விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி
விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் எனும் பக்கம் மிகவும் நீண்டு போகாமல் இருக்கும் நோக்கில், இந்தப் பக்கத்தை துவக்கினேன். தேவைப்படும் மாற்றங்களை செய்து கொள்ளவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:27, 30 அக்டோபர் 2015 (UTC)
பரிந்துரைகள்
தொகு- பயிற்சி நடைபெறும் இடங்களில், பயிற்சியாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஏனெனில் துப்புரவுப் பணி கடுமையாக உள்ளது; ஒரு குறையாக இதனைக் குறிப்பிடவில்லை. பரிந்துரையாகக் கருதவும்!
- பொருத்தமான வார்ப்புருவினை இடுமாறு அனைவருக்கும் பயிற்றுவித்தல் நன்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:12, 30 அக்டோபர் 2015 (UTC)
புதிய வார்ப்புரு...
தொகுவார்ப்புரு:பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி-2015 என்பதனை பயன்படுத்தலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 30 அக்டோபர் 2015 (UTC)
@ பார்வதி... இந்தப் பயிற்சி, பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது (கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அல்ல) எனும் எனது ஊகம் சரிதானே?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:27, 30 அக்டோபர் 2015 (UTC)
- ஆம் சிவகுரு இது பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:31, 31 அக்டோபர் 2015 (UTC)
@ பார்வதி... தெளிவுபடுத்தியமைக்கு நன்றி! தேவைப்படின் வார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி-2015 என்பதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:13, 31 அக்டோபர் 2015 (UTC)
வார்ப்புருவை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் பயன்படுத்தலாம். பாராமரிப்பு வார்ப்புரு அல்லாத வார்ப்புருக்கள் கட்டுரையின் முன்னே இருப்பது கட்டுரையை கேள்விக்குட்படுத்துவது போல் உள்ளது. அல்லது வார்ப்புருவைத் தவிர்த்து [[பகுப்பு:பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி]] என்ற பகுப்பைப் பயன்படுத்தினாலே போதுமானது.--AntanO 03:49, 3 நவம்பர் 2015 (UTC)
- ஆம், பயிற்சியின் விளைவான தரவுகளைக் கண்காணிக்க த.இ.க. ஊராட்சித் திட்டம் போல ஒரு மறை பகுப்பு இட்டால் போதுமானது. வார்ப்புருக்களை கட்டுரை வெளியிலோ பேச்சுப் பக்கத்திலோ இட வேண்டாம். --இரவி (பேச்சு) 07:20, 3 நவம்பர் 2015 (UTC)
பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
தொகு@ பார்வதி.
- கல்விசூழலில் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். விக்கியிப்பீடியாவில் உள்ள ஒரு தலைப்பு முழுமையானதாகவோ (Comprehensive) அல்லது உறிதிப்படுத்தப்பட்டதாகவோ (Authoritative) இருக்கும் என்றில்லை. குறிப்பாக அரசியல் மற்றும் சமயம் தொடர்பான தலைப்புகள்.
- மேற்கோள்கள்/மூலங்கள், மேற்கோள்களை மதிப்பிடுதல் தொடர்பான விழிப்புணர்வும் பயிற்சியும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவை. (http://guides.lib.berkeley.edu/evaluating-resources)
- விக்கிப்பீடியாவை இணையத் தமிழ், தமிழ் தட்டச்சு, crowd-sourced, open source, wiki, citation, plagiarism, information/Web/online literacy.போன்ற தலைப்புக்களை மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் ஒரு ஊடகமாகப் பயன்படுத்தலாம்.
- விக்கிப்பீடியாவை ஆய்வின் ஒரு தொடக்கப் புள்ளியாக மட்டும் பயன்படுத்த வேண்டும். விக்கியில் குறைபாடுகளை விளங்கிப் பயன்படுத்த வேண்டும். உரையாடல் பக்கங்களின் பயன்பாட்டையும் விளக்க வேண்டும்.
- https://en.wikipedia.org/wiki/Wikipedia:FAQ/Schools
- http://www.educationworld.com/a_tech/how-to-use-wikipedia-for-academics.shtml
பயிற்சி அளிப்போருக்கான சில குறிப்புகள்
தொகு- ஒவ்வொருவருக்கும் பயனர் கணக்கு தொடங்கி அவரவர் மணல் தொட்டியில் எழுதப் பயிற்சி அளிக்க வேண்டும்.
- பயனர் கணக்கு உருவாக்க உதவி தேவை என்றால் இங்கு தெரிவியுங்கள். நீங்களே பலருக்கும் பயனர் கணக்கு உருவாக்கும் அணுக்கம் வேண்டும் என்றால் இங்கு விண்ணப்பியுங்கள்.
- மணல் தொட்டியில் ஓரளவு கட்டுரை நல்ல முறையில் வந்தால் கட்டுரை வெளிக்கு நகர்த்தலாம். பகுப்பு:தலைப்புகள் பட்டியல் தரும் தலைப்புகளில் கட்டுரைகள் ஆக்கக் கோரலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கவும் தூண்டலாம்.
- பின்வரும் ஆவணப்படங்களை அவர்களுக்குக் காட்டுங்கள். இது விக்கிப்பீடியா பற்றியும் ஆசிரியர்கள் அதற்குப் பங்களிப்பதைப் பற்றியும் உந்துதல் அளிக்கும்
- விக்சனரி, விக்கிமூலம் ஆகிய திட்டங்களுக்கும் அறிமுகம் தாருங்கள்
- விக்கிப்பீடியா ஒரு இலாப நோக்கற்ற, கூட்டு முயற்சியால் உருவாகும் கலைக்களஞ்சியம் என்பதையும் பதிப்புரிமை குறித்த விவரங்களையும் வலியுறுத்திச் சொல்லுங்கள்.
- ஏதேனும் ஐயம் என்றால் பார்வதி, இரவி முதலியோரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கவனிக்க: @Arulghsr, சக்திகுமார் லெட்சுமணன், Balurbala, Hibayathullah, Srithern, கி.மூர்த்தி, Parvathisri, and Info-farmer:.
நன்றி--இரவி (பேச்சு) 14:38, 18 நவம்பர் 2015 (UTC)
துப்புரவுப் பணி
தொகுமுதற்கட்டப் பயிற்சியின் போது நாம் தெரிவித்த கருத்துகளை உள்வாங்கி ஆசிரியர்கள் முதலில் மணல்தொட்டியில் எழுதிப் பழகி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பயிற்சிகளில் @Parvathisri, Balurbala, Hibayathullah, Srithern, and கி.மூர்த்தி: முதலிய விக்கிப்பீடியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். எனினும், ஆசிரியர்கள் உடனடியாக எழுதிப் பயில தங்கள் பள்ளி, ஊர், உள்ளூர் கோயில் முதலிய தலைப்புகளே கூடுதலாக பயன்படுகின்றன. இவற்றில் பல தலைப்புகள் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை அற்றவை, கலைக்களஞ்சிய முறைமையில் எழுதப்படவில்லை என்பது உண்மையே. எனினும், பயிற்சி நடக்கும் போதே தங்கள் கட்டுரைகள் அழிவதைக் காண்பது மிகுந்த உளைச்சலையும் குழப்பத்தையும் விளைவிப்பதாக பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். இதனையும் கருத்தில் கொண்டு ஓரிரு நாள் காலம் தந்து துப்புரவுப் பணியை மேற்கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கட்டுரைகள் நினைவில் இருந்து தப்பாமல் இருக்க தகுந்த பராமரிப்பு வார்ப்புருக்களை வேண்டுமானால் இட்டு வைக்கலாம். இவை, தங்கள் கட்டுரையில் உள்ள சிக்கல் குறித்துப் புரிந்து கொண்டு பயிற்சியின் போதே அவை பற்றி அறிந்து மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கும். நன்றி. கவனிக்க: @Parvathisri, Rsmn, Info-farmer, Kanags, AntanO, and Nan:--இரவி (பேச்சு) 18:16, 20 நவம்பர் 2015 (UTC)
- ஏற்றுக் கொள்கிறேன். புதிய பராமரிப்பு வார்ப்புரு ஒன்றை உருவாக்கினால் நல்லது.--Kanags \உரையாடுக 21:32, 20 நவம்பர் 2015 (UTC)
- @Ravidreams: கிட்டத்தட்ட 2 வாரங்களாக நான் துப்புரவுப் பணிகளை ஏறக்குறைய கைவிட்டிருந்தேன். மற்றவர்களும் குறித்தளவே செயற்பட்டதாத் தெரிகிறது. இப்போது நான் பார்க்கும் விளைவுகள்.
- இரு வாரங்களுக்கான கட்டுரைகள் பல சுற்றுக் காவலுக்குட்டவில்லை. விளைவு: சான்று அற்ற, விக்கியாக்கம் அற்ற என பல கட்டுரைகள் விடுபட்டுப்போன கட்டுரைகளாகவே போய்விட்டன. திரும்பி இரு வாரங்களுக்கான தொகுப்புக்களைத் தேட முடியாது.
- "தங்கள் கட்டுரைகள் அழிவதைக் காண்பது மிகுந்த உளைச்சலையும் குழப்பத்தையும் விளைவிப்பதாக..." என காரணங்கள் அல்லது சாட்டுக்கள் பல கூறலாம். சரி, இவர்கள் எல்லாம் தற்போது இல்லையே. எத்தனே போர் விக்கயில் பங்களிக்கிறார்கள்? நன்றே செய், அதை இன்றே செய் என்பதே சரியாகவிருக்கும். இரு நாட்கள் என்ன இரு வருடங்கள் கொடுத்தும் சாட்டுப்போக்கு கூறுபவர்களால் பணியைச் சரிவர செய்ய மாட்டார்கள்.
- இவ்வாறான தகுந்த காரணமற்ற கருத்துக்களை முன் வைப்பதை சகலரும் மனதில் கொள்வது உகந்தது.
--AntanO 09:51, 3 திசம்பர் 2015 (UTC)
Antan, கிருட்டிணகிரி மாவட்டத்தில் நடந்த ஆசிரியர்களுக்கான பயிற்சியில் நானும் கலந்து கொண்டேன். முதலில் மணல் தொட்டியில் பயிற்சி செய்யச் சொல்லி என்னவாறான கட்டுரைகளை எழுதலாம், கூடாது என்று தெளிவாக விளக்கப்பட்டது. பயிற்சியின் போதே ஒரு பொருத்தமற்ற கட்டுரையை அழித்துக் காட்டி, "நீங்கள் பொருத்தமற்ற கட்டுரைகளை எழுதினால் நீக்கப்படும், அனைவரது உழைப்பும் வீண்" என்று எச்சரிக்கவும் செய்தேன். அப்படி இருந்தும் கலைக்களஞ்சியத் தேவைக்கு மாறான கட்டுரைள் எழுதப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை என்பது தான் நடைமுறைச் சிக்கல். அதே வேளை, ஒருவரின் கட்டுரை பயிற்சி நடக்கும் போதே அழிக்கப்படும் போதோ வார்ப்புரு இடும்போதோ பயிற்சி பெறுவோர் அனைவரிடமும் ஒரு பதற்றமும் குழப்பமும் தொற்றுவதைக் காண முடிந்தது. இச்சூழல் நிச்சயம் பயிற்சி அளிப்பதற்கு உகந்த சூழல் அன்று. எனவே தான், ஓரிரு நாள் பொறுத்து துப்புரவுப் பணி மேற்கொள்ளலாமே என்று வேண்டினேன்.
உலகெங்கும் நடக்கும் பயிற்சிகளில் 4% பேர் தொடர்ந்து பங்களித்தாலே கூட பெரும் வெற்றி என்றே கருதப்படுகிறது. பயிற்சி பெற்ற 1500 ஆசிரியர்களில் 15 பேர் (1%) தொடர்ந்தால் கூட இம்முயற்சி பயனுள்ளதே என்றே கருதுகிறேன். கீழே சில ஆசிரியர்களை இனங்கண்டு குறித்திருக்கிறோம். WhatsAppல் ஒரு குழு அமைத்து ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு வழி காட்டி வருகிறோம். இவ்வாறான பயிற்சிகள், தொலைநோக்கில் விழிப்புணர்வு கூட்ட உதவும். உடனடியாக என்று பார்த்தால் நாம் எதிர்பார்க்கும் பயன் இருக்காது. குறைந்தபட்சம், அடுத்த முறை இவ்வாறான பயிற்சிகளை அளிக்கும் முன் நாம் எவ்வாறான தயாரிப்புகளுடன் இருக்க வேண்டும் என்பதை இப்பயிற்சி நன்கு உணர்த்தியுள்ளது.
ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முடிந்து போதிய காலம் கொடுக்கப்பட்டுள்ளது. இனி, தாமதப்படுத்தாமல் துப்புரவுப் பணியைத் தொடங்குவோம். இங்கிருந்து ஊராட்சிகள் பற்றிய தானியங்கிக் கட்டுரைகளைத் தவிர்த்து புதிய கட்டுரைகளைக் கண்டு துப்புரவில் ஈடுபட முடியும். --இரவி (பேச்சு) 12:21, 3 திசம்பர் 2015 (UTC)
Antan, சற்று முன் பயனர்:ஞானதீபம் என்னைத் தொலைப்பேசியில் அழைத்துப் பேசினார். அவருடைய பேச்சுப் பக்கத்தில் வார்ப்புருக்களை நீக்க வேண்டாம் என்று நாம் இட்ட அறிவிப்பு புரியாமல் அது என்ன என்று கேட்பதற்காக அழைத்திருந்தார். இவர் கடலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சியின் மூலம் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருக்கிறார். நாம் வரவேற்பு வார்ப்புருவில் இட்ட முகநூல் குழும முகவரியைத் தேடிப் பிடித்து அங்கு நாம் இட்டிருக்கும் தகவலை எல்லாம் படித்து அதில் ஏதோ ஒரு இழையில் நான் இட்டிருந்த என்னுடைய தொலைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்துப் பேசினார். இப்போது அவருக்கு ஒத்தாசைப் பக்கத்தைப் பயன்படுத்த வழிகாட்டியுள்ளேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், நிறைய பயனர்கள் விக்கிப்பீடியாவின் முறைகளைக் கற்றுக் கொண்டு எழுத முனைகிறார்கள். ஆனால், நாம் பயன்படுத்தும் சொற்களும் முறைகளும் அவர்களுக்குப் புரியவில்லை. தன்னுடைய முதல் கட்டுரை நீக்கப்பட்டதாலேயே பங்களிப்பதை நிறுத்தி விட்டேன் என்று பலர் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறார்கள். இதன் காரணமாகத் தான் இயன்ற அளவு காலம் தந்து அரவணைத்துப் போக முனைகிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 15:30, 3 திசம்பர் 2015 (UTC)
- gay, lesbian பற்றி கட்டுரைகள் பற்றி முகநூலில் சிலர் வசை பொழிந்ததை பார்த்தீர்களோ தெரியாது. (அதைக் கட்டுபிடித்தால் விக்கியில் பதிவிடுவேன்) அதைப்பாத்த பின்பே gay, lesbian பற்றி கட்டுரைகளில் தலைப்பு மாற்றத்தில் பங்கு பற்றினேன். முகநூலில் வசை காரண, காரியங்களோடு மிகவும் பொருந்தியிருந்தது. நிராகரிக்க முடியாதபடி உண்மைத்தன்மை இருந்தது. இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் கலைக்களஞ்சியமற்றுக் காணப்படுகிறது. ஆனால் இங்கு கலைக்களஞ்சியமாக்கும் முயற்சி எந்தளவில் உள்ளது. கராணம் ஆயிரம் சொல்லலாம். ஆனால் யார் செய்வது? "இதுவே இறுதி அறிவிப்பு" எனும் வரைக்கும் குறித்த பயனர் அசட்டை செய்து கொண்டிருந்தார். முதலாவது அறிவிப்பிலேயே காரணம் கேட்க அவருக்கு முடியவில்லை போலும். அல்லது, நான் ஒருவன்தான் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க வேண்டுமா? வேறு யாராவது "அரவணைத்துப் போக" முயற்சித்திருக்கலாம். இதற்கு நான் தடையா? என் மீது விமர்சனம் செய்பவர்கள். அதைவிடுத்து செயலில் இறங்கட்டும். அல்லது இங்குள்ள வார்ப்புருக்களை தொடுப்பிணைப்பி போன்ற கருவிகளில் உருவாக்கலாம். en:Wikipedia:Twinkle இக்கருவியை உருவாக்க ஆயத்தம் செய்து கொண்டிருக்கையில் (எ.கா:en:Wikipedia talk:Twinkle/Archive 36#Help needs for localisation, ta.wiki), இங்கு ஏற்பட்ட சில விதண்டா வாதத்தினால் விட்டுவிட்டேன். ஏனென்றால், சிலருக்கு விமர்சணந்தான் செய்ய இயலும். தானும் செய்யாமல் செய்பவனையும் விடமாட்டார்கள். தற்போதைக்கு மேலும் ஒரு வாரங்களுக்கு நான் துப்புரவுப் பணியில் ஈடுபடப் போவதில்லை. பயனர் அரவணைப்பு, துப்புரவு என அவர்கள் செய்யட்டும். நன்றி. --AntanO 16:22, 3 திசம்பர் 2015 (UTC)
- @Ravidreams: காண்க! விக்கிப்பீடியா:அகேகே. தங்களின் துப்புறவுப்பணிகளுக்கு நன்றிகள். எனினும் தங்களிடமிருந்து நான் / (நாங்கள்?) வேண்டுவது துப்புறவுப்பணித் திட்டங்கள் / வழிகாட்டுதல்கள் :) ! - ʋɐɾɯnபேச்சு 15:46, 3 திசம்பர் 2015 (UTC)
தொடர் பங்களிப்பாளர்கள்
தொகுநேரடிப் பயிற்சி முடிந்த பிறகும் புதிய கட்டுரை உருவாக்கம், ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குதல் என்று தொடர்ந்து பங்களிக்கும் ஆசிரியர்கள் பட்டியல். இவர்களின் கட்டுரைகளைக் கவனித்து வேண்டிய உதவிகளை நல்கி ஊக்குவிக்க வேண்டுகிறேன். இன்னும் நிறைய ஆசிரியர்களின் பங்களிப்புகள் தென்படுகின்றன. அவர்களையும் இப்பட்டியலில் இணைக்க வேண்டுகிறேன்--இரவி (பேச்சு) 06:24, 23 நவம்பர் 2015 (UTC)
தொடர் வழிகாட்டல்
தொகுஆசிரியர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் தொடர்ந்து வழிகாட்ட ஒரு WhatsApp குழு உருவாக்கியுள்ளோம். இதில் ஏற்கனவே இது தொடர்பாக களப்பயிற்சி அளித்த விக்கிப்பீடியர்களை இணைத்துள்ளோம். ஆர்வமுள்ள மற்ற விக்கிப்பீடியர்களும் இணைந்து கொள்ள வேண்டுகிறோம். மாவட்டத்துக்கு 2 ஒருங்கிணைப்பாளர்கள், ஆர்வமுள்ள ஆசிரியர்கள் இக்குழுவில் இருப்பர். அவர்களின் ஐயங்களுக்கு நாம் உடனுக்குடன் பதில் தரலாம். பார்வதி, சிறு குறிப்புகளை குரல்பதிவாகப் பகிர்ந்து வருகிறார். இது புரிந்து கொள்ள மிக எளிமையாக இருக்கிறது. --இரவி (பேச்சு) 06:28, 23 நவம்பர் 2015 (UTC)