வேலைக்காரச் சுண்டெலி

Chordata

வேலைக்காரச் சுண்டெலி (Servant mouse-மசு பேமுலச) அல்லது பான்கோத்தே சுண்டெலி, முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இது எரவிகுளம் தேசிய பூங்கா, அவலாஞ்சி, காளப்பட்டி மற்றும் குன்னூர் ஆகியபகுதில் இவற்றின் பரவல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.[2][3]

வேலைக்காரச் சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. famulus
இருசொற் பெயரீடு
Mus famulus
பான்கோத்தே, 1898

வாழ்விடம் மற்றும் சூழலியல்

தொகு

வேலைக்காரச் சுண்டெலி இரவுநேர நிலப்பரப்பு கொறித்துண்ணி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நில புல்வெளி ஆகும். இது பொதுவாக 1,540–2,400 மீட்டர் உயரத்தில் உள்ளப் பகுதிகளில் காணப்படுகிறது.

பாதுகாப்பு நிலை

தொகு

1996ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இச்சுண்டெலி வசிக்கும் பகுதியில் 500க்கும் குறைவாக எண்ணிக்கையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது அளவு மற்றும் தரத்தில் குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது.[1] இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, 2002-ல் திருத்தப்பட்ட அட்டவணை V-ல் பட்டியலிடப்பட்ட இனமாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pradhan, M.S. (2019). "Mus famulus". IUCN Red List of Threatened Species 2019: e.T13960A22403386. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T13960A22403386.en. https://www.iucnredlist.org/species/13960/22403386. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. https://thewebsiteofeverything.com/animals/mammals/Rodentia/Muridae/Mus/Mus-famulus.html
  3. Marshall JT. 1977. A synopsis of Asian species of Mus (Rodentia, Muridae). Bull Am Mus Nat Hist. 158:175–220
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலைக்காரச்_சுண்டெலி&oldid=3637800" இலிருந்து மீள்விக்கப்பட்டது