விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/1975 வரை

பொருளடக்கத்தில் 1952 தொடக்கம் 1959 வரை சேர்க்கப்படவில்லை. ஏனென்று அறியலாமா? - Uksharma3 04:57, 4 அக்டோபர் 2016 (UTC)

அந்த ஆண்டுகளில் அடங்குபவற்றை, மற்ற ஆண்டுகளில் அமைந்துள்ளபடி தந்தால், அது தானாகவே, பொருளடக்கத்தில் வந்து விடும்.--உழவன் (உரை) 05:07, 4 அக்டோபர் 2016 (UTC)Reply
காரணம் ஏதுமில்லை; நான் இன்னமும் பணியை முறைப்படி தொடரவில்லை. தங்களைப் போன்ற அறிஞர்களின் உதவி கிடைத்தால், இத்திட்டம் ஓரளவு முழுமையடையும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 4 அக்டோபர் 2016 (UTC)Reply

திட்டத்தின் பணிகள் குறித்த விளக்கம்

தொகு

திட்டம் 1

தொகு

கட்டுரைகளில் சிவப்பிணைப்பினை நீக்குதல்.

  • உதாரணமாக எல். வி. பிரசாத் குறித்து கட்டுரை இல்லை. ஆனால் விக்கி உள்ளிணைப்பு தரப்பட்டிருக்கும். ஆகவே எல். வி. பிரசாத் எனும் கட்டுரையை உருவாக்க வேண்டும்!
  • உதாரணமாக வி. ராஜாம்மா என்பது சிவப்பெழுத்துக்களில் தெரியும். ஏனெனில் எம். வி. ராஜம்மா எனும் பெயரில்தான் கட்டுரை இருப்பதால். எம். வி. ராஜாம்மா என்பதை எம். வி. ராம்மா என திருத்த வேண்டும்; சிவப்பிணைப்பு சரியாகிவிடும். Y ஆயிற்று
  • இன்னொரு உதாரணம்: சக்கரபாணி என்பது சிவப்பெழுத்துக்களில் தெரியும். ஏனெனில் எம். ஜி. சக்கரபாணி எனும் பெயரில்தான் கட்டுரை இருப்பதால். ஒரு வழி: சக்கரபாணியிலிருந்து எம். ஜி. சக்கரபாணி கட்டுரைக்கு வழிமாற்று (redirect) தர வேண்டும். இது எளிது, ஏற்றுக்கொள்ளத்தக்கதும் ஆகும். இன்னொரு வழி: சக்கரபாணியை எம். ஜி. சக்கரபாணி எனத் திருத்த வேண்டும்!

பயனர்:Selvasivagurunathan m/தமிழ்த் திரைப்படம்/செயல் திட்ட வேலை எனும் இணைப்பில் சில வேலைகள் நடக்கின்றன. அங்கு நேரடியாக உதவி செய்யலாம்; அல்லது அத்தலைப்புகளை எடுத்துக்கொண்டு நீங்களே முழுமையாக கட்டுரையை எழுதி முடிக்கலாம்.

  • எல். வி. பிரசாத் குறித்த கட்டுரை இல்லை. உங்கள் செயல் திட்டத்தில் பயனர்:Selvasivagurunathan m/தமிழ்த் திரைப்படம்/செயல் திட்ட வேலை/எல். வி. பிரசாத் என ஒரு பக்கம் இருக்கிறது. அதையே ஏன் கட்டுரையாக எழுதியிருக்கக் கூடாது? அல்லது அதை இன்னும் விரிவு படுத்தி யாராவது தனிக் கட்டுரை எழுத வேண்டுமா?
  • அதாவது கட்டுரைகளைப் படித்து எங்கெங்கே சிவப்பு எழுத்துகள் இருக்கின்றனவோ அவற்றை சரிபார்த்து இணைப்பு ஏற்படுத்த வேண்டும். கட்டுரை இல்லாவிட்டால், முடிந்தால் கட்டுரையையும் எழுதி இணைப்பு கொடுக்கவேண்டும். சரிதானா?

- Uksharma3 09:39, 4 அக்டோபர் 2016 (UTC)

@பயனர்:Uksharma3... ஆம், தங்களின் புரிதல் சரியானது.

எல். வி. பிரசாத் குறித்த கட்டுரையை மிக அண்மையில் ஆரம்பித்தேன். பயனர்:Selvasivagurunathan m/தமிழ்த் திரைப்படம்/செயல் திட்ட வேலை/எல். வி. பிரசாத் எனும் பக்கம், ஒரு மணற்தொட்டி போன்றதாகும். சிறுகச் சிறுக தகவல்களை சேர்த்து, ஓரளவு வளர்ந்ததும் ஒரு கட்டுரையாக பொதுவெளியில் பதிப்பித்தல் செய்வேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:52, 4 அக்டோபர் 2016 (UTC)Reply

அண்மைக் காலத்தில் செல்வசிவகுருநாதன் துவக்கிய கட்டுரைகள்:

தொகு
  1. பி. எஸ். சிவபாக்கியம்
  2. கே. எஸ். அங்கமுத்து
  3. டி. பாலசுப்பிரமணியம்
  4. எஸ். டி. சுப்பையா
  5. நாகர்கோவில் கே. மகாதேவன்
  6. சி. வி. வி. பந்துலு
  7. பி. கே. சரஸ்வதி
  8. சி. கே. சரஸ்வதி
  9. எம். ஏ. திருமுகம்
  10. எம். வி. ராஜம்மா
  11. எம். டி. பார்த்தசாரதி
  12. ஜி. பட்டு ஐயர்
  13. மாதுரி தேவி
  14. ஆர். பாலசுப்பிரமணியம்
  15. ஏ. கருணாநிதி
  16. குன்னக்குடி வெங்கடராம ஐயர்
  17. புளிமூட்டை ராமசாமி

இந்த 17 கட்டுரைகளில் எவையேனும் முழுமைப் பெற்றிருந்தால் அதற்குக் காரணம் - கனக்ஸ் ஆவார்.

அண்மைக் காலத்தில் செல்வசிவகுருநாதன் துவக்கிய நெறிப்படுத்தல் பக்கங்கள்

தொகு
  1. பாலசுப்பிரமணியம்
  2. ஜெயராமன்
  3. மாயா பஜார்

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:24, 4 அக்டோபர் 2016 (UTC)Reply

திட்டம் 2

தொகு

மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள் சேர்த்தல். அதாவது குறைந்தது ஒரு மேற்கோளாவது கட்டுரையில் இருக்க வேண்டும்.

  • முதற்படியாக, மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளின் பட்டியல் வேண்டும் (ஆண்டுகள் வாரியாக).
  • பட்டியலின் அடிப்படையில், வாய்ப்பு கிடைக்கும்போது... ஒவ்வொரு கட்டுரையாக எடுத்து... மேற்கோள் சேர்க்க முயற்சித்தலே நோக்கம்!
  • தேவைப்படும் பட்டியலைத் தயாரிக்க இந்தப் பக்கம் மிகவும் உதவும்.
  • என்று தொடங்கி, என்பது வரை மொத்தமாக 36 பகுதிகளாக, எம். ஜி. ஆர் மற்றும் அவரின் திரைப்படங்கள் குறித்தான தகவல்கள் உள்ளன. இதனைப் பயன்படுத்தலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:51, 4 அக்டோபர் 2016 (UTC)Reply

உதவிப் பக்கங்கள்...

தொகு
  1. ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரைத் தலைப்புகளை தெரிந்துகொள்ளலாம்.
  2. ராண்டார் கை தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரைகள்
  3. கூகுள் நூல்
Return to the project page "விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/1975 வரை".