வினோஜ் பி. செல்வம்

இந்திய அரசியல்வாதி

வினோஜ் பி. செல்வம் (Vinoj P. Selvam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். இவர் தற்பொழுது தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவராக உள்ளார்.[1]

வினோஜ் பி. செல்வம்
2020 இல் வினோஜ் பி. செல்வம்
தமிழக மாநில பாஜக இளைஞரணித் தலைவர்
பதவியில்
சூன் 2016 – தற்பொழுது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1986
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி, தொழிலதிபர்

வாழ்க்கை தொகு

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகனாக 07 சூலை 1986 ஆம் நாள் பிறந்தார்.[சான்று தேவை] இவரது தந்தை தமிழ்நாடு வாணியர் பேரவையின் தலைவராக உள்ளார்.[சான்று தேவை] இவர் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள டி. ஏ. வி மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.[சான்று தேவை] அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்ட படிப்பை படித்தார். இவர் சென்னை செக்கர்ஸ் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ரோகிணி ஹோட்டல் நிர்வாக இயக்குனராக உள்ளார்.[2]

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் 2007 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். 2007 இல் தமிழக பாஜக தென் சென்னை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார், பின்பு சனவரி 2010 முதல் சூலை 2012 வரை தமிழக பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினராகவும், சூலை 2012 முதல் சூலை 2015 வரை தமிழக மாநில இளைஞரணி செயலாளராகவும், சூலை 2015 முதல் சூன் 2016 வரை இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளராகவும், சூன் 2016 முதல் தற்பொழுது வரை மாநில இளைஞரணித் தலைவராகவும் இருந்து வருகின்றார்.[3][4][5]

தேர்தல்கள் தொகு

2011 உள்ளாட்சி தேர்தல் தொகு

2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் பொது வார்டு 110 இல் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டார், 13289 (48.57%) மொத்த பதிவான வாக்குகளில் 933 (7.02%) வாக்குகளை பெற்று வைப்புத் தொகை இழப்பை பெற்றார்.[6]

2021 சட்டமன்றத் தேர்தல் தொகு

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 : துறைமுகம்[7][8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பி. கே. சேகர் பாபு 59,317 58.88% +18.52
பா.ஜ.க வினோஜ் பி. செல்வம் 32,043 31.81% +18.99
மநீம எம். ஏ. கிச்சா ரமேஷ் 3,763 3.74% புதியது
நாம் தமிழர் கட்சி சே. ப. முகம்மது கதாபி 3,357 3.33% +2.47
நோட்டா நோட்டா 913 0.91% -1.11
அமமுக பி. சந்தான கிருஷ்ணன் 775 0.77% புதியது
வெற்றி விளிம்பு 27,274 27.07% 22.44%
பதிவான வாக்குகள் 100,737 57.31% 1.92%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 37 0.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 175,770
திமுக கைப்பற்றியது மாற்றம் 18.52%

2024 மக்களவைத் தேர்தல் தொகு

வரவிருக்கும் 2024 இந்திய பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளராக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. More people to join BJP: Youth wing president. The Hindu. 03 Sep 2020. https://www.thehindu.com/news/cities/Madurai/bjp/article32517047.ece. 
  2. BJP youth wing rally in Chennai today. DECCAN CHRONICLE. 07 Aug 2017. https://www.deccanchronicle.com/nation/politics/070817/bjp-youth-wing-rally-in-chennai-today.html. 
  3. "மக்களவை தேர்தல்.. மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்கொள்ளும் பாஜக வேட்பாளர் - யார் இந்த வினோஜ் பி செல்வம்?". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2024-04-12.
  4. "1978 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பாரதிய ஜனதா இளைஞர் அணி". பாரதிய ஜனதா கட்சி - தமிழ்நாடு. பார்க்கப்பட்ட நாள் 2024-04-12.
  5. "புதிதாக இணைந்தோருக்கு முக்கியத்துவம்: தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு". Hindu Tamil Thisai. 2022-05-06. பார்க்கப்பட்ட நாள் 2024-04-12.
  6. "உள்ளாட்சித் தேர்தல்கள் 2011, மாநகராட்சி தேர்தல் முடிவுகள்" (PDF). தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். p. 41. Archived from the original (PDF) on 2024-04-12.
  7. "harbour Election Result". பார்க்கப்பட்ட நாள் 24 Jul 2022.
  8. "துறைமுகம் சட்டமன்றத் தேர்தல் 2021". தமிழ் ஒன்இந்தியா.
  9. பாலாஜி, சி அர்ச்சுணன்,சே பாலாஜி,சே (2024-03-21). "கோவையில் அண்ணாமலை; தென் சென்னையில் தமிழிசை... பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 2024-04-12.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோஜ்_பி._செல்வம்&oldid=3935890" இலிருந்து மீள்விக்கப்பட்டது