லாலா ஹர் தயால் சிங் மாத்தூர் (Lala Har Dayal Singh Mathur) (14 அக்டோபர் 1884 - 4 மார்ச் 1939) இவர் ஓர் இந்திய தேசியவாத புரட்சிகரவாதியும், சுதந்திர போராட்ட வீரராவார்.[1] இவர் இந்தியக் குடிமைப்பணியை நிராகரித்த ஒரு பல்துறை அறிஞராவார். இவரது எளிய வாழ்க்கையும், அறிவார்ந்த புத்திசாலித்தனமும் கனடாவிலும், அமெரிக்காவிலும் வாழும் பல வெளிநாடு வாழ் இந்தியர்களை முதல் உலகப் போரின்போது பிரிட்டிசு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட தூண்டியது.

லாலா ஹர் தயால்
1987இல் வெளியிடப்பட இந்திய அஞ்சல் முத்திரையில் மாத்தூர்
1987இல் வெளியிடப்பட இந்திய அஞ்சல் முத்திரையில் மாத்தூர்
பிறப்புஹர் தயால் சிங் மாத்தூர்
(1884-10-14)14 அக்டோபர் 1884
தில்லி, தில்லி கோட்டம், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியப் பேரரசு
(தற்போதைய இந்தியா)
இறப்பு4 மார்ச்சு 1939(1939-03-04) (அகவை 54)
பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நமது கல்வி சிக்கல், கல்வி குறித்த எண்ணங்கள், சுய கலாச்சாரத்திற்கான குறிப்புகள், உலக மதங்களின் பார்வைகள் மற்றும் புத்த சமசுகிருத இலக்கியங்களில் போதிசத்துவ கோட்பாடுகள்

சுயசரிதை

தொகு

ஆரம்ப ஆண்டுகளில்

தொகு

இவர் 1884 அக்டோபர் 14 அன்று தில்லியில் ஒரு இந்து மாத்தூர் கயஸ்தா குடும்பத்தில் பிறந்தார்.[2] வர் போலி ராணி மற்றும் கௌரி தயால் மாத்தூர் ஆகியோரின் ஏழு குழந்தைகளில் ஆறாவது மகனாக இருந்தார். இவரது தந்தை மாவட்ட நீதிமன்ற வாசகர் . சிறு வயதிலேயே, இவர் ஆர்ய சமாஜத்தால் ஈர்க்கப்பட்டார். இவர் சியாம்ஜி கிருஷ்ண வர்மா, விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் பிகாஜி காமா ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார். ஜிசொப்பி மாசினி, கார்ல் மார்க்சு மற்றும் மிகைல் பக்கூனின் ஆகியோரிடமிருந்தும் இவர் உத்வேகம் பெற்றார்.

கேம்பிரிச்சு பள்ளியில் படித்த இவர் இந்தியாவின் தில்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் சமசுகிருதத்தில் இளங்கலை பட்டமும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலை பட்டமும் பெற்றார் . 1905 ஆம் ஆண்டில், சமசுகிருதத்தில் தனது உயர் படிப்புகளுக்காக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் இரண்டு உதவித்தொகைகளைப் பெற்றார். 1907 இல் வெளியிடப்பட்ட தி இந்தியன் சோசியாலஜிக்கு எழுதிய கடிதத்தில், அராஜகவாத கருத்துக்களை ஆராயத் தொடங்கினார். இந்தக் கடிதம் இவரை காவல்துறையினரால் கண்காணிக்க வழிவகுத்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியக் குடிமைப் பணியை விட்டுவிட்டு, சிக்கன வாழ்க்கை வாழ 1908 இல் இந்தியா திரும்பினார். ஆனால் இந்தியாவிலும், இவர் முன்னணி செய்தித்தாள்களில் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார், பிரித்தானிய அரசு இவரது எழுத்துக்கு தடை விதிக்க முடிவு செய்தபோது, லாலா லஜ்பத் ராய் இவரை நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தினார். இந்த காலகட்டத்தில்தான் இவர் இந்தியன் சோசியாலாஜியை அச்சிட்டதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கை ஆல்ட்ரெட்டின் நட்புக்குள் வந்தார்.

 
பாரிஸிலிருந்து வெளியிடப்பட்ட வந்தே மாதரத்தின் ஆகத்து 1909 இதழ்

1909 இல் பாரிஸுக்குச் சென்ற இவர் வந்தே மாதரம் என்ற இதழின் ஆசிரியரானார். ஆனால் இவர் பாரிஸில் மிகவும் மகிழ்ச்சியாக இல்லை, எனவே இவர் அங்கிருந்துஅல்ஜீரியா சென்றார். அங்கேயும், இவர் மகிழ்ச்சியற்றவராக இருந்தார். கியூபா அல்லது யப்பானுக்குச் செல்வது குறித்து யோசித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, இவர் மர்தினிக்குச் சென்றார். அங்கு இவர் சிக்கன வாழ்க்கையை வாழத் தொடங்கினார். ஒரு ஆர்ய சமாஜவாதியான, பாய் பரமானந்த் இவரைத் தேடி வந்தார். பௌத்தம் போன்ற ஒரு புதிய மதத்தை நிறுவுவது பற்றி இருவரும் விவாதித்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Brown, Emily C. (1975). Har Dayal: Hindu Revolutionary and Rationalist. Tucson: University of Arizona Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8165-0422-9.
  2. Sareen, Tilakraj (1994). Select Documents on the Ghadr Party. Mounto Publishing House. p. 20. Hardayal was a Delhi man, a high caste Hindu of the Mathur, Kayastha Community

மேலும் படிக்க

தொகு
  • Ghadar Movement: Ideology, Organisation and Strategy by Harish K. Puri, Guru Nanak Dev University Press, 1983
  • Har Dayal: Hindu Revolutionary and Rationalist by Emily C. Brown, The University of Arizona Press, 1975
  • Har Dayal: Hindu Revolutionary and Rationalist, review by Mark Juergensmeyer. The Journal of Asian Studies, 1976
  • The Bodhisattva Doctrine in Buddhist Sanskrit Literature by Har Dayal, 1932; Motilal Banarsidass Publishers, 1970
  • Pandit Vardachari Thoughts On Education by L. Har Dayal 1969 New Delhi-110024 இந்தியா Vivek Swadhyay Mandal.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lala Har Dayal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்_தயால்&oldid=3760322" இலிருந்து மீள்விக்கப்பட்டது