இசுட்டேட்டன் தீவு

(ஸ்டேட்டன் தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசுட்டேட்டன் தீவு (Staten Island, /ˌstætən ˈlənd/) அமெரிக்க மாநிலம் நியூயார்க்கில் உள்ள நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் தென்மேற்கில் உள்ள பரோ ஆகும். நியூயார்க் மாநிலம் மற்றும் நகரத்தின் தெற்கு முனையில் இது அமைந்துள்ளது. இங்குள்ள மாநாட்டு மாளிகைப் பூங்கா நியூயார்க் மாநிலம் மற்றும் நியூயார்க் நகரத்தின் தெற்கு எல்லையாக உள்ளது.[2] இந்த பரோவை நியூ செர்சியிலிருந்து ஆர்தர் கில், கில் வான் குள் என்ற இரு கடலோடைகள் பிரிக்கின்றன; நியூயார்க் நகரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து நியூயார்க் விரிகுடா பிரிக்கிறது. 2013 கணக்கெடுப்பின்படி இசுட்டேட்டன் தீவின் மக்கள்தொகை 472,621 ஆகும்.[1] நியூயார்க்கின் ஐந்து பரோக்களில் மிகவும் குறைந்த மக்கள்தொகை உள்ள பரோ இதுவாகும். ஆனால் பரப்பளவில் 59 sq mi (153 km2) உடன் மூன்றாவது பெரிய பரோவாக உள்ளது. இதுவும் ரிச்மாண்ட் கவுன்ட்டியும் ஒரே நிலப்பரப்பை குறிக்கின்றன;1975 வரை இந்த பரோவும் ரிச்மாண்ட் பரோ என்றே அழைக்கப்பட்டு வந்தது.[3] நகர அரசின் அக்கறையின்மையைக் கருதி இசுட்டேட்டன் தீவு சிலநேரங்களில் "மறந்துபோன பரோ" என இங்கு வாழ்வோரால் குறிப்பிடப்படுகின்றது.[4][5]

இசுட்டேட்டன் தீவு
டச்சு: Staateneiland
இசுட்டேட்டன் தீவு, நியூயார்க்
ரிச்மாண்ட் கவுன்ட்டி
வெர்ரசனோ-நேரோசு பாலம், புருக்ளினிலிருந்து இசுட்டேட்டன் தீவு நோக்கி
வெர்ரசனோ-நேரோசு பாலம், புருக்ளினிலிருந்து இசுட்டேட்டன் தீவு நோக்கி
இசுட்டேட்டன் தீவு-இன் கொடி
கொடி
இசுட்டேட்டன் தீவின் அமைவிடம் - ஆரஞ்சு வண்ணத்தில்
இசுட்டேட்டன் தீவின் அமைவிடம் - ஆரஞ்சு வண்ணத்தில்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலம்நியூ யோர்க் மாநிலம்
கவுன்ட்டிரிச்மாண்ட்
நகரம்நியூயார்க் நகரம்
குடியேறல்1661
அரசு
 • வகைநியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்
 • பரோத் தலைவர்ஜேம்சு ஓட்டோ (கு)
(ரிச்மாண்ட் பரோ)
 • மாவட்ட வழக்குரைஞர்டேனியல் எம். டோனோவன் ஜூனியர்
(ரிச்மாண்ட் கவுன்ட்டி)
பரப்பளவு
 • மொத்தம்265.5 km2 (102.50 sq mi)
 • நிலம்151.5 km2 (58.48 sq mi)
 • நீர்114.0 km2 (44.02 sq mi)
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்4,72,621[1]
 • அடர்த்தி3,131.9/km2 (8,111.7/sq mi)
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு சீர்தர நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (கிழக்கு பகலொளி நேரம்)
சிப் குறியீடு
10301–10314
இடக் குறியீடு(கள்)347, 718, 917, 929தொலைபேசிக் குறியீடு
இணையதளம்www.statenislandusa.com
இசுட்டேட்டன் தீவு குறுங்கப்பற்சேவை கீழ் மேன்காட்டனுக்கும் இசுட்டேட்டன் தீவின் செயின்ட்.ஜார்ஜ் குறுங்கப்பல் முனையத்திற்குமிடையே கட்டணமில்லாச் சேவை வழங்குகிறது.

வாகனப் போக்குவரத்துக்காக புரூக்ளினிலிருந்து வெர்ரசானோ-நேரோசு பாலம் மூலமாகவும் நியூ செர்சியிலிருந்து அவுட்டர்பிரிட்ஜ் கிராசிங், கோத்தல்சு பாலம், பயோன் பாலம் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்தின் இந்த பரோ மட்டுமே சப்வே தொடர்வண்டியால் இணைக்கப்படாது உள்ளது. இசுட்டேட்டன் தீவு கட்டணமில்லாத குறுங்கப்பல் சேவையால் மேன்காட்டனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 21 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் இச்சேவை[6] 1700 களிலிருந்து இயக்கத்தில் இருக்கின்றது. ஒன்பது குறுங்கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விடுதலைச் சிலை, எல்லிசு தீவு, மற்றும் கீழ் மேன்காட்டன் காட்சிகளை காணும் வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகளிடமும் இச்சேவை மிகவும் பெயர் பெற்றுள்ளது.

நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம்
ஆட்பகுதி மக்கள்தொகை நிலப் பரப்பளவு
பரோ கவுன்ட்டி 1 சூலை 2013
மதிப்பீடு
சதுர
மைல்கள்
சதுர
கிமீ
மன்ஹாட்டன் நியூ யார்க் 1,626,159 23 59
பிரான்க்சு பிரான்க்சு 1,418,733 42 109
புருக்ளின் கிங்சு 2,592,149 71 183
குயின்சு குயின்சு 2,296,175 109 283
இசுட்டேட்டன் தீவு ரிச்மாண்ட் 472,621 58 151
8,405,837 303 786
19,651,127 47,214 122,284
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[7][8][9]

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Richmond County (Staten Island Borough), New York State & County QuickFacts". United States Census Bureau. Archived from the original on 24 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. conferencehousepark, New York City Parks
  3. "Timeline of Staten Island - 1900s - Present". New York Public Library. Archived from the original on 13 ஜனவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 16 January 2006. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. Brown, Chip (January 30, 1994). "Escape From New York - The New York Times". The New York Times. http://www.nytimes.com/1994/01/30/magazine/escape-from-new-york.html?scp=6&sq=%22the+forgotten+borough%22+government. பார்த்த நாள்: 14 January 2008. "Given their status as residents of "the forgotten borough" – the sorry Cinderella sister in New York's dysfunctional family – maybe the giddiest aspect of all was the attention." 
  5. Buckley, Cara (7 October 2007). "Bohemia by the Bay". The New York Times. http://www.nytimes.com/2007/10/07/nyregion/thecity/07hips.html?_r=2&scp=1&sq=%22the+forgotten+borough%22&oref=slogin. பார்த்த நாள்: 14 January 2008. "Even as New York’s hip young things invade and colonize neighborhoods near, far and out of state, Staten Island has stayed stubbornly uncool. It remains the forgotten borough." 
  6. "Staten Island Ferry". siferry.com [last update]. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. 2013 borough population estimates are taken from the annual database of county population estimates from the U.S. Census Bureau, retrieved on May 13, 2014.
  8. Per the County and City Data Book:2007 (U.S. Census Bureau), Table B-1, Area and Population, retrieved on July 12, 2008, New York County (Manhattan) was the nation's densest-populated county, followed by Kings County (Brooklyn), Bronx County, Queens County and சான் பிரான்சிஸ்கோ.
  9. American Fact Finder (U.S. Census Bureau): New York by County - Table GCT-PH1. Population, Housing Units, Area, and Density: 2000 Data Set: Census 2000 Summary File 1 (SF 1) 100-Percent Data, retrieved on February 6, 2009

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Staten Island, New York City
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்டேட்டன்_தீவு&oldid=3696914" இலிருந்து மீள்விக்கப்பட்டது