்பதற்கு ஒரு முறை இருந்தால் நல்லது. மயூரநாதன் 04:38, 2 அக்டோபர் 2009 (UTC)
- சிறந்த பங்களிப்பாளர்களுக்கு 'நன்றி' தெரிவிப்பதில் உடன்பாடில்லை..இது தமிழர் ஒவ்வொருவரின் கடமை.இருப்பினும் ஆர்வத்துடன் பங்காற்றுபவர்களுக்கு இவ்வகை ஊக்கமூட்டல் தேவையே.அவ்வகையில் நானும் உடன்படுகிறேன்.
- தவிர எனது பெயரை கண்டு மகிழ்ந்தபோதிலும், மயூரநாதன் கூறியுள்ளவகையில் ஓர் ஒழுங்குமுறை ஏற்படுத்தப்படுமானால்,அதுவும் தானியங்கியாக இருக்குமானால், சிறப்பாக இருக்கும். காட்டாக இவ்வாரத்தில்/இம்மாதத்தில் கூடுதல் கட்டுரைகளை துவக்கியவர்,கூடுதல் தொகுத்தல் பணியாற்றியவர்,கூடுதல் படிமங்களை மேலேற்றியவர் என தரவுகளின் அடிப்படையில் தெரிந்தெடுக்கலாம்.தரமான ஆக்கங்களை அடையாளம் காண குறைந்த திருத்தங்களைக் கொண்ட பக்கங்களை யாத்தவர்,கூடுதல் முதற்பக்க கட்டுரைகள் கொடுத்தவர் எனவும் அறிமுகப்படுத்தலாம்.
- இவ்வாறு தரவுகளின் அடிப்படையில் தேர்வு அமையுமானால்,நிருவாகிகளாயுள்ள பங்களிப்பாளர்களையும் சேர்ப்பதில் எந்த விமரிசனமும் எழாது.
- உங்கள் சிந்தனைகளுக்காக.....--மணியன் 08:15, 2 அக்டோபர் 2009 (UTC)
மணியன், நன்றி என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்தப் பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. நன்றி என்பதற்குப் பதிலாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் என்று மாற்றி இருக்கிறேன். "சிறந்த பங்களிப்பாளர்" என்ற பெயரையும் "பங்களிப்பாளர் அறிமுகம்" என்று மாற்றுவது நடுநிலைத் தன்மை உடையதாக இருக்கும். நீங்கள் சொல்வது போல் தரவுகளின் அடிப்படையில் இதனைச் செய்வது விமர்சனத்தைத் தவிர்க்கும். ஆனால், தற்போது இருப்பதே கொஞ்சம் பயனர்கள் என்பதால் இது போன்ற கணக்கெடுப்பில் நேரம் செலவழிக்க வேண்டாமே என்று நினைக்கிறேன். நாளடைவில் செய்யலாம். அறிமுகத்தில் அவர்கள் செய்த பணியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தவிர, கணக்கெடுப்புகளில் நீண்ட நாள் பங்களிப்பாளர்கள், முனைப்பான பங்களிப்பாளர்களே எப்போதும் விஞ்சக்கூடும் :) புதியவர்கள் சிறு முயற்சி செய்தாலும் அவர்களை அறிமுகப்படுத்தி மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைய விரும்புகிறேன். விக்கிப்பீடியாவுக்கு மிக அருமையாகப் பங்களித்த சிலரே கூட தங்களுக்கு எந்த விதமான அங்கீகாரம், பாராட்டும் கிடைப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்கள். குறிப்பாக, பதிவுலகில் இருந்து வருபவர்கள். பங்களிப்பாளர் அறிமுகம் பல சமூக இணையத் தளங்களிலும் உள்ளது தான் என்பதால், நாம் இங்கு அந்த நடைமுறையைக் கடைப்பிடிப்பது இயல்பாக இருக்கும்.
காட்சிப்படுத்தும் முறை குறித்து:
- பங்களிப்பாளர் பற்றிய அறிமுகம் முதற்பக்க செய்திப் பத்திக்கு மேலே 10 வரி அளவில்.
- பங்களிப்பாளர் விரும்பினால் அவர் ஒப்புதலுடன் அவரது புகைப்படத்தையும் சேர்க்கலாம்.
- 2 வாரங்களுக்கு ஒரு முறை புதிய பங்களிப்பாளர் அறிமுகம்.
- பங்களிப்பாளர்களை அகரவரிசைப்படுத்தி மேல் இருந்து ஒருவரும் கீழ் இருந்து ஒருவருமாக மாற்றி மாற்றி காட்சிப்படுத்தலாம். (a, z, b, y... அ, ன், ஆ, ற்..)--ரவி 09:07, 2 அக்டோபர் 2009 (UTC)
விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்
தொகுமுதற்பக்க அறிமுக வரிசை
தொகுஇது வரை அறிமுகமானவர்கள்:
- profvk
- சந்திரவதனா
- திசம்பர் 2 வரை - அராப்பத்
- திசம்பர் 2 முதல் 16 வரை - நிரோசன் சக்திவேல்
- திசம்பர் 17 முதல் திசம்பர் 31 வரை - கே. எசு. பாலச்சந்திரன்
- சனவரி 12, 2010 முதல் சனவரி 27, 2010 வரை - த.உழவன்
- சனவரி 28 முதல் பெப்ரவரி 12 வரை - மகிழ்நன்
- பெப்ரவரி 13 முதல் பெப்ரவரி 28 வரை - தானியல் பாண்டியன்
(மேற்கண்ட தேதிகளைச் சரியாகப் பின்பற்ற முடியவில்லை. மன்னிக்கவும். எனினும் இதே வரிசையில் ஓரளவு சம கால நிலையில் அனைவருக்குமான அறிமுகத்தைக் காட்சிப்படுத்தினோம். இனி வரும் அறிமுகங்களைத் தேதி தவறாமல் செய்கிறேன்.)
வருங்கால அறிமுகங்கள்:
- மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை - ஹிபாயத்துல்லா
- மார்ச் 16 முதல் மார்ச் 31 வரை - தேனி. எம். சுப்பிரமணி
- ஏப்ரல் 1 முதல் 15 வரை - கலாநிதி
- ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 வரை - Werklorum
- மே 1 முதல் மே 15 வரை - கலை
--ரவி 18:54, 11 ஜனவரி 2010 (UTC)
பரிந்துரைகள் தேவை
தொகுஅடுத்தடுத்த மாதங்களுக்கான முதற்பக்க விக்கிப்பீடியர் அறிமுகத்தில் யார் யாரை அறிமுகப்படுத்தலாம்? உங்கள் பரிந்துரைகளைத் தெரிவியுங்கள். நன்றி--ரவி 07:07, 7 ஏப்ரல் 2010 (UTC)
இங்குள்ள வரிசைப் பட்டியல் அடிப்படையில் அடுத்தடுத்த முதற்பக்க அறிமுகங்களுக்கான பரிந்துரைகள்:
சூன் 1 - சூன் 15 - மு. மயூரன்
சூன் 16 - சூன் 30 - இராஜ்குமார்.
சூலை 1 - சூலை 15 - மயூரேசன்
சூலை 16 - சூலை 30 - வத்சன்
ஆகத்து 1 - ஆகத்து 15 - Srunika Rajkumar
ஆகத்து 16 - ஆகத்து 30 - சிந்து
செப்டம்பர் 1 - செப்டம்பர் 15 - Ganeshk
--ரவி 11:41, 26 ஏப்ரல் 2010 (UTC)
நிருவாகப் பயனர்களின் அறிமுகம்
தொகுதற்போது பரிந்துரையில் உள்ள பயனர்களின் அறிமுகம் முடிந்த பின், முதற் பக்கத்தில் நிருவாகப் பயனர்களின் அறிமுகம் தரலாமா? குறைந்தது, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்திலாவது அனைத்துப் பயனர்களின் விவரங்களைத் தருவதால் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய முழுமையான அறிமுகத்தைத் தர இயலும்.--ரவி 13:19, 16 மே 2010 (UTC)
- நிருவாகப் பயனர்களும் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள்தானே அவர்களையும் தாராளமாக அறிமுகப்படுத்துங்கள். விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் செயலாக இந்த அறிமுகம் பகுதி தொடரட்டும்... அவர்கள் வழியாக மேலும் பலர் விக்கிப்பீடியாவிற்கு வர வழி கிடைக்கட்டும். --Theni.M.Subramani 17:53, 16 மே 2010 (UTC)
இற்றை தேவை
தொகுஇப்பக்கத்தில் உள்ள பலரின் படிப்பு, பணி, இருப்பிடம், படிமம் போன்ற விவரங்கள் இற்றைப்படுத்த வேண்டியுள்ளது. கவனித்துத் திருத்த வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 12:27, 12 சூலை 2013 (UTC)
நீக்கம்
தொகுஇப்பட்டியலில் இருந்து என்குறிப்புகளை நீக்க விரும்புகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 17:25, 31 அக்டோபர் 2013 (UTC)
- உழவன், நீக்க விரும்பினால் நீங்களே செய்யலாம். ஆனால், ஏன் நீக்க விரும்புகிறீர்கள் என்று அறியலாமா? முன்பு போல் அல்லாமல் இப்பொழுது நீங்கள் வெளிப்படையாக பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறீர்கள். பலரும் உங்களை அறிந்திருக்கிறீர்கள். உங்கள் பங்களிப்புகள், உங்கள் நேர்காணலை காட்சிப்படுத்துவது மற்ற பயனர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, தொடர்ந்து உங்கள் அறிமுகத்தை இப்பட்டியலில் தர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:56, 5 நவம்பர் 2013 (UTC)
- என்னுள் ஊக்கம் இருப்பதால், புதியவர்களுக்காக இப்பகுதியில் இருந்து விலக எண்ணுகிறேன். நேர்காணலில் என் பயனர் பெயர் இல்லாதது, என்னுள் வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதில் விக்கிமீடிய ஆவணங்களில் எனது பயனர் பெயர் தவறாமல் இடம் பெற விரும்புகிறேன். அனைவரது பயனர் பெயர்களும் விடுபட்டது, சரியான வழிமுறையாகப் படவில்லை. --≈ த♥உழவன் ( கூறுக ) 16:19, 6 நவம்பர் 2013 (UTC)
- உழவன், இங்கு இன்னும் 1000 அறிமுகங்கள் கூட முறையாகப் பகுத்து காட்சிப்படுத்தலாம். இட நெருக்கடி ஏதும் இல்லை. அனைவரது பயனர் பெயர்களையும் எழுத்து வடிவில் குறிப்பிட்டிருக்கலாம் அல்லது பேசும் போதே குறிப்பிடச் சொல்லி இருக்கலாம். அடுத்த முறை இதைக் கவனித்துச் செய்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:03, 16 நவம்பர் 2013 (UTC)
- என்னுள் ஊக்கம் இருப்பதால், புதியவர்களுக்காக இப்பகுதியில் இருந்து விலக எண்ணுகிறேன். நேர்காணலில் என் பயனர் பெயர் இல்லாதது, என்னுள் வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதில் விக்கிமீடிய ஆவணங்களில் எனது பயனர் பெயர் தவறாமல் இடம் பெற விரும்புகிறேன். அனைவரது பயனர் பெயர்களும் விடுபட்டது, சரியான வழிமுறையாகப் படவில்லை. --≈ த♥உழவன் ( கூறுக ) 16:19, 6 நவம்பர் 2013 (UTC)
மொஹம்மத் இஜாஸ்
தொகுஇதில் மொஹம்மத் இஜாஸ் என்னும் தடை செய்யப்பட்ட பயனரை பற்றிய தகவல்கள் உள்ளது?? அவரைப் பற்றி கட்டாயம் இருக்க தான் வேண்டுமா??கவனிக்க:@Kanags and AntanO:-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:42, 30 செப்டம்பர் 2019 (UTC)
- தவறில்லை. இப்பயனர் தடை செய்யப்பட முன்னர் சிறந்த முறையில் பங்களித்து வந்த போது அறிமுகப்படுத்தப்பட்டார். சில தனிப்பட்ட காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டார். அதற்காக அவரது பங்களிப்பை நாம் மறுதலிக்க முடியாது.--Kanags \உரையாடுக 08:44, 1 அக்டோபர் 2019 (UTC)
- விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:08, 3 அக்டோபர் 2019 (UTC)
2022 பிப்ரவரி முதல் அறிமுகங்கள்
தொகுஆலமரத்தடியில் உரையாடியதனடிப்படையில் இனி வரும் சில மாதங்களில் பங்களிப்பாளர் அறிமுகங்களைச் செய்யவுள்ளேன். மேலே விவாதித்த விதிகளுக்குட்பட்டு, நெடுநாள் பயனர்களுக்கு முன்னுரிமை தந்து பங்களிப்பாளர்களை இரு வாரத்திற்கொருவர் என முன்பக்கத்தில் அறிமுகம் செய்கிறேன். மற்றவர்களும் பரிந்துரைகளை முன்வைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:15, 3 மார்ச் 2022 (UTC)