ஹேமா கமாங் (Hema Gamang)(பிறப்பு 31 மார்ச் 1961) என்பவர் ஓர் அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள கோராபுட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

ஹேமா கமாங்
ହେମା ଗମାଙ୍ଗ
ஹேமா கமாங்
13வது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1999-2004
முன்னையவர்கிரிதர் கமாங்
பின்னவர்கிரிதர் கமாங்
தொகுதிகோராபுட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மார்ச்சு 1961 (1961-03-31) (அகவை 63)
கிலாபதார், கோராபுட் மாவட்டம், ஒடிசா.
தேசியம்இந்தியர்
பிற அரசியல்
தொடர்புகள்
பிஜு ஜனதா தளம்
துணைவர்கிரிதர் கமாங்
முன்னாள் கல்லூரிஇரமா தேவி மகளிர் கல்லூரி
தொழில்அரசியல்வாதி, சமூகசேவகர்

கமாங் 1961ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள கிலாபதாரில் பிறந்தார். கமாங் ஒரு இடைநிலை பட்டதாரி மற்றும் ஒடிசாவின் புவனேசுவரத்தில் உள்ள இரமா தேவி மகளிர் கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் கிரிதர் கமாங்கை 4 ஏப்ரல் 1975-ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[1]

கமாங் 1999-ல் 13வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2000 வரை, இவர் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருந்தார். பின்னர், 2000 முதல் 2004 வரை, எஃகு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் ஒடிசாவின் தொலைப்பேசி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha". Archived from the original on 11 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)"Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha" பரணிடப்பட்டது 2014-03-11 at the வந்தவழி இயந்திரம். Retrieved 11 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமா_கமாங்&oldid=3592190" இலிருந்து மீள்விக்கப்பட்டது