ஹசாரி பிரசாத் திவேதி
ஹசாரி பிரசாத் திவேதி (Hazari Prasad Dwivedi) (19 ஆகஸ்ட் 1907 – 19 மே 1979) ஓர் இந்தி புதின ஆசிரியரும், இலக்கிய வரலாற்ரும், அறிஞருமாவார். ஏராளமான புதினங்கள், கட்டுரைகளின் தொகுப்புகள், இந்தியாவின் இடைக்கால மத இயக்கங்கள் குறித்த வரலாற்று ஆராய்ச்சி, குறிப்பாக கபீர், நாத சம்பிரதயம், இந்தி இலக்கியத்தின் வரலாற்று வடிவங்கள் போன்றவற்றை எழுதினார்.
ஹசாரி பிரசாத் திவேதி | |
---|---|
பிறப்பு | பலியா, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா | 19 ஆகத்து 1907
இறப்பு | (வயது 71) தில்லி, இந்தியா | 19 மே 1979
தொழில் | எழுத்தாளர், கட்டுரையாளர், அறிஞர், வரலாற்றாசிரியர், புதின ஆசிரியர், விமர்சகர் |
தேசியம் | Indian |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Kabir, Banabhatta Ki Atmakatha, Sahitya Ki Bhumika, Nakhoon Kyon Barhte Hain, Kutaj, Alok Parva |
குறிப்பிடத்தக்க விருதுகள் | 1973: சாகித்திய அகாதமி விருது 1957: பத்ம பூசண் |
இந்தி தவிர, சமசுகிருதம், வங்காள மொழி, பஞ்சாபி, குஜராத்தி பாளி, பிராகிருதம், அபபிராம்சம் உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
சமசுகிருதம், பாளி, பிரகிருதம், நவீன இந்திய மொழிகளின் பாரம்பரிய அறிவில் சிறந்த புலமை பெற்றிருந்த திவேதி கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் சிறந்த பாலமாகக் கருதப்பட்டார். சமசுகிருத மாணவர் என்ற முறையில், இவர் சாகித்ய-சாஸ்திரத்திற்கு ஒரு புதிய மதிப்பீட்டை வழங்கினார்.
விருதுகள்
தொகு1957 ஆம் ஆண்டில் இந்தி இலக்கியத்துக்கு இவர் செய்த பங்களிப்புக்காகவும்,[1] 1973 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற 'அலோக் பர்வா' என்ற கட்டுரைத் தொகுப்பிற்காகவும் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[2]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help) - ↑ Acharya Hazari Prasad Dwivedi Collection Indira Gandhi National Centre for the Arts (IGNCA) website. A collection of 10,000 volumes of Acharya Hazari Prasad Dwivedi has been donated by his children to IGNCA.