விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/ஆகத்து, 2013
கடுமையான போட்டி நடக்குது... முத்துராமன் Vs நந்தினி... இரவு முழுதும் உறங்காமல், எழுதுகிறார்கள்! இப்ப மணி - சனிக்கிழமை அதிகாலை 3.50! இன்னமும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:21, 30 ஆகத்து 2013 (UTC)
- இந்தப் போட்டியை நானும் விடிய விடிய பார்த்துக் கொண்டு இருக்கிறேன் :) இருவருமே தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதியவர்கள் என்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த இரு மாதங்களில் வென்ற தென்காசி பயில்வானும் களத்தில் இறங்குமாறு விழாக்கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது :)--இரவி (பேச்சு) 22:42, 30 ஆகத்து 2013 (UTC)
- நீங்கள் பார்த்தது சரி தான். இப்போ நேரம் மூணு மணி. இப்பதான் தென்காசியார் களத்தில் குதித்தார்.இன்றே சுமார் பத்துக் கட்டுரைகளை உருவாக்கப்போகிறார் போல் உள்ளதே. ஆக கட்டுரைப்போட்டியில் பங்குபற்றுவோருக்கு ஓர் முக்கிய அறிவித்தல், இறுதிநாளான இன்று களத்தில் குதித்திருக்கும் தென்காசியார் விடிய விடிய முழித்திருந்து கட்டுரை எழுதுவார். ஆகவே அவரை கவனத்தில் கொண்டு கட்டுரைப்போட்டியில் பங்குபற்றுவோர் தங்கள் வேகத்தை அதிகரிக்கவும். இன்றே எழுதி முதல் பரிசையும் வென்றுவிடுவார் கவனம். :) :) (நகைச்சுவைக்காக மட்டும்) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:29, 31 ஆகத்து 2013 (UTC)
வாடா வா. உன்னத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:00, 31 ஆகத்து 2013 (UTC)
- விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:11, 31 ஆகத்து 2013 (UTC)
போட்டி பலமாகத்தான் உள்ளது.தென்காசி சுப்பிரமணியன்யானை விட நந்தினியின் வேகம் தான் பீதி அடைய வைக்கின்றது. முத்துராமன் (பேச்சு) 15:55, 31 ஆகத்து 2013 (UTC) நந்தினி இந்து ஒரே நாளில் 13 கட்டுரைகளை எழுதிமுடித்துவிட்டார்.இன்னும் எழுதிகொண்டிருக்கிறார். முத்துராமன் (பேச்சு) 15:58, 31 ஆகத்து 2013 (UTC)
- போட்டி போட்டுக்கொண்டு கட்டுரைகள் விரிவாக்கப்படுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் புதிய பயனர்களின் ஆர்வம் கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்னும் பல பயனர்கள் பங்குகொள்ள வேண்டும். எனக்கும் போட்டியில் குதிக்க விருப்பம்தான். ஆனால், இளைஞர்களுடன் போட்டிபோட முடியாததால் சற்று விலகி நின்று பார்த்து மகிழ்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 18:29, 31 ஆகத்து 2013 (UTC)
அப்படி எல்லாம் சொல்லி எஸ்ஸாகாக் கூடாது. போன முறை என்னிடம் போட்டியிட்டவர் மணியன். அதனால் களத்தில் முதலாவதாக இப்போதே குதிக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:38, 31 ஆகத்து 2013 (UTC)
- இம்மானுவேல் கண்ட் - போட்டியில் இக்கட்டுரை இருமுறை குறிப்பிடப்பட்டு உள்ளதால், ஒன்று நீக்கப்பட்டுள்ளது--நந்தகுமார் (பேச்சு) 05:08, 1 செப்டம்பர் 2013 (UTC)
சென்ற மாத போட்டியில் ஒரு கட்டுரை விடுபட்டுவிட்டது.அதையும் இணைத்துள்ளேன்.முத்துராமன் (பேச்சு) 16:53, 3 செப்டம்பர் 2013 (UTC)