ஸ்டாக்ஹோம்

(ஸ்டொக்ஹோம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்டாக்ஹோம் (Stockholm) நகரம் ஆனது சுவீடன் நாட்டின் மிகப்பெரிய நகரமும், அதன் தலைநகரமும் இதுவே ஆகும். இதுவே, தேசிய சுவீடிய அரசு, நாடாளுமன்றம், சுவீடிய அரசரின் அதிகாரமுறை இருப்பிடம் ஆகியவற்றின் அமைவிடமும் ஆகும். ஸ்டாக்ஹோம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே சுவீடனின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. 795,163 (டிசம்பர் 2007) மக்கள்தொகையைக் கொண்ட ஸ்டாக்ஹோம் மாநகரசபை, நாட்டிலுள்ள மிகப்பெரிய மாநகரசபையாகும். ஸ்டாக்ஹோம் நகர்ப்புறப் பகுதி, 1,252,020 (2005) மக்கள்தொகையுடன், நாட்டின் மிகப் பெரிய தொடர்ச்சியான கட்டப்பட்ட பகுதியாகவும் உள்ளது. ஸ்டாக்ஹோம் நகரம் சுவீடன் நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கடற்கரைப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.

ஸ்டாக்ஹோம் நகரம்
ஸ்டாக்ஹோம்ஸ் ஸ்ராட்
நாடுசுவீடன்
மாநகரசபைகள்
கவுண்டிஸ்டாக்ஹோம் கவுண்டி
மாகாணங்கள்Södermanland and Uppland
First mention1252
Charter13வது நூற்றாண்டு
அரசு
 • நகரபிதாஸ்டென் நோர்டின் (m)
பரப்பளவு
 • நகர்ப்புறம்
377.30 km2 (145.68 sq mi)
மக்கள்தொகை
 (2008)[2]
 • நகரம்7,98,715 ( Source: www.scb.se)
 • அடர்த்தி4,230/km2 (11,000/sq mi)
 • நகர்ப்புறம்
12,52,020
 • நகர்ப்புற அடர்த்தி3,318/km2 (8,590/sq mi)
 • பெருநகர்
19,49,516
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
இணையதளம்www.stockholm.se
ஸ்டாக்ஹோமின் முதன்மை படிமம்

புவியியல்

தொகு

ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்தியபகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன குங்ஸோல்மென் (Kungsholmen), சொடர்மல்ம் (Södermalm), நொர்மல்ம்(Norrmalm), மற்றும் ஒஸ்டர்மல்ம் (Östermalm) என்பவையாகும். குங்ஸோல்மென் மற்றும் சொடர்மல்ம் என்னும் இரண்டும் தீவுகளாகும். இங்க்கு பற்பல தீவுகள் காணப்படுகின்றன. இங்கு உள்ள பற்பல தீவுகளும் பாலங்களால் இணைக்கப்பட்டே இருக்கின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்திய பகுதியில் மட்டும் பதினான்கு தீவுகள் காணப்படுகின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் 30% வீததிற்கும் மேலதிகமான பகுதி நீர் வழியினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. மற்றைய 30% வீதப் பகுதியும் பூங்காக்களாலும் புல்வெளிகளாலும் மூடப்பட்டுள்ளது.

கம்லா ச்டான் (Gamla Stan) எனும் நகரமே ஸ்டாக்ஹோம் நகரத்தின் மிகவுய்ம் பழமை வாய்ந்த பகுதியாகும், அதாவது பழமையான நகரம் ஆகும்.

இதன் சராசரியான வருடாந்த வெப்பநிலை 10 °C (50 °F) ஆகும். ஸ்டாக்ஹோம் நகரத்தின் சராசரியான வருடாந்த மழைவீழ்ச்சி முப்பது தொடக்கம் அறுபது வரையியான இன்ஞ்சஸ் ஆகும்.

கல்வி

தொகு

விஞ்ஞானத்தில் ஆய்வுகளுக்கும் மேல்ப் படிப்புக்களுக்கும் ஆனதுமான கல்வி ஸ்டாக்ஹோம் நகரத்தில் 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கத் தொடங்கியது. மருத்துவக்கல்வியும் ஸ்டாக்ஹோம் அவதான நிலையம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் 18ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஸ்டாக்ஹோம் நகரத்தில் மருத்துவக் கல்வியானது 1811 ஆம் ஆண்டில் கரோலின்ஸ்கா மையமாக இறுதியாக முறைப்படுத்தப்பட்டது. ஸ்டாக்ஹோம் நகரத்தில் ரோயல் தொழில்நுட்ப நிறுவனம் 1827 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்சமயம் ஸ்காண்டிநேவியா எனும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனமே ஸ்டாக்ஹோமில் உள்ள மாபெரும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனம் ஆகும். ஸ்காண்டிநேவியா தொழினுட்ப உயர்கல்வி நிறுவனத்தில் 13,000 மாணவர்கள் மட்டில் கல்வி கற்கின்றனர்.

ஸ்டாக்ஹோமின் மக்கள் வகைப்பாடு

தொகு

சுவீடனின் மொத்த சனத்தொகையில் ஸ்டாக்ஹோமின் சனத்தொகை 22% வீதமாகக் காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் ஸ்டாக்ஹோம் நகரத்தினால் சுவீடனுக்கு 29% வீத வருமானம் கிடைக்கின்றது.

ஸ்டாக்ஹோம் நகரத்தின் சனத்தொகை (ஆண்டுகள் வாரியாக)

தொகு
வருடம் சனத்தொகை
1570 9,100
1610 8,900
1630 15,000
1650 35,000
1690 55,000
1730 57,000
1750 60,018
1770 69,000
1800 75,517
1810 65,474
1820 75,569
1830 80,621
1840 84,161
1850 93,070
1860 113,063
1870 136,016
1880 168,775
1890 246,454
1900 300,624
1910 342,323
1920 419,429
1930 502,207
1940 590,543
1950 745,936
1960 808,294
1970 740,486
1980 647,214
1990 674,452
2000 750,348
2010 847,073
2012 871,952

அருங்காட்சியகங்கள்

தொகு
 
சுவீடனின் தேசிய அருங்காட்சியகம்

ஸ்டாக்ஹோம் நகரம் உலகிலுள்ள அருங்காட்சியகங்கள் பற்பல உள்ள அருங்காட்சியக-நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு அருங்காட்சியகங்கள் 100 மட்டில் உள்ள்ன, இங்கு பல மில்லியன் கணக்கான மக்களும் ஒவ்வொரு ஆண்டும் வந்து போவார்கள்.

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், ஸ்டாக்ஹோம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -0.7
(30.7)
-0.6
(30.9)
3.0
(37.4)
8.6
(47.5)
15.7
(60.3)
20.7
(69.3)
21.9
(71.4)
20.4
(68.7)
15.1
(59.2)
9.9
(49.8)
4.5
(40.1)
1.1
(34)
10.0
(50)
தாழ் சராசரி °C (°F) -5.0
(23)
-5.3
(22.5)
-2.7
(27.1)
1.1
(34)
6.3
(43.3)
11.3
(52.3)
13.4
(56.1)
12.7
(54.9)
9.0
(48.2)
5.3
(41.5)
0.7
(33.3)
-3.2
(26.2)
3.6
(38.5)
பொழிவு mm (inches) 39
(1.54)
27
(1.06)
26
(1.02)
30
(1.18)
30
(1.18)
45
(1.77)
72
(2.83)
66
(2.6)
55
(2.17)
50
(1.97)
53
(2.09)
46
(1.81)
540
(21.26)
சராசரி பொழிவு நாட்கள் 18 15 13 11 11 12 15 14 15 14 17 18 173
சூரியஒளி நேரம் 40.3 73.5 136.4 186.0 275.9 291.0 260.4 220.1 153.0 99.2 54.0 34.1 1,823.9
Source #1: World Meteorological Organisation[3]
Source #2: Hong Kong Observatory[4]
ஸ்டாக்ஹோமின் பரந்ததோற்றம்

இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tätorter 2005" (in Swedish). Statistics Sweden. பார்க்கப்பட்ட நாள் 2008-05-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Tätorternas landareal, folkmängd och invånare per km2 2000 och 2005" (xls) (in Swedish). Statistics Sweden. பார்க்கப்பட்ட நாள் 2008-05-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Weather Information for Stockholm". World Weather Information Service. பார்க்கப்பட்ட நாள் 2008-01-06.
  4. "Climatological Normals of Stockholm". Hong Kong Observatory. Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2010-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டாக்ஹோம்&oldid=3573551" இலிருந்து மீள்விக்கப்பட்டது