விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு

I suggest to identify tasks for this project. If one person try to do everything for an article then we may not be able to make much progress. With the help of a telugu wikipedian we have identified few tasks for this project here. Please reuse that if TA community found it suitable. This is just a suggestion. In case you found a better way of handling this project please share that with me so that I can inform that to other Indic wiki community memebers. Thanks--Shiju Alex (WMF) (பேச்சு) 17:07, 4 மார்ச் 2012 (UTC)

Thank you for the suggestion, we will implement it.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 09:21, 6 மார்ச் 2012 (UTC)

Senthi, Tamil Wikipedia is already mature and we take care of most of the tasks naturally. Tracking them in a micro level like this may just add to the work load of the tiny team--இரவி (பேச்சு) 18:46, 6 மார்ச் 2012 (UTC)

Yes, I agree with you Ravi, but I thought this way is better.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:20, 6 மார்ச் 2012 (UTC)

Pneumothorax தமிழில் என்ன பெயர்? தொகு

w:en:Pneumothorax என்ற இந்த நோய்க்குத் தமிழில் என்ன பெயர் வைக்கலாம்? விக்சனரியில் வளிமார்பகம் என்று இருந்தது. அது அவ்வளவு சரியா என்று தெரியவில்லை. எனவே உங்களிடம் ஆலோசனை கேட்கிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 14:28, 18 சூன் 2012 (UTC)Reply

எனது விளக்கத்தை இங்கே கொடுத்துள்ளேன்: விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்#.7Ethorax தயவு செய்து அங்கேயே உரையாடுங்கள்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:07, 18 சூன் 2012 (UTC)Reply

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொகு

இன்று பயனர்:Wakkie1379 கணக்கிலிருந்து இரு கட்டுரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை இரண்டிலும், வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஏதாவது கூகுள்மொழிபெயர்ப்புப் போன்றதா எனத் தெரியவில்லை. அதனால் ஏனையோரின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 22:19, 9 சனவரி 2014 (UTC)Reply

கருவி உதவி கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுரை என்பதே எனது சந்தேகம். --குறும்பன் (பேச்சு) 22:44, 9 சனவரி 2014 (UTC)Reply

இது இயந்திரத்தை கொண்டு மொழிபெயர்க்கப்பட்டதல்ல என்று பயனர் Jmh649 கலையின் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கட்டுரை உள்ளது தெரியாமல் புதிதாக உருவாக்கியுள்ளனர். [1][2] --குறும்பன் (பேச்சு) 23:51, 9 சனவரி 2014 (UTC)Reply

இதனைப் பற்றி நான் இங்கே கருத்திடுவது மிகப் பொருந்துமென நினைக்கிறேன். முதலில் இது இயந்திர மொழிபெயர்ப்பல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே இரண்டு கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. "கனடா விக்கிமீடியா" ஏராளமான மருத்துவக் கட்டுரைகளை பல்வேறு மொழிகளில் பெயர்ப்பதற்கான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. அவர்களுக்கு ஏற்கனவே தொழின்முறை மொழிபெயர்ப்பாளர்களாக உள்ளோரைக் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விருப்பம் இருந்தது. எனவே அவர்கள் முதலில் என்னைத் தொடர்பு கொண்டனர். நான் அவர்களுக்கு உதவ விரும்பினாலும் மொழிபெயர்ப்பை மற்றொருவரைக் கொண்டு செய்வதாகவும் அதனை உரை திருத்தித் தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் இவற்றுக்கான தமிழ் மொழிபெயர்ப்பின் முதன்மைப் பொறுப்பை எனக்குத் தந்தனர். தடிமன் என்ற கட்டுரை ஏற்கனவே இருப்பதை நான் சுட்டிக் காட்டிய போதிலும் அதன் ஆங்கிலக் கட்டுரையை நன்கு மொழிபெயரக்க வேண்டும் என்பதால் தலைப்பை சற்று மாற்றி இன்னொரு கட்டுரையாக உருவாக்கும் கருத்து ஏற்பட்டது. உண்மையில் அவர்கள் மருத்துவம் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளை முழுமையாக மொழிபெயர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தமையும் இதற்கான இன்னொரு காரணம். எனவே தான் சுப்பிரமணியம் இராமசாமி மொழிபெயர்த்த கட்டுரையை நான் உரை திருத்தினேன். அதனாற்றான் என் பெயரையும் அதில் இட்டிருக்கின்றனர். பின்னர் நான் சற்று வேலைப் பளுவாக இருந்தமையால் பானுமதி மொழிபெயர்த்த கட்டுரையைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. இந்நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் எவரையேனும் தொடர்பு கொள்ளலாமா என்று கனடா விக்கிமீடியா என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தது. எவ்வாறாயினும், திறமையான தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை இருந்ததால் இத்திட்டம் இன்னும் வளராத நிலையில் இருக்கிறது. சிறந்த முறையில் மொழிபெயர்க்கக் கூடிய யாராவது பயனர்கள் இத்தகைய மருத்துவக் கட்டுரைகளை முழுமையாக மொழிபெயர்ப்பதில் பங்கெடுக்க விரும்பினால், நான் அவர்களுக்கு உதவச் சித்தமாயுள்ளேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 04:02, 10 சனவரி 2014 (UTC)Reply

மொழிபெயர்ப்பு முடிந்தவுடன் உரைதிருத்தத்தை செம்மையாக செய்ய வேண்டுகிறேன். சில தொழினுட்ப கட்டுரைகள் புரிந்துகொள்ள கடினமாய் உள்ளன. பெரிய வரிகளை உடைத்து எழுதினால் உதவிகரமாய் இருக்கும். கட்டுரையின் பொருளுக்கு ஏற்ப சில வரிகளை மாற்றி எழுதினாலும் நன்று! கூடுமானவரை எளிய சொற்களை பயன்படுத்த வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:28, 10 சனவரி 2014 (UTC)Reply

பேச்சு:சாதாரண தடிமன் பேச்சுப்பக்கத்தில் நான் எழுதியதை இங்கு பதிகிறேன்.

//இக்கட்டுரையை இரு நபர்கள் இணைந்து ஆக்கியது போல வரலாறு காட்டுகிறது. கட்டுரை ஒரே தொகுப்பில் உருவாகி இருக்கின்றது. இவ்வாறு ஒரே தரத்தில் குறைவான தொகுத்தல்கள் அடங்கி ஒரு முழுமையான கட்டுரை இருப்பது சில சமயங்களில் "மொழிபெயர்ப்புக் கருவி" கொண்டு மொழிபெயர்த்த கட்டுரை என்று எண்ண வாய்ப்புண்டு. ஏற்கனவே இக்காரணங்களால் ஐம்பதாயிரம் கட்டுரைகளைத் தாண்டியும் ஆங்கில விக்கியின் முதற்பக்கத்தில் இருந்து தமிழ் விக்கி நீக்கப்பட்டுள்ளது (More than 50,000 articles: ). அதற்குக் கொடுக்கப்பட்ட காரணங்களில் ஒன்று தமிழ் விக்கிபீடியாவில் "மொழிபெயர்ப்புக் கருவி" கொண்டு மொழிபெயர்த்த கட்டுரைகள் (கூகிள் திட்டம்) நிறைய உண்டு என்று தானியங்கி தெரிவித்ததே. பயனர் Wakkie1379 எனும் பெயரின் கீழ் மூவர் கட்டுரை உருவாக்கி (மொழிபெயர்த்து) இருப்பது தெரிகின்றது. தனித்தனியே பயனர் கணக்குத் தொடங்கி கட்டுரை உருவாக்குவது நன்று.//

மொழிபெயர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இங்கேயே எழுதினால் கட்டுரைகளின் தொகுத்தல் எண்ணிக்கைகள் கூடும். (அவ்வாறு மொழிபெயர்க்கும் கட்டுரைகளுக்கு "வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது" எனும் வார்ப்புருவை இடலாம்) இல்லாவிடின் //Tamil's sole long article was tagged as a machine translation.// என்று இங்கு தெரிவிக்கப்பட்டிருப்பது போன்று பெரும்பாலானோர் எண்ணக்கூடும்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 06:13, 10 சனவரி 2014 (UTC)Reply

இந்தத் திட்டத்தைத் தொடருவதானால், செந்தி கூறியிருப்பதுபோல், கட்டுரையைப் பகுதி பகுதியாகத் தொகுத்தால், கருவிகொண்டு மொழிபெயர்க்கப்பட்டதா என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால் பலருக்கும் இந்தச் சந்தேகம் எழ வாய்ப்புண்டு. அத்துடன் மொழிபெயர்ப்பின்போது, தமிழ்க்குரிசில் கூறியதுபோல், ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்க்காமல் புரியக்கூடிய வசனங்களை ஆக்குதலும் நன்று. மேலும் கட்டுரையை ஆக்குபவர் உள்ளிணைப்புக்களைக் கொடுக்கும்போது, ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தமிழ் விக்கிப்பீடியாவில் என்ன கட்டுரை உள்ளது என்பதனைப் பார்த்து, குறிப்பிட்ட சரியான சொல்லைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், குறிப்பிட்ட துறையில் அதிகளவு தெரிந்திராத ஒருவர் உரைதிருத்தம் செய்ய நேரிட்டால், அது எந்த ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் என்பது புரியாமல்போய், சரியான உள்ளிணைப்புக்களைக் கொடுக்க முடியாமல் போகலாம். சரியான உள்ளிணைப்புக்களைக் கொடுக்க முடியாமல் போனால், அதற்குரிய ஆங்கிலச் சொல்லையாவது அடைப்புக் குறிக்குள் இட வேண்டும். இல்லாவிட்டால், ஹைபர்டென்ஷன் கட்டுரையில் போன்று மிக அதிகமான சிவப்பிணைப்புக்கள் வரக்கூடும்.
//தடிமன் என்ற கட்டுரை ஏற்கனவே இருப்பதை நான் சுட்டிக் காட்டிய போதிலும் அதன் ஆங்கிலக் கட்டுரையை நன்கு மொழிபெயரக்க வேண்டும் என்பதால் தலைப்பை சற்று மாற்றி இன்னொரு கட்டுரையாக உருவாக்கும் கருத்து ஏற்பட்டது. உண்மையில் அவர்கள் மருத்துவம் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளை முழுமையாக மொழிபெயர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தமையும் இதற்கான இன்னொரு காரணம்.//
அப்படி இரு கட்டுரைகள் இருக்குமானால், நாம் எந்தக் கட்டுரைக்கு பிற மொழிக் கட்டுரைகளின் இணைப்பைக் கொடுப்பது? ஏற்கனவே இருக்கும் கட்டுரையை ஒரு பயனர் / அல்லது பல பயனர்கள் இணைந்து எழுதியிருந்தால், அதனைக் கட்டாயம் வரலாற்றுடன் இணைக்க வேண்டும்தானே? அப்போது, தகவல்களையும் இணைக்க வேண்டிய தேவை இருப்பதனால், அது இரட்டிப்பு வேலையாகுமே? எனவே, பயனர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை ஏற்கனவே இருக்குமாயின், அதனை விரிவுபடுத்துவதே சரியென நினைக்கின்றேன். ஆனால், குறிப்பிட்ட அந்தக் கட்டுரை கூகிள்மொழிபெயர்ப்புக் கட்டுரையாக இருக்குமானால், புதிய கட்டுரையின் தொகுப்பு முடிவடைந்ததும், கூகிள்மொழிபெயர்ப்புக் கட்டுரையை நீக்கலாம் என நினைக்கின்றேன் (இந்தத் திட்டம் மூலம் ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரை முழுமையாக மொழிபெயர்க்கப்படும் பட்சத்தில்). ஏனெனில் கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை எப்படி திருத்துவது என்று தெரியாமல் இருக்கின்றோம் :). --கலை (பேச்சு) 08:32, 10 சனவரி 2014 (UTC)Reply

இங்கே இந்தத் திட்டத்தின் கீழ் தமிழில் மூன்று கட்டுரைகள் எழுதப்பட்டதாகக் காட்டுகின்றது. Common cold, Hypertension, Dengue fever. இந்த மூன்று கட்டுரைகளுமே ஏற்கனவே உள்ள கட்டுரைகள்தாம். Common cold, Hypertension இரண்டும் முறையே சாதாரண தடிமன், ஹைபர்டென்ஷன் என்ற பெயர்களில் உள்ளன. ஆனால் அந்த மூன்றாவது Dengue fever கட்டுரை என்ன பெயரில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதெனத் தெரியவில்லை.--கலை (பேச்சு) 11:10, 10 சனவரி 2014 (UTC)Reply

கலையரசி அவர்களே டெங்கு காய்ச்சல் என்ற பெயரில் தமிழில் Dengue fever கட்டுரை உள்ளது.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:13, 10 சனவரி 2014 (UTC)Reply
ஸ்ரீகர்சன்! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டுரை ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரை. நான் கேட்பது, அந்தத் திட்டத்தின் மூலம், Dengue fever க்கு எழுதப்பட்ட கட்டுரை (அது ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தால்).--கலை (பேச்சு) 11:20, 10 சனவரி 2014 (UTC)Reply

இந்தத் [3][4] திட்டத்தைச் செயற்படுத்த முனைந்திருப்பதற்கு நன்றி; மிக்க மகிழ்ச்சி. மேலோட்டமாகப் பார்த்ததில் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது. ஆனால் உரைதிருத்தங்கள் உள்ளன. "ஃபாரிஞ்சிட்டிஸ், புரோங்கிட்டிஸ், எபித்தெலியம் " (கட்டுரை:சாதாரண_தடிமன்) என்று நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுவதற்குப் பதில் அதற்குரிய கலைச்சொல்லை இங்கே யாரிடமாவது கேட்கலாம். மொழிபெயர்க்கும் போது பொதுவான கலைச்சொற்கள் பயன்படுத்தல் முக்கியம்; (virus இங்கே தீநுண்மம் என்று பயன்படுத்தப்படுகையில் Common cold கட்டுரையில் நச்சுயிரி என்று மட்டும் குறிக்கப்படுவது பொதுமை இல்லாததை ஏற்படுத்துகின்றது. ) புதிய கலைச்சொல்லாயின் அடைப்புக்குறிக்குள் அதனது ஆங்கிலச்சொல்லை இடல் சிறந்தது. கூகிள்மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் போன்று (குறிப்பாக மருத்துவக்கட்டுரைகள் ) தோன்றுமிடத்து அவற்றைத் திருத்துவதில் பலனில்லை. கலை கூறியது போல ஏற்கனவே உள்ள கூகுள் தமிழாக்க (மருத்துவக்) கட்டுரைகளைத் திருத்துவதில் சிக்கல்கள் உள்ளன. கூகிள்மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஒவ்வொன்றிற்கும் புதியதாகக் கட்டுரை உருவாக்கலாம் எனும் எண்ணம்தான் ஏற்படுகின்றது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க கட்டுரைகள் உருவாக்கப்படும்போதே பலரின் பார்வைக்குட்படல் நல்லது. இதனால் சிறப்பான கட்டுரைகளை உருவாக்கலாம்.

ஒரு திட்டம் (தமிழ்) விக்கியில் ஆரம்பிக்க வேண்டுமெனின் அதற்கென்று ஒரு பக்கம், பங்கு பற்றும் பயனர்கள், திட்டத்தின் நோக்கம் என்பன தெளிவாகக் கூறப்படவேண்டும். இதே திட்டம் ஏற்கனவே இங்கே தொடங்கப்பட்டு பயனர்களின் நேரமின்மையால் பின்தங்கி உள்ளது. திட்டப்பக்கம்: விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு

ஆங்கில விக்கியில் (https://en.wikipedia.org/wiki/Wikipedia:WikiProject_Medicine/Translation_task_force/People) - Mohammed Fahim (Lead translator), Karthi.dr, Senthi (நான்) ஆகிய மூவரின் பெயர் மட்டுமே உள்ளது. எனவே இங்கும் அங்கும் பங்கு பற்றும் பயனர்களின் விவரம் குறிப்பிடப்படல் வேண்டும். பாஹிம் நீங்கள் முன்னின்று நடத்துவதால் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு பக்கத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய முடியுமா? மேலும் பங்கு பற்றுபவர்களுக்கென்று தனியாக பயனர் பெயர் உருவாக்கி, திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் தேவையானது. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:34, 10 சனவரி 2014 (UTC)Reply

நன்றி செந்தி. இத்திட்டத்தில் வேறு சில சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றையும் நான் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பரிச்சயமில்லை என்பது தெளிவு. எனவே அவர்கள் பயன்படுத்தும் கலைச்சொற்கள் வேறு மூலங்களைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அத்துடன் சிலர் எழுதுகையில் ஏராளமான வடமொழிச் சொற்களைக் கையாள்கின்றனர். ஆனால் நாம் அவற்றை முடிந்தளவு தவிர்த்து தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதை முன்னிறுத்துகிறோமல்லவா. இதனை நான் என்னால் முடிந்தளவு சீர் செய்கிறேன். ஆயினும், கலைச்சொற்களைப் பொறுத்தவரையில் நாம் சில எங்களுக்குள் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி அவற்றைச் சீர் செய்வது தான் சரியென நினைக்கிறேன். இதற்கான சில காரணங்கள் இருக்கின்றன. பங்குபற்றும் தொழின்முறை மொழிபெயர்ப்பாளர்கள் ஏற்கனவே வெவ்வேறு நிறுவனங்களுக்கு மருத்துவம் சார்ந்த தகவல்களை மொழிபெயர்ப்பதில் அனுபவம் உள்ளவர்கள். நானும் கூட கனடா, அவுத்திரேலியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் அரச நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அலுவல் முறை மொழிபெயர்ப்புக்களை வழங்கியிருக்கிறேன். இந்தியாவில் யுனிசெப் போன்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்களுக்காகவும் வழங்கியிருக்கிறேன். இந்நிலையில் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கும் இங்கு பயன்படுத்தப்படும் சொற்களுக்குமிடையில் அடிக்கடி வேறுபாடுகள் எழுகின்றன. தொழின்முறை மொழிபெயர்ப்பாளர்களிடம் நாம் இதைச் சொல்லப் போனால் வேறு குழப்பம் ஏற்படுமென்று அஞ்சுகிறேன். ஆயினும் இத்தகைய இடங்களை நாம் கலந்துரையாடி விக்கிப்பீடியாவுக்குத் தேவையானவாறு மாற்றிக் கொள்ளலாமென்று நினைக்கிறேன். அத்துடன் அண்மைக் கால நிகழ்வுகளைக் கருத்திற் கொள்கையில், ஏனைய மொழிபெயர்ப்பாளர்களுக்கென்று தனிப் பயனர் கணக்கு உருவாக்குவதென்பது சற்றுப் பாரதூரமான வேலை என்று நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 07:51, 11 சனவரி 2014 (UTC)Reply

நன்றி பாஹிம். இந்தத் திட்டத்தின் மூலம் சிறப்பான கட்டுரைகளை உருவாக்க முடியுமானால் நல்லதுதான். நல்ல முயற்சியாக இருக்கும். திட்டத்தில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்ள முடிகின்றது. தமிழ்விக்கியில் பரிச்சயமில்லாதவர்களுக்கு தமிழ்விக்கியில் பயன்படுத்தும் கலைச்சொற்களைப் புரிய வைப்பதில் உள்ள சிரமத்தையும், தமிழ்விக்கியில் நேரடியாக பதிவேற்ற வைக்கும் சிரமத்தையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
சில கருத்துக்கள்.
  • அந்த மொழிபெயர்ப்பாளர்கள் தன்னார்வத்தில் இந்த மொழிபெயர்ப்புத் திட்டத்தில் பங்களிப்பவர்களாயின், அவர்களை தமிழ் விக்கிக்குக் கூட்டி வந்து :), நேரடியாக தமிழ் விக்கியில் எழுதச் செய்வது ஓரளவு இலகுவாக இருக்காதா?
  • அவர்கள் குறிப்பிட்ட திட்டத்தின் கீழேயே செயற்பட்டாலும், நேரடியாக தமிழ் விக்கியில் கொஞ்சம் கொஞ்சமாகப் எழுதுவதால் உரைதிருத்தம் செய்பவர்களுக்கு இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன். எப்படியோ அவர்கள் மொழிபெயர்ப்புக்கென தமது நேரத்தைச் செலவு செய்கின்றார்கள். அந்த நேரத்தை இங்கே தமிழ்விக்கியில் செலவிட்டால் மேலதிக பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
  • கலைச்சொற்களில் ஏற்படும் குழப்பத்தையும், அதனால் உள்ளிணைப்புக்கள் சரிவராமல்போய் சிவப்பிணைப்புக்கள் அதிகம் இருப்பதைத் தவிர்க்கவும்கூட இது உதவும். (மிக நீண்ட கூகிள் மொழியாக்கக் கட்டுரைகளில் மொழிபெயர்ப்பு சரியாக இல்லாமல் இருப்பதுடன், இந்த கலைச்சொல் குழப்பத்தால் வரும் அதிகரித்த சிவப்பிணைப்புக்களும் உரைதிருத்தத்துக்கு உட்படாமல் தேங்கிக் கிடப்பதற்கு ஒரு காரணம் என்பது எனது எண்ணம்.
  • கட்டுரைகளைத் தெரிவு செய்யும்போது, கூகிள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட மருத்துவக் கட்டுரைகளைத் தெரிவு செய்தால், அவை புதிதாக எழுதப்பட்டு, உரை திருத்தப்பட்ட பின்னர், பழைய கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரையை நீக்கிவிடலாமோ? அப்படி நீக்குவது சரியில்லை என்று கருதினால், இத்திட்டத்தில் புதிதாக உருவாகும் கட்டுரை முழுமையாக இருக்கையில், தகவல் இடமாற்றம் எதுவும் செய்யாமல், கூகிள் கட்டுரையுடன் சேர்த்து, வரலாற்றுடன் கூடிய கட்டுரை இணைப்பை மட்டும் செய்யலாம். இவ்வாறான பணியை இந்தத் திட்டத்தில் இணைந்து என்னால் செய்ய முடியும் என நம்புகின்றேன்.
  • ஏற்கனவே தமிழ்விக்கிப் பயனர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்விக்கியில் இருக்கும் ஒரு கட்டுரையாயின் (கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் அல்லாதவை), புதிதாகக் கட்டுரையை ஆக்காமல், இருக்கும் கட்டுரையையே விரிவாக்கம் செய்வதனால், தகவல்களையெல்லாம் இடம்மாற்றி, கட்டுரை இணைக்கும் மேலதிக வேலையைத் தவிர்க்கலாம்.
  • தமிழ்விக்கியில் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் விக்கிப்பயனர்களுக்கு ஆரம்பிக்கும் புதிய கட்டுரைகளுக்கான குறிப்பை அனுப்பி வைத்தால், அல்லது அதனை அறிந்து கொள்வதற்கான சரியான திட்டப்பக்கம் தமிழ்விக்கியில் இருந்தால், அவர்கள் உடனுக்குடன் பார்த்து உரைதிருத்தம் செய்யலாம். அல்லது உள்ளிணைப்புகள் கொடுக்கும் கலைச்சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிக்குள் அப்படியே விட்டு வைத்தால் உரைதிருத்தம் செய்பவர்கள் அதனைப் பார்த்துத் திருத்த முடியும்.
  • ஆனால் கட்டுரைகள் முழுவதுமாக எழுதப்பட்ட பின்னர் ஒரே முறையில் பதிவேற்றம் செய்யப்படுமாயின், மீண்டும் அது பிரச்சனையைத்தான் தரும் என நினைக்கின்றேன்.
//கட்டுரை ஒரே தொகுப்பில் உருவாகி இருக்கின்றது. இவ்வாறு ஒரே தரத்தில் குறைவான தொகுத்தல்கள் அடங்கி ஒரு முழுமையான கட்டுரை இருப்பது சில சமயங்களில் "மொழிபெயர்ப்புக் கருவி" கொண்டு மொழிபெயர்த்த கட்டுரை என்று எண்ண வாய்ப்புண்டு. ஏற்கனவே இக்காரணங்களால் ஐம்பதாயிரம் கட்டுரைகளைத் தாண்டியும் ஆங்கில விக்கியின் முதற்பக்கத்தில் இருந்து தமிழ் விக்கி நீக்கப்பட்டுள்ளது (More than 50,000 articles: ). அதற்குக் கொடுக்கப்பட்ட காரணங்களில் ஒன்று தமிழ் விக்கிபீடியாவில் "மொழிபெயர்ப்புக் கருவி" கொண்டு மொழிபெயர்த்த கட்டுரைகள் (கூகிள் திட்டம்) நிறைய உண்டு என்று தானியங்கி தெரிவித்ததே.//
//மொழிபெயர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இங்கேயே எழுதினால் கட்டுரைகளின் தொகுத்தல் எண்ணிக்கைகள் கூடும். (அவ்வாறு மொழிபெயர்க்கும் கட்டுரைகளுக்கு "வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது" எனும் வார்ப்புருவை இடலாம்) இல்லாவிடின் //Tamil's sole long article was tagged as a machine translation.// என்று இங்கு தெரிவிக்கப்பட்டிருப்பது போன்று பெரும்பாலானோர் எண்ணக்கூடும்.//
என்று செந்தி கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • செந்தி கூறியதைப்போல், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு என்னும் திட்டத்தையே இந்தத் திட்டத்துக்கான தமிழ்விக்கித் திட்டமாகக் கொண்டு செயற்பட முடியும். (எனது பெயரையும் அங்கே இணைத்திருக்கின்றேன் :). எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்.)
  • இறுதியாக, மொழிபெயர்ப்பாளர்கள் வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்திவதை புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் அவ்வாறில்லாமல், தமிழில் சொற்கள் இருக்கும்பொழுதும்கூட, ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் எழுதுவது புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. எ.கா. ஹைபர்டென்ஷன் என்னும் தலைப்பு. தலைப்பிலேயே இவ்வாறிருப்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். தமிழில் மொழிபெயர்ப்பு சரியாக இல்லாத சொற்களாயின், இவ்வாறிருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் தமிழில் இருக்கும்போதே, அவ்வாறு தமிங்கிலத்தில் எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும். செந்தியும் சில எடுத்துக்காட்டுக்களைக் ('ஃபாரிஞ்சிட்டிஸ், புரோங்கிட்டிஸ், எபித்தெலியம்) கொடுத்துள்ளார். மொழிபெயர்ப்பாளர்கள் தாம் அறியாத கலைச்சொல்லாயின், அவற்றை கொஞ்சம் தேடிப்பார்த்து எழுதினால் நல்லது. அல்லது தமிழ்விக்கியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவேற்றினால், இத்திட்டத்தில் இணைந்து கொள்ளும் தமிழ்விக்கிப் பயனர்களாவது அவற்றைச் சரிப்படுத்த முடியும்.
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளினால் ஏற்பட்ட சிக்கல்களை மனதில்கொண்டே இவற்றைச் சொல்கின்றேன். தவிர இந்தத் திட்டத்தின்மூலம் தமிழ் விக்கியில் அதிகளவிலான சிறந்த மருத்துவக் கட்டுரைகளை உருவாக்க முடியும் என்பதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உள்ளது. நன்றி.
--கலை (பேச்சு) 12:29, 11 சனவரி 2014 (UTC)Reply
இந்த விடயம் தொடர்பான உரையாடல் James Heilman, MD இன் பேச்சுப் பக்கத்தில் தொடர்கின்றது. நம்மில் சிலரும் இந்தத் திட்டத்தில் இணைந்து தொழிற்படும்போது, முழுமையான, தகவல்கள் நிரம்பிய நல்ல மருத்துவக்கட்டுரைகளை உருவாக்க முடியுமென நம்புகின்றேன். பாஹிம், கார்த்தி, செந்தி ஆகியோர் ஏற்கனவே திட்டத்தில் உள்ளனர். குறும்பனும், நானும் குறிப்பிட்ட உரையாடலில் உதவுவதாகச் சொல்லியுள்ளோம். நந்தகுமாரும், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவில் பங்களித்து வருவதனால், அவரும் இணைந்துகொள்வார் என நினைக்கின்றேன். பாஹிம்! விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு பக்கத்தில் வேண்டிய மாற்றங்களைச் செய்து, இதனைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியுமா? இந்த உரையாடலை, இங்கே ஒரு குறிப்பை விட்டுவிட்டு, குறிப்பிட்ட நமது திட்டப்பக்கத்திற்கே நகர்த்தலாம் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 12:54, 13 சனவரி 2014 (UTC)Reply

நல்லது கலை. அப்படியே செய்யலாம். இந்த உரையாடலை அப்படியே திட்டப் பக்கத்திற்கு மாற்றி விடுவது நல்லது. நான் வேண்டிய மாற்றங்களைச் செய்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 13:51, 13 சனவரி 2014 (UTC)Reply

பாஹிம்,

  • Wakkie1379 என்ற கணக்கின் மூலம் கட்டுரைகளைப் பதிவேற்றுபவர் யார்? புதியவர் என்றால் அவர் நேரடியாக விக்கிப்பீடியாவில் உரையாட வேண்டும். இல்லை, நீங்கள் பதிவேற்றுகிறீர்கள் என்றால் இதனை பயனர் பக்கத்தில் தெரிவித்து, கட்டுரைகள் தொடர்பான அனைத்து விக்கி நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
  • இப்பணி முழுக்க தன்னார்வமாகச் செயற்படுகிறது என்றால் மற்ற மொழிபெயர்ப்பாளர்களையும் நேரடியாக விக்கியில் செயற்பட வரவேற்பது நன்று. இல்லை, மொழிபெயர்க்க பணம் ஏதும் தரப்படுகிறது என்றால் அதனைப் பற்றிய குறிப்பையும் மேற்கண்ட பயனர் பக்கத்தில் தர வேண்டும். அதன் பிறகு, பணம் பெற்றுக் கொண்டு மொழிபெயர்ப்பது குறித்த கொள்கையை உருவாக்க வேண்டி வரும். நன்றி--இரவி (பேச்சு) 10:56, 21 சனவரி 2014 (UTC)Reply
இரவி, ///பயனர் Wakkie1379 எனும் பெயரின் கீழ் மூவர் கட்டுரை உருவாக்கி (மொழிபெயர்த்து) இருப்பது தெரிகின்றது. தனித்தனியே பயனர் கணக்குத் தொடங்கி கட்டுரை உருவாக்குவது நன்று./// என்று ஏற்கனவே நான் குறிப்பிட்டதைக் கருத்தில் எடுக்க வேண்டுகிறேன். இங்கு ஏற்கனவே இதைப்போன்ற (புன்னியாமீன் விடயத்தில் ) ஒரு சூழல் உருவாகியதால் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன; இதைச் சரியென நடவடிக்கை ஏதுமின்றி விட்டுவிடமுடியாது.--சி.செந்தி (உரையாடுக) 18:59, 21 சனவரி 2014 (UTC)Reply

செந்தி, ஒவ்வொரு பங்களிப்பாளரும் நேரடியாக தனித்தனிக் கணக்கில் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதே நல்ல நடைமுறை. இத்திட்டத்தின் நோக்கு, பன்னாட்டுத் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மட்டுமே மாற்றுப் பரிந்துரையை முன்வைத்தேன். புன்னியாமீன் விடயத்திலும் punniyameenandco என்பது போல் ஒரு கணக்கு தொடங்கி அங்கு அவரது உதவியாளர்கள் மூலம் செய்யும் தொகுப்புகளைச் செய்ய இயலுமா என்று கேட்கப்பட்டது. அவர் அதற்கு உடன்படவில்லை. ஒவ்வொரு பயனர் கணக்குக்கும் ஒரு பயனர் பொறுப்பேற்க வேண்டும். அக்கணக்குக்கும் இன்னொரு கணக்குக்கும் தொடர்பு இருந்தால் அது தெளிவாக்கப்பட வேண்டும். தனியாக இன்னொரு கணக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். நன்றி.--இரவி (பேச்சு) 04:21, 24 சனவரி 2014 (UTC)Reply

விளக்கத்துக்கு நன்றி. --சி.செந்தி (உரையாடுக) 00:53, 25 சனவரி 2014 (UTC)Reply

மொழிபெயர்ப்பு பற்றிய சில கருத்துகள் தொகு

மொழிபெயர்ப்பாளர்கள் நேரடியாக விக்கியில் செயற்படுதல் அவசியமானது. டெங்கு காய்ச்சல் எனும் கட்டுரை ஏற்கனவே இங்கு முழுமை பெற்று முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டதொன்றாகும். இது the Translators without Borders Translation Center பயனர் Banumathy Sridharan அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும், அந்த மொழிபெயர்ப்பு இங்கே பதியப்படவில்லை - காரணம் இங்கு ஏற்கனவே முழுமையடைந்த கட்டுரை இருப்பதே என்று நினைக்கின்றேன். ஆனால், இதற்குரிய http://twb.translationcenter.org/workspace/jobs/view/id/16630 பக்கத்தில் (Username:Jmh649 Password:wikipedia) உள்ள உரையாடல்கள், மேலும் "Done" என்பதற்குப் பதிலாக "live" என https://en.wikipedia.org/wiki/Wikipedia:WikiProject_Medicine/Translation_task_force/RTT-இல் இருப்பது மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையே தமிழ் விக்கியில் உள்ளது எனும் தோற்றத்தைக் கொடுக்கின்றது. இது பிரச்சனை அல்ல; குறிப்பிட்ட பக்கத்தில் live-ஐ done-ஆக மாற்றலாம்; இதைப்போன்று ஏற்படுவதைத் தவிர்க்க "Do Translate" அல்லது "Don't Translate" என்று அங்கே குறிப்பிடப்படுகின்றது.

டெங்கு காய்ச்சல் எனும் நேரடி மொழிபெயர்ப்பு அற்ற கட்டுரைக்கும் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட (டெங்கு காய்ச்சல்) கட்டுரைக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றிய கருத்துகள் தேவையாக உள்ளன. இது மொழி பெயர்க்கப்படும் கட்டுரைகள் தரமானவையா என்பதைத் தீர்மானிக்க உதவலாம்.

சிக்கல் என்னவெனின், மொழிபெயர்ப்பாளர்கள் இங்கே பயனராக இல்லாதவிடத்து அவர்கள் மொழிபெயர்த்த கட்டுரையின் ஆக்குனர் தமிழ் விக்கியில் வேறொரு நபராக இருப்பார். ஒரு காலகட்டத்தில், எடுத்துக்காட்டாக, ஹைபர்டென்ஷன் கட்டுரையை உருவாக்கியவர் Banumathy Sridharan என்று அங்கே பதிந்து இருக்கையில் தமிழ் விக்கியிலோ வரலாற்றுப்பதிவில் வேறு பெயர்கள் இருக்கும். இது இரண்டு தரப்புக்கும் நல்லது அல்ல.

சாதாரண தடிமன் கட்டுரையின் மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கின்றது. இதை மொழி பெயர்த்த பாஹிம் மற்றும் SUBRAMANIAN RAMASWAMY இருவரது பெயர்களும் இந்தக்கட்டுரை தடிமன் கட்டுரையுடன் இணைக்கப்பட்ட பின்னர் வரலாற்றுப் பக்கத்தில் இருப்பது நல்லது.

ஒரு குறிப்பிட்ட கட்டுரையை மொழிபெயர்க்க ஆயத்தமாக இருப்பவர்கள் அக்கட்டுரைக்குரிய கலைச்சொற்களைப் பட்டியலிட்டு சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். வரிக்கு வரி நேரடி மொழி பெயர்ப்பு (மருத்துவக்)கட்டுரையைப் பாழாக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். --சி.செந்தி (உரையாடுக) 20:25, 21 சனவரி 2014 (UTC)Reply

கலை - கருத்துக்கள் தொகு

இந்தத் திட்டத்தில் ஆங்கிலவிக்கி மூலமாக இணைந்திருக்கும் அனைவரும் (Translators Without Boarders உட்பட) முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களே. இதனை நான் Jame Heilman அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். தமிழ்விக்கியில், அவரின் பேச்சுப் பக்கத்தில் அவர் கூறியவற்றில் இருந்தும், அவர்களது திட்டப் பக்கங்கள், TWB space என்பவற்றில் இருந்தும் நான் புரிந்துகொண்டவை.

  • அவர்களது திட்டத்தின்படி, தெரிவுசெய்யும் கட்டுரைகளை முதலில் எளிமைப்படுத்திவிட்டு, பின்னர் மொழிபெயர்ப்பாளர்களிடம் கொடுக்கின்றார்கள்.
  • அவர்கள் ஒரு கட்டுரையை மொழிபெயர்த்து முடித்ததும், TWB space இல் பதிவேற்றுகின்றார்கள். மொழிபெயர்ப்பாளர்களுடனான தொடர்பு TWB space இலேயே நிகழ்கின்றது. அவர்கள் விக்கிப்பீடியாவில் (ஆங்கில விக்கியிலோ அல்லது வேறெந்த விக்கியிலுமோ) எந்தவொரு மாற்றங்களையும் செய்வதில்லை.
  • அதனைப் பின்னர் ஒருவர் குறிப்பிட்ட மொழி விக்கியில் இணைக்கின்றார். அப்படி இணைக்கையில் அந்த இணைப்பை TWB யில் கொடுப்பதுடன், திட்டப்பக்கத்திலுள்ள அட்டவணையில், Live என்று குறித்துவிடுகின்றார். இவ்வாறு இணைப்புக்களை ஏற்படுத்தவே அவர்கள் அந்தந்த மொழிவிக்கிப்பீடியாவில் பரிச்சயம் உள்ளவர்களின் உதவியை நாடுகின்றார்கள்.
  • அவர்களது திட்டப் பக்கத்தில் போய், நாமே எந்தக் கட்டுரைக்கு நமக்கு மொழிபெயர்ப்புத் தேவையில்லை, எது தேவை என்பது போன்ற விபரங்களை, அவர்களது அட்டவணையிலேயே குறிப்பிடலாம். அவர்கள் அதற்கேற்ப செயற்படுவார்கள். அவர்கள் தெரிவு செய்திருக்கும் கட்டுரைகளில் எந்தக் கட்டுரைகளுக்கு மொழிபெயர்ப்புத் தேவை என்பதனை நாமே தீர்மானிக்கலாம். இங்கே இல்லாத கட்டுரைகளுக்கு அங்கே போய் Do translate போட்டிருக்கின்றேன். தேவையில்லாத கட்டுரைகளுக்கு, அங்கே Do not translate என்பதனையும் போட்டால் நல்லது.
  • இதுவரை இத்திட்டத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட 2 கட்டுரைகள், ஏற்கனவே இருந்தும் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தடிமன் கட்டுரை சிறிய கட்டுரையாகவே உள்ளது. அதனை, அவர்களது சாதாரண தடிமன் கட்டுரையிலுள்ள தகவல்களையும் சேர்த்து, வரலாற்றுடன் இணைக்கலாம். தடிமன் என்ற கட்டுரையையே முதன்மையான கட்டுரையாகக் கொள்ளலாம். உயர் இரத்த அழுத்தம் கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை. அதனையும் ஹைபர்டென்ஷன் கட்டுரையையும் எப்படி இணைப்பது என்பதனைச் சரியாகப் பார்த்துச் செய்ய வேண்டும். இங்கே உள்ள டெங்குக் காய்ச்சல் கட்டுரையையும், அவர்கள் மொழிபெயர்த்த கட்டுரையையும் பார்த்துவிட்டேன். அவர்கள் மொழிபெயர்த்த கட்டுரை இங்கே சேர்க்கப்படவில்லையாயினும், தவறாக அங்கெ இணைக்கப்பட்டுள்ளதுடன், Live என்றும் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் விளக்கமாக Jame Heilman அவர்களின் பேச்சுப் பக்கத்தில் போடலாம் (போட்டுவிட்டேன்).
  • Jame Heilman அவர்களின் பேச்சுப்பக்க உரையாடலின்படி, மொழிபெயர்ப்பாளர்கள் விக்கியில் நேரடியாகப் பங்களிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தமக்குரிய TWB space இலேயே பணியைச் செய்கின்றார்கள். அவர்களை நேரடியாக இங்கே பங்களிக்க வைக்க முடியுமா தெரியவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாம். அவர்களது மின்னஞ்சல் முகவரிகளைப் பெற்று வைத்திருக்கின்றேன்.
  • TWB space இல் கட்டுரைகள் நிறைவடைந்ததும், நாம் யாராவது அவற்றை தரவிறக்கம் செய்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக த.வி.யில் பதிவேற்றம் செய்யலாம். அப்படிப் பதிவேற்றும்போது, நமது சொந்தப் பயனர் கணக்கிலிருந்து பதிவேற்றலாம் என்றும், அப்படிப் பதிவேற்றும்போது சுருக்கத்தில், "Translated by xxx from English Wikipedia as part of the collaboration with Translators Without Borders" என்று கொடுக்கலாம் என்றும் கூறுகின்றார்கள். இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால் அப்படிப் போடுவதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.
  • கொஞ்சம் கொஞ்சமாக இங்கே தமிழ் விக்கியில் அவர்கள் கட்டுரையை இணைக்கும்போது. முதலில் சுருக்கத்தில் யாரால், எந்தத் திட்டத்தின் கீழ் மொழிபெயர்க்கப்பட்டது என்பதனைப் போடலாம். இணைத்த பகுதியை முதலில் உரைதிருத்திவிட்டு, அடுத்த பகுதிக்குப் போகலாம். அப்படி உரைதிருத்தம் செய்யும்போது, செய்பவர்களின் பயனர் கணக்கிலிருந்து செய்வதாகவே போடலாம். அந்த உரைதிருத்தும் தொகுப்பிற்கு, அவர்களது பெயரை இணைக்க வேண்டியதில்லை என நினைக்கின்றேன். பின்னர் மீண்டும் அடுத்த பகுதியை எடுத்து இணைத்து, உரைதிருத்தம் செய்யலாம். இவ்வாறே முழுக் கட்டுரைக்கும் தொடர்ந்தால், தமிழ்விக்கிப் பயனர்கள் பங்களிப்புடன் கூடிய கட்டுரையாக உருவெடுக்கும்.
  • இங்கே இந்தத் திட்டப் பக்கத்தில் பங்குபெற்றும் பயனர்கள், முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையை த.வி.க்கு எடுத்து வருவார்கள் என்பதை நமது திட்டப் பக்கத்திலேயே குறிப்பிடலாம். அப்படி எடுத்து வர விரும்புகின்றவர்கள் இந்தத் திட்டப் பக்கத்தில் தமது பெயரை பதிவு செய்யலாம்.
  • கலைச்சொல் விடயத்தில் செந்தி கூறுவதுபோல் எனக்கும் சில தயக்கங்கள் உள்ளது. அவர்கள் பயன்படுத்தும் கலைச்சொற்கள் அதிக வேறுபடுமாயின், நமது வேலையை மேலும் கூட்டிவிடுமோ என அஞ்சுகின்றேன். ஆனால் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்தக் கலைச்சொல் தேர்ந்தெடுத்தலை எப்படி அறிமுகப்படுத்துவது என்பதனை யோசிக்க வேண்டும். அல்லது உரைதிருத்தம் செய்யும்போது, நாமே அந்த கலைச்சொல் மாற்றங்களைச் செய்துவிடலாமா என்பதையும் யோசிக்கலாம்.
  • சில தமிழ் விக்கிப் பயனர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து செயற்பட்டால், இதனை இலகுவாகச் செயற்படுத்த முடியும் என்றே தோன்றுகின்றது. ஏனெனில் அதிகரித்த எண்ணிக்கையில் கட்டுரைகள் வரப் போவதில்லை. மொழிபெயர்ப்பாளர்களும் தமது ஓய்வு நேரத்தில் செயற்படும் தன்னார்வத் தொண்டர்களாக இருப்பதையும், தமிழில் 4 பேரே (பாஹிம் உட்பட) தற்போது இருப்பதையும் எண்ணிப் பார்க்கலாம். --கலை (பேச்சு) 23:25, 21 சனவரி 2014 (UTC)Reply

குறும்பன் தொகு

நான் மொழிபெயர்க்க ஆயத்தமான கட்டுரைகள் : en:Wikipedia:WikiProject Medicine/Translation task force/RTT#Partial rollout A (20) பக்கத்தில் சில கட்டுரைகளை To Evaluate என்று குறித்துள்ளேன். கூகுள் கட்டுரைகளை ஒரு முறை பார்த்து அது நன்றாக உள்ளது என்றால் do not translate என்று மாற்றலாம். சில கட்டுரைகளை அவர்கள் திருத்தி எழுதியுள்ளார்கள் எனவே அதை கவனிக்க வேண்டும். மருத்துவ துறை சார்ந்தவர்கள் அல்லது மருத்துவத்தை நன்கு அறிவந்தர்கள் கூகுள் கட்டுரைகளை சரிபார்த்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.--குறும்பன் (பேச்சு) 18:47, 22 சனவரி 2014 (UTC)Reply

Return to the project page "விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு".