வெண்டெல் மெரிடித் ஸ்டான்லி

வெண்டெல் மெரிடித் ஸ்டான்லி (Wendell Meredith Stanley) (16 ஆகஸ்ட் 1904 - 15 ஜூன் 1971) ஓர் அமெரிக்க உயிர் வேதியியலாளரும் நச்சுயிரியல் வல்லுநரும் நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். [1]

வெண்டெல் மெரிடித் ஸ்டான்லி
பிறப்பு(1904-08-16)ஆகத்து 16, 1904
ரிட்ஜ்வில், இந்தியானா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 15, 1971(1971-06-15) (அகவை 66)
சாலமன்சா, ஸ்பெயின்
தேசியம்அமெரிக்கர்
துறைவேதியியல்
பணியிடங்கள்ராக்ஃபெல்லர் நிறுவனம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லீ
கல்வி கற்ற இடங்கள்ஏர்ல்ஹாம் கல்லூரி
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபுகையிலைத் தீநுண்மித் தொற்று
விருதுகள்நியூகாம்ப் க்ளீவ்லாந்துப் பரிசு(1936)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1946)
நிக்கோலசுப் பதக்கம் (1946)
வில்லார்டு கிப்சு விருது(1947)
பிராங்க்ளின் பதக்கம் (1948)
குடியரசுத் தலைவரின் தகுதிச் சான்றிதழ்(1948)
உதிக்கும் சூரியப் பரிசு (1966)

வரலாறு

தொகு

ஸ்டான்லி இந்தியானாவின் ரிட்ஜ்வில்லில் பிறந்தார், மேலும் இந்தியானாவின் ரிச்மண்டில் உள்ள ஏர்ல்ஹாம் கல்லூரியில் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் அவர் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 1927 இல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். வேதியல் ஓர் அழகான பொருள் என்று பொருள் தரும் "கெமிஸ்ட்ரி: எ பியூட்டிஃபுல் திங்" என்ற புத்தகத்தை எழுதியதும் புலிட்சர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் அவரது பிற்கால சாதனைகளில் அடங்கும்.

முனிச்சில் நோபல் பரிசு பெற்ற வேதியியலாளரான ஹென்ரிச் வைலேண்டுடன் இணைந்து தற்காலிகமாகக் கல்விப் பணி ஆற்றினார். 1931 இல் ராக்ஃபெல்லர் நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றுவதற்காக அமெரிக்கா திரும்பினார். அமெரிக்கா திரும்பும் முன் தேசிய ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினராகப் பணிபுரிந்தார். திரும்பியவுடன் அவர் மருத்துவ ஆராய்ச்சிக்கான ராக்ஃபெல்லர் நிறுவனத்தில் உதவியாளராக அங்கீகரிக்கப்பட்டார். அவர் 1948 வரை நிறுவனத்தில் இருந்தார். 1937 இல் அதன் இணை உறுப்பினராகவும்,1940 இல் அதன் உறுப்பினராகவும் ஆனார் [2] 1948 ஆம் ஆண்டில், அவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் பேராசிரியராகவும் நச்சுயிரியல் ஆய்வகத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.1953 இல் உயிர் வேதியல் துறையின் தலைவராக இருந்தார் வைரஸ் ஆய்வகத்தையும், உயிர்வேதியியல் துறையின் கட்டிடத்தையும் நிற்வினார். இது இப்போது ஸ்டான்லி ஹால் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்டான்லியின் பணி தொழுநோய் சேர்மங்கள், இரு பீனைல் சேணிலை வேதியல் மற்றும் பருவக ஆல்கஹால் வேதியல் ஆகியவற்றில் முக்கியமான பணிகளுக்கு ஸ்டான்லி பொறுப்பேற்றார். புகையிலை செடிகளில் தேமல் நோயை உண்டாக்கும் தீநுண்மி பற்றிய அவரது ஆராய்ச்சி , புகையிலைத் தேமல் தீநுண்மியின் செயல்பாட்டை வெளிப்படுத்தும் உட்கருவமிலப்புரதத்தினை தனிமைப்படுத்த வழிவகுத்தது.

பரிசுகளும் பாராட்டுகளும்

தொகு

பேராசிரியர் ஸ்டான்லிக்கு 1937 இல் அறிவியல் மேம்பாட்டுக்கான பரிசு அமெரிக்கக் கழகத்தினால் வழங்கப்பட்டது. மேலும் இவர் சிகாகோ பல்கலைக்கழகம் வழங்கிய ரோசன்பர்கர் பதக்கம், ஆல்டர் விருது (ஹார்வர்ட்), 1938 இல் ஸ்காட் விருது (பிலடெல்பியா நகரம்), 1941 இல்நியூயார்க்கின் அமெரிக்கப் பயிற்சி நிறுவனத் தங்கப்பதக்கம், 1946 இல் அமெரிக்க வேதியல் கழகத்தின் நிக்கோலஸ் பதக்கம் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றவர். இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் மதிப்புறு முணைவர் பட்டங்களை வழங்கியுள்ளன.


ஸ்டான்லி 1940 இல் அமெரிக்க தத்துவ சங்கம், [3] தேசிய அறிவியல் கழகம் ஆகியவற்றில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6] அவருக்கு 1946 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1949 இல், அவர் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]பேராசிரியர் ஸ்டான்லிக்கு 1937 இல் அறிவியல் மேம்பாட்டுக்கான பரிசு அமெரிக்கக் கழகத்தினால் வழங்கப்பட்டது. மேலும் இவர் சிகாகோ பல்கலைக்கழகம் வழங்கிய ரோசன்பர்கர் பதக்கம், ஆல்டர் விருது (ஹார்வர்ட்), 1938 இல் ஸ்காட் விருது (பிலடெல்பியா நகரம்), 1941 இல்நியூயார்க்கின் அமெரிக்கப் பயிற்சி நிறுவனத் தங்கப்பதக்கம், 1946 இல் அமெரிக்க வேதியல் கழகத்தின் நிக்கோலஸ் பதக்கம் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றவர்.[8] ஹார்வர்ட், யேல், பிரின்ஸ்டன் மற்றும் பாரிஸ் பல்கலைக்கழகம் உட்பட பல அமெரிக்க மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டான்லி தனது நோபல் வென்ற ஆராய்ச்சியில் முன்வைத்த பெரும்பாலான முடிவுகள் விரைவில் தவறானவை எனக் காட்டப்பட்டன (குறிப்பாக, அவர் தனிமைப்படுத்திய புகையிலைத் தேமல் நோயை உண்டாக்கும் தீநுண்மி புரதத்தால் மட்டுமே ஆனது என்று என்று அவர் முன்மொழிந்தார். இதன் படிகங்கள் தூய புரதம் மற்றும் தன்னியக்க வினையூக்கத்தால் சேகரிக்கப்பட்டன).[9][10]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஸ்டான்லி 1929 இல் மரியன் ஸ்டேபிள்ஸை (1905-1984) மணந்தார், அவருக்கு மூன்று மகள்கள் (மார்ஜோரி, டோரதி மற்றும் ஜேனட்) மற்றும் ஒரு மகன் (வெண்டெல் மெரிடித் ஜூனியர்) இருந்தனர். யூசி பெர்க்லியில் உள்ள ஸ்டான்லி ஹால் (இப்போது ஸ்டான்லி உயிரி அறிவியல் மற்றும் உயிரிப்பொறியியல் துறை) மற்றும் ஏர்ல்ஹாம் கல்லூரியில் உள்ள ஸ்டான்லி ஹால் ஆகியவை அவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளன. அவரது மகள் மார்ஜோரி, கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் கூடைப்பந்து அணி மற்றும் ஓக்லாண்ட் ரைடர்ஸ் கால்பந்து அணியின் மருத்துவர் ராபர்ட் ஆல்போவை மணந்தார். இவர் 1971, ஜுன் 15 ஆம் நாள் மறைந்தார்.

குறிப்புகள்

தொகு
  1. Colvig, R (February 1972). "Wendell M, STANLEY, PhD, (1905-1971)". Cancer 29 (2): 541–2. doi:10.1002/1097-0142(197202)29:2<541::AID-CNCR2820290246>3.0.CO;2-T. பப்மெட்:4552137. https://archive.org/details/sim_cancer_1972-02_29_2/page/541. 
  2. The Franklin Institute. "Wendell Meredith Stanley". https://www.fi.edu/laureates/wendell-meredith-stanley. 
  3. "APS Member History". {{cite web}}: Missing or empty |url= (help)
  4. "APS Member History". search.amphilsoc.org. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
  5. "Wendell M. Stanley". www.nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
  6. "Wendell M. Stanley". {{cite web}}: Missing or empty |url= (help)
  7. "Wendell Meredith Stanley". American Academy of Arts & Sciences (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
  8. "Golden Plate Awardees of the American Academy of Achievement". {{cite web}}: Missing or empty |url= (help)
  9. Pennazio, S; Roggero P (2000). "The discovery of the chemical nature of tobacco mosaic virus". Riv. Biol. 93 (2): 253–81. பப்மெட்:11048483. 
  10. Kay, L E (September 1986). "W. M. Stanley's crystallization of the tobacco mosaic virus, 1930-1940". Isis; an International Review Devoted to the History of Science and Its Cultural Influences 77 (288): 450–72. doi:10.1086/354205. பப்மெட்:3533840. 

வெளி இணைப்புகள்

தொகு