விதிசா மக்களவைத் தொகுதி
விதிஷா மக்களவைத் தொகுதி (Vidisha Lok Sabha constituency) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்த 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 1967 முதல் உள்ளது. இத்தொகுதி விதிஷா மாவட்டம், ராய்சேன் மாவட்டம் மற்றும் செஹோர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது. இந்த மக்களவைத் தொகுதி 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அவைகள்: விதிஷா சட்டமன்றத் தொகுதி, போஜ்பூர் சட்டமன்றத் தொகுதி, சாஞ்சி சட்டமன்றத் தொகுதி, சில்வானி சட்டமன்றத் தொகுதி, பசோடா சட்டமன்றத் தொகுதி, புத்னி சட்டமன்றத் தொகுதி, இச்சாவர் சட்டமன்றத் தொகுதி மற்றும் கதேகான் சட்டமன்றத் தொகுதி ஆகும்.
விதிஷா | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மக்களவைத் தொகுதியின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
தற்போது | ரமாகாந்த் பார்கவா |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1967 |
ஒதுக்கீடு | பொதுத் தொகுதி |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
சட்டமன்றத் தொகுதிகள் | விதிஷா சட்டமன்றத் தொகுதி போஜ்பூர் சட்டமன்றத் தொகுதி சாஞ்சி சட்டமன்றத் தொகுதி சில்வானி சட்டமன்றத் தொகுதி பசோடா சட்டமன்றத் தொகுதி புத்னி சட்டமன்றத் தொகுதி இச்சாவர் சட்டமன்றத் தொகுதி கதேகான் சட்டமன்றத் தொகுதி |
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணி & இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் நிறுவனரான ராம்நாத் கோயங்கா இத்தொகுதிலிருந்து வெற்றி பெற்றவர் ஆவார்.
விதிஷா மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வெற்றியாளர் | அரசியல் கட்சி | ||
---|---|---|---|---|
1967 | பண்டிட் சிவ சர்மா | ஜன சங்கம் | ||
1971 | ராம்நாத் கோயங்கா | |||
1977 | ராகவ்ஜி | ஜனதா கட்சி | ||
1980 | பிரதாப் பானு சர்மா | இந்திரா காங்கிரஸ் | ||
1984 | ||||
1989 | ராகவ்ஜி | பாரதிய ஜனதா கட்சி | ||
1991 | அடல் பிகாரி வாச்பாய் (லக்னோ தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்) | |||
1991* | சிவராஜ் சிங் சௌகான் | |||
1996 | ||||
1998 | ||||
1999 | ||||
2004 | ||||
2006* | ராம்பால் சிங் | |||
2009 | சுஷ்மா சுவராஜ் | |||
2014 | ||||
2019 | இரமாகாந்த் பார்கவா[1] |
- 1991 & 2006 ஆண்டுகளில் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு