ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்)

(ஹாரி பாட்டர் அண்டு த டெத்லி ஹாலோவ்சு (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (Harry Potter and the Deathly Hallows) என்பது பிரித்தானிய எழுத்தாளர் ஜே. கே. ரெளவுலிங் எழுதிய கனவுருப்புனைவுப் புதினம் மற்றும் பரவலாக அறியப்பட்ட ஆரி பாட்டர் தொடரின் ஏழாவது மற்றும் இறுதிப் புதினமாகும். இது சூலை 21, 2007இல் ஐக்கிய இராச்சியத்தில் புளூம்ஸ்பரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது, அமெரிக்காவில் இசுகாலஸ்டிக் மற்றும் கனடாவில் இரெயின்கோஸ்ட் புக்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (நூல்) (2005) மற்றும் மந்திரவாதிகளான ஆரி பாட்டர் மற்றும் இலார்டு வோல்டெமோர்ட் ஆகியோருக்கு இடையேயான இறுதி மோதலைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளை இந்தப் புதினம் விவரிக்கிறது.

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு
ஐக்கிய இராச்சியத்தில் வெளியான நூலின் அட்டைப்படம்
நூலாசிரியர்ஜே. கே. ரௌலிங்
பட வரைஞர்ஜேசன் காக்ரப்டு (முதல் பதிப்பு)
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
தொடர்ஆரி பாட்டர்
வெளியீட்டு எண்
7ஆம் பாகம்
வகைகனவுருப்புனைவு
வெளியீட்டாளர்புளூம்சுபரி பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
21 சூலை 2007 (2007-07-21)
பக்கங்கள்607 (முதல் பதிப்பு)
ISBN0-7475-9105-9
முன்னைய நூல்ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (நூல்)

டெத்லி அலோவ்சு வெளியான பிறகு விற்பனையில் பல சாதனைகளைப் புரிந்தது. இதற்கு முன்னர் வெளியான ஆரி பாட்டர் பாகங்களை விட அதிகம் விற்பனையாகின. 24மணி நேரத்தில் அதிகம் விற்பனையான நூல் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்தது. அமெரிக்காவில் 8.3 மில்லியன் மற்றும் இங்கிலாந்தில் 2.65 மில்லியன் நூல்கள் விற்பனையானது.[1][2] இதற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தது. மேலும், 2008 கொலராடோ ப்ளூ ஸ்ப்ரூஸ் விருதை வென்றது, அமெரிக்க நூலகச் சங்கம் இதை "இளம் வயது வந்தோருக்கான சிறந்த புத்தகம்" என்று பெயரிட்டது. இதனைத் தழுவி எடுக்கப்பட்ட இரு திரைப்படங்கள் முறையே ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு நவம்பர் 2010 மற்றும் பகுதி 2 சூலை 2011 இல் வெளியானது.

பின்னணி

தொகு

இந்தத் தொடரின் முந்தைய ஆறு புதினங்கள் முழுவதும், முதன்மைக் கதாபாத்திரமான ஆரி பாட்டர் இளமைப் பருவத்தின் சிரமங்களுடன் போராடி, கொலை சாபத்தில் இருந்து தப்பிய ஒரே நபராகவும் பரவலாகவும் அறியப்பெற்றார். இலோர்டு வோல்டெமோர்ட் என்று அறியப்பட்ட டாம் ரிடில், ஆரி பாட்டர் தன்னைக் கொல்லக் கூடும் என்ற தீர்க்கதரிசனத்தால் ஆரி பாட்டரின் பெற்றோரைக் கொன்றார். ஆரி -பாட்டரையும் குழந்தையாக இருக்கும் போதே கொல்ல முயற்சி செய்தார். பின்னர்,மகிள் (மாயமற்ற) உறவினர்களான பெட்டூனியா டர்ஸ்லி மற்றும் வெர்னான் டர்ஸ்லி, அவர்களது மகன் டட்லி டர்ஸ்லி ஆகியோரின் பராமரிப்பில் ஆரி பாட்டர் இருந்தார்.

மீள்பார்வை

தொகு

இந்த பாகத்தின் துவக்கத்தில் ஆரி பாட்டருக்கு பதினேழு வயதாகிறது. மேலும், அவரது தாயின் பாதுகாப்பையும் இழக்கிறார்.ஆர்டர் ஆஃப் தி ஃபீனிக்ஸ் அமைப்பினர் டர்ஸ்லியை இடமாற்றம் செய்து, ஆரியின் நண்பர்களை ஏமாற்றுப் பொருட்களாகப் பயன்படுத்தி, ஆரியை தி பர்ரோவுக்குக் கொண்டு செல்லத் தயாராகிறார்கள். ஆர்டர் ஆஃப் தி ஃபீனிக்ஸ் அங்கத்தினர்கள் புறப்படும்போது பிணந்தின்னிகள் அவர்களைத் தாக்குகிறார்கள், அதைத் தொடர்ந்து நடந்த போரில், ஜார்ஜ் வெஸ்லி காயமடைந்த நிலையில், "மேட்-ஐ" மூடி மற்றும் ஹெட்விக் ஆகியோர் கொல்லப்பட்டனர். வோல்டெமோர்ட், ஆரியைக் கொல்ல வருகிறார், ஆனால் ஆரியின் மந்திரக்கோல் தானாகவே அவரை விரட்டுகிறது.

ஆரி,ரோன் மற்றும் எர்மாயினி கிறேஞ்செர் ஆகியோருக்கு வோல்டெமோர்ட்டின் மீதமுள்ள நான்கு ஆர்க்ரக்சை கண்டறியும் பணி கொடுக்கப்படுகிறது. டம்பிள்டோரின் உயிலின்படி, ஆரிக்கு ஒரு கோல்டன் குவிட்டுச்சு, ரோனுக்கு ஒரு டிலுமினேட்டர் மற்றும் எர்மாயினிக்கு தி டேல்ஸ் ஆஃப் பீடில் தி பார்டு ஆகியன கொடுக்கப்படுகிறது. கோட்ரிக் கிரிஃபிண்டரின் வாள் , ஆரிக்கு மரபுரிமையாக அளிக்கப்பட்டது.ஆனால் அமைச்சகம் அவருக்கு அதனைப் பெறுவதைத் தடுக்கிறது. பில் வெஸ்லி மற்றும் ஃப்ளூர் டெலாகோரின் திருமணத்தின் போது, மந்திர அமைச்சகம் வோல்டெமோர்ட்டின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது. பிணந்தின்னிகள், திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மூவரும், ஆரிக்குச் சொந்தமான, சிரியஸ் பிளாக்கின் குடும்ப இல்லமான 12 கிரிமால்ட்க்குத் தப்பிச் செல்கின்றனர்.

சிரியஸின் மறைந்த சகோதரர் ரெகுலஸ், ஆர்க்ரக்சு பதக்கத்தைத் திருடி வீட்டில் மறைத்து வைத்ததை அவர்கள் தெரிந்துகொண்டனர். அவர்களிடம் இருந்து, முண்டுங்கசு பிளெட்சர் என்பவரால் அது திருடப்பட்டது. ஹவுஸ்-எல்ஃப் கிரீச்சர், பிளெட்சரிடம் இருந்து, அந்தப் பதக்கமானது டோலோரஸ் அம்பிரிட்ஜால் எடுக்கப்பட்டதை அறிகிறார். மூவரும் அமைச்சகத்திற்குள் ஊடுருவி, அம்ப்ரிட்ஜில் இருந்து பதக்கத்தைத் திருடுகிறார்கள். பதக்கத்தை அவர்களால் அழிக்க இயலவில்லை என்பதாலும் அடுத்த என்ன செய்வதென்று வழி தெரியாததாலும் அவர்கள் காட்டில் ஒளிந்துகொள்கிறார்கள். அந்தப் பதக்கத்தின் தீய சக்தியானது ரோனைப் பாதிப்படையச் செய்து அந்தக் குழுவில் இருந்து விலகச் செய்கிறது. ஆரியும், எம்பாயினியும் டம்பிள்டோரின் கடந்த காலத்தை இருண்ட மந்திரவாதியான கெல்லர்ட் கிரைண்டல்வால்டிடம் இருந்து அறிந்து கொள்கிறார்கள். அவர்கள் ஆரியின் பிறந்த இடமான கோட்ரிக்சின் ஆலோவுக்குச் செல்கின்றனர். அங்கு மாறுவேடத்தில் இருந்த நாகினியால் தாக்கப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பித்தாலும், ஆரியின் மந்திரக்கோல் மிகவும் அதிகமாக சேதமடைந்தது. ஓர் இரவில், பேட்ரனசு ஆரியினை காட்ரிக் கிரிஃபிண்டாரின் வாள் இருந்த குளத்திற்கு அழைத்துச் சென்றது. அதனை மீட்க இயலும் போது அந்தப் பதக்கமானது ஆரியினைக் கொல்ல முயற்சி செய்தது. ரோன்,வாளின் மூலம் அந்தப் பதக்கத்தினை அழித்தார்.

வரவேற்பு

தொகு

விற்பனை

தொகு

இந்த நூல் விற்பனையில் பல சாதனைகளைப் படைத்தது. துவக்கத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு என 12 மில்லியன் பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. 1 மில்லியனுக்கும் அதிகமான நூல்கள் அமேசான் மற்றும் பேர்னசு & நோபிள் தளங்களில் முன்பதிவு செய்யப்பட்டது.[3] இது ஆஃப் பிளட் புதினத்தின் முந்தைய விற்பனையினை விட 500 மடங்கு அதிகமாகும்.[4] ஏப்ரல் 12, 2007இல் பேர்னசு & நோபிள் நிறுவனம் இந்த நூல் 5 இலட்சம் பிரதிகள் இதன் தளத்தில் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், தனது முந்தைய பாகங்களின் விற்பனை சாதனையினை முறியடித்தது என அறிவித்தது.[5] விற்பனையான முதல் நாள் 8.3 மில்லியன் பிரதிகள் விற்பனை ஆகியது. ஒரு நொடிக்கு 96 நூல்களுக்கு மேல் விற்பனை ஆகியது.[6][7] ஐக்கிய இராச்சியத்தில் 2.65 மில்லியன் நூல்கள் விற்பனை ஆகியது.[8] அமெரிக்காவில் 24மணி நேரத்தில் அதிகம் விற்பனை ஆன நூல் எனும் கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது.[9] வெளியான ஓர் ஆண்டு கழித்து சுமார் 44 மில்லியன் நூல்கள் விற்பனை ஆகியது.[10]

சான்றுகள்

தொகு
  1. "Record First-Day Sales for Last 'Harry Potter' Book". The New York Times. 22 July 2007. Archived from the original on 16 December 2017. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  2. "Fastest selling book of fiction in 24 hours". Guinness Book of World Records. 21 July 2007. Archived from the original on 19 September 2011. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.
  3. . 
  4. Shapiro, p. 259-260
  5. "New Harry Potter breaks pre-order record". RTÉ.ie Entertainment. 13 April 2007. Archived from the original on 18 April 2007. பார்க்கப்பட்ட நாள் 23 April 2007.
  6. Blais, Jacqueline; Anthony DeBarros (25 July 2007). "'Deathly Hallows' records lively sales". USA Today இம் மூலத்தில் இருந்து 3 August 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090803130037/http://www.usatoday.com/life/books/news/2007-07-24-potter-sales_N.htm. 
  7. Rich, Motoko (22 July 2007). "Record First-Day Sales for Last 'Harry Potter' Book". The New York Times இம் மூலத்தில் இருந்து 30 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130530141655/http://www.nytimes.com/2007/07/22/books/22cnd-potter.html. 
  8. "'Harry Potter and the Deathly Hallows' Breaks Records". Associated Press. Fox News. 24 July 2007 இம் மூலத்தில் இருந்து 7 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090507173511/http://www.foxnews.com/story/0,2933,290346,00.html. 
  9. "Fastest selling book of fiction in 24 hours". Guinness Book of World Records. 21 July 2007. Archived from the original on 19 September 2011. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.
  10. #9: J. K. Rowling பரணிடப்பட்டது 17 பெப்பிரவரி 2018 at the வந்தவழி இயந்திரம். The Celebrity 100. Forbes. 11 June 2008. "The final one, Harry Potter and the Deathly Hallows, has sold 44 million since it was published last July, including 15 million in the first 24 hours." Retrieved 17 July 2009

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.