விக்கிரமங்கலம், அரியலூர்

விக்கிரமங்கலம்[2][3] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட விக்கிரமங்கலம் கிராமமானது, விக்கிரமசோழபுரம் என்று அழைக்கப்பட்டது.[4] சோழ மன்னர்களின் துணை நகரமாகவும், வர்த்தக மற்றும் வாணிப மையமாகவும் திகழ்ந்துள்ளது.[5]

விக்கிரமங்கலம், அரியலூர்
விக்கிரமங்கலம், அரியலூர் is located in தமிழ் நாடு
விக்கிரமங்கலம், அரியலூர்
விக்கிரமங்கலம், அரியலூர்
விக்கிரமங்கலம், அரியலூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°02′43″N 79°13′52″E / 11.0452°N 79.2310°E / 11.0452; 79.2310
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
ஏற்றம்
63.73 m (209.09 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
621701[1]
தொலைபேசி குறியீடு+914329******
அருகிலுள்ள ஊர்கள்அம்பாபூர், சுத்தமல்லி, உடையார்பாளையம்
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
சட்டமன்றத் தொகுதிஅரியலூர்

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 63.73 மீட்டர்கள் (209.1 அடி) உயரத்தில், (11°02′43″N 79°13′52″E / 11.0452°N 79.2310°E / 11.0452; 79.2310) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, அம்பாபூர் பகுதிக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது.

 
 
விக்கிரமங்கலம்
விக்கிரமங்கலம், அரியலூர் (தமிழ் நாடு)

கல்வி

தொகு

இவ்வூரில் நிறுவப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று, இவ்வூருக்கும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் கல்வி சேவை செய்து வருகிறது.[6]

சமயம்

தொகு

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட சோழீசுவரர் கோயில்[7] என்ற சிவன் கோயில் ஒன்று விக்கிரமங்கலம் பகுதியில் சோழர்களின் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இக்கோயிலின் மதில் சுவர் மற்றும் உட்புறப் பகுதிகளில் தீட்டப்பட்ட ஓவியங்கள் காலத்தால் அழிந்து கொண்டிருக்கின்றன.[8] சுப்பிரமணிய சுவாமி கோயில் என்ற முருகன் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.

உசாத்துணைகள்

தொகு
  1. "Pincode of Vikkiramangalam Udayarpalayam Ariyalur District in State of Tamil Nadu, India". CI Bootstrap 3 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-01.
  2. தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம். முனைவர் அ. ஆறுமுகம்.
  3. [1]
  4. "சோழர்களின் அழியாத ஒரு வரலாற்று பகுதியான அரியலூருக்கு போனால் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்! - தமிழ்நாடு" (in ta). https://ibctamilnadu.com/article/best-places-to-visit-in-ariyalur-1687349083. 
  5. [2]
  6. மாலை மலர் (2023-05-01). "விக்கிரமங்கலம் அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி" (in ta). https://www.maalaimalar.com/news/district/ariyalur-news-student-admission-awareness-rally-on-behalf-of-vikramangalam-government-school-603443. 
  7. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-01.
  8. [3]

வெளி இணைப்புகள்

தொகு

விக்கிரமங்கலம்