வெரா கெட்ராய்ட்ஸ்

இளவரசி வெரா இக்னாடிவ்னா கெட்ராய்ட்ஸ் (About this soundlisten ; இலக்கியப் புனைப் பெயர் செர்ஜி கெட்ராய்ட்ஸ் ; 7 ஏப்ரல் 1870 / 19 ஏப்ரல் 1870 - மார்ச் 1932) ஓர் உருசியாவின் முதல் பெண் இராணுவ அறுவை சிகிச்சை நிபுணராகவும், அறுவை சிகிச்சையில் முதல் பெண் பேராசிரியராகவும், உருசியப் பேரரசின் அரண்மனையில் மருத்துவராக பணியாற்றிய முதல் பெண்மணியும் ஆவார்.

இளவரசி வெரா கெட்ராய்ட்ஸ்
தனது நோயாளிகளுடன் வெரா கெட்ராய்ட்ஸ், 1915கள்
பிறப்புவெரா இக்னாட்டிவ்னா கெட்ராய்ட்ஸ்
(1870-04-07)7 ஏப்ரல் 1870
இசுலோபோடிஷ், ஓரியோல் மாகாணம், உருசியப் பேரரசு
இறப்புமார்ச் 1932 (வயது 61)
கீவ், உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
பணி
  • மருத்துவர்
  • கவிஞர்
செயற்பாட்டுக்
காலம்
1900–1932
எழுத்துப் பணி
புனைபெயர்செர்ஜி கெட்ராய்ட்ஸ்

ஒரு மாணவர் இயக்கத்தில் இவர் ஈடுபட்டதைத் தொடர்ந்து, உருசியாவில் தனது படிப்பை முடிக்க முடியவில்லை. வெளிப்படையாக அகனளாக இருந்தபோதிலும், ஒழுங்கமைக்கப்பட்டத் திருமணத்தில் நுழைந்தார். இது வேறொரு பெயரில் கடவுச் சீட்டைப் பெற்று நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது. சுவிட்சர்லாந்தில், இவர் சீசர் உரூக்ஸின் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து, 1898இல் பட்டமும் பெற்றார். பின்னர், உரூக்ஸின் உதவியாளராகவும் பணிபுரிந்தார். ஆனால் தனது குடும்பத்தில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக உருசியாவுக்குத் திரும்பினார்.

ஒரு இளம் மருத்துவராக, இவர் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் குறைந்த தரத்தில் அக்கறை கொண்டிருந்தார். மேலும் நிலைமைகளை மேம்படுத்த பரிந்துரைகளை வழங்கினார். உருசிய-சப்பானிய போரில், இவர் நிறுவப்பட்ட கொள்கைக்கு எதிராக வயிறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். இது போர்க்கள மருத்துவம் செய்யப்படும் விதத்தில் மாற்றத்திற்கு வழிவகுத்தது. தனது போர்ச் சேவைக்காக மிகவும் பாராட்டப்பட்ட இவர், முதலாம் உலகப் போர் வெடிக்கும் வரை அரச சபையில் மருத்துவராக பணியாற்றினார். உருசியாவின் பேரரசியான சாரினா அலெக்சாந்திராவுக்கும் அவரது மகள்களுக்கும் செவிலியர்களாக பயிற்சி அளித்தார்.

உருசியப் புரட்சியின் தொடக்கத்தில், இவர் போர்முனைக்குச் சென்றார். போரில் காயமடைந்த இவர், கீவ்வுக்கு வெளியேற்றப்பட்டார். அங்கு இவர் ஒரு மருத்துவராகவும் கல்வியாளராகவும் தனது பணியை மீண்டும் தொடங்கினார். 1921ஆம் ஆண்டில், கீவ் மருத்துவ நிறுவனத்தில் குழந்தை அறுவை சிகிச்சை முறையைக் கற்பிக்க இவர் பணியமர்த்தப்பட்டா. இரண்டு ஆண்டுகளுக்குள் மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் சோவியத் தூய்மைப்படுத்துதல் 1930 இல் அவரை பதவியில் இருந்து நீக்கியது. மேலும், இவருக்கு ஓய்வூதியத்தையும் மறுத்தது. இவர், 1932இல் கருப்பை புற்றுநோயால் இறக்கும் வரை சுயசரிதை புதினக்களை எழுதுவதில் தனது கவனத்தைத் திருப்பினார்.

உருசியப் பேரரசி சாரினா அலெக்சாந்திராவுடன் வெரா கெட்ராய்ட்ஸ் (வலது)

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகு

1928 ஆம் ஆண்டில் சொந்தமாக, 58 விஞ்ஞான ஆவணங்களை வெளியிட்டார். அதில் பொது அறுவை சிகிச்சையை கையாளும் கட்டுரைகளும் பாடப்புத்தகங்களும், அத்துடன் முகம் மற்றும் பல் புனரமைப்பு, இராணுவ களப்பணி மற்றும் குழந்தை அறுவை சிகிச்சை ஆகியவையும் அடங்கும். [1] இவரது பெரும்பாலான படைப்புகள் உருசிய மொழியில் வெளியிடப்பட்டன. [2] சில பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது சுவீடிய மொழிகளில் வெளியிடப்பட்டன. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Gedroits 2015, ப. pt 1.
  2. Wilson 2007, ப. 166.

நூலியல் தொகு

மேலும் படிக்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vera Gedroitz
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெரா_கெட்ராய்ட்ஸ்&oldid=3572331" இருந்து மீள்விக்கப்பட்டது