விஜய் சூப்பர் தொலைக்காட்சி

விஜய் சூப்பர் தொலைக்காட்சி (விஜய் சூப்பர்) என்பது தமிழ் மொழியில் இயங்கும் 24 மணி நேர திரைப்பட கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] இந்த அலைவரிசை ஆகஸ்ட் 25, 2016 ஆம் ஆண்டு அன்று ஸ்டார் இந்தியாவால் சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது.[2] இந்த அலைவரிசை ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேஷன்சு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். விஜய் சூப்பர் தனது உயர் வரையறு தொலைக்காட்சியை டிசம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.

விஜய் சூப்பர் தொலைக்காட்சி
'2016 முதல் 2019 வரையிலான சின்னம்'
ஒளிபரப்பு தொடக்கம் 28 ஆகஸ்ட் 2016
வலையமைப்பு ஸ்டார் இந்தியா
உரிமையாளர் ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேஷன்ஸ்
கொள்கைக்குரல் தூள் சினிமா தினம் தினம்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) விஜய் தொலைக்காட்சி
விஜய் மியூசிக்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
அலைவரிசை 110
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) அலைவரிசை 758 (SD)
அலைவரிசை 759 (HD)
அலைவரிசை 772 (விஜய் சூப்பர்)
அலைவரிசை (விஜய் மியூசிக்)
டிஷ் டிவி (இந்தியா) அலைவரிசை 950
டாட்டா ஸ்கை (இந்தியா) அலைவரிசை 1518 (SD)
அலைவரிசை 1517 (HD)
வீடியோகான் டி2எச் (இந்தியா) அலைவரிசை 548
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) அலைவரிசை 803

இந்த தொலைக்காட்சியில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் மலையாளம், தெலுங்கு, ஹாலிவுட் மற்றும் இந்தி திரைப்படங்களை மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.

வரலாறு தொகு

விஜய் சூப்பர் தொலைகாட்சி ஆரம்பத்தில் ஆண் சார்ந்த பொழுதுபோக்கு அலைவரிசையாக தொடங்கப்பட்டது, மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பழைய தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் மொழிமாற்றுத் தொடர்களை ஒளிபரப்பியது. இது மார்ச் 10, 2019 ஆம் ஆண்டு முதல் புதிய சின்னத்துடன் தூள் சினிமா தினம் தினம் என்ற வசனத்துடன் ஒரு நாளைக்கு 6 திரைப்படங்களை ஒளிபரப்பத் தொடங்கியது.

முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் தொகு

தொடர்கள் தொகு

நிகழ்ச்சிகள் தொகு

  • பிக் பாஸ் தமிழ்
  • சூப்பர் சிங்கர் ஜூனியர்-5
  • காபி வித் அனு
  • பாட்டு பாடவா
  • ஹோம் ஸ்வீட் ஹோம்
  • தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு